2,558 words starting with ச · page 7 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சயனம்
தூக்கம்
English Meaning:
sleep
சயனி
படுத்தல்
English Meaning:
lie down to sleep
சரகம்
(ஒரு துறையில்) நிர்வாக வசதிகளுக்காகப் பிரிக்கப்பட்டிருக்கும் (சில ஊர்களை உள்ளடக்கிய அல்லது ஒரு நகரத்தின்) உட்பிரிவு
English Meaning:
administrative segment (a combination of some towns or a city)
சரக்-என்று
உரசும் சத்தத்தோடு வேகமாக
English Meaning:
swiftly with a sound of friction
சரக்கு
வியாபாரப் பொருள்/(நாட்டு வைத்திய) மருந்து வகை
English Meaning:
merchandise
சரக்குதாரர்
வியாபாரத்துக்காகப் பொருள்களை மொத்தமாக வாங்குபவர் அல்லது விற்பவர்
English Meaning:
wholesale buyer or seller of mercantile goods
சரக்குப்பிடி
(வியாபாரத்தில்) கொள்முதல்செய்தல்
English Meaning:
procure goods wholesale (for trade)
சரசமாடு
நாடகமாடுதல்
English Meaning:
feign
சரசம்
காமக் கிளர்ச்சி ஊட்டும் விதமானது
English Meaning:
flirtation
சரசர
உரசல் சப்தம் எழுதல்
English Meaning:
rustle
சரசர-என்று
(இயக்கம், செயல்பாடு முதலியவை குறித்து வருகையில்) தடை எதுவும் இல்லாமல் வேகமாக
English Meaning:
swiftly without any hindrance or hesitation
சரசலீலை
சரச விளையாட்டு
English Meaning:
amorous play
சரடு
(நூல், சணல் முதலியவற்றால்) நெகிழ்வாக முறுக்கப்பட்ட சிறு கயிறு
English Meaning:
thread
சரணடை
(தோல்வியை அல்லது குற்றத்தை ஒப்புக்கொண்டு) சிறைப்படுதல்
English Meaning:
surrender
சரணம்1
அடைக்கலம்
English Meaning:
refuge
சரணம்2
கீர்த்தனையின் மூன்றாவது பகுதி
English Meaning:
the third unit in a composition in the form of stanzas
சரணாகதி
(தன்னைக் காப்பாற்றும் முழுப் பொறுப்பையும் ஒருவரிடம் அளித்து அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டு) அடிபணிதல்
English Meaning:
seeking refuge
சரணாலயம்
(வேட்டையாடுதல் தடைசெய்யப்பட்டு) பறவைகள், விலங்குகள் ஆகியன பாதுகாப்பாகத் தங்குவதற்கான இடம்
English Meaning:
(animal or bird) sanctuary
சரண் புகு
அடைக்கலம் புகுதல்
English Meaning:
take refuge or shelter
சரமாரியாக
ஒன்றை அடுத்து ஒன்று என்னும் முறையில் விரைவாக
English Meaning:
in a volley
சரம்
(பூ, மணி முதலியவை) ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த வரிசை
English Meaning:
(of flowers, pearls, etc.) strung together
சரளம்
(பேச்சு, எழுத்து முதலியவை குறித்து வருகையில்) இயல்பாகவும் வேகமாகவும் வருவது
English Meaning:
(of speech, writing) fluency
சரளி வரிசை
இசை கற்பவர்களுக்காக ஆதி தாளத்தில் அமைந்த எளிதான ஸ்வரத் தொடர்
English Meaning:
the ordering of the ஸ்வரம் set to the basic ஆதிதாளம் in a simple way so as to enable the learner to distinguish the different ஸ்வரம்
சரளை
(சாலை போடுதல், தளம் அமைத்தல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தும்) சற்றுப் பெரிய கருங்கல்
English Meaning:
gravel
சரவிளக்கு
(கோயில்களில்) ஒன்றன் மேல் ஒன்றாக இணைத்துத் தொங்கவிடப்படும் விளக்குகளின் தொகுதி
English Meaning:
string of metal lamps (hung in temples)
சரஸ்வதி
கலைமகளைக் குறிக்கும் பெயர்
English Meaning:
the name of the Goddess of learning
சரஸ்வதி பூஜை
நவராத்திரிப் பண்டிகையின் கடைசி நாளில் கலைகளுக்குத் தெய்வமான சரஸ்வதிக்குச் செய்யும் பூஜை
English Meaning:
worship offered to the Goddess of Learning on the last day of நவராத்திரி
சராசரி
(ஒரு சமயம் கூடுதலாகவும் மற்றொரு சமயம் குறைவாகவும் வேறுபடும் வரிசையில்) அனைத்தையும் கூட்டி வரிசை எண்ணிக்கையால் வகுத்துக் கணக்கிடும் பொது
English Meaning:
average
சரி2
(நேர் நிலையிலிருந்து ஒரு பக்கமாக அல்லது ஒன்றின் மீதாக) சாய்த்தல்
English Meaning:
tilt (a bottle, vessel, etc.)
சரிக்கட்டு
(இழப்பு, நஷ்டம், பற்றாக்குறை முதலியவற்றை) ஈடுசெய்தல்
English Meaning:
make good
சரிதம்
சரித்திரம்
English Meaning:
history
சரித்திரம்
வரலாறு
English Meaning:
history
சரிப்படு
(பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) ஏற்றதாக அமைதல்
English Meaning:
be agreeable or suitable
சரியாக
(செய்வதை) தவறு இல்லாமல்
English Meaning:
correctly
சரியான
ஒழுங்கான
English Meaning:
proper
சரியை
(சைவ சித்தாந்தத்தில்) வீடு அடையும் நான்கு முறைகளில் ஒன்றான இறை வழிபாடு
English Meaning:
one of the fourfold ways of attaining salvation, which consists of worshipping God in the form of a deity at the temple
சரிவர
(அததற்கு) உரிய முறையில்
English Meaning:
in the proper manner
சரிவு
(மலை, சாலை முதலியவற்றில்) சாய்வான பகுதி
English Meaning:
(of a mountain, road, etc.) slope
சரீரம்
(மனித) உடல்
English Meaning:
(human) body
சருகு
காய்ந்து உலர்ந்த இலை
English Meaning:
dry leaf
சருமம்
தோல்
English Meaning:
skin
சருவச்சட்டி
குழிவு அதிகம் இல்லாத வாய் அகன்ற (பித்தளை) பாத்திரம்
English Meaning:
shallow wide-mouthed (brass) vessel
சரேல்-என்று
(ஒரு செயலைக் குறிக்கையில்) திடீரென்றும் வேகமாகவும்
English Meaning:
(of an action) quick and sudden
சர்க்கரை
சீனி
English Meaning:
(candy) sugar
சர்க்கரை நோய்
நீரிழிவு
English Meaning:
diabetes
சர்க்கரைப் பொங்கல்
அரிசியை நன்றாக வேக வைத்து வெல்லத்தைப் பொடித்துப் போட்டு நெய் ஊற்றிச் செய்யும் இனிப்பு உணவு
English Meaning:
boiled rice mixed with jaggery and clarified butter
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
வெளிர்ச் சிவப்பு நிறத்தில் மெல்லிய தோலை உடையதும் இனிப்புச் சுவை உடையதுமான ஒரு வகைக் கிழங்கு
English Meaning:
sweet potato
சர்க்கா
கைராட்டை
English Meaning:
a hand operated device to spin yarn
சர்க்கார்
அரசு
English Meaning:
government
சர்ச்சை
வாக்குவாதம்
English Meaning:
discussion
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.