3,212 words starting with ப · page 7 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பதாகை
தூக்கிச் செல்வதற்கு வசதியாகக் கம்புகளில் கட்டப்பட்ட, வாசகங்கள் தாங்கிய செவ்வக வடிவத் துணி
English Meaning:
banner
பதார்த்தம்
(சோறு நீங்கலாக ஏனைய) தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டம்
English Meaning:
eats
பதி3
கணவன்
English Meaning:
husband
பதிகம்
(குறிப்பிட்ட இடத்தில் எழுந்தருளியுள்ள) தெய்வத்தின் மேல் பாடப்படும் பத்துப் பாடல்கள்
English Meaning:
poem of ten verses on the presiding deity (of a place)
பதிப்பகம்
(புத்தகம் முதலியவற்றை) வெளியிடும் நிறுவனம்
English Meaning:
publishing house
பதிப்பாசிரியர்
(பிறரின் கட்டுரைகளையோ நூலையோ) தொகுத்து அல்லது முறைப்படுத்தித் தரும் பொறுப்பை ஏற்றவர்
English Meaning:
editor (of a work)
பதிப்பாளர்
(புத்தகம் முதலியவற்றை) வெளியிடும் பணியைச் செய்பவர்
English Meaning:
publisher
பதிப்பி
(புத்தகம் முதலியவற்றை வெளியிடுவதற்காக) ஒழுங்குபடுத்துதல்/(புத்தகம் முதலியவற்றை) வெளியிடுதல்
English Meaning:
edit (a book, etc.)/publish
பதிப்பு
(புத்தகம் முதலியவை) விற்பனைக்காக ஒரு முறை குறிப்பிட்ட எண்ணிக்கையில் அச்சிடப்படுவது
English Meaning:
edition (of a book)
பதிப்புரிமை
(புத்தகம், திரைப்படம் முதலியவற்றின் பயன்பாடு, வெளியீடு முதலியவற்றை) உருவாக்கியவர் அனுமதியில்லாமல் மற்றொருவர் பயன்படுத்த முடியாத வகையில் காப்பளிக்கப்படும் உரிமை
English Meaning:
copyright
பதியன்
பதியம்போடுவதால் தனியாக முளைத்துவரும் செடி
English Meaning:
graft
பதியம்போடு
(மல்லிகை, ரோஜா முதலிய) செடியின் கிளையை வளைத்து மண்ணில் புதைத்து அந்தக் கிளை வேர் விட்ட பின் முதல் செடியிலிருந்து வெட்டிவிடுதல்
English Meaning:
graft (a plant)
பதிலடி
பாதிப்பு அடையச்செய்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எதிர் நடவடிக்கை
English Meaning:
retaliation
பதில்
கேள்வி, வேண்டுகோள் முதலியவற்றுக்கு விபரம், விளக்கம், ஒப்புதல் என்ற வகையில் எழுத்துமூலமாகவோ பேச்சுமூலமாகவோ தரப்படுவது
English Meaning:
answer
பதிவாளர்
(சில அரசுத் துறைகளில்) குறிப்பிட்ட விபரங்களை அதிகாரபூர்வமான முறையில் ஆவணங்களில் பதிவு செய்வதற்கு உரிய பொறுப்பு வகிக்கும் அதிகாரி
English Meaning:
a government official responsible for registering and maintaining records (as relating to land records, births and deaths, etc.)
பதிவிரதை
பத்தினி
English Meaning:
she who is totally devoted to her husband
பதிவு
ஒரு பரப்பில் ஒன்று பதிந்ததன் அடையாளம்
English Meaning:
impression (left on a surface)
பதிவு அஞ்சல்
முகவரியில் உள்ளவருக்குச் சேர்ப்பிக்கப்படும் என்பதை உறுதிசெய்வதற்காகக் கூடுதல் கட்டணம் செலுத்திச் சான்று பெற்றுக் கடிதம் முதலியவை அனுப்பும் அஞ்சல்
English Meaning:
registered post
பதிவுநாடா
ஒலிப்பதிவுசெய்வதற்கும் ஒளிப்பதிவுசெய்வதற்கும் பயன்படுத்தும் ரசாயனப் பொருள் பூசப்பட்ட மெல்லிய நாடா
English Meaning:
magnetic tape for audio and video recording
பதிவேடு
(அலுவலகம், நிறுவனம் முதலியவற்றில்) செய்தியை, விபரத்தை அதிகாரபூர்வமாகக் குறிக்கப் பயன்படும் ஏடு
English Meaning:
register (as in an office)
பதுக்கல்
(வெளிச்சந்தையில் எளிதில் கிடைக்காத பொருளை அல்லது நியாய விலைக்கு விற்க வேண்டிய பொருளை விற்காமல்) சட்டவிரோதமாக மறைத்து வைத்திருப்பது
English Meaning:
hoarding
பதுக்கு
(பொருள், பணம் முதலியவற்றை அதிக அளவில்) சட்டவிரோதமாக மறைத்துவைத்தல்
English Meaning:
hoard
பதுங்கு
(வெளியில் இருப்பது ஆபத்து அல்லது நோக்கத்துக்கு இடையூறு என்ற நிலைமையால்) ஒளிதல்
English Meaning:
hide (in order to be safe or not to be seen till the objective is accomplished)
பதுங்கு குழி
(எதிரியின் குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு போன்றவற்றிலிருந்து) பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் மறைந்துகொள்ள வெட்டப்படும் ஆழமான குழி
English Meaning:
trench
பதுமை
(மனித அல்லது தெய்வ உருவ) பொம்மை
English Meaning:
doll
பதை
(பாதிக்கப்பட்டு) பொறுக்க முடியாமல் தவித்தல்
English Meaning:
be in a state of agony
பதைபதை
(மிகுதியைக் காட்டி அழுத்தம் தருவதற்கு) பதை என்னும் வினையின் இரட்டித்த வடிவம்
English Meaning:
reduplication of the verb பதை (to intensify the meaning)
பத்தர்
பொற்கொல்லர்
English Meaning:
goldsmith
பத்தாம்பசலி
(காலத்துக்கு ஏற்றவாறு புதுமைகளையோ புதிய வழிமுறைகளையோ ஏற்றுக்கொள்ளாத) பழைய போக்கு
English Meaning:
tendency to cling to old ways or methods
பத்தாயம்1
(நெல் முதலிய தானியங்களைச் சேமித்து வைக்க உதவும்) கீழ்ப்புறம் திறப்புள்ள மரத்தாலான பீப்பாய் அல்லது பெட்டி போன்ற அமைப்பு
English Meaning:
(barrel or box-shaped) large wooden receptacle (for storing grains esp
பத்தாயம்2
எலிப்பொறி
English Meaning:
mousetrap
பத்தி1
முதல் வரி மட்டும் வலதுபுறம் சற்றுத் தள்ளித் தொடங்கும்படி (கதை, கட்டுரை முதலியவற்றில்) அமைக்கும், பல வரிகளை உள்ளடக்கிய பிரிவு
English Meaning:
paragraph
பத்தினி
(கற்பொழுக்கத்தில் சிறந்த) மனைவி
English Meaning:
wife (whose fidelity is exemplary)
பத்தியம்
(மருந்துக்காகவோ உடல்நிலையைப் பொறுத்தோ எதை விலக்க வேண்டும், எதைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற) உணவுக் கட்டுப்பாடு அல்லது விதிமுறை உணவு
English Meaning:
prescribed diet
பத்திரப்படுத்து
(பொருளை) பாதுகாப்பாக வைத்தல்
English Meaning:
keep
பத்திரம்1
சொத்தின் விபரமும் அதற்கு உரியவரின் பெயரும் எழுதி அரசிடம் பதிவுசெய்யப்பட்ட முத்திரைத்தாள்
English Meaning:
registered document (of property, etc.)
பத்திரம்2
(-ஆக, -ஆன) இழப்பு, சேதம் அல்லது ஆபத்து ஏற்படாத வகையிலான பாதுகாப்பு
English Meaning:
safety
பத்திரிகை
செய்தித்தாள்/இதழ்
English Meaning:
newspaper/magazine
பத்திரிகை வை
(குடும்பச் சடங்குகளுக்கான) அழைப்பிதழை நேரில் கொடுத்து நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தல்
English Meaning:
invite formally in person
பத்திரிகையாளர்
பத்திரிகைக்குச் செய்தி சேகரிப்பவர் அல்லது பத்திரிகை தொடர்பான பணியிலிருப்பவர்
English Meaning:
journalist
பத்து1
போதுமானதாக இருத்தல்
English Meaning:
be sufficient
பத்து2
(ஆடு, மாடு முதலியவற்றை ஓர் இடத்திலிருந்து போகும்படி) ஓட்டுதல்
English Meaning:
chase away (stray cattle)
பத்து3
ஒன்பது என்ற எண்ணுக்கு அடுத்த எண்
English Meaning:
(the number) ten
பத்து4
மூலிகை அரைத்து அல்லது மண் போன்றவற்றைக் குழைத்து (உடலில்) பூசிக் காயவிட்டு ஒட்டிக்கொள்ளவைத்தல்
English Meaning:
herbal or mud plaster (on an affected part of the body)
பத்தை
(காய்கறி, பழம் ஆகியவற்றின்) கீற்று
English Meaning:
slice (of vegetables, fruits)
பத்மராகம்
மாணிக்கம்
English Meaning:
a species of ruby
பத்ரகாளி
உக்கிரமான தோற்றத்தை உடைய காளி
English Meaning:
the goddess காளி in her fearsome appearance
பந்தம்1
நுனியில் துணி சுற்றப்பட்டு எண்ணெய்யில் முக்கியெடுத்த, எரிப்பதற்கு வசதியான கம்பு
English Meaning:
torch (consisting of some combustible substance)
பந்தம்2
உறவு
English Meaning:
relation
பந்தயம்
(விளையாட்டு போன்றவற்றில்) பலர் கலந்துகொள்வதாகவும் ஒருவர் வெற்றி பெறுவதாகவும் அமையும் நிகழ்ச்சி
English Meaning:
contest
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.