iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 6 of 65

பணிமூப்பு (பெரும்பாலும் அலுவலக வழக்கில்) ஒரே நிலையில் பதவி வகிக்கும் பலருள் ஒருவர் மற்றவரைவிட எவ்வளவு காலம் அதிகமாகப் பணியாற்றி உள்ளார் என்பதைக் கணக்கிடும் கால அளவு English Meaning: seniority (of an employee in the service)
பணியரங்கு (குறிப்பிட்ட ஒரு துறையில் பயிற்சி அளிக்கும்) பட்டறை English Meaning: workshop
பணியாரம் (பெரும்பாலும்) வெல்லம் கலந்த அரிசி மாவைக் குழிகள் உள்ள தட்டிலோ இருப்புச்சட்டியிலோ ஊற்றித் தயாரிக்கப்படும் தின்பண்டம் English Meaning: a kind of ball-shaped or small disc-shaped snack made of sweetened rice flour
பணியாற்று வேலை பார்த்தல் English Meaning: work (in an office)
பணியாளர் (அலுவலகத்தில்) பணி புரிபவர் English Meaning: employee
பணியாள் (தனியாரிடம்) ஊழியம் செய்பவர் English Meaning: servant
பணியிடம் (அலுவலகத்தில்) பதவிக்கான இடம் English Meaning: post
பணிவிடை (பெரியவர்கள், நோயாளிகள் முதலியோருக்கு) தேவையானவற்றைத் தந்து பொறுப்புடன் கவனித்துச் செய்யும் உதவி English Meaning: attendance (on the aged, sick, etc.)
பணிவு தன்னை முதன்மைபடுத்திக்கொள்ளாத மென்மை English Meaning: humility
பண் (பொதுவாக) பாடல் English Meaning: song
பண்டகசாலை பொருள்கள் பாதுகாப்பாகச் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் இடம் English Meaning: storehouse
பண்டபாத்திரம் பொருள், பாத்திரம் முதலியவை English Meaning: household things or articles
பண்டமாற்று ஒரு பொருளைக் கொடுத்து (தேவையான) மற்றொரு பொருளைப் பெறுதல் English Meaning: exchange of goods for goods
பண்டம் (பொதுவாக) பொருள்/(குறிப்பாக) உணவுப் பொருள் English Meaning: (generally) material things
பண்டாரசன்னிதி ஒரு சைவ மடத்தைச் சேர்ந்த சன்னியாசிகளுக்குக் குருவாகவும் பிறருக்குச் சன்னியாசம் அளிக்கும் தகுதி பெற்றவராகவும் இருந்து மடத்தின் தலைமைப் பொறுப்பு வகிப்பவர் English Meaning: the head of a Saiva mutt who is the chief of the ascetics in his mutt and has authority to admit others to the ascetic order
பண்டாரம் ஆண்டி(கிராமச் சிறுதெய்வக் கோயிலில்) பூசாரி English Meaning: religious mendicant
பண்டிகை (தாம் சார்ந்துள்ள சமயத்தில் முக்கியமானதாகக் கருதப்பட்டு) வருடத்தில் குறிப்பிட்ட நாளில் (விருந்துடன்) சிறப்பாகக் கொண்டாடப்படுவது English Meaning: (religious) festival
பண்டித மொழியில் புலமையுடைய English Meaning: scholarly
பண்டிதன் (மொழியில் அல்லது ஒரு குறிப்பிட்ட துறையில்) புலமை வாய்ந்தவன் English Meaning: man of erudition
பண்டிதர் (மொழி கற்பிக்கும்) ஆசிரியர் English Meaning: teacher
பண்டு பழங்காலம் English Meaning: ancient times
பண்டை/பண்டைய பழங்காலத்து English Meaning: ancient
பண்ணு1 செய்1 English Meaning: see செய்1
பண்ணு2 செய்2 English Meaning: see செய்2
பண்ணை (கிராமத்தில்) பெருமளவில் விவசாயம் செய்வதற்குத் தேவையான வயலையும் தோட்டத்தையும் கால்நடைகளையும் கொண்ட தனியாரின் சொத்து English Meaning: (in villages) farm (owned by individuals)
பண்ணையார் (கிராமத்தில்) பெருமளவில் நிலம், தோப்பு முதலியவற்றைச் சொந்தமாகக் கொண்டவர் English Meaning: landlord (of a large farm)
பண்ணையாள் (கிராமத்தில்) விவசாயப் பண்ணையில் வேலை பார்ப்பவர் English Meaning: farm labourer (mostly attached to a landlord)
பண்படு (நிலமானது) உழுது பயிரிடுவதற்கு ஏற்றவாறு சீரடைதல் English Meaning: (of land) become cultivable or arable
பண்படுத்து (நிலத்தை) உழுது பயிரிடுவதற்கு ஏற்ற நிலைக்குச் சீராக்குதல் அல்லது சரிசெய்தல் English Meaning: prepare (lands) for cultivation
பண்பட்ட பண்பாடு நிறைந்த English Meaning: cultured
பண்பாடு குறிப்பிட்ட இடத்து மக்களின் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் கலைகளும் சிந்தனையை வெளிப்படுத்தும் முறைகளும் English Meaning: culture
பண்பாளர் சிறந்த குணநலன்களைப் பெற்றிருப்பவர் English Meaning: cultured man
பண்பி பண்பை ஏற்றிருப்பவர் அல்லது ஏற்றிருப்பது English Meaning: person or thing possessing a quality or character
பண்பு ஒன்றிற்கு இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் தன்மை English Meaning: intrinsic quality or property
பதநீர் (புளித்துப்போகாமல் இருப்பதற்காக உட்புறம் சுண்ணாம்பு தடவப்பட்ட கலயத்தில் சேகரிக்கப்படும்) பனை மரப் பாளையின் இனிப்பான சாறு English Meaning: sap of palmyra (collected in a pot lined with slaked lime to prevent fermentation)
பதனம் கவனம் English Meaning: care
பதனிடு (விலங்கின் தோலை ரசாயனப் பொருள்களின்மூலம் பொருள்கள் செய்வதற்கான) பக்குவத்துக்கு வரும்படிசெய்தல் English Meaning: tan
பதம்1 பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பக்குவமாக இருக்கும் தன்மை English Meaning: fit condition (for specific purposes)
பதம்2 சொல் English Meaning: word
பதம்3 சிருங்கார ரசம் நிறைந்த பாடலுக்கு ஆடப்படும் நாட்டிய வகை English Meaning: a composition on the theme of love rendered in slow tempo in dance recitals
பதம்பார் (ஒருவரிடமிருந்து கற்றதை அவரிடமே பயன்படுத்தி) சோதித்தல் English Meaning: test
பதர் உள்ளீடற்ற நெல் English Meaning: empty ears of grain
பதறு நடுங்கிக் கலங்குதல்/(கை, கால்) நடுங்குதல் English Meaning: panic/(of limbs) tremble
பதற்றம் செயல்படுவதில் நிதானம் இழந்து காட்டும் பரபரப்பு English Meaning: excitement
பதவி (நிர்வாகத்தில்) அதிகாரமுள்ள பொறுப்பு/(தொழிற்சாலை, அலுவலகம் முதலியவற்றில்) பணியிடம் English Meaning: (responsible) position/(in an organization, etc.) post
பதவி இறக்கம் (இருக்கும் பதவியைக்காட்டிலும்) அதிகாரத்திலும் மதிப்பிலும் குறைந்த பதவி English Meaning: demotion
பதவி உயர்வு (பதவியில்) அடுத்த மேல்நிலை English Meaning: promotion
பதவிப்பிரமாணம் (அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், நீதிபதி முதலியோர்) பதவி ஏற்கும்போது அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி English Meaning: swearing in (ceremony)
பதவியேல் (பதவிப்பிரமாணம் செய்து) பதவியை ஒப்புக்கொள்ளுதல் English Meaning: be sworn in
பதவுரை (செய்யுளின்) ஒவ்வொரு சொல்லுக்கும் கூறும் பொருள் English Meaning: word for word meaning (of a verse)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together