3,212 words starting with ப · page 13 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பலவாறு/-ஆக
பல விதமாக
English Meaning:
variously
பலவின்பால்
அஃறிணையில் பலவற்றைக் குறிப்பிடும் சொல்
English Meaning:
the term for neuter plural
பலவீனம்
(-ஆக, -ஆன) செயல்படுவதற்குத் தேவையான வலு இல்லாத நிலை
English Meaning:
debility
பலா
பலாப்பழத்தைத் தரும் மரம்
English Meaning:
jackfruit tree
பலாத்காரம்
பலவந்தம்
English Meaning:
force
பலாபலன்
நன்மை தீமை
English Meaning:
good and bad effects
பலாப்பழம்
முட்கள் அடர்ந்த, பச்சை நிறத் தடித்த மேல்தோலையும் வெளிர் மஞ்சள் நிறத்தில் சுளைசுளையாக அமைந்த சதைப் பகுதியையும் கொண்ட பெரிய பழம்
English Meaning:
jackfruit
பலி1
(இவ்வாறு நடக்கும் என்று சொல்வது அல்லது இவ்வாறு நடக்க வேண்டும் என்று விரும்புவது) உண்மையாகவே நடத்தல் அல்லது நிகழ்தல்
English Meaning:
be effective
பலி2
(தெய்வத்திற்கு அளிக்கும்) உயிர்க் கொலை
English Meaning:
offering lives (as sacrifice)
பலிகடா
(தான் தப்பித்துக்கொள்ள) அநியாயமாகப் பயன்படுத்தப்படும் மற்றொருவர்
English Meaning:
scapegoat
பலிதம்
(எண்ணத்தின்) நிறைவேற்றம்
English Meaning:
fulfilment
பலிபீடம்
(தெய்வங்களின் சன்னிதியில்) பலிகொடுக்கப் பயன்படுத்தப்படும் மேடை
English Meaning:
(sacrificial) altar
பலியிடு
பலி கொடுத்தல்
English Meaning:
offer (animal as sacrifice)
பலே
ஒருவரின் திறமையைக் கண்டு பாராட்டிக் கூறப் பயன்படுத்தும் சொல்
English Meaning:
a term used in appreciation of the skill of s
பல் சக்கரம்
(இயந்திரங்களில் ஒன்று மற்றொன்றோடு பொருந்திச் சுழல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்த) பற்கள் போன்ற முனைகள் நிறைந்த சக்கரம்
English Meaning:
gear
பல்1
(வாயில் உணவைக் கடித்து மெல்லுவதற்கு ஏற்ற வகையில் இரு தாடைகளிலும் வரிசையாக அமைந்திருக்கும்) தட்டையான அல்லது கூரிய முனை கொண்ட உறுதியான வெண்ணிற உறுப்பு
English Meaning:
tooth
பல்2
பல
English Meaning:
many
பல்கலைக்கழகம்
தேர்வுகள் நடத்துதல், பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்துதல் போன்ற பணிகளைச்செய்வதும் ஆராய்ச்சி மையமாக விளங்குவதுமான உயர்கல்வி நிறுவனம்
English Meaning:
university
பல்கு
மிகுதல்
English Meaning:
increase (in numbers)
பல்குச்சி
(பெரும்பாலும் ஆலம்விழுதிலிருந்தும் வேப்பமரத்திலிருந்தும் ஒடித்த) பல் தேய்ப்பதற்குப் பயன்படுத்தும் சிறு குச்சி
English Meaning:
a twig (mostly of banyan or neem tree) used as a toothbrush
பல்பொருள் அங்காடி
தேவையான அனைத்துப் பொருள்களும் ஒரே கட்டடத்தில் விற்பனைசெய்யப்படுகிற இடம்
English Meaning:
supermarket
பல்லக்கு
தூக்கிச்செல்வதற்கு ஏற்ற வகையில் நீண்ட கழி இணைக்கப்பட்ட, ஏறுவதற்குப் பக்கத் திறப்புடைய, பயணம் செய்வதற்கு உரிய சாதனம்
English Meaning:
palanquin
பல்லவி
கீர்த்தனையின் முதல் உறுப்பு
English Meaning:
the opening or the first unit of a composition
பல்லாங்குழி
சோழிகள் அல்லது புளியங் கொட்டைகளைப் போட்டு விளையாட வசதியான குழிகளை வரிசைக்கு ஏழு என இரண்டு வரிசைகள் கொண்ட சாதனம்
English Meaning:
a board with two rows each having seven hollows filled with five counters
பல்லி
(சுவர் போன்றவற்றில்) ஒட்டிக்கொண்டு விழாமல் செல்லக் கூடியதும் பெரும்பாலும் சாம்பல் நிறத்தில் காணப்படுவதுமான சிறு பிராணி
English Meaning:
house lizard
பல்வேறு
பல வித
English Meaning:
(many) different
பளபள
(ஒன்றின் பரப்பு ஒளியால்) மினுங்குதல்
English Meaning:
glitter
பளபளப்பு
(ஒளியால் ஒரு பரப்பின்) மினுமினுப்பு
English Meaning:
glitter
பளார்-என்று
(அடி, அறை போன்றவை) சுரீரென்று வலிக்கும்படி சத்தத்தோடு
English Meaning:
(of slap, etc.) with a sharp sound
பளிங்கு/பளிங்குக் கல்
பளபளப்பாக்கப்பட்ட சலவைக் கல்
English Meaning:
(highly polished) marble
பளிச்-என்று
கண்ணைப் பறிக்கிற வகையில் ஒளி வீசி
English Meaning:
brightly
பளிச்சிடு
(கண்ணைப் பறிக்கும் வகையில்) மின்னுதல்
English Meaning:
flash
பளிச்பளிச்-என்று
(மின்னல், விளக்கின் ஒளி) கண்ணைக் கூசவைக்கும் அளவுக்குப் பிரகாசமாகவும் விட்டுவிட்டும்
English Meaning:
in bright flashes
பளீர்-என்று/-என்ற
(கண்ணைக் கவரும் அல்லது கூசவைக்கும் வகையில்) பிரகாசமாக/பிரகாசமான
English Meaning:
brightly
பளு
(பொருளின்) கனம்
English Meaning:
heaviness
பளுதூக்கி
தடித்த கம்பிகளைப் பயன்படுத்திக் கனமான பொருள்களைத் தூக்கும் ஒரு வகை இயந்திரம்
English Meaning:
crane
பளுதூக்கும் போட்டி
வட்ட வடிவ இரும்பு எடைகள் இரு முனைகளில் இணைக்கப்பட்ட இரும்புக் கம்பியைக் குறிப்பிட்ட முறையில் தலைக்கு மேல் தூக்கிப் பிடிக்கும் ஒரு விளையாட்டுப் போட்டி
English Meaning:
weight lifting
பள்ளத்தாக்கு
மலைகளுக்கு இடையே அமையும் சரிந்த பக்கப் பகுதிகளையுடைய நிலப் பகுதி
English Meaning:
valley
பள்ளம்
அருகிலிருக்கும் பிற பகுதிகளைவிடத் தாழ்ந்த பகுதி
English Meaning:
hollow in the ground
பள்ளிகொள்
(பெரும்பாலும் இறைவன், மகான் போன்றோரைக் குறித்து வருகையில்) படுத்து உறங்குதல்
English Meaning:
(mostly of gods or saints) be resting
பள்ளிக்கணக்கு
பள்ளிக்கூடத்தில் கற்ற பாடம் அல்லது அதில் பெற்ற அறிவு
English Meaning:
acquired knowledge
பள்ளிக்கூடம்
(கல்லூரிப் படிப்புப் போன்ற மேற்படிப்புக்கு அடிப்படையாக அமையும்) முதல் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை உள்ள கல்விச்சாலை
English Meaning:
school (up to the XII standard)
பள்ளியறை
(தம்பதியருக்கான) படுக்கை அறை
English Meaning:
bedroom (for husband and wife)
பள்ளிவாசல்
இஸ்லாமியர் இறைவனை வழிபடுகிற இடம்
English Meaning:
mosque
பள்ளு
பிறர் நிலத்தில் உழுது பயிர்செய்பவர்களைப் பாத்திரங்களாகக் கொண்ட சிற்றிலக்கிய வகை
English Meaning:
a kind of poetical work having peasants or tenant farmers as characters
பழகு
(ஒருவரை) அறிமுகம் செய்துகொண்டு தொடர்புபடுத்திக்கொள்ளுதல்
English Meaning:
get acquainted with
பழக்கதோஷம்
பழக்கத்தால் ஏற்பட்ட விளைவு
English Meaning:
force of habit
பழக்கம்
பல முறை செய்து படிந்துவிடுகிற செயல்/முன்னரே அறிந்துவைத்திருப்பது
English Meaning:
habit
பழக்கவழக்கம்
தொடர்ந்து பின்பற்றப்பட்டுவரும் செயல்முறை
English Meaning:
customs and habits
பழக்கு
(ஒரு செயலைச் செய்ய) பயிற்சி அளித்தல்
English Meaning:
train
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.