iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 4 of 65

படித்தவள் கல்வி கற்றவள் English Meaning: educated woman
படித்துறை (ஆறு, குளம் போன்றவற்றில்) இறங்குவதற்கான படிக்கட்டு English Meaning: flight of steps (leading to the water in a river, pond, etc.)
படிப்பகம் பத்திரிகைகள் படிப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் பொது இடம் English Meaning: a place where people can read newspapers
படிப்படியாக/படிப்படியான பல கட்டங்களைக் கடந்து சீராக/பல கட்டங்களைக் கடந்து சீரான English Meaning: step by step
படிப்பாளி ஒரு துறையில் நிறையப் படித்துத் தேர்ச்சி பெற்றவர் English Meaning: well-read person
படிப்பினை (வரலாறு, நிகழ்ச்சி, அனுபவம் போன்றவை) கற்றுக்கொடுக்கும் பாடம் English Meaning: lesson (that one learns)
படிப்பு (கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பெறும்) கல்வி English Meaning: education (one gets from an educational institution)
படிமம் விக்கிரகம் English Meaning: idol or image (of god)
படியாள் தானியத்தை அல்லது பணத்தைக் கூலியாகக் கொடுத்து வயல் வேலைகளைக் கவனிப்பதற்காக நியமித்துக்கொள்ளும் பணியாள் English Meaning: hired farm labourer who is paid in kind or cash
படிவம்1 (தகவல்களை வகைப்படுத்திப் பெறுவதற்காக) கேள்விகள் அல்லது வாசகங்கள் அடங்கியதும் அவற்றை நிரப்புவதற்கான இடங்களும் உள்ள தாள் English Meaning: (printed) form
படிவம்2 நிலத்தடியிலோ பாறைகளிலோ படிந்து காணப்படும் உலோகங்களின் அல்லது தாதுக்களின் அடுக்கு English Meaning: formation (of metals, minerals)
படு1 ஒரு பரப்பின் மீது வந்தமைதல் அல்லது விழுதல் English Meaning: fall (on a surface)
படு3 (தாவரங்கள்) வளர்ச்சி நிலை இழத்தல் English Meaning: (of plants) become dry
படு4 ஓய்வுக்காக உடலை ஒரு பரப்பின் மீது கிடைமட்ட நிலையில் இருத்துதல் English Meaning: lie down
படுகளம் (தெருக்கூத்தில் துரியோதனன்) போரில் கொல்லப்படும் நிகழ்ச்சி English Meaning: scene of killing (துரியோதனன் in தெருக்கூத்து)
படுகை வண்டல் மண் படியும் பகுதியும் அதை ஒட்டியுள்ள இடமும் English Meaning: basin
படுக்க (பெரும்பாலும் வை, போடு முதலிய வினைகளோடு) கிடைமட்ட நிலையில் English Meaning: in a horizontal position
படுக்கை படுத்துக்கொள்ளப் பயன்படுத்தும் பாய், மெத்தை போன்ற விரிப்பு/(மருத்துவமனையில்) கட்டில் English Meaning: bedding/(mostly in hospitals) bed
படுக்கைப் புண் நோயாளி நீண்ட நாட்களாக ஒரே நிலையில் படுத்திருப்பதால் ஏற்படும் புண் English Meaning: bedsore
படுதா சாக்கு, கித்தான் முதலியவற்றால் தயாரிக்கப்பட்ட உறுதியான துணி English Meaning: curtain, cover, etc made of coarse material
படுத்தபடுக்கையாக நோய் முதலியவற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுப் படுக்கையை விட்டு எழ முடியாத நிலையில் English Meaning: bedridden
படுத்து1 துன்பம், தொல்லை, தொந்தரவு முதலியவற்றுக்கு உள்ளாக்குதல் English Meaning: cause to suffer
படை1 (கலைப் படைப்பு, கதைப் பாத்திரம் முதலியவற்றை அல்லது புதிதாக, புதிய முறையில் ஒன்றை) உருவாக்குதல் English Meaning: create
படை2 (நாட்டைக் காக்க ஆயுதங்களின் உதவியால்) போரிடுவதற்குப் பயிற்சி பெற்ற வீரர்களின் தொகுதி English Meaning: army
படை3 அரிப்பையும் சொரசொரப்பான புண்ணையும் ஏற்படுத்தக் கூடிய தோல் நோய் English Meaning: eczema
படைக்கலம் போர்க்கருவி English Meaning: weapons
படைப்பாற்றல் புதிதாக உருவாக்கும் திறன் English Meaning: creativity
படைப்பாளி (கவிதை, நாடகம் போன்றவற்றை) உருவாக்குபவன் English Meaning: (creative) writer
படைப்பிலக்கியம் (மொழிபெயர்ப்பு அல்லாத) புதிதாக உருவாக்கிய இலக்கியம் English Meaning: creative literature
படைப்பு1 (பொதுவாக) உருவாக்கப்பட்டது/(தொழிற்சாலை போன்றவற்றில்) தயாரிக்கப்பட்டது English Meaning: creation
படையல் தெய்வத்திற்கு இலையில் வைத்து அளிக்கும் உணவு English Meaning: offering of food to a deity placing it on a plantain leaf
படையெடு (நாட்டை, நகரத்தை) கைப்பற்றப் படையுடன் நுழைதல் English Meaning: invade (a country)
படைவீரன் போர்வீரன் English Meaning: soldier
பட்-என்று எதிர்பார்க்காத முறையில் அல்லது வேகத்தில் English Meaning: in an unexpected manner or with unexpected quickness
பட்சணம் (சில நாட்கள் வைத்துக்கொள்ளக் கூடிய) இனிப்பும் காரத் தின்பண்டங்களும் English Meaning: sweet and other refreshments (that can be preserved for a few days)
பட்சபாதம் பாரபட்சம் English Meaning: partiality
பட்சி பறவை English Meaning: bird
பட்டணப் பிரவேசம் (கொண்டாடும் நோக்கத்தோடு மதத்தலைவர், மணமகன் போன்றோரை வரவேற்று) நகர வீதியில் அழைத்து வரும் சடங்கு English Meaning: custom of welcoming religious heads, a bridegroom, etc taking them in procession through the streets of the town
பட்டணம் (பொதுவாக) நகரம்(குறிப்பாக) சென்னை நகரம் English Meaning: (generally) city
பட்டணம்படி இரண்டு லிட்டர் அளவு கொண்ட படி English Meaning: a measure of approximately two litre capacity
பட்டதாரி (பல்கலைக்கழக) பட்டம் பெற்றவர் English Meaning: graduate
பட்டத்தரசி அரசனின் மனைவி English Meaning: wife of a king
பட்டத்து இளவரசன் அரசனுக்குப் பிறகு முடிசூட்டிக்கொள்ளும் உரிமை படைத்த இளவரசன் English Meaning: crown prince
பட்டத்து யானை அரசச் சின்னங்களைத் தாங்கியதும் அரசர் பவனி வருவதற்கு உரியதுமான யானை English Meaning: royal elephant
பட்டப்பகல் நல்ல வெளிச்சம் இருக்கிற பகல் நேரம் English Meaning: broad daylight
பட்டமளிப்பு விழா (பல்கலைக்கழகத்தில்) பட்டம் பெற்றவருக்கு அதிகாரபூர்வமாகப் பட்டத்திற்கு உரிய சான்றிதழை வழங்கும் விழா English Meaning: a ceremony for the conferring of degrees upon students
பட்டம்2 (காற்றில் பறக்க விடப்படும்) காற்றாடி English Meaning: kite
பட்டம்3 பயிரிடுவதற்கான பருவம் English Meaning: agricultural season
பட்டயம் (முற்காலத்தில்) அரசனால் வழங்கப்பட்ட நிலம்குறித்த அதிகாரபூர்வமான தகவல் அல்லது அரசனுடைய வெற்றி போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தி பொறிக்கப்பட்ட செப்புத்தகடு English Meaning: copper plate bearing inscription on the grants made, etc by kings
பட்டர் திருமாலுக்கு வைணவ ஆகமப்படி பூஜை செய்யும் தகுதி உடையவர் English Meaning: one who is entitled to perform பூஜை in temples dedicated to Vishnu

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together