iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 5 of 65

பட்டறிவு நேரடி அனுபவத்தின்மூலம் பெறும் அறிவு English Meaning: knowledge gained by experience
பட்டறை1 தச்சு வேலை போன்றவை நடைபெறும் இடம் English Meaning: carpentry or smithy (shop)
பட்டறை2 (நெல்லைச் சேமித்து வைப்பதற்கான) சாக்கு அல்லது வைக்கோலால் ஆன அமைப்பு English Meaning: a structure made of gunny bags or hay for storing grains
பட்டவர்த்தனமாக/பட்டவர்த்தனமான (எந்த வித ஒளிவுமறைவுமின்றி) வெளிப்படையாக/வெளிப்படையான English Meaning: candidly
பட்டா குறிப்பிட்ட எண்ணுள்ள நிலம், வீட்டு மனை முதலியவற்றுக்கு வரி செலுத்த வேண்டிய உடமையாளர் யார் என்பதைக் காட்டும் ஆவணம் English Meaning: a settlement record which shows who, as the owner of a specified land, is obliged to pay the tax
பட்டாக்கத்தி பட்டையான பரப்புடைய வாள் English Meaning: sword with broad blade
பட்டாசு நெருப்பு வைத்ததும் பூப்பூவாகத் தெறிக்கும் அல்லது சத்தத்துடன் வெடிக்கும் வகையில் ரசாயனத் தூள் அடைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் பொருள் English Meaning: sparklers and crackers
பட்டாணி காயவைத்து உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுக்கப்பட்ட உருண்டையான பயறு English Meaning: fried peas of the garden pea (prepared as a snack)
பட்டாதாரர் (நிலம், மனை முதலியவற்றுக்கு அளிக்கப்பட்ட) பட்டாவின் உரிமையாளர் English Meaning: holder of பட்டா
பட்டாபிஷேகம் ஒரு நாட்டின் அரசராக அல்லது அரசியாக முடிசூடும் சடங்கு English Meaning: coronation
பட்டாமணியம் வருவாய்த் துறை அதிகாரிகளால் முன்பு நில வரி போன்ற வரிகளை வசூலிக்க நியமிக்கப்பட்டிருந்த கிராம அதிகாரி English Meaning: village officer (formerly appointed in each village by the district revenue establishment for the collection of land revenue)
பட்டாம்பூச்சி அழகான, விதவிதமான வண்ணத்தில் இறக்கைகளை உடைய ஒரு வகைப் பூச்சி English Meaning: butterfly
பட்டாளம் ராணுவம் English Meaning: army
பட்டி பார் (வர்ணம் பூசுதல் முதலிய பூச்சு வேலையைத் துவங்கும் முன்) ஒரு பரப்பைச் சமப்படுத்தும் பொருட்டு மெழுகு போன்ற பொருளைப் பூசுதல் English Meaning: fill the holes, crevices in a surface with sth (before painting)
பட்டி1 சிற்றூர் English Meaning: hamlet
பட்டி2 (கிராமத்தில்) பிறர் நிலத்தில் பயிர்களை மேயும் ஆடு, மாடு ஆகியவற்றை (உரிமையாளர் வந்து மீட்டுச் செல்லும்வரை) அடைத்து வைக்கும் இடம் English Meaning: (cattle) pound
பட்டி3 (சட்டை, பாவாடை முதலிய உடைகளில்) விளிம்பை மடித்துத் தைக்கும் பகுதி English Meaning: hemming
பட்டிக்காடு நகரத்து வசதிகள் சிறிதளவுகூட இல்லாத கிராமம் English Meaning: village wanting in amenities
பட்டிக்காட்டான் நகர்ப்புற நாகரிகம் அறியாத கிராமவாசி English Meaning: rustic
பட்டிதொட்டி கிராமமும் அதைவிடச் சிறிய ஊரும் English Meaning: (every) nook and cranny
பட்டினி (உணவு இல்லாமல் அல்லது உணவு உண்ணாமல்) பசியோடு இருக்கும் நிலை English Meaning: starvation
பட்டினிச்சாவு உணவு கிடைக்காததால் ஏற்படும் மரணம் English Meaning: death caused by starvation
பட்டினிபோடு (உண்ணாமல், உணவு கொடுக்காமல்) பசியோடு இருக்கச்செய்தல் English Meaning: starve
பட்டிமன்றம் அணியினராகப் பிரிந்து கொடுக்கப்பட்ட தலைப்புப் பொருளை ஆதரித்தும் எதிர்த்தும் பேசும் மேடை விவாத நிகழ்ச்சி English Meaning: a forum of opposing teams debating a given subject
பட்டியல் விபரங்களை ஏதேனும் ஓர் அடிப்படையில் ஒன்றன் கீழ் ஒன்றாகத் தரும் வரிசை முறை English Meaning: list
பட்டு புழுவாக இருக்கும் பருவத்தில் உள்ள ஒரு வகைப் பூச்சியின் கூட்டிலிருந்து எடுக்கப்படுவதும் நூலாக ஆக்கி ஆடைகள் நெய்யப் பயன்படுவதுமான மெல்லிய இழை English Meaning: yarn of silk
பட்டுப்புழு பட்டு இழையைத் தரும் வளர்ச்சிக் கட்டத்தில் உள்ள பூச்சியின் புழு English Meaning: pupa of silk worm
பட்டுப்பூச்சி பட்டு இழையைத் தரும் பூச்சி English Meaning: silk worm
பட்டும்படாமலும் (பேசுதல், நடந்துகொள்ளுதல் குறித்து வருகையில்) (எந்த ஒரு விஷயத்திலும் தன்னை) சம்பந்தப்படுத்திக்கொள்ளாமல் English Meaning: in a noncommittal way
பட்டுவாடா (சம்பளம், கடிதம், பொருள் போன்றவற்றை) உரியவர்களுக்கு வழங்குதல் English Meaning: distribution
பட்டை (-ஆக, -ஆன) (கோடு அல்லது கோடு போன்றவற்றைக் குறிக்கையில்) சற்று அகலமானது(கம்பி அல்லது கம்பி போன்றவற்றைக் குறிக்கையில்) சற்றுத் தட்டையானது English Meaning: (of lines or anything like a line) bar
பட்டைசாதம் (கோயிலில் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டுப் பின் வழங்கப்படும்) கிண்ணத்தின்மூலமாகக் கட்டி போல ஆக்கப்பட்டிருக்கும் சோறு English Meaning: (in temples) cooked rice offered to a deity and later measured with a cup and distributed
பட்டைச்சாராயம் வேலம்பட்டை, சர்க்கரை, படிகாரம் முதலியவற்றைப் போட்டுத் தயாரிக்கும் நாட்டுச் சாராயம் English Meaning: (country) arrack (from the bark of certain trees)
பட்டைதீட்டு (ஒளிரச்செய்யும் வகையில் வைரத்தின்) பக்கங்களை நுண்மையாக வெட்டுதல் English Meaning: cut facets (on a diamond)
பட்டொளி பட்டில் இருப்பது போன்ற மினுமினுப்பு English Meaning: sheen of silk or similar material
பணப்பயிர் (தானியம் அல்லாத) வருமானத்தைத் தரக் கூடிய கரும்பு, பருத்தி போன்ற பயிர்கள் English Meaning: commercial crop
பணமுடிப்பு (ஒருவரைப் பாராட்டி கௌரவிக்கும் முறையில் அல்லது நிதி சேர்க்கும் முறையாக) திரட்டி வழங்கப்படும் பெரும் தொகை English Meaning: a sum of money collected and given as a gift
பணம் (அரசு வெளியிடும் மதிப்பு குறிக்கப்பட்ட நாணயம், தாள் போன்ற) வாங்குதல், விற்றல் ஆகிய செயல்பாடுகளுக்குக் கருவியாகப் பயன்படும் சாதனம் English Meaning: money
பணம்பண்ணு பணம் சம்பாதித்தல் English Meaning: make or earn money
பணயக்கைதி (தங்கள் கோரிக்கைகளுக்கு இணங்கும்படி கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் போன்றோர்) எதிர்த்தரப்பினரை மிரட்டிப் பணியவைக்கும் நோக்கத்துடன் பிடித்துவைத்திருக்கும் நபர் English Meaning: hostage
பணவிடை (ஒருவர் மற்றொருவருக்கு) பணத்தை அஞ்சல் அலுவலகத்தின்மூலமாகக் கட்டணம் செலுத்தி அனுப்பும் முறை English Meaning: money order (sent through post office)
பணவீக்கம் ஒரு நாட்டில் பணப் புழக்கம் அதிகமாவதால் பணத்தின் மதிப்புக் குறைந்து விலைவாசி அதிகமாகும் நிலை English Meaning: inflation
பணி1 (அதிகாரம், கட்டளை போன்றவற்றுக்கு) கட்டுப்படுதல் English Meaning: submit (oneself to authority, order, etc.)
பணி2 (செயலை நிறைவேற்றும்படி) உத்தரவிடுதல் English Meaning: order
பணி3 (அலுவலகம், தொழிற்சாலை முதலியவற்றில்) தரப்படும் பொறுப்பை ஊதியம் பெற்று நிறைவேற்றுவது English Meaning: work
பணிக்கொடை (பெரும்பாலும் அலுவலக வழக்கில்) குறிப்பிட்ட ஆண்டுகளுக்குக் குறையாமல் பணிபுரிந்த ஊழியர் ஓய்வு பெறும்போது அல்லது பணியில் இருக்கும் காலத்தில் இறக்க நேரிடும்போது நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும் ஓய்வுகாலச் சலுகை வகையைச் சேர்ந்த தொகை English Meaning: gratuity
பணிநீக்கம் (அலுவலகம், நிறுவனம் போன்றவற்றில் ஊழியரை) பணியிலிருந்து விலக்குதல் English Meaning: dismissal
பணிப்பாளர் (ஒரு துறையின்) இயக்குநர் English Meaning: director (of a department, etc.)
பணிப்பெண் (மருத்துவமனை, தொழிற்சாலை போன்றவற்றில்) சிறுசிறு வேலைகளைக் கவனிக்கும் கடைநிலைப் பெண் ஊழியர் English Meaning: last grade woman worker (in hospitals, factories, etc.)
பணிமனை (பேருந்துகளை) பழுதுபார்க்கவும் நிறுத்திவைக்கவும் பயன்படுத்தப்படும் இடம் English Meaning: shed (for buses either for repairs or for parking)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together