Tamil To Tamil & English Dictionary
Tamil Word | Tamil Meaning | English Meaning |
அணை1 | (நெருப்பு, விளக்கு) நின்றுபோதல் | (of fire, light) go out |
அணை2 | (நெருப்பை, விளக்கை) நிறுத்துதல் | put out (fire, light) |
அணை4 | (ஆற்றின் குறுக்கே) தடுக்கப்பட்டிருக்கும் அல்லது நீரைத் தேக்கி வைத்திருக்கும் அமைப்பு | dam |
அணைகயிறு | (கறக்கும்போது உதைக்காமல் இருக்க மாட்டின் பின்னங்கால் இரண்டையும்) சேர்த்துக் கட்டும் கயிறு | the cord (with which the hind legs of a cow are) tied while milking |
அணைத்து | இறுக்கமாக | tightly |
அணைப்பு | (அன்பை வெளிப்படுத்தும்) தழுவல் | affectionate hug |
அத்தர் | ரோஜா, மல்லிகை முதலிய மலர்களின் இதழ்களிலிருந்து எடுக்கப்படும் ஒரு வாசனைத் திரவியம் | fragrant essence obtained from the petals of rose, jasmine, etc and used as a perfume |
அத்தாட்சி | உண்மை என்றோ உடமை என்றோ நிரூபிக்கும் சான்று | evidence |
அத்தி | (வெளியே தெரியாதபடி) மிக அரிதாகப் பூக்கும் ஒரு மரம் | a kind of fig tree |
அத்தியாயம் | (உரைநடை) நூலின் உட்பிரிவு | chapter (of a book) |
அத்தியாவசியம் | (இன்றியமையாத) தேவை | that which is indispensable or essential |
அத்துப்படி | (குறிப்பிட்டுச் சொல்லப்படும் துறையில்) எல்லா விவரங்களும் அறிந்த நிலை | being thoroughly informed |
அத்துமீறு | தனக்குத் தரப்பட்டிருக்கும் உரிமையை அல்லது அதிகார வரம்பைக் கடந்து செல்லுதல் | go beyond the proper limit |
அத்துவைதம் | ஆன்மாவும் இறைவனும் இரண்டல்ல, ஒன்றே எனக் கூறும் கொள்கை | the doctrine of non-duality |
அதர்1 | காட்டு வழி | path (in a jungle) |
அதர்2 | (தென்னை, பலா போன்ற பயன் தரும் மரங்களின் அடிப்பகுதியைச் சுற்றிச் சுமார்) ஓர் அடி ஆழத்தில் வெட்டப்படும் உரக் குழி | pit for manure (around the trunk of a tree) |
அதர்மம் | நியாயத்துக்குப் புறம்பானது | unrighteousness |
அதரம் | உதடு | lip |
அதலபாதாளம் | அளவிட முடியாத ஆழம் அல்லது பள்ளம் | immeasurable depths |
அதிக(ப்)பட்சம் | (மிக) உயர்ந்த அளவு | maximum |
அதிகப்படி | அளவுக்கு அதிகம் | surplus |
அதிகப்படுத்து | (அளவை) கூட்டுதல் | increase (the speed, intensity, production of something) |
அதிகப்பிரசங்கி | (தலையிடத் தேவை இல்லாத சூழ்நிலையில்) இங்கிதம் இல்லாமல் ஒன்றைச் சொல்லும் அல்லது செய்யும் நபர் | a person who is impertinent |
அதிகம் | கூடுதல் | that which is more (than what is normal, fair, etc.) |
அதிகரி | மிகுதியாதல் | be on the increase/increase |
அதிகாரம்2 | (பண்டைய இலக்கிய இலக்கண நூல்களில் காணப்படும்) உட்பிரிவு | a chapter or section (in ancient literary or grammatical works) |
அதிகாரி | அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் ஆணைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் உள்ள (மேல்நிலை) அலுவலர் | officer |
அதிகாலை | விடிவதற்கு முன்னுள்ள பொழுது | early morning |
அதிசயம் | (வித்தியாசமான நிகழ்ச்சியோ பொருளோ ஏற்படுத்தும்) வியப்புணர்ச்சி | wonder |
அதிசயி | வியப்படைதல் | be surprised |
அதிபதி | (ஆளவோ அதிகாரம் செலுத்தவோ) உரிமை உடையவர் | one who has the right (to govern or command) |
அதிபர் | உரிமையாளர் | owner |
அதிர் | (விசையுடன் கூடிய அழுத்தத்தால் கண்ணுக்குத் தெரிவதைவிடக் காதுக்குக் கேட்கும்படி) குலுங்கி ஆடுதல் | vibrate |
அதிர்ச்சி | (-ஆக, -ஆன) (வருத்தத்தை விளைவிக்கும்) நிலைகுலைவு அல்லது மனப் பாதிப்பு | (psychological) setback |
அதிர்வு | (விசையால் பொருளில் ஏற்படும்) நுண் அசைவு | vibration |
அதிர்வெண் | குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையோடு கூடிய (ஒலி அல்லது ஒளி அலையின்) அசைவு | frequency (of sound or light wave) |
அதிர்வேட்டு | (கோயில் திருவிழாக்களில்) இரும்புக் குழாயில் வைத்துப் பலத்த சத்தத்துடன் வெடிக்கப்படும் ஒரு வகை வெடி | a firework which makes a loud noise when lighted (used during temple festivals) |
அதிர்ஷ்டக்கட்டை | அதிர்ஷ்டம் இல்லாதவன் அல்லது குறைந்தவன் | one who has no luck |
அதிர்ஷ்டம் | (எப்படி, எதனால் என்று விளக்க முடியாதபடி திடீரென்று ஒருவருக்குக் கிடைக்கும்) வாய்ப்பான நன்மை | good fortune |
அதிர்ஷ்டவசம் | எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நன்மை | sheer luck |
அதிரசம் | வெல்லப் பாகில் அரிசி மாவைக் கலந்து எண்ணெய்யில் சுட்டுத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தின்பண்டம் | a kind of thick flat round cake made by frying a sweetened rice flour |
அதிரடி | (எதிர்பாராத நேரத்தில் எடுக்கும்) கடும் நடவடிக்கை | a severe measure (directed upon the enemy at an unexpected time) |
அதிரடிப் படை | அதிரடித் தாக்குதல் நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் குழு | a commando squad |
அதிருப்தி | திருப்தியின்மை | dissatisfaction |
அதிருப்தியாளர் | தான் உறுப்பினராக இருக்கும் கட்சி முதலியவற்றின் கொள்கை, முடிவு முதலியவை குறித்து அதிருப்தியையும் மனக்குறையையும் தெரிவிப்பவர் | dissident |
அதீதம் | அளவுக்கு அதிகம் | excessiveness |
அதுக்கு | (வாயில்) ஒதுக்குதல் | stuff |
அதுகாறும் | அதுவரை | until then |
அதை | வீங்குதல் | swell |
அதைரியம் | துணிவு இல்லாத நிலை | want of confidence (in oneself) |
அதோகதி | இரங்கத்தக்க அல்லது கைவிடப்பட்ட நிலை | utter helplessness |
அந்த | (இடத்தைக் குறிப்பிடும்போது) தூரத்தில் இருக்கிற(காலத்தைக் குறிப்பிடும்போது) கடந்தமுன் நிகழ்ந்த | a demonstrative adjective to refer to distant things or persons |
அந்தகன் | குருடன் | blind man |
அந்தகாரம் | காரிருள் | the pitch dark |
அந்தந்த | குறிப்பிட்ட ஒவ்வொரு | each (taken separately or distributively) |
அந்தப்புரம் | அரண்மனையில் அரசியும் பெண்களும் இருக்குமிடம் | the part of palace where the queen and other royal women live |
அந்தம் | முடிவு | end |
அந்தரங்கம் | (உற்ற ஒரு சிலரைத் தவிர ஒருவர் வாழ்வில்) பிறர் அறிய வேண்டாதவை | that which is personal and private |
அந்தரப்படு | பதற்றம் அடைதல் | be in a hurry |
அந்தரம் | (தளம் இல்லாத) நடு வெளி | mid-air |
அந்தராத்(து)மா | உள்மனம் | conscience |
அந்தரி | பதற்றம் அடைதல் | get excited |
அந்தஸ்து | (-ஆக, -ஆன) தகுதி | status |
அந்தாதி | முதல் பாட்டின் இறுதிச் சொல்லையோ தொடரையோ அடியையோ அடுத்த பாட்டின் தொடக்கமாகக் கொண்டு (நூறு பாடல்களில்) இயற்றப்படும் நூல் | a literary work (of hundred verses) in which the last word, phrase or line of the preceding verse forms the opening of the succeeding |
அந்தி | பகல் பொழுது முடியும் நேரம் | dusk |
அந்திமக் கிரியை/அந்திமச் சடங்கு | இறந்தவருக்குச் செய்யும் இறுதிச் சடங்கு | funeral rites |
அந்திரட்டி | ஒருவர் மரணமடைந்த நாளிலிருந்து முப்பத்தொன்றாம் நாள் செய்யப்படும் சடங்கு | funeral rite performed on the thirty first day |
அந்து | நெல் சேமித்து வைத்திருக்கும் இடங்களில் காணப்படும் ஒரு வகைச் சிறிய சாம்பல் நிறப் பூச்சி | a small insect, grey in colour, found in stored paddy |
அந்நியச் செலாவணி | ஒரு நாடு தன் பொருளாதார நடவடிக்கைகளின்மூலம் ஈட்டும் அயல்நாட்டுப் பணம் | foreign exchange |
அந்நியப்படு | தொடர்பு அற்றுப்போதல் | get alienated |
அந்நியமாதல் | அந்நியப்பட்ட நிலை | alienation |
அநாகரிகம் | பண்புக் குறைவு | that which is uncultured |
அநாதை | பெற்றோர், உறவினர் அல்லது வேண்டியவர் இல்லாமல் இருக்கும் நிலை | state of being an orphan |
அநாதையாக | கவனிப்பார் இல்லாமல் | uncared for |
அநாமதேயம் | (-ஆக) இன்னார் அல்லது இன்னது என்பதை இனம் கண்டுகொள்ளக் கூடிய பின்னணித் தகவல்கள் எதுவும் இல்லாத நிலை | anonymity |
அநாயாசம் | மிகச் சுலபம் | effortlessness |
அநாவசியம் | தேவையற்றது | that which is unnecessary |
அநித்தியம் | நிலையற்றது | that which is temporal or fleeting |
அநியாயம் | (-ஆக, -ஆன) நியாயத்துக்குப் புறம்பானது | that which is not in accordance with what is right and just |
அநீதி | நீதிக்குப் புறம்பானது | injustice |
அநேகம் | பல | many |
அநேகமாக | (கவனித்த அளவில்) பெரும்பாலும் | (as per observation) mostly |
அப்சரஸ் | (மிகவும் அழகு வாய்ந்த) தேவலோகப் பெண்கள் | a class of celestial nymphs |
அப்பட்டமாக/அப்பட்டமான | ஒளிவுமறைவு இல்லாமல் | blatantly/blatant |
அப்படியானால்/அப்படியென்றால் | (நிலைமை) கூறியபடி இருக்குமானால் | in this or that case |
அப்படியே | (மாற்றாமலும் சேர்க்காமலும்) உள்ளபடியே(ஒன்று அது) இருக்கிற நிலையில் | (without alteration) as it is |
அப்பப்பா1 | ஏதேனும் ஒன்றின் மிகுதியை உணர்ந்து உணர்ச்சியுடன் வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும் தொடர் | an expression uttered |
அப்பப்பா2 | அப்பாவின் அப்பா | paternal grandfather |
அப்பம் | அரிசி மாவில் வெல்லம் சேர்த்து எண்ணெய்யில் வேகவைத்த தின்பண்டம் | a flat round cake made by frying a paste of sweetened rice flour |
அப்பழுக்கு | (பற்றியுள்ள) அழுக்கு | (accumulated) dirt |
அப்பளம் | எண்ணெய்யில் பொரித்து உண்பதற்கு ஏற்ற முறையில் உளுத்தம் மாவைப் பிசைந்து மெல்லிய வட்டத் தகடாகச் செய்து தயாரிக்கப்படும் உணவுப் பண்டம் | a thin and round wafer made of the flour of blackgram normally fried in oil |
அப்பன் | தந்தை | father (considered as a standard term in religious context but non-standard in other contexts) |
அப்பா1 | பெற்றோரில் ஆண் | father |
அப்பாடா/அப்பாடி | நிம்மதி அல்லது ஓய்வு கிடைத்ததை வெளிப்படுத்தும் சொல் | an expression of relief and relaxation |
அப்பாவி | தற்காத்துக்கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தெரியாத நபர் | innocent |
அப்பியாசம் | பயிற்சி | exercise |
அப்பிராணி | அப்பாவி | a person who is meek, docile and unresisting |
அப்பு | (சந்தனம், மை முதலியவற்றை) அதிகமாகப் பூசுதல் | apply thick |
அப்புக்காத்து | வழக்கறிஞர் | advocate |
அப்புறம் | (ஒன்று கழிந்த) பின் | subsequently |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
