iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 11 of 65

பரிணமி (ஒன்று மற்றொன்றாக) படிப்படியாக வளர்ச்சி அடைதல்(ஒன்றிலிருந்து மற்றொன்று) தோன்றுதல் English Meaning: undergo transformation
பரிணாமம் (உயிரினங்கள்) மாறும் சூழ்நிலைக்குத் தக்கவாறு எளிய அடிப்படையான வடிவங்களிலிருந்து புதிய அமைப்பும் இயக்கமும் கொண்ட வடிவத்தை அடையும் படிப்படியான மாற்றம் English Meaning: evolution
பரிதவி (பரிதாபமான நிலையில்) வருந்தித் தவித்தல் English Meaning: suffer
பரிதவிப்பு வருத்தத்துடன் கூடிய தவிப்பு English Meaning: suffering
பரிதி1 சூரியன் English Meaning: sun
பரிதி2 வட்டத்தின் சுற்றாக அமையும் கோடு English Meaning: circumference
பரிந்து பேசு (பிரச்சினை, தகராறு முதலியவற்றில் ஒருவருக்கு) சார்பாக அல்லது ஆதரவாகப் பேசுதல் English Meaning: speak in favour of
பரிந்துரை1 (கருத்து, ஆலோசனை ஆகியவற்றை) பயன்படுத்திக்கொள்ளும்படி அல்லது நடைமுறைப்படுத்தும்படி முன்வைத்தல் English Meaning: make recommendation
பரிந்துரை2 (இவ்வாறு செய்யலாம் என்னும் முறையில் வழங்கும்) கருத்து English Meaning: recommendation
பரிபாலனம் நிர்வாகம் English Meaning: rule
பரிபாலி (நாட்டை) நிர்வகித்தல் English Meaning: rule
பரிபாஷை குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே புரிந்துகொண்டு பயன்படுத்தும் மொழி English Meaning: cant
பரிபூரணம் குறைவு எதுவும் இல்லாத முழுமை English Meaning: completeness
பரிமளம் நறுமணம் English Meaning: fragrance
பரிமளி சிறந்து விளங்குதல் English Meaning: add lustre to
பரிமாணம் நீளம், அகலம், உயரம் அல்லது காலம் ஆகிய அளவுகளுள் ஒன்று English Meaning: dimension
பரிமாறு (ஒருவர் மற்றவருக்கு இலையில், தட்டில் உணவை) உண்பதற்கு உரிய முறையில் வைத்தல் English Meaning: serve (food)
பரிமாற்றம் (இருவரிடமும் உள்ளவற்றை) கொடுத்துப் பெறும் முறை English Meaning: exchange
பரியந்தம் (முடிவான) எல்லை English Meaning: (end) limit
பரியாரி (கிராமங்களில்) முடிவெட்டுபவர் English Meaning: (in villages) barber
பரிவட்டம் (கோயிலில்) மரியாதைக்கு உரியவர்களை கௌரவிக்கும்பொருட்டு அவர்கள் தலையில் அணிவிக்கும், கடவுளுக்குச் சாத்திய பட்டுத் துணி English Meaning: a piece of silk cloth that is first put on the consecrated idol and then tied round the head of a distinguished guest as a mark of honour (in temples)
பரிவர்த்தனை பரிமாற்றம் English Meaning: exchange
பரிவாரம் (அரசர் போன்றோருடன்) உடன் வருவோர்/(பெரும்பாலும் கேலியாகக் கூறும்போது) உடன் வரும் கூட்டம் English Meaning: (formerly) retinue (of a king, etc.)/(often humorously) attendants
பரிவேடம் சந்திரனை அல்லது சூரியனைச் சுற்றிக் காணப்படும் வட்டம் English Meaning: halo (around the moon)
பரு2 (பெரும்பாலும் முகத்தில் சீழ் உள்ள) சிறு கட்டி English Meaning: pimple
பருகு குடித்தல் English Meaning: drink
பருக்கை சாதத்தில் உதிரிஉதிரியாக இருப்பதில் ஒன்று English Meaning: single grain of cooked rice
பருத்தி பஞ்சு/பஞ்சைத் தரும் செடி English Meaning: cotton/cotton plant
பருத்திக்கொட்டை (மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்) பருத்திச் செடியின் விதை English Meaning: cotton seed (used as cattle feed)
பருந்து (இறைச்சி முதலியவற்றைத் தின்று வாழும்) பிளவுபட்ட வால் பகுதி உடைய கழுகு இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை English Meaning: common kite
பருப்பு (உடைத்துக் காயவைத்து) சமையலுக்குப் பயன்படுத்தும் துவரை, உளுந்து போன்றவற்றின் விதை English Meaning: dhal
பருப்புத்தேங்காய் தேங்காய்த் துருவலையும் கடலைப் பருப்பையும் வறுத்து வெல்லப்பாகில் போட்டுக் கிளறிக் கூம்பு வடிவத்தில் செய்து சில சடங்குகளில் பயன்படுத்தும் ஓர் இனிப்புப் பண்டம் English Meaning: a cone shaped confection of fried coconut scrapings and bengal gram mixed with jaggery displayed on certain occasions such as wedding
பருப்புப்பொடி (சாதத்துடன் சேர்த்துக்கொள்ள) வறுத்த துவரம் பருப்பு, மிளகு முதலியவற்றை இடித்துத் தயாரிக்கும் பொடி English Meaning: powdered lentil mixed with pepper (added to cooked rice to give a mild flavour)
பருப்பொருள்1 கண்ணால் காணக் கூடியதும் தொட்டு உணரக் கூடியதுமான பொருள் English Meaning: object that can be seen or felt
பருப்பொருள்2 (செய்யுளில்) வெளிப்படையாகத் தெரியும் பொருள் English Meaning: obvious meaning
பருவக்காற்று (பெரும்பாலும் தெற்கு ஆசியப் பகுதிகளில்) குறிப்பிட்ட காலத்தில் மட்டும் கடலிலிருந்து நிலப் பகுதிக்குள் குறிப்பிட்ட திசையில் வீசி மழை பெய்யச்செய்யும் காற்று English Meaning: the monsoon
பருவமழை பருவக்காற்றினால் பெய்யும் மழை English Meaning: the monsoon rain
பருவமுறை (உயர்கல்வி நிறுவனங்களில்) ஆறு மாதத்துக்கு ஒரு பாடத்திட்டமும் தேர்வும் கொண்ட கல்வி முறை English Meaning: semester (system)
பருவமெய்து பூப்படைதல் English Meaning: come of age
பருவம் (ஒருவர் அல்லது ஒன்று) தோன்றியதிலிருந்து கடந்து வருகிற வளர்ச்சி நிலை English Meaning: stage (in the development of s
பருவெட்டு தடித்த தன்மை English Meaning: thick
பரோட்டா மைதா மாவைப் பிசைந்து மெல்லியதாக இழுத்துப் பின் சுருட்டித் தட்டித் தோசைக் கல்லில் சுட்டுத் தயாரிக்கப்படும் ஒரு வகை ரொட்டி English Meaning: unleavened bread of maize flour, thick in size and round in shape
பரோபகாரம் பிறருக்குத் தாராளமாகச் செய்யும் உதவி English Meaning: the willingness to help others
பரோபகாரி தயங்காமல் தாராளமாக உதவி செய்பவர் English Meaning: one who is willing to help others
பரோல் விடுப்பு தண்டனைக் காலத்தில் நன்னடத்தை நிபந்தனையின்பேரில் சிறைக் கைதி குறிப்பிட்ட காலத்துக்கு வெளியில் செல்ல வழங்கப்படும் அனுமதி English Meaning: parole
பர்ணசாலை (இலையால் வேயப்பட்ட) குடில் English Meaning: hermitage
பர்தா (அந்நிய ஆடவர்கள் பார்க்காத வகையில் இஸ்லாமியப் பெண்கள் தங்கள்) உடலையும் முகத்தையும் மறைத்துக்கொள்ள அணியும் மேல் அங்கி English Meaning: purdah
பர்பி சர்க்கரைப் பாகில் தேங்காய்த் துருவலையும் வறுத்த ரவையையும் போட்டுக் கிளறித் தயாரிக்கும் ஓர் இனிப்புப் பண்டம் English Meaning: a kind of sweetmeat prepared by adding coconut scrapings, broken cashew and fried wheat flour in sugar treacle
பர்வதம் மலை English Meaning: hill
பற வானவெளியில் வேகமாகச் செல்லுதல் English Meaning: fly

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together