Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| நிஷ்டூரம் | தயவுதாட்சண்யம் இல்லாமை | harshness |
| நிஷ்டை | தியானம் | meditation |
| நீ1 | துறத்தல் | give up |
| நீ2 | முன்னிலை இடத்து ஒருமைப் பெயர் | pronoun of second person singular |
| நீக்கமற | ஓர் இடம்கூட விடாமல் | everywhere |
| நீக்குப்போக்கு | (ஒருவருடைய குணம், தன்மை அல்லது சூழ்நிலை முதலியவற்றிற்கு) தகுந்தாற்போல் ஒத்துப்போகிற விதம் | adaptability |
| நீங்கலாக | (மற்றவற்றோடு குறிப்பிடப்படுவது) தவிர்த்து | except |
| நீங்கள் | முன்னிலைப் பன்மையாகவும் மரியாதை ஒருமையாகவும் பயன்படும் பெயர் | second person plural and honorific singular pronoun |
| நீங்கு | (பசி, நோய் முதலியவை) இல்லாமல்போதல் | (of hunger, illness, etc.) cease |
| நீச்சல் | நீந்துதல் | swimming |
| நீச்சல் குளம் | (மகிழ்ச்சிக்காகவும் பயிற்சிக்காகவும்) நீந்துவதற்குச் செயற்கையாக அமைக்கப்பட்ட குளம் | swimming pool |
| நீச்சு1 | நீச்சல் | swimming |
| -நீச்சு2 | நிலம் என்பதோடு இணைந்துவரும் சொல் | a word which occurs in combination with நிலம் |
| நீசம் | (பண்பைக் குறிக்கையில்) இழிந்தது | meanness |
| நீட்சி | நீளம் | length |
| நீட்டம் | நீளம் | length |
| நீட்டலளவை | நீளம், அகலம், உயரம் போன்றவற்றை அளவிடும் முறை | linear measurement |
| நீடி | (கால அளவில்) தொடர்தல் | (of time) last |
| நீடிப்பு | பதவி, வேலை போன்றவற்றில் ஒருவர் உரிய காலம் முடிந்த பின்பு தொடர்ந்து இருப்பதற்கு ஏற்ற வகையில் அளிக்கப்படும் கால அதிகரிப்பு | extension (of service, permit, visa, etc.) |
| நீடு | நீடூழி | long time |
| நீடூழி | (வாழ்த்தும்போது) பல்லாண்டு | (live) long |
| நீண்ட | (நீளத்தில்) சராசரி அளவைவிட அதிகமான(காலத்தில்) அதிகமாகச் செல்கிற | (in length and time) long |
| நீத்தார் | இறந்தவர் | the dead |
| நீதவான் | நீதிபதி | judge |
| நீதி | (சட்டம், சமூக நெறி ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கு, பிரச்சினை போன்றவற்றில்) காரணங்களைக் கூறி நடுநிலைமையோடு வழங்கும் முடிவு | justice |
| நீதிபதி | (நீதிமன்றத்தில் வழக்கின்) இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து காரணங்களைக் கூறித் தீர்ப்பு வழங்குபவர் | judge |
| நீதிமன்றம் | வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு/இந்த அமைப்பு செயல்படுகிற கட்டடம் | court of law/court (building) |
| நீதிமான் | நீதியும் நேர்மையும் உடையவர் | upright and honest man |
| நீதியரசர் | உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி | chief Justice of the Supreme Court |
| நீந்து | (நீரில் மிதப்பதற்காக அல்லது குறிப்பிட்ட திசையில் செல்வதற்காக) கை, கால்களை அசைத்து நீரைத் தள்ளுதல்/(மீன் முதலியவை) நீரினுள் நகர்தல் | swim |
| நீர்1 | (திரவத்தின்) அடர்த்தியைக் குறைத்தல்(மோர் போன்றவற்றில்) நீர் கலந்து நீர்த்தன்மை உடையதாக்குதல் | dilute (a liquid) |
| நீர்க்கடுப்பு | சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் வலியும் ஏற்படுதல் | feeling pain while passing urine |
| நீர்க்காகம் | (நீர்நிலைகளின் அருகே காணப்படும்) வாத்துப் போன்ற தோற்றமுடைய, கூரிய அலகுடைய, மீனை உண்டு வாழும் ஒரு வகைக் கரு நீலப் பறவை | cormorant |
| நீர்க்குதிரை | குதிரை முகம் போன்ற தலையை நீட்டியவாறே நீந்திச் செல்லும் சிறிய மீன் | seahorse |
| நீர்த்த | (அமிலத்தைக் குறிக்கையில்) அதிக அளவில் நீர்த்தன்மை கொண்ட | (of acids) diluted |
| நீர்த்தேக்கம் | ஆற்றின் குறுக்கே அணை கட்டி நீரைத் தேக்கிவைத்திருக்கும் இடம்/ஆற்று நீர் அல்லது மழை நீர் தேக்கிவைக்கப்பட்டிருக்கும் ஏரி, குளம் முதலியவை | dam |
| நீர்நாய் | (ஏரி, ஆறு போன்ற நீர்நிலைகளில் காணப்படும்) நாயைப் போன்ற தோற்றமுடைய, அடர்ந்த பழுப்பு நிற ரோமமுடைய ஒரு விலங்கு | otter |
| நீர்நிலை | ஆறு, ஏரி, குளம் முதலியவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர் | common name for water sources |
| நீர்ப்பாசி | நீரில் படர்ந்து வளரும் பாசி வகை | algae |
| நீர் பிரி | சிறுநீர் கழித்தல் | urinate |
| நீர்மட்டம்1 | (அணை, ஏரி முதலியவற்றில்) நீர் இருக்கும் அளவின் உயரம் | level of water (in a reservoir, lake, etc.) |
| நீர்மம் | திரவ நிலை | liquid state |
| நீர்மாலை | (இறந்தவருக்குச் செய்யும் இறுதிச் சடங்கின் முதல் பகுதியாக) உடலை நீராட்டுவதற்கு நெருங்கிய உறவினர்கள் கொண்டுவரும் நீர் | water being brought by the close relatives to bathe the corpse (signalling the commencement of the funeral rites) |
| நீர்மூழ்கி/நீர்மூழ்கிக்கப்பல் | நீரினுள் அமிழ்ந்து செல்லக் கூடிய அமைப்பைக் கொண்ட கப்பல் | submarine |
| நீர்மோர் | மோரில் அதிகமாக நீர் கலந்து கறிவேப்பிலை இட்டுத் தாளிக்கப்பட்ட பானம் | weak buttermilk flavoured with curry leaves (taken as a drink in summer) |
| நீர்யானை | (ஆப்பிரிக்கக் காடுகளில் காணப்படும்) யானையைப் போன்ற பருத்த உடலையும் பெரிய தலையையும் ரோமமற்ற தடித்த தோலையும் உடைய நீர் வாழ் விலங்கு | hippopotamus |
| நீர்வீழ்ச்சி | அருவி | waterfall |
| நீராகாரம் | பழைய சோற்று நீர் | water in which cooked rice is kept overnight (to be taken as a drink) |
| நீராட்டு | குளிப்பாட்டுதல் | bath |
| நீராடு | குளித்தல் | bathe (in a river, sea, etc.) |
| நீராவி | கொதித்த நீரின் வாயு நிலை | steam |
| நீராவிப்படகு | நீராவியின் விசையால் செலுத்தப்படும் படகு | steam boat |
| நீராழி மண்டபம் | ஆற்றின் அல்லது குளத்தின் நடுவில் அமைந்திருக்கும் மண்டபம் | a small tower-like structure in the middle of a river or tank |
| நீரிணை | ஜலசந்தி | strait |
| நீரியல் | நிலத்தின் அடியிலும் மேற்பரப்பிலும் இருக்கும் நீரைப்பற்றியும் அந்த நீர் உள்ள இடத்தின் அமைப்பைப்பற்றியும் விவரிக்கும் அறிவியல் பிரிவு | hydrology |
| நீரிழிவு | இயல்பாக இருக்க வேண்டிய அளவைவிட அதிகமாகச் சர்க்கரை இரத்தத்தில் சேர்வதால் ஏற்படும் நோய் | diabetes |
| நீரேற்று நிலையம் | குழாய் வழியாக நீர் எல்லா இடங்களுக்கும் சீராகச் செல்வதற்கான அழுத்தத்தைத் தரும் இயந்திரம் உள்ள நிலையம் | water pumping station |
| நீரோட்டம் | (கடல், ஆறு போன்றவற்றில்) வெளியே தெரியாத, விசையோடு செல்லும் நீரின் இயக்கம் | current (in a river or sea) |
| நீலக்கல் | (ஆபரணங்களில் பதிக்கப்படும்) நீல நிறமுடைய விலை உயர்ந்த கல் | sapphire |
| நீலம்பாரி | (பொதுவாக) நீல நிறம் பரவுதல்(குறிப்பாக) (இரத்தத்தில் விஷம் கலப்பதால் உடல்) நீல நிறமாக மாறுதல் | (generally) become blue |
| நீலாம்பல் | நீல நிற அல்லி | blue nelumbo |
| நீலி | தீங்கு நினைக்கும் பசப்புக்காரி | wicked woman who feigns innocence |
| நீவு | (உடலின் பகுதியை விரலால்) தடவுதல் | stroke (gently) |
| நீள்1 | நீளத்தில் கூடுதல் | increase in length |
| நீள்2 | (பெரும்பாலும் வடிவங்களைக் குறிக்கும் சொற்களுக்கு அடையாக வரும்போது) பக்கவாட்டில் நீண்டு செல்கிற | (with reference to a cylinder) long |
| நீள்சதுரம் | செவ்வகம் | rectangle |
| நீளம் | இரு அகலப் பக்கங்களுக்கு இடையே உள்ள அளவு(கம்பி, நூல் போன்றவற்றில்) இரு முனைகளுக்கு இடையே உள்ள அளவு | length |
| நீளம்தாண்டுதல் | (விளையாட்டில்) ஓடிவந்து குறிப்பிட்ட இடத்தில் காலை ஊன்றி எழும்பி முடிந்த அளவுக்குத் தூரத்தைத் தாண்டுதல் | long jump |
| நீளமாக/நீளமான | சராசரி நீளத்தைவிட அதிகமாக/சராசரி நீளத்தைவிட அதிகமான | long |
| நீற்று | (வெள்ளையடிப்பதற்கு ஏற்ற வகையில் சுண்ணாம்புக் கட்டிகளை நீரில் போட்டு) குழையச் செய்தல் | slake (lime) |
| நுகத்தடி | (வண்டி, ஏர் முதலியவற்றை இழுத்துச்செல்வதற்காக மாட்டின் கழுத்தில்) பிணைப்பதற்கான நீண்ட தடி | yoke |
| நுகர் | (புலன்களால்) உணர்ந்து அனுபவித்தல் | experience |
| நுகர்பொருள் | மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக வாங்கிப் பயன்படுத்தும் பொருள் | consumer goods |
| நுகர்வு | அனுபவித்தல் | experience |
| நுகர்வோர் | தன் சொந்தப் பயன்பாட்டுக்காகப் பொருள் வாங்குபவர் அல்லது சேவையைப் பெறுபவர் | consumer |
| நுங்கு | இளம் பனங்காயின் உள்ளே இருக்கும் இனிப்புச் சுவையுடைய வழவழப்பான சதைப் பகுதி | kernel of a tender palmyra fruit |
| நுங்கும்நுரையுமாக | (நீர், பால் முதலியவற்றில்) மேலெழும் நுரையுடன் | with foam |
| நுட்பம் | பல அம்சங்கள் கொண்ட சிக்கலான ஒன்றில் மிகச் சிறிய அம்சம்/ மேலோட்டமாகத் தெரியாத உள்ளடங்கிய அம்சம் | minuteness/subtlety |
| நுண்கணிதம் | காலத்தையும் இடத்தையும் பொறுத்து மாறுபடும் அளவுகளைக் கணக்கிடுவதற்கான ஒரு கணிதப் பிரிவு | calculus |
| நுண்கலை | அழகியலை அடிப்படையாகக் கொண்ட (ஓவியம், இசை போன்ற) கலை | fine arts (such as painting, music, etc.) |
| நுண்கிருமி | மனிதனுக்கு நோயையும் பொருள்களில் ரசாயன மாற்றத்தையும் ஏற்படுத்தும் நுண்ணுயிர் | virus |
| நுண்ணிய | (பருப்பொருளில்) மிகச் சிறிய | (of concrete objects) small |
| நுண்ணுயிர்/நுண்ணுயிரி | நுண்ணோக்கியினால் மட்டுமே பார்க்கக் கூடிய மிகச் சிறிய (பல வகையான) உயிரினம் | microorganism |
| நுண்ணூட்டச் சத்து | பயிர்களுக்கு மிகச் சிறிய அளவில் அளிக்கப்படும் கனிமச் சத்து | micronutrients |
| நுண்ணோக்கி | சாதாரணமாகக் கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய பொருள்களையும் நுண்கிருமிகளையும் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் உருவத்தைப் பெரிதாக்கிக் காட்டக் கூடிய ஆடிகளைக் கொண்ட ஓர் அறிவியல் சாதனம் | microscope |
| நுண்மை | கண்ணுக்குப் புலப்படாத வகையில் மிகச் சிறியதாக இருப்பது | being microscopic |
| நுணா | முறுக்கிக் கொண்டாற்போல் அமைந்த கிளைகளையும் மணமுள்ள வெள்ளை நிறப் பூக்களையும் கொண்ட ஒரு வகைச் சிறு மரம் | a variety of mulberry |
| நுணுக்கம் | நுட்பம் | minuteness |
| நுணுக்கு | (கல் முதலியவற்றால் தட்டி அல்லது அம்மியில் வைத்து) பொடியாக்குதல் | powder |
| நுணுக்குக்காட்டி | நுண்ணோக்கி | microscope |
| நுதல் | நெற்றி | forehead |
| நுரை1 | நுரை உருவாதல் | foam |
| நுரை2 | (திரவங்களில்) அடர்த்தியான வெள்ளை நிறக் குமிழிகளின் தொகுப்பு | foam |
| நுரைதள்ளு | (வாயில்) நுரை வெளிப்படுதல் | foam (at the mouth) |
| நுரையீரல் | மார்புக்கூட்டினுள் இரு பிரிவாக அமைந்துள்ள, சுருங்கி விரியக் கூடிய பை போன்ற சுவாச உறுப்பு | lung |
| நுழை2 | (குறுகிய இடைவெளி உள்ளதில்) போகச்செய்தல் | insert |
| நுழைவாயில் | (கட்டடம், மைதானம் முதலியவற்றினுள் செல்வதற்கு) வெளி எல்லையில் உள்ள திறப்பு | entrance |
| நுழைவு | (பெரும்பாலும் தொடர்களில்) (ஒன்றில்) இடம்பெறுவதற்கு உரியது அல்லது அனுமதிக்கப்படுவதற்கு உரியது | (often in combination) entrance |
| நுளம்பு | கொசு | mosquito |
| நுனிப்புல்மேய் | (ஆழ்ந்த, முழுமையான ஈடுபாடு இல்லாமல்) மேலோட்டமாகச் செய்தல் | do |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.