3,212 words starting with ப · page 2 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பங்கிடு
பங்குபோடுதல்
English Meaning:
divide
பங்கீடு
(ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும்) இவ்வளவு எனப் பிரிக்கும் முறை
English Meaning:
sharing
பங்கு
(முழுமையில்) குறிப்பிட்ட அளவுள்ள பகுதி
English Meaning:
share
பங்கு பணி
(ஒரு திட்டம், செயல் முதலியவற்றில்) ஒருவருடைய பங்காக அமையும் செயல்பாடு
English Meaning:
role
பங்குதாரர்
(நிறுவனம், வியாபாரம் போன்றவற்றுக்கான) மூலதனத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையைத் தன் பங்காகச் செலுத்தியிருப்பவர்
English Meaning:
partner
பங்குத்தந்தை
ஒரு பகுதியில் வாழும் மக்களை வழிநடத்த ஆயரால் நியமிக்கப்பட்ட குரு
English Meaning:
parish priest
பங்குனி
கடைசி தமிழ் மாதத்தின் பெயர்
English Meaning:
the name of the last month in the Tamil calender, i
பங்குபெறு
(ஒரு நிகழ்ச்சி, கூட்டம், விழா முதலியவற்றில்) பங்குகொள்ளுதல்
English Meaning:
take part
பங்குபோடு
(ஒவ்வொருவருக்கும்) குறிப்பிட்ட அளவு எனப் பிரித்தல்
English Meaning:
divide
பங்கேற்பாளர்
(கூட்டம், விழா, நிகழ்ச்சி முதலியவற்றில்) பங்குகொள்பவர்
English Meaning:
participant
பசங்கள்
குழந்தைகள்
English Meaning:
children
பசப்பு1
(தன் செயலை நிறைவேற்றிக்கொள்ள) ஒருவரின் அனுதாபத்தைப் பெறும் வகையில் பேசுதல் அல்லது நடந்துகொள்ளுதல்
English Meaning:
ingratiate oneself
பசப்பு2
பிறரின் அனுதாபத்தைப் பெறும் வகையிலான பேச்சு அல்லது நடவடிக்கை
English Meaning:
ingratiating oneself (by talk or behaviour)
பசலி
கிராமத்தில் விளைநிலம்பற்றிய கணக்குகளுக்கான (பயிரிடும் காலமான ஜூலை முதல் அறுவடை முடியும் காலமான மே-ஜூன்வரை கணக்கிடும்) ஓர் ஆண்டு
English Meaning:
accounting year for land revenue
பசலை
(பெரும்பாலும் இலக்கியத்தில்) (தலைவன் பிரிவதால்) பெண்ணின் உடலில் தோன்றும் பொன் நிறத் தேமல்
English Meaning:
(mostly in literature) pale yellow spots supposed to appear on the body of a woman (due to love-sickness
பசலைக்கீரை
(சமையலில் பயன்படும்) வெளிர்ப் பச்சை நிறத்தில் வழுவழுப்பான இலைகளைக் கொண்ட செடி/கரும் பச்சை நிறப் பெரிய இலைகளைக் கொண்ட கொடி
English Meaning:
purslane or malabar nightshade
பசி1
(ஒருவருக்கு) உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல்
English Meaning:
(with dative) be hungry
பசி2
உணவு உண்ணத் தூண்டும் உணர்வு
English Meaning:
hunger
பசிய
பசுமையான
English Meaning:
green
பசு1
பாலுக்காக வீட்டில் வளர்க்கப்படும் (எருமை அல்லாத) மாட்டினத்தில் பெண்
English Meaning:
cow
பசு2
(சைவ சித்தாந்தத்தில்) ஆன்மா
English Meaning:
(in Saiva siddhanta) soul
பசுந்தாள் உரம்
தழைக்காக வளர்க்கப்பட்ட பயிரை அந்த நிலத்திலேயே உழுது சேர்க்கும் உரம்
English Meaning:
green manure
பசுமைப் புரட்சி
நவீன முறைகளால் குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் ஏற்படும் வகையில் விவசாயத்தில் நடந்த பெரும் மாற்றம்
English Meaning:
great change that took place within a short period in agriculture resulting in large yields
பசும்
(தாவரங்களைக் குறிக்கையில்) பச்சை நிறம் உடைய
English Meaning:
(of plants) green
பசை1
ஒட்டும் தன்மை கொண்ட வழுவழுப்பான பொருள்
English Meaning:
semi-solid adhesive material
பசை2
பண வசதி
English Meaning:
affluence
பச்சடி
மாங்காய், வெண்டைக்காய் முதலிய காய்கறிகளில் ஒன்றைப் பொடியாக நறுக்கி வேகவைத்து வெல்லம் அல்லது மிளகாய் போட்டுத் தாளித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி
English Meaning:
a variety of side dish mildly sweet made with vegetables
பச்சரிசி
நெல்லை (அவிக்காமல்) காயவைத்துப் பெறும் அரிசி
English Meaning:
rice hulled without boiling
பச்சாதாபம்
மனத்தை நெகிழ வைக்கும் இரக்கம் அல்லது பரிவு
English Meaning:
remorse
பச்சிலை
(மருந்தாகப் பயன்படும்) பறித்த இலை
English Meaning:
leaf of medicinal plants just collected
பச்சிளம் குழந்தை
பிறந்து சில நாட்களே ஆன குழந்தை
English Meaning:
an infant just born or a few days old
பச்சை உடம்பு
(பிரசவத்திற்குப் பின்) தளர்ச்சி அடைந்திருக்கும் உடல்
English Meaning:
tenderness of body (after child birth)
பச்சை1
இலை, புல் போன்றவற்றில் உள்ள நிறம்
English Meaning:
green (colour)
பச்சை2
வேகவைத்தல், சுடவைத்தல் போன்ற எந்த விதத் தயாரிப்புக்கும் உள்ளாகாத நிலை
English Meaning:
not subjected to any process such as cooking, heating, etc
பச்சை3
(ஒளிவுமறைவோ நயமோ இல்லாத) வெளிப்படை
English Meaning:
bluntness
பச்சைகுத்து
(படம், பெயர் முதலியவை அழியாமல்) கரும் பச்சை நிறத்துடன் இருக்குமாறு ஒரு வகை மையில் ஊசியைத் தொட்டு உடலில் குத்துதல்
English Meaning:
tattoo
பச்சைக் கற்பூரம்
(சமையலில் வாசனைக்காகச் சேர்க்கப்படும்) கற்பூர வாசனை உடைய வெண்ணிறப் பொருள்
English Meaning:
medicated camphor
பச்சைக்கல்1
மரகதம்
English Meaning:
emerald
பச்சைக்கல்2
சுடாத செங்கல்
English Meaning:
unbaked brick
பச்சைக்குதிரை
ஒருவரைக் குனிய வைத்து அவர் முதுகில் கை ஊன்றித் தாண்டும் ஒரு வகைச் சிறுவர் விளையாட்டு
English Meaning:
(the game of) leap-frog
பச்சைக்கொடி காட்டு
(ஒன்றைச் செய்வதற்கு) அனுமதி அளித்தல்
English Meaning:
give
பச்சைபிடி
(நடப்பட்ட பயிர் ஊட்டமாக வளர்வதற்கு அறிகுறியாக) பச்சை நிறம் தோன்றுதல்
English Meaning:
(of crops) turn rich green
பச்சைப்பசேல்-என்று/-என்ற
(தாவரங்கள் செழிப்பாக இருப்பதைக் குறிக்கையில்) மிகுந்த பசுமையாக/மிகவும் பசுமையான
English Meaning:
looking green/lush green
பச்சைப்பாம்பு
கூர்மையான வாயையும் மெல்லிய உடலையும் உடைய பச்சை நிறப் பாம்பு
English Meaning:
whip-snake
பச்சைமிளகாய்
மிளகாய்ச் செடியில் காய்க்கும் (காரம் மிகுந்த) காய்
English Meaning:
green chilli
பச்சையம்
இலைகளுக்குப் பச்சை நிறம் தரும் இயற்கைப் பொருள்
English Meaning:
chlorophyll
பச்சோந்தி
தான் இருக்கும் இடத்தின் சூழலுக்கு ஏற்பத் தன் தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மையை இயற்கையாகப் பெற்ற ஒரு வகை ஓணான்
English Meaning:
chameleon
பஜனை
(பலர் ஒன்றாகச் சேர்ந்து) பக்திப் பாடல்களைப் பாடும் ஒரு வழிபாட்டு முறை
English Meaning:
a choral rendering of devotional songs
பஜார்
கடைத்தெரு
English Meaning:
bazaar
பஜ்ஜி
வாழைக்காய், உருளைக்கிழங்கு முதலியவற்றை மெல்லியதாகச் சீவிக் கடலை மாவில் முக்கி எடுத்து எண்ணெய்யில் பொரித்துத் தயாரிக்கப்படும் ஒரு தின்பண்டம்
English Meaning:
snack prepared by dipping thin slices of plantain, potato, etc in flour-paste and frying them in oil
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.