Tamil To Tamil & English Dictionary
Tamil Word | Tamil Meaning | English Meaning |
நெம்புகோல் | (ஒரு பொருளை நகர்த்தவோ உயர்த்தவோ பயன்படும்) ஒரு புள்ளியை ஆதாரமாகக்கொண்டு இயக்கப்படும் கம்பி அல்லது கருவி | lever |
நெய்1 | (துணி, பாய் முதலியவற்றை உருவாக்குவதற்காகத் தறியில்) நீளவாட்டில் நூலை அல்லது கோரையை வைத்துக் குறுக்குவாட்டில் கோத்துப் பின்னுதல் | weave (cloth, mat, etc.) |
நெய்2 | உருக்கிய வெண்ணெய் | clarified butter |
நெய்க்குறி நீர்க்குறி | நெய்யில் சிறுநீரை விட்டுச் செய்யும் பரிசோதனை | examining the urine by testing it in ghee |
நெய்தல் | (ஐந்து வகை நிலப் பாகுபாட்டில்) கடலும் கடல் சார்ந்த இடமும் | (one of the fivefold divisions of land) the sea and the region close to it |
நெய்ப்பந்தம் | (இறந்தவரின் சிதைக்குக் கொள்ளி வைப்பதற்காக) நெய்யில் நனைத்த தீப்பந்தம் | torch fed with ghee (used for lighting funeral pyre) |
நெய்விளக்கு | (கோயில்களில்) நெய் ஊற்றி எரிக்கும் விளக்கு | (in temples) a lamp fed with ghee |
நெரிகட்டு | (புண் முதலியவற்றில் உள்ள கிருமிகள் உடலில் பரவாமல் தடுப்பதற்கு அதன் அருகில் உள்ள நிணநீர் முடிச்சு) வீக்கம் அடைதல் | develop a swelling (of lymph glands or nodes) |
நெரிசல் | (ஓர் இடத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் அல்லது வாகனங்கள் குவிவதால் ஏற்படும்) நெருக்கித்தள்ளும் கூட்டம் அல்லது ஒழுங்கற்ற நிலை | jam |
நெருக்கடி | பிரச்சினைகளும் சிரமங்களும் மிகுந்த நிலை | crisis |
நெருக்கடிநிலை | போர், உள்நாட்டுக் கலகம் போன்றவை ஏற்படும் சமயத்தில் அரசு கூடுதல் அதிகாரங்களை மேற்கொண்டு செயல்பட வேண்டிய நிலை | state of emergency (in a country) |
நெருக்கம் | (இடைவெளி அதிகம் இல்லாமல்) அருகருகே இருப்பது | being close (to one another) |
நெருக்கு | (ஒருவரை ஒருவர்) இடித்துத் தள்ளுதல் | squeeze |
நெருங்கிய | (உறவு, நட்பு, தொடர்பு முதலியவற்றில்) நெருக்கமான | (of relationship, friendship, etc.) close |
நெருங்கு | (ஓர் இடத்தை, ஒன்றை, ஒருவரை) அணுகுதல் | near |
நெருடு | (ஒன்றின் மீது சிறிய பொருள் அல்லது சமதளமற்ற பரப்பு) அழுத்தி உராய்தல் | have an uneasy sensation |
நெருப்பு | தீ | fire |
நெருப்புக்கோழி | நீண்ட காலும் கழுத்தும் சிறிய தலையும் பறப்பதற்குப் பயன்படாத பெரிய சிறகுகளும் கொண்ட (சில கண்டங்களில் மட்டும் காணப்படும்) பறவை | ostrich |
நெல் | உமி மூடியிருக்கும் அரிசி மணியைக் கொண்ட தானியம்/அந்தத் தானியத்தைத் தரும் பயிர் | paddy (the grain and the crop) |
நெல்லிக்காய் | தின்ற பின் நீர் குடித்தால் இனிப்புச் சுவை தரும் பச்சை நிறச் சிறு உருண்டை வடிவக் காய் | fruit of emblic myrobalan |
நெளி1 | (புழு, பாம்பு முதலியவை) மடங்கியோ வளைந்தோ அசைதல் | (of snake) slither |
நெளி3 | (தலைமுடியில் ஏற்படும்) வளைவு | curls |
நெளிவு | (உள் மடங்கிப் பின் நேராகும் இடத்தில் உள்ள) வளைவு | bend |
நெளிவுசுளிவு | (வியாபாரம் முதலியவற்றில்) விட்டுக்கொடுத்தும் அனுசரித்தும் போக வேண்டிய போக்கு | ins and outs (of a business) |
நெற்களஞ்சியம் | நெல் சேமிப்பிற்கான கொள்கலன் | granary |
நெற்றி | தலை முடிக்குக் கீழும் புருவத்துக்கு மேலும் உள்ள பகுதி(விலங்குகளில்) கண்களுக்கு மேலே உள்ள பகுதி | forehead |
நெற்றிச்சுட்டி | (பெண்கள் தலையில் அணிந்து) வகிடு வழியாக நெற்றியில் தொங்கவிட்டுக்கொள்ளும் சங்கிலியோடு கூடிய வில்லை போன்ற நகை | an ornament with a chain and pendant (worn by women) along the parting of the hair and hanging over the forehead |
நெற்றிப்பொட்டு | நெற்றி ஓரத்திற்கும் காதுக்கும் இடையில் உள்ள பகுதி | temple (of the forehead) |
நெற்று | (தேங்காய் முதலியவற்றின்) நன்கு முதிர்ந்த (வித்தாகப் பயன்படும்) காய் | ripe seed or nut (fit for raising seedlings with) |
நெறி2 | சமயக் கொள்கைக்காகவோ தனி மனித ஒழுக்கத்துக்காகவோ ஏற்படுத்தப்பட்ட விதி அல்லது மேற்கொள்ளும் முறை | principle |
நெறிப்படுத்து | நெறிமுறைக்கு உட்படுத்துதல் | operate (in a particular way) |
நெறிமுறை | (செயல்படும்போது) பின்பற்றுவதற்கு வகுக்கப்பட்ட வழி | proper method or way |
நெறியாள்கை | (நாடகம், திரைப்படம் போன்றவற்றின்) இயக்கம் | direction (of a film, drama, etc.) |
நேச நாடுகள் | இரண்டாம் உலகப் போரில் கூட்டாக இயங்கிய இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா முதலிய நாடுகள் | allied nations (as opposed to Axis countries) |
நேசம் | பற்றும் பிரியமும்(உறவில்) இணக்கம் | affection |
நேசி | அன்புசெலுத்துதல் | show kindness and affection |
நேத்திரம் | கண் | eye |
நேந்திரங்காய் | (வறுவல் செய்யப் பயன்படும்) நீளமான வாழைக்காய் | a variety of plantain (used mainly for making crisps) |
நேர்1 | (இவ்வாறு செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லாமலேயே) நிகழ்தல்(தடுக்க முடியாதபடி) ஏற்படுதல் | happen |
நேர்காணல் | நேர்முகத் தேர்வு | interview |
நேர்கோடு | வளைவு ஏதும் இல்லாத கோடு | straight line |
நேர்த்தி | (ஒன்றின் தோற்றத்தில், அமைப்பில், செயலில் வெளிப்படும்) சீர், ஒழுங்கு, அழகு முதலியவை வாய்ந்த சிறப்பான தன்மை | skill and elegance |
நேர்த்திக்கடன் | (தெய்வத்துக்கு நேர்ந்துகொண்டதால்) நிறைவேற்ற வேண்டிய கடமை | vow made to a deity |
நேர்ந்துகொள் | (விரும்பிய காரியம் நடந்தால் கடவுளுக்குக் காணிக்கையாக இன்னதைச் செய்வேன் என்று கூறி) வேண்டிக்கொள்ளுதல் | take a vow |
நேர்படுத்து | சரிசெய்தல் | set right |
நேர்மாறு | (கூறப்படுவதற்கு) முற்றும் எதிரானது | (just the) opposite |
நேர்முக உதவியாளர் | (அமைச்சர் முதலியோருக்கு) நிகழ்ச்சிகளை நிரல்படுத்துதல், பார்வையாளர் சந்திப்புகளை முறைப்படுத்துதல் போன்ற வேலைகளைச் செய்யும் உதவியாளர் | personal assistant (to a minister, etc.) |
நேர்முகத் தேர்வு | (விண்ணப்பம் செய்தவரின் தகுதியை) வாய்மொழியாகக் கேள்விகள் கேட்டு அறியும் தேர்வு | interview |
நேர்முகம் | (ஒருவரை) நேரடியாகச் சந்தித்து நிகழ்த்தும் பேட்டி | interview |
நேர்முக வர்ணனை | (விளையாட்டு, விழா போன்றவற்றை) நேரடியாகப் பார்த்து வானொலியில் உடனுக்குடன் தரும் விளக்கம் | running commentary |
நேர்முக வரி | (வருமான வரி, சொத்து வரி போன்று) தனிநபர் அல்லது ஒரு அமைப்பு நேரடியாகச் செலுத்த வேண்டியதாக இருக்கும் வரி | direct tax |
நேர்மை | (சுயநலத்துக்காக) பொய்சொல்லுதல், ஏமாற்றுதல் போன்ற முறைகளைக் கையாளாத நியாயத் தன்மை | honesty |
நேர்வழி | (ஓர் இடத்தை) நேராகச் சென்றடையும் வழி | direct route |
நேர்வாக்கில் | நேராக | straight |
நேரசூசி | (பள்ளிக்கூடம் முதலியவற்றில்) கால அட்டவணை | time table (in a school, etc.) |
நேரசை | (யாப்பில்) குறிலும் நெடிலும் தனித்தோ ஒற்றுடன் இணைந்தோ வரும் அசை | metrical syllable consisting of a short or long vowel, alone or followed by a consonant |
நேரடி | மற்றொன்றின் அல்லது மற்றொருவரின்மூலமாக அல்லாத பங்கேற்பு | direct |
நேரம் | (பொதுவாக) காலம் | (generally) time |
நேரம்கெட்ட நேரத்தில் | நேரம் கழித்து | at an ungodly hour |
நேராக | (புறப்பட்ட இடத்திலிருந்து) வேறு எங்கும் செல்லாமல் (சேர வேண்டிய இடத்தை நோக்கி) | straight (from) |
நேரிய | சீரிய | excellent |
நேரியல் | தோளில் இடும் துணி | cloth worn over the shoulders |
நேருக்கு நேர் | நேராகச் சந்தித்து | personally |
நை1 | (துணி) இற்றுப்போதல் | be frayed |
நை2 | (துணியை) நையச்செய்தல் | cause to get threadbare |
நைச்சியம் | (பேச்சில், நடந்துகொள்வதில்) காரியம் சாதிப்பதற்கான பக்குவம் | suavity |
நைசாக | திறமையாக | with tact |
நைப்பு | ஈரப்பசை | moisture |
நையப்புடை | செம்மையாக உதைத்தல் அல்லது அடித்தல் | give a good thrashing |
நையாண்டிமேளம் | (நாட்டுப்புறக் கலைகளான கரகம், காவடி முதலியவற்றுக்கு வாசிக்கப்படும்) ஒரு வகை மேளம் | an ensemble of musical instruments (accompanying கரகம், காவடி, etc.) |
நைவேத்தியம் | (கோயிலில் பிறருக்குத் தருவதற்கு முன், வீட்டில் உண்பதற்கு முன்) தயாரித்த சில வகை உணவை அல்லது பழம் முதலியவற்றை இறைவனுக்குப் படைத்தல் | the ritualistic offering of cooked food, fruits, etc before a deity |
நைஸ்பண்ணு | தாஜாபண்ணுதல் | cajole |
நொச்சி | ஐந்து பிரிவாகப் பிரிந்த இலையையும் கரும் சிவப்பு நிறத் தண்டையும் நீல நிறப் பூவையும் கொண்ட சிறு மரம் | five-leaved tree |
நொடி1 | ஒடிதல் | collapse |
நொடி3 | (கண்ணை இமைப்பதற்கு அல்லது விரலைச் சொடுக்குவதற்கு ஆகும் நேரம் போன்ற) மிகக் குறைவான நேரம் | moment (time taken for batting the eye or for snapping the finger) |
நொடி4 | புதிர் | riddle |
நொடி5 | (சாலையில்) பள்ளம் | pit |
நொடித்துப்போ | வருமானம் அல்லது பொருளாதார வசதி இல்லாமல் ஒருவருடைய குடும்பம், வாழ்க்கை, தொழில்) சீர்குலைதல் | decline |
நொண்டி1 | (கால் அல்லது கை) செயல்படாத குறை | crippled condition |
நொண்டி2 | நொண்டியடித்துச் சென்று எதிர் அணியினரைத் தொடும் விளையாட்டு | the game of hopping with folded leg |
நொண்டிச்சமாதானம் | நடந்த நிகழ்ச்சிக்குக் காட்டப்படும் வலுவற்ற, நம்பிக்கை ஏற்படுத்தாத காரணம் | lame excuse |
நொண்டிச்சாக்கு | பொருத்தமில்லாத சாக்குப்போக்கு | lame excuse |
நொண்டியடி | (விளையாட்டில்) ஒரு காலை மடித்துக் குதித்தல் | hop (as in the game of chase) |
நொண்டு | (பாதத்தை முழுமையாகப் பதிக்க முடியாமல்) ஒரு பகுதியை மட்டும் ஊன்றுதல் | limp |
நொதி1 | (காடி முதலியவை) புளித்தல் | ferment |
நொதி2 | உயிரினங்களின் உடலினுள் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தும், கிரியா ஊக்கியாகச் செயல்படும் குறிப்பிட்ட உயிரணுக்களின் சுரப்பு | enzyme |
நொய் | (கோதுமை, அரிசி ஆகியவற்றின்) உடைந்த தூள் | (of rice, wheat) broken grain |
நொறுக்கித்தள்ளு | (சிரமமான காரியம் என்று கருதப்படுவதை) சிறப்பாகச்செய்தல் | do well (with apparent ease) |
நொறுக்கு | சிறுசிறு பகுதிகளாக ஆகுமாறு உடைத்தல் | smash |
நொறுக்குத் தீனி | (உணவாக அல்லாமல் அவ்வப்போது தின்னும்) முறுக்கு, கடலை போன்ற சிறு தின்பண்டம் | small eats |
நொறுங்கு | உடைந்து சிறுசிறு பகுதிகளாக ஆதல்(நசுங்கி) உருக்குலைதல் | be smashed to pieces |
நோக்கர்கள் | எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னரே கூறக் கூடிய அளவுக்கு ஒரு துறையில் நிகழ்வதை ஆழ்ந்து கவனிப்பவர்கள் | observers |
நோக்கி | (குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) இலக்காகக் கொண்டு | towards |
நோக்கு1 | பார்த்தல் | see |
நோக்கு2 | கண்ணோட்டம் | point of view |
நோஞ்சான் | உடல் வலிமையற்று மெலிந்து காணப்படுவது | lean and weak person or animal |
நோட்டம் | மதிப்பிடும் அல்லது தெரிந்துகொள்ளும் நோக்கம் கொண்ட பார்வை | (searching) glance |
நோட்டு | (எழுதுவதற்கான) குறிப்பேடு | notebook |
நோய் | (மனிதனின், விலங்கின்) உடல் நலம் பாதிப்பு | (of men, animals) disease |
நோய்நொடி | நோயும் நோயின் பாதிப்பும் | illness and (its) effect |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
