iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 3 of 65

பஞ்சகச்சம் வேட்டியை மூன்று முனைகளாக ஆக்கி இரு முனைகளை இடுப்பின் முன்புறத்தில் செருகி மற்றொரு முனையைக் கால்கள் இடையே கொடுத்து இடுப்பின் பின்புறத்தில் செருகிக் கட்டும் முறை English Meaning: a particular mode of wearing வேட்டி running one end of it through the legs
பஞ்சணை பஞ்சு மெத்தை English Meaning: mattress stuffed with cotton
பஞ்சபட்சி சாஸ்திரம் வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய பறவைகள் எழுப்பும் ஒலிகளை வைத்துப் பலன் சொல்லும் சோதிட முறை English Meaning: system of divination from the call of certain birds
பஞ்சபூதம் நிலம், நீர், காற்று, வானம், தீ ஆகிய ஐந்து இயற்கைச் சக்திகள் English Meaning: the five elements, viz
பஞ்சப் படி அகவிலைப் படி English Meaning: dearness allowance
பஞ்சம் உணவு கிடைக்காத நிலை English Meaning: famine
பஞ்சலோகம் தங்கம், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி ஆகிய ஐந்து உலோகங்களின் கலவை English Meaning: alloy of five metals, viz
பஞ்சவர்ணக்கிளி உருவத்தில் சற்றுப் பெரிதாகவும் பல வண்ணம் உடையதாகவும் உள்ள கிளி English Meaning: macaw
பஞ்சாங்கம் (ஜாதகம் கணிப்பதற்கும் நல்ல நேரம் பார்ப்பதற்கும் பயன்படுத்தும்) ஜோதிட முறைப்படி குறிப்பிட்ட ஆண்டுக்கு உரிய நாள், நட்சத்திரம், திதி, கிரகநிலை முதலியவை குறித்த விபரங்கள் அடங்கிய நூல் English Meaning: almanac (containing astrological and some astronomical information)
பஞ்சாமிர்தம் (இறைவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்) வாழைப்பழம், தேன், நெய், சர்க்கரை, திராட்சை முதலியவற்றைச் சேர்த்துச் செய்த இனிப்புச் சுவை மிகுந்த கலவை English Meaning: a mixture of five substances, usually banana, honey, ghee, sugar and raisin, used for anointing idols and later distributed among devotees
பஞ்சாயத்து கிராமங்களில் உருவாகும் பிரச்சினைகளை ஊர் வழக்கம், மனசாட்சி அடிப்படையில் தீர்த்துவைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஊர்ப் பெரியவர்களின் குழு English Meaning: a body of villagers which settles disputes according to custom and good conscience
பஞ்சாயத்து யூனியன் ஊராட்சி ஒன்றியம் English Meaning: panchayat union
பஞ்சாலை பஞ்சில் உள்ள தூசு, கொட்டை போன்றவற்றை நீக்கிச் சுத்தப்படுத்துவதற்கான தொழிற்சாலை English Meaning: ginning factory
பஞ்சி சோம்பல் English Meaning: laziness
பஞ்சு (பருத்திச் செடியிலிருந்து அல்லது இலவ மரத்தின் காயிலிருந்து கிடைக்கும்) நுண்ணிய இழைகளாலான, திரவத்தை உறிஞ்சக் கூடிய, எளிதில் தீப்பற்றக் கூடிய, கனமற்ற வெண்ணிறப் பொருள் English Meaning: cotton (wool)
பஞ்சு மிட்டாய் குச்சியில் பந்து போல் சுற்றியிருக்கும், வண்ணப் பஞ்சு போன்ற, சீனிப் பாகினால் ஆன தின்பண்டம் English Meaning: candy-floss
பஞ்சை ஏழை English Meaning: poor
படகு துடுப்பால் அல்லது இயந்திர விசையால் இயக்கப்பட்டு நீரில் செல்லும் போக்குவரத்துச் சாதனம் English Meaning: boat
படங்கு தார்ப்பாய் English Meaning: tarpaulin
படச்சுருள் புகைப்படத்தையோ திரைப்படத்தையோ பதிவுசெய்வதற்கான, ரசாயனப் பூச்சு கொண்ட பட்டை வடிவச் சுருள் English Meaning: roll of film
படத்தொகுப்பு எடுக்கப்பட்ட காட்சிகளுள் தேவை இல்லாதவற்றை நீக்கித் தேவையானவற்றை வரிசைப்படி ஒழுங்குபடுத்தும் திரைப்படத் தயாரிப்பு முறை English Meaning: film editing
படபடப்பு (இதயத்திலும் பிற உடலுறுப்புகளிலும்) இயல்பான நிலையில் இருக்க முடியாத அளவுக்கு ஏற்படும் துடிப்பு English Meaning: palpitation
படப்பிடிப்பு கதையைத் திரைப்படமாகப் பதிவுசெய்தல் English Meaning: film shooting
படப்பு (வைக்கோல்) போர் English Meaning: haystack
படமரம் (தறியில்) நெய்த துணி சுற்றப்படும் உருளை English Meaning: cloth roller (in a loom)
படமாக்கு திரைப்படமாகப் பதிவுசெய்தல்/திரைப்படம் தயாரித்தல் English Meaning: shoot (a film)/ make a film
படம் எடு1 புகைப்படமாக அல்லது திரைப்படமாகப் பதிவுசெய்தல் English Meaning: take a picture
படம் எடு2 (நல்லபாம்பு சீறும்போது) தலையை உயர்த்திப் பட்டையாக விரித்தல் English Meaning: (of cobra) spread the hood
படம்1 தாள், துணி, படச்சுருள் போன்றவற்றில் வரைதல், அச்சடித்தல், ஒளியைப் பதிவுசெய்தல் முதலிய முறைகளில் உருவாக்கப்படுகிற உருவம் அல்லது வடிவம் English Meaning: picture
படம்காட்டு பயமுறுத்தும் அல்லது அசரவைக்கும் நோக்கத்தில் பெரிதுபடுத்துதல் அல்லது நடந்துகொள்ளுதல் English Meaning: assume a threatening posture
படம்பிடித்துக் காட்டு உண்மையில் உள்ளபடி காட்டுதல் English Meaning: paint a lifelike sketch (in words)
படர் (செடி, கொடி முதலியவை) கிளைத்துப் பரவலாகுதல் அல்லது விரிதல் English Meaning: (of creepers) climb
படர்க்கை தானோ தன் முன் இருப்பவரோ அல்லாத பிறர் ஒருவர் அல்லது பிற ஒன்று English Meaning: third person
படலம்1 (புகை, புழுதி முதலியவை பொருள்களை மறைக்கும் அளவிற்கு) திரை தொங்குவது போன்று பரந்து காணப்படும் நிலை English Meaning: cloud (of dust, smoke, etc.)
படலம்2 (காவியம், இதிகாசம் போன்றவற்றில் ஒரு நிகழ்ச்சியை விவரிக்கும்) உட்பிரிவு English Meaning: chapter or section (in an epic mostly depicting a single theme or incident)
படலை (வேலியில் அமைக்கப்படும்) தட்டிக் கதவு English Meaning: gate made of bamboo splits
படல் மூங்கில் தப்பை, காய்ந்த குச்சி முதலியவற்றைச் சேர்த்துக் கட்டி அமைக்கப்படும் வேலி அல்லது வேலியாக்கக் கூடிய பகுதி English Meaning: fence or part of it made of bamboo splits or thorny branches
படவா ஒருவரைத் திட்டவும், பிரியத்துடன் அழைக்கவும் பயன்படுத்தும் சொல் English Meaning: a term of abuse as well as endearment
படாடோபம் ஆடம்பரமும் பகட்டும் மிகுந்த தன்மை English Meaning: ostentation
படி1 (பனி, ஈரம் அல்லது தூசு போன்றவை ஒரு பரப்பின் மீது) பரவித் தங்குதல் English Meaning: (of snow, moisture) be covered with
படி2 எழுதப்பட்டிருப்பதை வார்த்தைகளாக்கி உச்சரித்தல் English Meaning: read (a letter, lesson, etc.)
படி4 (முகத்தலளவையில்) எட்டு ஆழாக்குக் கொண்ட ஓர் அளவு English Meaning: a measure of 8 ஆழாக்கு
படி5 பணியாளர்களுக்குப் பயணச் செலவு, வீட்டு வாடகை, விலைவாசி உயர்வு முதலிய செலவுகளை ஈடுகட்டும் நோக்கில் அடிப்படைச் சம்பளத்தோடு குறிப்பிட்ட விகிதத்தில் வழங்கப்படும் தொகை English Meaning: allowance paid to an employee in addition to the basic pay
படி6 (புத்தகத்தின்) அச்சடிக்கப்பட்ட பிரதி(தட்டச்சு முதலியன செய்வதில்) நகல் English Meaning: copy (of a book, document, etc.)
படிகம் பனிக்கட்டி போன்று நிறமற்றதும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதும் இயற்கையிலேயே கிடைக்கக் கூடியதுமான திடப் பொருள் English Meaning: crystal
படிகாரம் (தண்ணீரைத் தெளியவைத்தல் போன்றவற்றிற்குப் பயன்படும்) காரத் தன்மை கொண்ட ஒரு வேதிப் பொருள் English Meaning: alum
படிக்கட்டு (ஓர் இடத்தில் அல்லது வாகனத்தில்) ஒரு படி அல்லது படிகளின் வரிசை English Meaning: steps
படிக்கல் எடைக்கல் English Meaning: weight (for scales)
படிக்கவை (தேவையான உதவிகள் செய்து, வசதிகள் ஏற்படுத்தி ஒருவரை) கல்வி கற்கச்செய்தல் English Meaning: educate
படித்தவன் (கல்வி நிலையங்களில் சேர்ந்து) கல்வி கற்றவன் English Meaning: educated man

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together