iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 8 of 52

சர்பத் நீரில் எலுமிச்சம் பழச் சாறும் நன்னாரியும் ஊற்றிச் சர்க்கரை கலந்து தயாரிக்கும் ஒரு வகைப் பானம் English Meaning: a soft drink prepared by adding lime juice, sugar, essence of sarsaparilla with water
சர்ப்பம் பாம்பு English Meaning: snake
சர்வ அனைத்து English Meaning: all
சர்வகலாசாலை பல்கலைக்கழகம் English Meaning: university
சர்வதேச பல நாடுகள் தொடர்பான English Meaning: international
சர்வம் எல்லாம் English Meaning: everything
சர்வரோகநிவாரணி சகல நோய்களையும் குணப்படுத்தவல்லது English Meaning: cure-all
சர்வர் (ஓட்டல் போன்ற) உணவுச்சாலையில் உணவு பரிமாறும் வேலையைச் செய்பவர் English Meaning: waiter
சர்வவியாபி (எங்கும் நிறைந்திருக்கும்) கடவுள் English Meaning: god (as omnipresent)
சர்வாதிகாரம் தனிமனிதன் அல்லது ஓர் அமைப்பு எல்லா அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு அடக்கி ஆளும் முறை English Meaning: dictatorship
சர்வாதிகாரி சர்வாதிகார ஆட்சி நடத்துபவர் English Meaning: dictator
சர்வே நில அளவை English Meaning: (land) survey
சர்வேசுவரன் எல்லாம் வல்ல இறைவன் English Meaning: god the omnipotent
சறணி கீல் English Meaning: hinge
சறுக்கு (இருக்கும் நிலையிலிருந்து) பிடிப்பு தவறிச் சரிதல் English Meaning: slide
சறுக்கு(மரம்) (சிறுவர் ஏறி அமர்ந்து) சறுக்கி விளையாடுவதற்காக அமைக்கப்படும் சாய்வுத் தளம் English Meaning: slide (in a playground)
சறுக்குக்கட்டை ஓடும் தேரின் முன் சக்கரத்தின் கீழே வைத்து அது செல்லும் திசையைத் திருப்ப உதவும் செதுக்கிய கட்டை English Meaning: block of wood with inclined plane set before the front wheels of a தேர் to turn its course
சற்குரு உண்மையான ஞானத்தைக் கற்றுத் தரும் ஆசிரியர் English Meaning: spiritual preceptor
சற்று குறைந்த அளவு English Meaning: a little (of space or time)
சற்றும் (எதிர்மறை வினைகளோடு) கொஞ்சம்கூட English Meaning: even a little
சற்றைக்கொருதரம் சிறிது நேரத்துக்கு ஒரு முறை English Meaning: quite frequently
சலங்கை ஒலி எழுப்பக் கூடிய சிறுசிறு மணிகள் இணைத்த பட்டை English Meaning: string or strip of small metal bells (tied around the ankle of dancers, etc.)
சலசல (நீர்) உருண்டோடும் அல்லது (இலைகள்) உரசும் ஒலி எழுதல் English Meaning: produce flowing or rustling sound
சலசலப்பு ஓடும் நீரின் ஓசை English Meaning: the wash of flowing water
சலனம் (ஒன்றின்) பாதிப்பால் ஏற்படும் கிளர்ச்சி English Meaning: arousal of emotion
சலம் சீழ் English Meaning: pus
சலரோகம் நீரிழிவு English Meaning: diabetes
சலவை (துணி) வெளுத்தல் English Meaning: washing (of clothes)
சலவைக் கல் மெருகேற்றிப் பளபளப்பாக்கப்பட்ட ஒரு வகைச் சுண்ணாம்புக் கல் English Meaning: marble
சலாம் (இஸ்லாமியர்) உள்ளங்கையை நெற்றிக்கு நேரே கொண்டுவந்து வணக்கம் தெரிவிக்கும் முறை(காவல்காரர் முதலியோர்) விரித்த உள்ளங்கை வெளியே தெரியும்படி நெற்றியில் வைத்து வணக்கம் தெரிவிக்கும் முறை English Meaning: a form of salute
சலி1 (ஒன்றையே திரும்பத்திரும்பச் செய்ய நேர்வதால் அல்லது ஒன்றின் மிகுதியால்) வெறுப்படைதல்(மனம்) களைத்தல்அலுத்தல் English Meaning: be fed up with
சலி2 (சல்லடையில் போட்டு) பக்கவாட்டில் ஆட்டி அல்லது கையால் அலைத்து வேண்டாதவற்றை (மேலே தங்குமாறுசெய்து) நீக்குதல் English Meaning: sift (flour, sand, etc in a sieve)
சலிப்பு (ஒன்றையே திரும்பத்திரும்பச் செய்வது முதலியவற்றால் அல்லது துன்பம் முதலியவற்றின் மிகுதியால்) வெறுப்பு English Meaning: weariness
சலுகை விதிமுறைகளைத் தளர்த்தி வழங்கப்படும் விலக்கு English Meaning: concession
சலூன் முடிதிருத்தகம் English Meaning: hair dressing saloon
சல்லடை நெருக்கமான துளைகள் உடைய வலை பொருத்தப்பட்ட அல்லது சிறுசிறு ஓட்டைகள் போடப்பட்ட அடிப்பகுதியைக் கொண்ட (மாவு, தானியம் முதலியவை) சலிக்கும் கருவி English Meaning: fine sieve (to sift flour, grains, etc.)
சல்லடைபோட்டுத் தேடு ஓர் இடம்கூட விடாமல் தேடுதல் English Meaning: search thoroughly
சல்லா மிக மெல்லிய (உடல் தெரியக் கூடிய) துணி English Meaning: fine textured (transparent) cloth
சல்லாபம் (காமக்குறிப்பு கூடிய) பேச்சு English Meaning: talk (suggestive of amorousness)
சல்லி1 மிகக் குறைந்த மதிப்புடைய நாணயம் English Meaning: coin of the lowest value
சல்லிவேர் ஆணிவேரிலிருந்தோ பக்கவேரிலிருந்தோ பிரிந்து செல்லும் சிறிய வேர் English Meaning: rootlets
சளசள-என்று (பேச்சு, நீரோட்டம் முதலியவற்றைக் குறிக்கையில்) ஓயாத இரைச்சலோடு English Meaning: incessantly noisy
சளி (தொண்டையில், நுரையீரலில் உண்டாகிப் பெரும்பாலும்) மூக்கு, வாய் வழியாக வெளியேறும் குழகுழப்பான திரவம் English Meaning: phlegm
சளை களைப்படைதல் English Meaning: become weary or tired
சள்ளை1 தொல்லை English Meaning: trouble
சள்ளை2 விலா English Meaning: rib
சவக் குழி பிணத்தைப் புதைப்பதற்காகத் தோண்டப்படும் குழி English Meaning: grave
சவக்களை (பயம், துக்கம் முதலியவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரின் முகத்தில் தோன்றும்) பொலிவு இழந்த தோற்றம் English Meaning: pallor (as of death)
சவக்காலை மயானம் English Meaning: place of burial or cremation
சவக்கிடங்கு (மருத்துவமனைகளில்) பிணங்களைக் கெடாமல் வைத்திருப்பதற்கான அறை English Meaning: mortuary

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together