iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 9 of 65

பயங்கரவாதி பயங்கரவாத முறைகளை மேற்கொள்பவர் English Meaning: terrorist
பயண நூல் ஒருவர் தான் சென்று வந்த நாட்டைப்பற்றியும் சந்தித்த மக்களைப்பற்றியும் எழுதும் நூல் English Meaning: literature of travel
பயணச்சீட்டு பயணம் செய்வதற்கு உரிய கட்டணத்தைச் செலுத்திப் பெறும் சீட்டு English Meaning: ticket
பயணச்சீட்டுப் பரிசோதகர் பேருந்து, ரயில் முதலியவற்றில் பயணம் செய்கிறவர்களின் பயணச்சீட்டு, சுமைக்கான கட்டணச் சீட்டு முதலியவற்றைக் கேட்டு வாங்கிச் சரிபார்க்கும் பணியைச் செய்பவர் English Meaning: ticket examiner (in a bus, train, etc while travelling)
பயணப் படி அலுவலக வேலையின்பொருட்டு வெளி இடங்களுக்குச் செல்லும் பணியாளரின் பயணச் செலவை ஈடுகட்டக் குறிப்பிட்ட விகிதத்தில் வழங்கப்படும் தொகை English Meaning: travelling allowance (abbreviated to T
பயணப்படு பயணம் மேற்கொள்ளுதல் English Meaning: go on a journey
பயணம் இருக்கும் ஊர், நகரம் முதலியவற்றிலிருந்து மற்றொன்றிற்குச் செல்லுதல் English Meaning: travel
பயணி1 (பெரும்பாலும் வாகனத்தில்) பயணம் செய்தல் English Meaning: travel
பயணி2 பயணம் மேற்கொள்பவர் English Meaning: one who undertakes a journey
பயத்தம்பருப்பு பாசிப்பருப்பு English Meaning: green gram
பயந்தாங்கொள்ளி சற்றும் தைரியம் இல்லாத நபர் English Meaning: chicken-hearted person
பயனாளி (குறிப்பிட்ட திட்டம், சட்டம் முதலியவற்றிலிருந்து) பயன்பெறுபவர் English Meaning: beneficiary
பயனிலை ஒரு வாக்கியத்தில் எழுவாயின் நிலையைத் தெரிவிப்பது அல்லது எழுவாய்க்கான செயலின் முடிவைத் தெரிவிப்பது English Meaning: predicate
பயன் (செயலின்) விளைவு English Meaning: result (of an action)
பயன்படு நன்மை விளைவிப்பதாக அல்லது உதவியாக இருத்தல் English Meaning: be useful
பயன்படுத்து (தேவையை நிறைவேற்றும்பொருட்டு அல்லது நன்மை, வசதி போன்றவற்றைப் பெறும்பொருட்டு) கையாளுதல் English Meaning: use
பயன்பாடு பயன்தரும் அல்லது பயன்படக் கூடிய தன்மை English Meaning: use
பயபக்தி பயத்தோடு கூடிய பணிவு அல்லது மரியாதை English Meaning: reverential attitude
பயப்படு (தீங்கு, துன்பம் முதலியவை வந்துவிடுமோ என்று எண்ணி) பயம்கொள்ளுதல் English Meaning: be afraid of
பயமுறுத்து பயம்கொள்ளச்செய்தல் English Meaning: frighten
பயம் தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு English Meaning: fear
பயல் சிறுவனை அன்புடன் அழைக்கப் பயன்படுத்தும் சொல் English Meaning: a term of endearment used esp
பயிராகு பயிர் விளைதல் English Meaning: be cultivated
பயிரிடு (நிலத்தில்) பயிர் விளைவித்தல் English Meaning: grow crops
பயிர் (நன்செய் அல்லது புன்செய் நிலத்தில் உண்டாக்கப்படும்) நெல், பருத்தி, கரும்பு, சோளம் போன்ற தாவரம் English Meaning: crop
பயிர் ஊக்கி பயிரினுடைய சீரான வளர்ச்சிக்கு ஊக்கம் தரக் கூடிய ரசாயனப் பொருள் English Meaning: plant hormone
பயிர்ச் சுழற்சி சில பயிர்களைச் சுழல் முறையில் பயிரிடுதல் English Meaning: crop rotation
பயிர்த்தொழில் விவசாயம் English Meaning: agriculture
பயிற்சி (வேலை, விளையாட்டு போன்றவற்றில் அனுபவ அறிவு பெற) தேவையான செயல் குறிப்புகளைப் பல முறை செய்து பழக்கப்படுத்திக்கொள்ளும் முறை English Meaning: training
பயிற்சிக் கல்லூரி (குறிப்பிட்ட தொழில், வேலை முதலியவற்றுக்கான) பயிற்சி அளிக்கும் நிறுவனம் English Meaning: training college
பயிற்சியாளர் (குறிப்பிட்ட பணிக்கு ஏற்ற) பயிற்சியை அளிப்பவர் English Meaning: trainer
பயிற்று கற்றுக்கொடுத்தல் English Meaning: teach
பயிற்றுமொழி (பாடம்) கற்பிக்கப் பயன்படுத்தும் மொழி English Meaning: medium of instruction
பயிற்றுவி (ஒருவருக்கு ஒன்றை) கற்றுக்கொடுத்தல் English Meaning: teach
பயிலகம் (தட்டச்சு, சுருக்கெழுத்து முதலியவற்றில்) பயிற்சியளிக்கும் நிறுவனம் English Meaning: institute offering training (in typing, shorthand, etc.)
பயில் (கல்வி, கலை முதலியவை) கற்றல்(பள்ளியில்) படித்தல் English Meaning: learn (a subject, an art, etc.)
பயில்வான் மல்யுத்தம் புரிபவன் English Meaning: wrestler
பர ஓர் இடத்தில் நிறைதல் English Meaning: be spread (out)
பர(ப்)பிரமம் பெருங்கடவுள் English Meaning: supreme Being
பரக்க ஓர் இடத்தில் மட்டும் அல்லாமல் பல இடங்களில் English Meaning: extensively
பரக்கப்பரக்க (பார்த்தல், விழித்தல் ஆகிய வினைகளோடு) முன்னால் இருப்பது, நிகழ்வது ஒன்றும் புரியாமல் English Meaning: confused
பரட்டை (தலைமுடி எண்ணெய்ப் பசை இல்லாமல்) தாறுமாறாகப் பரந்து கிடப்பது English Meaning: unkempt appearance
பரணி1 போரில் பெரும் வெற்றி பெற்ற அரசனை அல்லது வீரனைத் தலைவனாகக் கொண்டு பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை English Meaning: a type of literature about the heroism of a king or hero who has won a great battle
பரணி2 இருபத்தேழு நட்சத்திரங்களில் இரண்டாவது English Meaning: the second of the twentyseven stars
பரணி3 ஜாடி English Meaning: a kind of jar
பரண் (பொருள்களைப் போட்டு வைப்பதற்காக) அறையின் மேற்கூரையிலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் மரச் சட்டம் அல்லது அது போன்று கட்டப்பட்ட சிமிண்டுத் தளம் English Meaning: loft of wooden planks or cement slabs for storing odds and ends
பரதக்கலை பரதநாட்டியக் கலை English Meaning: the classical art of பரதநாட்டியம்
பரதநாட்டியம் பரதர் என்பவர் நிர்ணயம் செய்த மரபுகளைக் கொண்ட நாட்டியம் English Meaning: a classical form of dance as enunciated by Bharata
பரதம் (பொதுவாக) நாட்டியம்(குறிப்பாக) பரதநாட்டியம் English Meaning: (generally) dance
பரதவர் மீனவர் English Meaning: fisher folk

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together