Tamil To Tamil & English Dictionary
Tamil Word | Tamil Meaning | English Meaning |
அச்சொட்டாக | சரியொப்பாக | exactly (as it is) |
அச | அதிர்ச்சி அடைதல் | be stunned or astonished |
அசக்கு | அசைத்தல் | cause (even the) slightest movement |
அசகாயசூரன் | பிறரால் செய்யக் கடினமாக இருப்பதை எளிதாக முடித்துவிடும் திறமை உள்ளவன் | a person capable of accomplishing a difficult task with ease |
அசங்கு | அசைதல் | move (slightly) |
அசட்டுச் சிரிப்பு | அர்த்தமற்ற சிரிப்பு | foolish grin |
அசட்டுப்பிசட்டு-என்று | முதிர்ச்சி வெளிப்படாத வகையில் | foolishly |
அசட்டை | (ஒருவரை அல்லது ஒன்றைப் பொருட்படுத்தாத) புறக்கணிப்பு | neglect |
அசடுதட்டு | அசடுவழிதல் | look foolish |
அசடுவழி | முட்டாள்தனம் வெளிப்படுதல் | look sheepish or foolish |
அசத்து | திணறடித்தல் | overawe |
அசதி | (வேலையால்) களைப்பு(பலக் குறைவால்) சோர்வு | tiredness |
அசந்தர்ப்பம் | அசௌகரியமான அல்லது பொருத்தமற்ற வேளை | inconvenient or inopportune time |
அசப்பில் | சட்டென்று ஒரு பார்வையில் | at a fleeting glance |
அசம்பாவிதம் | நடக்கக்கூடாதது | untoward incident |
அசமந்தம் | சுறுசுறுப்பும் உற்சாகமும் இல்லாத தன்மை | dullness |
அசரீரி | (நிகழப்போவதைக் கூறும் முறையிலோ அறிவுறுத்தும் முறையிலோ) வானத்திலிருந்து எழுவதாகக் கூறப்படும் குரல் | voice from heaven (making a prediction or instructing s |
அசல்1 | போலி அல்லாதது | that which is real or genuine |
அசாத்தியம் | (நம்ப முடியாத அளவுக்கு) மிகுதி | in excess |
அசாதாரணம் | பொதுவானதிலிருந்து வேறுபட்டது | that which is extraordinary |
அசிங்கம் | (-ஆக, -ஆன) தரக்குறைவு | obscenity |
அசிரத்தை | ஆர்வமின்மை | lack of interest |
அசுத்த ஆவி | மனிதரின் மனங்களை மாற்றக் கூடிய தீய சக்தி | the evil spirit |
அசுத்தம் | (-ஆக, -ஆன) சுத்தக் குறைவு | lack of cleanliness |
அசுமாத்தம் | சந்தடி | noise |
அசுர | மிகக் கடுமையான | tremendous (work, speed, etc.) |
அசுரன் | தேவர்களின் எதிரிகளான அரக்கர் குலத்துள் ஒருவன் | a member of the class of demons at loggerheads with the devas, the celestial beings |
அசுவமேத யாகம் | (பண்டைக் காலத்தில்) பேரரசர் தம் அரசாணையைப் பிறரும் ஏற்கும் முறையில் பட்டத்துக் குதிரையை அண்டை நாடுகளுக்கு அனுப்பி, அதனைப் பிடிக்க வந்தோரை வென்று, அதனைக் கொண்டுவந்து பலியிட்டுச் செய்யும் வேள்வி | (in olden days) a ceremonial sacrifice of the invincible horse brought back after being sent to other kingdoms by the emperor who by means of this asserted his sovereign power |
அசுவாரசியம் | ஈடுபாடு இல்லாமை | lack of interest or enthusiasm |
அசூயை | பொறாமை | jealousy |
அசை1 | (மேலும் கீழும் அல்லது பக்கவாட்டில் மென்மையாக) ஆடுதல் | (gently) sway |
அசை3 | (யாப்பில்) ஓர் உயிரெழுத்தை அல்லது உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்த இணையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட அலகு | metrical syllable |
அசைபோடு | (மாடு, மான் போன்ற சில விலங்கினம்) இரைப்பையிலிருந்து உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டுவந்து தொடர்ந்து மெல்லுதல் | (of cow, deer, etc.) chew the cud |
அசையாப் பொருள் | ஓர் இடத்தில் நிலையாக இருக்கும் (நிலம், வீடு போன்ற) சொத்து | immovable property (such as lands, house, etc.) |
அசையும் பொருள் | ஓர் இடத்திலிருந்து எடுத்துச்செல்லக் கூடிய (வண்டி, கால்நடை போன்ற) சொத்து | movable property (such as vehicles, cattle, etc.) |
அசைவம் | (உணவில்) இறைச்சி, மீன் முதலியவை/மேற்சொன்னவற்றை உணவாகக் கொள்ளும் முறை | (in food) meat and fish/the practice of eating meat and fish |
அசைவு | (உடல் உறுப்புகளின்) இயக்கம் | (of the body, parts of the body) movement |
அசௌக்கியம் | (உடல்) நலமின்மை | indisposition |
அசௌகரியம் | (-ஆக, -ஆன) வசதியின்மை(உடல்) நலக்குறைவு | inconvenience |
அஞ்சல் | ஓர் இடத்தில் இருப்பவர் மற்றோர் இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவற்றை அனுப்பிவைக்கும் (அரசு நிர்வகிக்கும்) அமைப்பு முறை | postal system |
அஞ்சல் அட்டை | அஞ்சல் நிலையம் விற்கும் கடிதம் எழுதுவதற்கான அட்டை | post card |
அஞ்சல் ஆணை | ஓர் அஞ்சல் நிலையத்தில் செலுத்திய பணத்தை மற்றோர் அஞ்சல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளத் தரும் மதிப்புச் சீட்டு | postal order |
அஞ்சல் உறை | அஞ்சல் நிலையம் விற்கும் கடிதம் அனுப்புவதற்கான காகித உறை | envelope for letters sold by post office |
அஞ்சல் எழுத்தர் | (அலுவலகத்தில், நிறுவனத்தில்) கடிதங்களை அனுப்புவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியர் | clerk in charge of dispatching letters (in an office) |
அஞ்சல் குறியீட்டு எண் | அஞ்சல் துறை நாட்டிலுள்ள எல்லா ஊர்களுக்கும் குறிப்பிட்ட முறைப்படி வழங்கியிருக்கும் எண் | (of postal service) postal index number (also known as pincode) |
அஞ்சல் செய் | (கடிதம் முதலியவற்றை அஞ்சல் நிலையத்தின் மூலமாக) உரியவர்க்கு அனுப்புதல் | post |
அஞ்சல் தலை | கடிதம் முதலியவற்றில் ஒட்டுவதற்கு அஞ்சல் நிலையம் ஏற்படுத்தியிருக்கும் அச்சிட்ட சிறிய கட்டண வில்லை | postage stamp |
அஞ்சல் நிலையம் | அஞ்சல் அட்டை, அஞ்சல் தலை முதலியன விற்பது, அஞ்சல்களைப் பெற்று உரிய முகவரிக்கு அனுப்புவது, பணச் சேமிப்பு வசதி ஏற்படுத்தித் தருவது முதலிய பணிகள் செய்யும் அரசு அலுவலகம் | post office |
அஞ்சலி | இறைவனுக்கும் பெரியோருக்கும் அல்லது இறந்தவர் நினைவுக்குச் செலுத்தும் மரியாதை | worship |
அஞ்சறைப்பெட்டி | கடுகு, மிளகு முதலிய மளிகைச் சாமான் வைப்பதற்காகச் சில அறைகள் உள்ளதாக (பெரும்பாலும்) மரத்தால் செய்யப்பட்ட பெட்டி | a box (normally of wood) with compartments to keep spices |
அஞ்சனம் | கண்ணில் தீட்டிக்கொள்ளும் மை | eye cosmetic, black in colour (prepared traditionally by burning coconut shell and mixing oil with it) to be applied on the rim of the eyes |
அஞ்ஞாதவாசம் | பிறர் அறியாமல் அல்லது தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி வாழ்தல் | living incognito |
அஞ்ஞானம் | (ஆன்மீகம் தொடர்பானவற்றில்) அறியாமை | (spiritual) ignorance |
அஞ்ஞானி | உண்மை (ஆன்மீக) நெறி அறியாதவன் | a person who is spiritually ignorant |
அட்சதை | மங்கல காரியங்களில் வாழ்த்தும்போது தூவப்படும் மஞ்சள் நீர் தெளித்த அரிசி | rice grain mixed with turmeric powder sprinkled on those to be blessed |
அட்சயப் பாத்திரம் | எடுக்கஎடுக்க உணவு குறையாது இருப்பதாகக் கூறப்படும் பாத்திரம் | a mythical vessel which never becomes empty of food |
அட்சரக் காலம் | கை அசைவுகளால் வெளிப்படுத்தும் தாளத்திற்கான கால அளவு | time taken to render a syllable in beating time |
அட்சரம் | எழுத்து | letter |
அட்சராப்பியாசம் | (பள்ளியில் சேர்க்கும் முதல் நாளில்) எழுத்துகளைச் சொல்லித்தருதல் | teaching alphabet (as on the first day of formal learning) |
அட்சரேகை | நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தைக் கணக்கிடும் முறையில் பூமியைச் சுற்றிக் கிழக்கிலிருந்து மேற்கில் செல்வதாக அமைத்துக்கொண்ட கோடு | line of latitude |
அட்டக்கரி/அட்டக்கறுப்பு | மிகுந்த கருமை நிறம் | utterly black |
அட்டகாசம் | அட்டூழியம் | atrocity |
அட்டணங்கால்/அட்டணைக்கால் | காலை ஒன்றின் மேல் ஒன்றாகக் குறுக்காக வைத்துத் தரையில் உட்கார்ந்திருக்கும் நிலை | manner of sitting with one leg thrown over the other |
அட்டவணை இனம் | கல்வி, பொருளாதார முன்னேற்றத்துக்கு விசேஷக் கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள் என்று அரசு ஆணையின்படி மாநிலவாரியாகத் தயாரிக்கப்பட்ட அட்டவணையில் இடம்பெற்றுள்ள இனத்தினர் | castes in the list of the constitutional order for each state for their educational and economic upliftment |
அட்டி | மறுப்பு | objection |
அட்டிகை/அட்டியல் | (பெரும்பாலும் கல் பதித்த) கழுத்தோடு ஒட்டி அணியும் நகை | a necklace (mostly studded with stones) worn closely around the neck |
அட்டூழியம் | (-ஆக, -ஆன) கொடிய செயல் | atrocity |
அட்டை1 | வார இதழ், புத்தகம் முதலியவற்றின் (படத்தை அல்லது தலைப்பைத் தாங்கிய) முன்பக்க, பின்பக்கத் தாள் | front or back cover (of a magazine, book, etc.) |
அட்டை2 | ஈர நிலத்தில் வாழ்வதும் மனிதரையும் விலங்குகளையும் கடித்து இரத்தத்தை உறிஞ்சுவதுமாகிய உயிரினம் | leech |
அடக்கம் | தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ளாத தன்மை | humility |
அடக்கி வாசி | (பழக்கப்பட்டுப்போன ஆர்ப்பாட்டமோ பகட்டோ இல்லாமல்) இயல்பாக அல்லது அடக்கத்தோடு செய்தல் | do |
அடக்கு | (சிரிப்பு, கோபம், பேச்சு முதலியவற்றை) வெளிவிடாது தடுத்தல் | control |
அடக்குமுறை | (எதிர்ப்பு, போராட்டம் முதலியவற்றை ஒடுக்க) அதிகாரத்தில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் கடும் நடவடிக்கை | repressive measures |
அடகு | (நகை, பாத்திரம் போன்ற) விலையுள்ள பொருளை ஈடாகப் பெற்றுப் பணம் தரும் முறை | pawn |
அடங்கல் | ஒரு நிலத்தின் எண், பரப்பு, தீர்வை, ஒவ்வொரு போகமும் செய்யப்பட்ட பயிர், அறுவடை மாதம் முதலியவை வருடவாரியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள கிராமக் கணக்கு | a village (account) register which shows the survey number, area of assessment, crop cultivated, month of harvest, etc for every year |
அடங்கலாக | (குறிப்பிடப்படுவதையும்) உள்ளடக்கி | including |
அடங்கன்முறை | முதல் ஏழு திருமுறைகளின் தொகுப்பு | the first seven திருமுறை of Saiva literature |
அடங்காப்பிடாரி | யாருக்கும் அடங்காத அல்லது கட்டுப்படாத குணம் உடைய நபர் | a defiant person |
அடங்கு | (கோபம், தாகம், ஆசை, வேகம் முதலியன தீவிரத்தில்) தணிதல் | (of anger, thirst, desire, speed, etc, in intensity) subside |
அடம் | (ஒன்றைப் பெறுவதில் அல்லது மறுப்பதில்) சிறிதும் விட்டுக்கொடுக்காமல் இருத்தல் | obstinacy |
அடமானம் | (நிலம், வீடு, நகை முதலிய சொத்துகளை) ஈடாக வைத்துப் பணம் பெறும் முறை | mortgage |
அடர்1 | இடைவெளி இல்லாமல் செறிந்திருத்தல் | be close together |
அடர்2 | (அமிலத்தைக் குறிக்கையில்) மிகவும் குறைந்த அளவில் நீர்த்தன்மை கொண்டதும் வீரியம் மிக்கதுமான | concentrated |
அடர்த்தி | (-ஆக, -ஆன) செறிவு | denseness |
அடர்ந்த | நெருக்கமான | dense |
அடவு | ராகம் இல்லாமல் சொற்கட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்படும் அங்க அசைவு | basic, rhythmic, physical (foot and body) movements (in பரதநாட்டியம்) |
அடாத | தகாத | improper |
அடாப்பழி | அபாண்டமான பழி | unjust accusation |
அடாவடி | (பிறரை மிரட்டுகிற) முரட்டுத்தனம் | rowdiness |
அடி1 | கையால் அல்லது கம்பு முதலியவற்றால் அறைதல் | beat |
அடி3 | (கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழும்) அறை | stroke (with the hand, a cane, etc.) |
அடி4 | காலின் கீழ்ப்பகுதி | foot (of the leg) |
அடி5 | செய்யுளின் வரி | line of a verse |
அடி6 | வயதில் இளைய பெண்ணையும் உரிமையைக் காட்டக் கூடிய பெண்ணையும் அழைக்கப் பயன்படுத்தும் சொல் | a term of address for a woman who is younger or for one with whom the speaker is familiar |
அடிக்கட்டை | (நுழைவுச்சீட்டு, காசோலை முதலியவற்றில் வழங்குபவர்) அத்தாட்சியாகக் கிழித்துத் தன் வசம் வைத்துக்கொள்ளும், விபரங்கள் அடங்கிய பகுதி | counterfoil |
அடிக்கடி | அதிகத் தடவை | frequently |
அடிக்கல் | (கட்டடம், வீடு முதலியன கட்டத் தொடங்கும்போது நடத்தும் சடங்கில்) நடப்படும் கல் | a stone laid (as a part of the ritual that marks the beginning of construction of a building) |
அடிக்குரல் | கீழ்த்தொண்டையிலிருந்து வரும் ஒலி | voice coming out from the depths |
அடிக்குறிப்பு | (நூல், கட்டுரை முதலியவற்றின் பக்கங்களின்) கீழ்ப்பகுதியில் தரப்படும் துணைச் செய்திகள் | footnote (in a book) |
அடிக்கொருதரம் | அடிக்கடி | very often |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
