Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| நேர்வாக்கில் | நேராக | straight |
| நேரசூசி | (பள்ளிக்கூடம் முதலியவற்றில்) கால அட்டவணை | time table (in a school, etc.) |
| நேரசை | (யாப்பில்) குறிலும் நெடிலும் தனித்தோ ஒற்றுடன் இணைந்தோ வரும் அசை | metrical syllable consisting of a short or long vowel, alone or followed by a consonant |
| நேரடி | மற்றொன்றின் அல்லது மற்றொருவரின்மூலமாக அல்லாத பங்கேற்பு | direct |
| நேரம் | (பொதுவாக) காலம் | (generally) time |
| நேரம்கெட்ட நேரத்தில் | நேரம் கழித்து | at an ungodly hour |
| நேராக | (புறப்பட்ட இடத்திலிருந்து) வேறு எங்கும் செல்லாமல் (சேர வேண்டிய இடத்தை நோக்கி) | straight (from) |
| நேரிய | சீரிய | excellent |
| நேரியல் | தோளில் இடும் துணி | cloth worn over the shoulders |
| நேருக்கு நேர் | நேராகச் சந்தித்து | personally |
| நை1 | (துணி) இற்றுப்போதல் | be frayed |
| நை2 | (துணியை) நையச்செய்தல் | cause to get threadbare |
| நைச்சியம் | (பேச்சில், நடந்துகொள்வதில்) காரியம் சாதிப்பதற்கான பக்குவம் | suavity |
| நைசாக | திறமையாக | with tact |
| நைப்பு | ஈரப்பசை | moisture |
| நையப்புடை | செம்மையாக உதைத்தல் அல்லது அடித்தல் | give a good thrashing |
| நையாண்டிமேளம் | (நாட்டுப்புறக் கலைகளான கரகம், காவடி முதலியவற்றுக்கு வாசிக்கப்படும்) ஒரு வகை மேளம் | an ensemble of musical instruments (accompanying கரகம், காவடி, etc.) |
| நைவேத்தியம் | (கோயிலில் பிறருக்குத் தருவதற்கு முன், வீட்டில் உண்பதற்கு முன்) தயாரித்த சில வகை உணவை அல்லது பழம் முதலியவற்றை இறைவனுக்குப் படைத்தல் | the ritualistic offering of cooked food, fruits, etc before a deity |
| நைஸ்பண்ணு | தாஜாபண்ணுதல் | cajole |
| நொச்சி | ஐந்து பிரிவாகப் பிரிந்த இலையையும் கரும் சிவப்பு நிறத் தண்டையும் நீல நிறப் பூவையும் கொண்ட சிறு மரம் | five-leaved tree |
| நொடி1 | ஒடிதல் | collapse |
| நொடி3 | (கண்ணை இமைப்பதற்கு அல்லது விரலைச் சொடுக்குவதற்கு ஆகும் நேரம் போன்ற) மிகக் குறைவான நேரம் | moment (time taken for batting the eye or for snapping the finger) |
| நொடி4 | புதிர் | riddle |
| நொடி5 | (சாலையில்) பள்ளம் | pit |
| நொடித்துப்போ | வருமானம் அல்லது பொருளாதார வசதி இல்லாமல் ஒருவருடைய குடும்பம், வாழ்க்கை, தொழில்) சீர்குலைதல் | decline |
| நொண்டி1 | (கால் அல்லது கை) செயல்படாத குறை | crippled condition |
| நொண்டி2 | நொண்டியடித்துச் சென்று எதிர் அணியினரைத் தொடும் விளையாட்டு | the game of hopping with folded leg |
| நொண்டிச்சமாதானம் | நடந்த நிகழ்ச்சிக்குக் காட்டப்படும் வலுவற்ற, நம்பிக்கை ஏற்படுத்தாத காரணம் | lame excuse |
| நொண்டிச்சாக்கு | பொருத்தமில்லாத சாக்குப்போக்கு | lame excuse |
| நொண்டியடி | (விளையாட்டில்) ஒரு காலை மடித்துக் குதித்தல் | hop (as in the game of chase) |
| நொண்டு | (பாதத்தை முழுமையாகப் பதிக்க முடியாமல்) ஒரு பகுதியை மட்டும் ஊன்றுதல் | limp |
| நொதி1 | (காடி முதலியவை) புளித்தல் | ferment |
| நொதி2 | உயிரினங்களின் உடலினுள் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தும், கிரியா ஊக்கியாகச் செயல்படும் குறிப்பிட்ட உயிரணுக்களின் சுரப்பு | enzyme |
| நொய் | (கோதுமை, அரிசி ஆகியவற்றின்) உடைந்த தூள் | (of rice, wheat) broken grain |
| நொறுக்கித்தள்ளு | (சிரமமான காரியம் என்று கருதப்படுவதை) சிறப்பாகச்செய்தல் | do well (with apparent ease) |
| நொறுக்கு | சிறுசிறு பகுதிகளாக ஆகுமாறு உடைத்தல் | smash |
| நொறுக்குத் தீனி | (உணவாக அல்லாமல் அவ்வப்போது தின்னும்) முறுக்கு, கடலை போன்ற சிறு தின்பண்டம் | small eats |
| நொறுங்கு | உடைந்து சிறுசிறு பகுதிகளாக ஆதல்(நசுங்கி) உருக்குலைதல் | be smashed to pieces |
| நோக்கர்கள் | எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னரே கூறக் கூடிய அளவுக்கு ஒரு துறையில் நிகழ்வதை ஆழ்ந்து கவனிப்பவர்கள் | observers |
| நோக்கி | (குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) இலக்காகக் கொண்டு | towards |
| நோக்கு1 | பார்த்தல் | see |
| நோக்கு2 | கண்ணோட்டம் | point of view |
| நோஞ்சான் | உடல் வலிமையற்று மெலிந்து காணப்படுவது | lean and weak person or animal |
| நோட்டம் | மதிப்பிடும் அல்லது தெரிந்துகொள்ளும் நோக்கம் கொண்ட பார்வை | (searching) glance |
| நோட்டு | (எழுதுவதற்கான) குறிப்பேடு | notebook |
| நோய் | (மனிதனின், விலங்கின்) உடல் நலம் பாதிப்பு | (of men, animals) disease |
| நோய்நொடி | நோயும் நோயின் பாதிப்பும் | illness and (its) effect |
| நோய்வாய்ப்படு | நோயினால் பாதிக்கப்படுதல் | fall ill |
| நோயாளி | நோய் உடைய அல்லது நோய்வாய்ப்பட்ட நபர் | one who has an illness |
| நோல் | (நோன்பை) மேற்கொள்ளுதல் | observe (a religious fast) |
| நோவு | வலி | ache |
| நோன்பு | சாப்பிடும் உணவு வேளைகளைக் குறைத்தோ சில எளிய உணவை மட்டும் உண்டோ இறைவனை நினைத்துச் செய்யும் பிரார்த்தனை | ritualistic observance of fasting |
| பக்கபலம் | வலுவான ஆதரவு | tower of strength |
| பக்கம் | ஒன்றிற்குப் பரிமாண அமைப்பைத் தருகிற பகுதி அல்லது பரப்பு | side (which gives dimension) |
| பக்கவாட்டு | (ஒன்றின் அல்லது ஒருவரின்) இடது அல்லது வலது பக்கம் | side (of an object or a person) |
| பக்கவாத்தியம் | (கச்சேரியில் முக்கிய இசைக் கலைஞருக்கு) துணையாக வாசிக்கப்படும் கருவி | accompaniment (in a concert) |
| பக்கவாதம் | (மூளையில் இரத்தக் கசிவு அல்லது உறைவு காரணமாக) உடலின் ஒரு பக்கத்தைச் செயல் இழக்கச்செய்யும் நோய் | paralysis |
| பக்கவிளைவு | (சிகிச்சையும் மருந்தும்) நோய் தீர்க்கும்போது ஏற்படுத்தும் பிற (பாதகமான) விளைவு | side effect (of a treatment, medicine) |
| பக்கவெட்டுத் தோற்றம் | ஒரு பொருளின் உட்பகுதியைக் காட்டக் கூடிய (பக்கவாட்டில் வெட்டியது போன்ற) காட்சி | side view |
| பக்கா1 | சுமார் இரண்டு லிட்டர் கொண்ட படி | a measure of roughly two litres |
| பக்கா2 | ஒருவரின் நல்ல அல்லது தீய இயல்பு மிகுதியைக் குறிப்பிடும் அடைமொழி | an attribute indicating extremeness of good or bad quality |
| பக்காவாக/பக்காவான | திருத்தமாக | perfectly/perfect |
| பக்கிரி | (முஸ்லிம்) பரதேசி | (muslim) mendicant |
| பக்கிள் | கோட்டான் | rock-horned owl |
| பக்குவப்படுத்து | பதப்படுத்துதல் | preserve |
| பக்குவம் | (-ஆக, -ஆன) (குறிப்பிட்ட உணவுக்கே உரிய) திட அல்லது திரவ நிலையோ சுவையோ மாறிவிடாமல் இருக்க வேண்டிய அளவான தன்மை | (the right) proportion |
| பக்கோடா | நீர் ஊற்றிப் பிசைந்த கடலை மாவில் வெங்காயம், பச்சைமிளகாய் முதலியவற்றைச் சேர்த்துச் சிறுசிறு உருண்டைகளாக எண்ணெய்யில் போட்டு எடுக்கும் ஒரு தின்பண்டம் | a kind of spicy savoury prepared from chickpea paste and fried in oil |
| பக்திமான் | (தெய்வ) பக்தி நிறைந்தவர் | devotee |
| பகட்டு1 | ஆடம்பரமாக நடந்துகொள்ளுதல் | be showy |
| பகட்டு2 | கவர்ச்சித் தன்மை மிகுந்த ஆடம்பரம் | show |
| பகடி1 | கேலி | mocking |
| பகடி2 | (கடையை) வாடகைக்கு எடுத்தவரை வெளியேற்ற அவருக்குத் தரப்படும் கணிசமான தொகை | an amount paid to the present occupant (of business premises) to vacate |
| பகடைக்காய் | (ஒரு வகையான சூதாட்டத்தில்) விளையாடுபவர் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவராக உருட்டும் புள்ளிகள் குறிக்கப்பட்ட (ஆறு பக்கங்கள் உடைய) சிறு மரத் துண்டு | (a) dice |
| பகர் | சொல்லுதல் | tell |
| பகரம் | பதில் | instead |
| பகல் | சூரியன் உதித்ததிலிருந்து மறைகிறவரை உள்ள நேரம் | day |
| பகல் கனவு | மனத்தில் வளர்க்கும் நிறைவேறக் கூடிய வாய்ப்புச் சிறிதும் இல்லாத எண்ணம் | daydream |
| பகல் வேஷம் | நல்லவர் போன்ற நடிப்பு | mask of innocence |
| பகலவன் | சூரியன் | sun |
| பகவான் | கடவுள் | god |
| பகளி | ஐம்பது வெற்றிலை கொண்ட ஒரு கட்டு | pack of betel leaves |
| பகாளாபாத் | சேமியாவை வேகவைத்துத் தயிரில் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி வகை | boiled noodles mixed with curds |
| பகிர் | (இருப்பவர்களுக்குக் கொடுப்பதற்காக) பிரித்தல் | share |
| பகிர்வு | பங்கீடு | sharing |
| பகிரங்கம் | எல்லோருக்கும் தெரியும்படி நிகழும் அல்லது இருக்கும் நிலை | public |
| பகிஷ்காரம் | (எதிர்ப்பு நடவடிக்கையான) புறக்கணிப்பு | boycott |
| பகீர்-என் | (பயம், ஆபத்து முதலியவற்றால்) மனத்தில் பயம் பரவுதல் அல்லது தாக்குதல் | get a fright |
| பகீரதப்பிரயத்தனம் | (ஒன்றை நிறைவேற்ற அல்லது ஒன்றைச் செய்துமுடிக்க) தன்னாலான அனைத்தையும் செய்யும், சகல வழிமுறைகளையும் கையாளும் பெருமுயற்சி | herculean effort |
| பகு | பங்கிடுதல் | share |
| பகுத்தறி | காரணகாரியங்களை மனத்தில் கொண்டு விஷயங்களைத் தொடர்புபடுத்தி அல்லது பிரித்து அறிதல் | reason analytically |
| பகுத்தறிவு | பகுத்தறியும் திறன் | reasoning |
| பகுதி நேர | (நிர்ணயிக்கப்பட்ட முழு நேரத்தைவிட) குறைந்த நேர | part-time |
| பகுப்பு | பகுத்துப் பிரிக்கப்பட்டது | division |
| பகுபதம் | பகுதி, விகுதி எனக் கூறுகளாகப் பிரிக்கப்படக் கூடிய சொல் | word that can be analysed into stem, suffix, etc |
| பகை2 | அழிக்கவோ கெடுக்கவோ தயாராக இருக்கும் வெறுப்பு நிறைந்த நிலை | enmity |
| பகைமை | பகை உணர்வு | enmity |
| பங்கம் | கேடு | harm |
| பங்களா | (பெரும்பாலும்) விசாலமான அறைகள் கொண்ட பெரிய வீடு | bungalow |
| பங்களிப்பு | (ஒன்றிற்கு) தன் பங்காகத் தரப்படுவது | contribution |
| பங்காதாயம் | கூட்டு வியாபாரத்தில் ஒருவர் செய்துள்ள முதலீட்டுக்கு உரிய லாபத்தின் பங்கு | dividend |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.