3,212 words starting with ப · page 8 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பந்தயம் கட்டு
(பணம் கட்டி அல்லது பொருள் வைத்து) பந்தயத்தில் இறங்குதல்
English Meaning:
make a bet
பந்தல்
நான்கு பக்கமும் கழிகளை நட்டு அதன் மேல் படுக்கைவாட்டில் குறுக்கும் நெடுக்குமாகக் கம்புகள் வைத்துக் கீற்றுகளைப் போட்டு அல்லது கனமான துணியைக் கட்டிச் செய்யும் அமைப்பு
English Meaning:
a temporary shed with a roof made of plaited coconut leaves or cloth (for a function, purpose, etc.)
பந்தா
(தன் பதவி, அந்தஸ்து முதலியவற்றை வெளிப்படுத்தக் கூடிய) மிடுக்கான தோரணை
English Meaning:
overbearing attitude
பந்தாடு
(ஒருவரை) ஒன்றிலும் நிலைக்க விடாமல் அலைக்கழித்தல்
English Meaning:
kick around
பந்தி
(திருமணம் போன்ற விழாவில்) விருந்து உணவிற்கான வரிசை
English Meaning:
an arrangement during feasts in which the invited guests are seated in rows
பந்து1
(கீழே போட்டால் மேலெழக் கூடிய) உருண்டை வடிவ விளையாட்டுச் சாதனம்
English Meaning:
ball
பந்து2
(பெரும்பாலும் பன்மையில்) உறவினர்
English Meaning:
(often in plural) relative
பந்துவீச்சு
(கிரிக்கெட்டில்) மட்டையுடன் விளையாடத் தயாராக இருப்பவரை நோக்கிப் பந்தை வீசுதல்
English Meaning:
bowling (in cricket)
பந்தோபஸ்து
பாதுகாப்பு
English Meaning:
security
பந்த்
(கட்சி, சங்கம் போன்ற அமைப்பு ஒரு கோரிக்கைக்காக அல்லது ஒன்றிற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதத்தில்) போக்குவரத்து, வியாபாரம் போன்றவற்றை நடைபெறவிடாமல் தடுத்தல்
English Meaning:
total stoppage (of business activities in a town, etc.)
பனங்கற்கண்டு
பதநீரைக் காய்ச்சித் தயாரிக்கும் கற்கண்டு
English Meaning:
sugar crystals brown in colour made from palmyra sap
பனங்காய்
பனை மரத்தின் காய்
English Meaning:
fruit of the palmyra
பனங்கூடல்
பனங்காடு
English Meaning:
palmyra grove
பனாட்டு
பனம்பழத்தின் சாற்றைப் பிழிந்து உலரவைத்துத் தகடு போல் தட்டையாகச் செய்யப்படும் ஒரு வகை உணவுப் பண்டம்
English Meaning:
an eatable made from palm juice
பனி1
(குளிர் காலத்தில் இலைகள், கண்ணீரால் கண்கள்) ஈரமடைதல்
English Meaning:
(of leaves, eyes) become wet
பனி2
(குளிர் காலத்தில்) காற்றில் உணர்கிற குளிர்ச்சி அல்லது காற்றில் இறங்குகிற ஈரம்
English Meaning:
chillness
பனிக்கட்டி
உறைந்து திடப் பொருளாக மாறிவிட்ட மழைத்துளி அல்லது நீர்
English Meaning:
hailstone
பனிக்கரடி
குளிர் நாடுகளில் வாழும் அடர்ந்த வெண்ணிற முடி உடைய ஒரு வகைக் கரடி
English Meaning:
polar bear
பனிக்குடம்
வயிற்றினுள் கருவையும் கரு மிதக்கும் திரவத்தையும் தாங்கியுள்ள மெல்லிய பை போன்ற பகுதி
English Meaning:
bag of water (in the womb)
பனிச்சரிவு
பனி மூடிய மலையிலிருந்து பாறை போல் பெயர்ந்து வரும் பனி
English Meaning:
avalanche
பனிப்போர்
நேரடியான மோதலாக வெளிப்படாத உட்பகை
English Meaning:
cold war
பனிமனிதன்
(இமய மலைத் தொடரில் உலவுவதாக நம்பப்படும்) அடர்ந்த ரோமங்கள் உடைய, மனிதனைவிடப் பெரிய உருவம்
English Meaning:
yeti
பனியன்
(ஆண்கள்) உடலின் மேல்பகுதியை மறைக்கும் வகையில் தலை வழியாக அணிந்துகொள்ளும், கழுத்துப் பட்டியோ பித்தானோ இல்லாத உள்ளாடை
English Meaning:
vest
பனிஸ்
பருமனாகவும் மெதுவாகவும் இருக்கும் ஒரு வகை ரொட்டி
English Meaning:
bun
பனுவல்
நூல்
English Meaning:
book
பனை
கூரான முனைகளை உடைய ஓலைகளையும் செதில்செதிலான கறுத்த தண்டுப் பகுதியையும் உடைய ஓர் உயரமான மரம்
English Meaning:
palmyra
பனைவெல்லம்
பனஞ்சாற்றைக் காய்ச்சி உண்டாக்கும் வெல்லம்
English Meaning:
a kind of jaggery
பன்னாடை
(தென்னை, பனை முதலிய மரங்களில்) மட்டைகளை மரத்தோடு பிணைக்கும் வலை போன்ற பகுதி
English Meaning:
fibre (which is like a net) around the bottom of the stalk of palmyra or coconut tree
பன்னாட்டு
சர்வதேச
English Meaning:
multinational
பன்னாட்டு நிதியம்
பல நாடுகளுக்கு இடையே புழங்கும் பணப் பரிமாற்ற விகிதங்களை முறைப்படுத்துதல், அந்நியச் செலாவணிக்கு ஏற்படும் தடைகளை நீக்குதல் முதலிய நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நிதி நிறுவனம்
English Meaning:
international Monetary Fund
பன்னாட்டு மன்றம்
ஐக்கிய நாடுகள் சபை
English Meaning:
united Nations Organization
பன்னிப்பன்னி
(பெரும்பாலும் சொல், பேசு போன்ற வினைகளுடன்) ஒன்றையே திரும்பத்திரும்ப
English Meaning:
repeatedly
பன்னீர்
ரோஜா போன்ற பூவின் இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் வாசனை நீர்
English Meaning:
rosewater
பன்னீர்சோடா
இனிப்புச் சுவை உடைய சோடா போன்ற பானம்
English Meaning:
sweet soda (as a drink)
பன்னீர்ச்செம்பு
(திருமணம் போன்ற நிகழ்ச்சியில் வருபவர்கள் மீது பன்னீர் தெளிக்கப் பயன்படுத்தும்) குழல் போன்ற கழுத்துப் பகுதியும் கிண்ணம் போன்ற அடிப்பாகமும் உடைய உலோகப் பாத்திரம்
English Meaning:
long necked hand-held sprinkler (for rosewater)
பன்முக
பல வகையான
English Meaning:
multifaceted
பன்மை
எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டது
English Meaning:
plural (opposite to ஒருமை)
பன்மைச் சமூகம்
பல இன மக்களும் பல மதத்தைச் சார்ந்தவர்களும் பல மொழி பேசுபவர்களும் ஒன்றாக வாழும் சமுதாயம்
English Meaning:
pluralistic society
பன்றி
கொழுத்த உடலையும் குட்டையான கால்களையும் சற்று நீண்டு குவிந்த வாயையும் உடைய கறுப்பு அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும் விலங்கு
English Meaning:
pig
பப்படம்
(உப்பக் கூடிய) ஒரு வகை அப்பளம்
English Meaning:
a kind of அப்பளம்
பப்பாளி
மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் தோலும் சிவந்த மஞ்சள் நிறத்தில் சதைப் பகுதியும் கொண்ட ஒரு வகைப் பெரிய பழம்/மேற்குறிப்பிட்ட பழம் தரும் மரம்
English Meaning:
papaya (the fruit and the tree)
பம்பரம்
கீழ்ப்பகுதி கூம்பு வடிவிலும் அதன் நுனியில் ஆணியும் இருக்கும் விளையாட்டுச் சாதனம்
English Meaning:
top
பம்பளிமாசு
தடித்த தோலும் புளிப்புச் சுவையும் உடைய, இளம் சிவப்பு நிறச் சுளைகளைக் கொண்ட, ஆரஞ்சு வகையைச் சேர்ந்த பழம்
English Meaning:
pomelo
பம்பை
தோலால் இழுத்துக் கட்டப்பட்ட இரு வட்ட வடிவப் பக்கத்துடன் சுருங்கிய நடுப்பகுதியைக் கொண்ட, நீளமாக இருக்கும் தாள வாத்திய இணை
English Meaning:
a pair of elongated two-sided drums
பம்மாத்து
வெறும் நடிப்பு
English Meaning:
bluff
பம்மு
(ஒருவரைக் கண்டு வெளிவரப் பயந்து) ஒளிதல்
English Meaning:
hide (so as not to be seen by s
பய1
(தீங்கு அல்லது ஆபத்து நேரக் கூடிய சூழ்நிலையில்) பாதுகாப்பு இல்லை என்பது போன்ற கலக்க உணர்வு தோன்றுதல்
English Meaning:
be scared
பய2
(நன்மை, தீமை முதலியவற்றை) உண்டாக்குதல்
English Meaning:
give (benefit)
பயங்கரம்
அச்சம் தருவது/கொடிய தோற்றமுடையது
English Meaning:
that which causes fright
பயங்கரவாதம்
அரசியல் நோக்கத்திற்காக மக்கள் இடையே பீதியைக் கிளப்பும் வகையில் வன்முறையை மேற்கொள்ளும் போக்கு
English Meaning:
terrorism
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.