3,212 words starting with ப · page 12 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பறக்கும் தட்டு
வேறு கிரகத்தைச் சார்ந்ததாகவும் வானில் சஞ்சரிப்பதாகவும் கூறப்படும் தட்டு வடிவப் பறக்கும் பொருள்
English Meaning:
flying-saucer
பறக்கும் படை
உடனடியாக விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பதற்காகவோ முன்னறிவிப்பு இல்லாமல் சோதனை செய்வதற்காகவோ எப்போதும் தயார் நிலையில் இருக்கும் அலுவலர் குழு
English Meaning:
flying squad
பறங்கி
(பெரும்பாலும் மதிப்புக் குறைவான முறையில்) வெள்ளைக்காரன்
English Meaning:
(not in polite use) white man
பறங்கிக்காய்
(காய்கறியாகப் பயன்படுத்தும்) பக்கவாட்டில் புடைத்து உருண்டையாக உள்ள வெளிர்ச் சிவப்பு நிறக் காய்(சில இடங்களில்) பூசணி
English Meaning:
pumpkin
பறத்து
வேகமாகச் செலுத்துதல்
English Meaning:
drive fast
பறந்தோடு
விரைந்து நீங்குதல்
English Meaning:
vanish
பறவை
இரு கால்களும் அலகும் உடைய, உடலின் இரு பக்கங்களிலும் பறப்பதற்கு ஏற்ற சிறகும் கொண்ட உயிரினம்
English Meaning:
bird
பறி2
(வாகனத்திலிருந்து பொருள்களை) இறக்குதல்
English Meaning:
unload
பறி3
கூடை
English Meaning:
basket
பறிபோ
(பணம், பொருள், உரிமை முதலியவை) அபகரிக்கப்படுதல்(சட்டப்படி) பறிக்கப்படுதல்
English Meaning:
be snatched away
பறிமுதல்
பறிமுதல்செய்யப்படுதல்
English Meaning:
confiscation
பறிமுதல்செய்
(சட்டவிரோதமாக வைத்திருப்பதை அல்லது சட்ட நடவடிக்கையாக ஒன்றை) கைப்பற்றுதல்
English Meaning:
confiscate
பறை1
முரசு போன்ற தோல் கருவி
English Meaning:
kettle-like drum
பறை2
(முன்பு வழக்கில் இருந்த) ஆறு மரக்கால் கொண்ட முகத்தலளவு
English Meaning:
(formerly) a measure of 6 மரக்கால்
பறைசாற்று
பலரும் அறியும்படி அறிவித்தல்
English Meaning:
proclaim
பற்பசை
பல் துலக்குவதற்குப் பயன்படுத்தும் ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட வழுவழுப்புத் தன்மை உடைய பொருள்
English Meaning:
toothpaste
பற்பல
வெவ்வேறான
English Meaning:
different
பற்பொடி
பல் துலக்குவதற்குப் பயன்படுத்தும் ரசாயன அல்லது மூலிகைப் பொடி
English Meaning:
tooth-powder
பற்றவை
ஒன்றில் நெருப்புப் பற்றும்படியாகச்செய்தல்
English Meaning:
light (a candle, etc.)
பற்றாக்குறை
தேவைக்கும் குறைவாக உள்ள நிலை
English Meaning:
scarcity
பற்றி
(குறிப்பிடப்படும் ஒருவரின் அல்லது ஒன்றின்) தொடர்பாக
English Meaning:
concerning
பற்றிக்கொண்டுவா
(ஒருவருக்கு) மிக அதிக அளவில் கோபம், எரிச்சல் போன்றவை உண்டாதல்
English Meaning:
get enraged
பற்றிய
(குறிப்பிடப்படும் ஒன்றின் அல்லது ஒருவரின்) தொடர்பான
English Meaning:
concerning
பற்று1
பிடித்தல்
English Meaning:
hold
பற்று4
(உலக வாழ்க்கை மீது ஒருவர் கொண்டிருக்கும்) பிடிப்பு
English Meaning:
(worldly) attachment
பற்றுக்கோடு
ஆதரவு
English Meaning:
support
பற்றுக்கோல்
ஈயம் பற்றவைக்கும் கருவி
English Meaning:
soldering iron
பற்றுதல்
பிடிப்பு
English Meaning:
attachment
பற்றுவரவு
(கடை முதலியவற்றில் கணக்கு எழுதும்போது) செலவும் வருமானமும்
English Meaning:
(in bookkeeping) expenditure and income
பற்றை
புதர்
English Meaning:
bush
பல1
(மழை பெய்வது, காற்று அடிப்பது) வலுத்தல்
English Meaning:
(of rain, wind) become heavy
பல2
எண்ணிக்கையில் அதிகம்
English Meaning:
many
பலகணி
(பெரும்பாலும் கண் போன்ற துளைகள் உடைய) ஜன்னல்
English Meaning:
(latticed) window
பலகாரம்
இனிப்பு அல்லது கார வகைத் தின்பண்டம்
English Meaning:
(sweet or hot) snacks
பலகை
செவ்வக அல்லது சதுர வடிவில் அறுக்கப்பட்ட மரத் துண்டு
English Meaning:
plank
பலசரக்கு
அன்றாடம் உணவு தயாரிப்பதற்குத் தேவைப்படும் உப்பு, புளி, மிளகாய், எண்ணெய் முதலிய பொருள்கள்
English Meaning:
groceries
பலதரப்பட்ட
பல வகையான
English Meaning:
of all sorts
பலதாரமணம்
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து வாழும் முறை
English Meaning:
polygamy
பலத்த
(அளவில்) அதிகமான
English Meaning:
(in quantity) heavy
பலபட
(பேசுதல், எழுதுதல் தொடர்பான வினைகளோடு மட்டும்) பல்வேறு விஷயங்கள்குறித்துப் பலவாறு
English Meaning:
in a variety of ways
பலப்படுத்து
வலுப்படுத்துதல்
English Meaning:
strengthen
பலப்பம்
சிலேட்டுக் குச்சி
English Meaning:
slate pencil
பலப்பரிட்சை
யாருக்கு அதிக ஆதரவு என்பதைத் தீர்மானிக்கும் போட்டி
English Meaning:
test or trial of strength
பலப்பிரயோகம்
(தீர்வு காணும் வழியாக) பலத்தைப் பயன்படுத்துதல்
English Meaning:
use of force
பலமுனை வரி
உற்பத்தி செய்யப்பட்ட பொருள் ஒவ்வொரு முறையும் விற்கப்படும்போது அரசால் விதிக்கப்படும் விற்பனை வரி
English Meaning:
sales tax levied at every point of sale from production to the last sale
பலம்2
(தற்போது வழக்கில் இல்லாத) முப்பத்தைந்து கிராம் கொண்ட நிறுத்தலளவை
English Meaning:
(a former) measure of weight, roughly about 35 grams
பலர்
பல நபர்
English Meaning:
many (people)
பலர்பால்
உயர்திணையில் பலரைக் குறிப்பிடும் சொல்
English Meaning:
the term for human plural
பலவந்தப்படுத்து
(ஒரு பெண்ணை) வற்புறுத்தி உடலுறவுகொள்ளுதல்
English Meaning:
force (a woman) to have sex
பலவான்
பலமுடையவன்
English Meaning:
man of strength
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.