Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| முன்னுரிமை | (பலவற்றுள் சிலவற்றிற்கு) முக்கியம் கருதி அளிக்கும் முதன்மை இடம் | priority |
| முன்னுரை | நூலாசிரியரால் நூல்குறித்த கருத்துகள் அடங்கிய அல்லது நூலுக்கு அறிமுகமாக அமையும் கட்டுரை | preface (in a book) |
| முன்னெச்சரிக்கை | (அபாயம், கலவரம் முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் அவை) நிகழாமல் தடுக்கும் ஏற்பாடு | precaution |
| முன்னே1 | முன்னால் | ago |
| முன்னே2 | முன்னால் | before |
| முன்னேற்பாடு | ஆயத்தப் பணி | preparatory work |
| முன்னேற்றம் | உயர்நிலை | progress |
| முன்னேற்று | உயர்நிலையை அடையச்செய்தல் | advance |
| முன்னேறு | தடையைக் கடந்து முன் செல்லுதல் | make headway against |
| முன்னைய | முந்திய | previous |
| முன்னொட்டு | ஒரு சொல்லாகத் தனித்து வராமல் ஒரு சொல்லுக்கு முன்னால் இணைக்கப்படும் இடைச்சொல் | prefix |
| முன்னோக்கி/முன்னோக்கிய | முன்பக்கமாக/முன்பக்கமாக இருக்கும் | thrusting forward/forward |
| முன்னோட்டம் | பின்னர் முறையாக நடக்கவிருப்பது எப்படியிருக்கும் என்று தெரிவிக்கும் வகையிலான கணிப்பு | trial |
| முன்னோடி | இன்றைய விரிவான வளர்ச்சிக்கு அன்று அடிப்படையாக இருந்தது | pioneer |
| முன்னோர் | (மனித குலத்தில்) முன் வாழ்ந்தோர்(ஒரு பரம்பரையின்) மூதாதையர் | forefathers |
| முனகல் | மெல்லிய குரலில் வெளிப்படுத்தும் ஒலி | groan |
| முனிவர் | உலகப் பற்றைத் துறந்து தவம்புரிந்து சக்திகள் பெற்றவர் | ascetic |
| முனை1 | (செயலில்) கவனத்துடன் ஈடுபடுதல் | be busy doing |
| முனை2 | (முள், ஊசி முதலியவற்றில்) கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம் | tip |
| முனை3 | (குறிப்பிடப்படும்) செயல்பாடு நிகழும் ஓர் இடம் | front (as the place of action) |
| முனைப்பு | (ஒரு செயல், பணி முதலியவற்றைச் செய்வதில் காட்டும்) தீவிரம் | determination |
| முனையம் | (விமான நிலையத்தைக் குறிப்பிடும்போது) ஒரே சமயத்தில் பல விமானங்கள் இறங்கத் தள வசதி கொண்ட நிலையம் | (airport) terminal |
| முனைவர் | (குறிப்பிட்ட துறையில்) ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரை அளித்துப் பெறும் உயர்ந்த பட்டம் | doctor of Philosophy |
| முஷ்டி | விரல்களை இறுக்கி மூடிய கை | fist |
| முஸ்தீபு | ஆயத்தம் | preparation |
| முஸ்லிம் | இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று நடப்பவர் | muslim |
| மூ2 | மூன்று என்னும் எண்ணின் பெயரடை | the adjectival form of மூன்று |
| மூக்கணாங்கயிறு | மாட்டின் மூக்கில் நுழைத்துத் தலையைச் சுற்றிக் கட்டியிருக்கும் கயிறு | rope or string drawn through the bridge of the nose of a bullock (as a bridle) |
| மூக்கறு1 | மூக்கறுபடுதல் | get snubbed |
| மூக்கறு2 | (ஒரு சூழ்நிலையில் தெரிந்தோ தெரியாமலோ ஒன்றை வெளிப்படுத்துவதன் மூலம் ஒருவரை) அவமானப்படுத்துதல் | humiliate |
| மூக்கறுபடு | அவமானப்படுதல் | get snubbed |
| மூக்கில்விரலைவை | ஆச்சரியப்படுதல் | be pleasantly surprised |
| மூக்கில்வேர் | ஒருவர் பிறருக்குத் தெரிந்திருக்காது என்று நினைக்கிற விஷயத்தை மற்றொருவர் எப்படியோ தெரிந்திருத்தல் | sense instinctively |
| மூக்கு | சுவாசிப்பதற்கும் வாசனையை அறிவதற்கும் பயன்படுகிற உடல் உறுப்பு | nose |
| மூக்குக்கண்ணாடி | கண்ணில் அணியும் கண்ணாடி | pair of spectacles |
| மூக்குத்தி | (பெண்கள்) மூக்கு நுனியின் பக்கவாட்டுப் பகுதியில் துளையிட்டு அணிந்துகொள்ளும் சிறிய அணி | ornament worn on the nose |
| மூக்கும்முழியுமாக | முக அழகோடு | with well-pronounced features |
| மூக்கைச்சிந்து | (ஒன்றை நினைத்த மாத்திரத்தில்) கண்ணீர் விடுதல் | shed tears |
| மூக்கைத்துளை | (வாசனை, நாற்றம்) பலமாக மூக்கைப் பாதித்தல் | (of fragrance or flavour) excite the sense of smell |
| மூங்கில் | உள்ளீடற்ற குழாய் போன்ற தண்டுப் பகுதியில் கணுக்களைக் கொண்டதும் நீண்டு வளர்வதுமான ஒரு வகைத் தாவரம் | bamboo |
| மூச்சடை | மூச்சுத் திணறுதல் | suffocate |
| மூச்சு | (உயிர் வாழ்வதற்கு) நுரையீரலுக்குள் இழுத்து வெளிவிடும் காற்று | breath |
| மூச்சுக்குழல் | தொண்டையிலிருந்து நுரையீரல்வரை அமைந்திருக்கும் மூச்சுப் போகும் குழல் போன்ற பாதை | windpipe |
| மூச்சுத்திணறல் | சீராகச் சுவாசிக்க முடியாத அளவில் மூச்சுத் தடைப்படும் நிலை | suffocation in breathing |
| மூச்சுமுட்டு | மூச்சுத் தடைப்பட்டுத் திணறுதல் | suffocate |
| மூச்சுவாங்கு | மூச்சு இரைத்தல் | gasp for breath |
| மூச்சுவிடு1 | ஆசுவாசப்படுத்திக்கொள்ளுதல் | take or have a breather |
| மூச்சுவிடு2 | (எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (சிறிதளவு) தெரிவித்தல் | make even a mention of |
| மூசாப்பு | மேகமூட்டம் | (of sky) being overcast |
| மூஞ்சி | முகம் | face |
| மூஞ்சுறு | நீண்ட மூக்கும் வட்ட வடிவக் காதும், சிறிய கண்களும் உடைய எலி போன்ற ஒரு வகைப் பிராணி | shrew mouse |
| மூட்டம் | (மேகம், புகை போன்றவை) பெருமளவில் திரண்டிருத்தல் | thick mass (of clouds, smoke, etc.) |
| மூட்டு1 | (தீ) உண்டாக்குதல்/(அடுப்பில் நெருப்பு) பற்றவைத்தல் | make (fire)/kindle (fire in the hearth) |
| மூட்டு2 | (சாக்கு, துணி முதலியவற்றில் இரு விளிம்புகள் இணையும்படி) சேர்த்தல் | bring closer |
| மூட்டை1 | (தானியம் முதலியவை நிரப்பப்பட்டு) கட்டப்பட்ட அல்லது தைக்கப்பட்ட சாக்குப் பை | sack (holding grain, etc.) |
| மூட்டைகட்டு | (படிப்பு, வியாபாரம் முதலியவற்றை) இனித் தொடர்வதில் பயன் இல்லை என்று நிறுத்துதல் | stop or discontinue (studies, business, etc.) |
| மூட்டைப்பூச்சி | மனிதனைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சி (இடுக்குகளில் வாழும்) சிறு பூச்சி | bedbug |
| மூட்டைமுடிச்சு | (பெரும்பாலும் பன்மையில்) பயணத்திற்கான பொருள் | bag and baggage |
| மூட | அறிவுக்கு ஒவ்வாத | absurd |
| மூடநம்பிக்கை | பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளும், அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கை | superstitious belief |
| மூடன் | அறிவில்லாதவன் | stupid man |
| மூடி | ஒரு கொள்கலனின் திறப்பை மூடுவதற்கு அந்தத் திறப்பின் அளவே இருக்கும் தட்டுப் போன்ற பாகம் | anything that is designed for closing or covering a container |
| மூடிமறை | நடந்துவிட்ட ஒன்றைப் பிறர் அறிந்துவிடாதவாறு செயல்படுதல் | cover up |
| மூடு | (கதவு, ஜன்னல் போன்றவை ஒருவரோ ஒன்றோ) நுழைய முடியாத நிலைக்கு நகர்தல் அல்லது (கதவு, ஜன்னல் போன்றவற்றை) நுழைய முடியாத நிலைக்கு நகர்த்துதல் | (of doors, etc.) close |
| மூடுபனி | (பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடியாதபடி) அடர்த்தியாகக் காற்றில் நிறைந்திருக்கும் பனி | fog |
| மூடுமந்திரம் | (ஏதோ நடக்கிறது என்பது தெரிந்தாலும்) இன்னது நடக்கிறது என்பது தெளிவாகாத நிலை | veiled activity |
| மூத்த | (உறவுமுறைச் சொற்களோடு வருகையில்) முதலில் பிறந்த/(குறிப்பிடப்படும் பலரில்) முதல் | (with kinship terms) born first |
| மூத்தாள் | முதல் மனைவி | first wife |
| மூத்திரம் | சிறுநீர் | urine |
| மூதறிஞர் | வயது நிரம்பிய அறிஞர் | old wiseman |
| மூதாட்டி | வயது முதிர்ந்த பெண் | (respectable) old woman |
| மூதாதையர் | (ஒரு பரம்பரையில்) முன் வாழ்ந்தோர் | ancestors |
| மூதுரை | காலம்காலமாக வழங்கிவருவதும் எடுத்துக்காட்டாகக் கூறப்படுவதுமான பெரியோர் வாக்கு | old (wise) saying |
| மூதேவி | துரதிர்ஷ்டத்தை விளைவிப்பதாகக் கருதப்படும் பெண் தெய்வம் | a female deity who causes misfortune |
| மூப்பு | முதுமை | old age |
| மூர்க்கம் | கொடூரம் | cruelty |
| மூர்ச்சி | நினைவு இழத்தல் | faint |
| மூர்ச்சை | நினைவு இழப்பு | fainting |
| மூர்த்தம் | திருவுருவம் | idol (of god) |
| மூர்த்தி | கடவுள் | god |
| மூலக்கூறு | ஒரு பொருளின் மிக நுண்ணிய கூறாக இருப்பதும் (தனித்த நிலையில்) பொருளின் தன்மைகள் அனைத்தையும் கொண்டிருப்பதுமான அணுத் தொகுப்பு | molecule |
| மூலகம் | தனிமம் | element |
| மூலதனம் | தொழில் துவங்கத் தேவைப்படும் அல்லது பயன்படுத்தப்படும் பணம் | capital |
| மூலப்பொருள் | (ஒரு பொருள் தயாரிப்பதற்குத் தேவையான) தனித்தனியான அடிப்படைப் பொருள் | raw material |
| மூலம்1 | குதத்தின் ஓரத்திலோ உட்பகுதியிலோ ஏற்படும் மிகுந்த வலியை உண்டாக்கும் சிறு புடைப்புகள் | piles |
| மூலம்2 | (பிற ஒன்று) தோன்றுவதற்கு அடிப்படை | source |
| மூலம்3 | இருபத்தேழு நட்சத்திரங்களுள் பத்தொன்பதாவது | the nineteenth of the twentyseven stars |
| மூலவர் | (கோயிலில்) மந்திரபூர்வமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வம் | deity consecrated (in a temple) with sacred incantations |
| மூலஸ்தானம் | (கோயிலில்) மூலவர் இருக்கும் பகுதி | the place where the consecrated idol is placed |
| மூலாதாரம் | (ஒன்றை உற்பத்தி செய்ய அல்லது ஒரு தொழிலைச் செய்ய) அடிப்படையாகவும் ஆதாரமாகவும் அமைவது | resources |
| மூலிகை | மருந்தாகப் பயன்படும் தாவரம் அல்லது தாவரத்தின் இலை, வேர் போன்ற பகுதி | medicinal plant or herb |
| மூலைமுடுக்கு | (பொருள்களுக்கு இடையில் உள்ள) சிறு இடைவெளி | small gaps (between things) |
| மூலைவிட்டம் | (சதுரம், செவ்வகம் போன்றவற்றின்) குறுக்களவு | diagonal |
| மூழ்கு | (நீர்) பரப்பின் கீழ் அல்லது அடிக்குச் செல்லுதல் | submerge |
| மூள் | (தீ) பற்றுதல் | (of fire) catch |
| மூளி | (பெண்களைக்குறித்து வருகையில்) (மங்கலத் தோற்றத்துக்கு உரிய ஆபரணங்கள், குங்குமம் முதலியவை இல்லாத) வெறுமை | (of women) bareness |
| மூளை | உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதும் தொடுதல் போன்ற உணர்வுகளைத் தோற்றுவிப்பதுமான, மண்டையோட்டினுள் அமைந்திருக்கும் உறுப்பு | brain |
| மூளைக்காய்ச்சல் | மூளையில் ஏற்படும் அழற்சியினால் (பெரும்பாலும் குழந்தைகளுக்கு) உண்டாகும் காய்ச்சலோடு கூடிய நோய் | brain fever |
| மூளைச்சலவைசெய் | சுயமாகச் சிந்தித்து முடிவுக்கு வரவிடாமல் ஒன்றைத் திரும்பத்திரும்பச் சொல்லி அல்லது உதாரணம் காட்டி அதை ஏற்கச்செய்தல் | brainwash |
| மூன்று | இரண்டு என்ற எண்ணுக்கு அடுத்த எண் | (the number) three |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.