Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| பங்காளி | தந்தையின் சகோதரனின் பிள்ளை | agnate |
| பங்காளிக் காய்ச்சல் | பங்காளிகளுக்கு இடையே ஏற்படும் போட்டியும் பொறாமையும் | jealousy among those who are agnates |
| பங்கிடு | பங்குபோடுதல் | divide |
| பங்கீடு | (ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும்) இவ்வளவு எனப் பிரிக்கும் முறை | sharing |
| பங்கு | (முழுமையில்) குறிப்பிட்ட அளவுள்ள பகுதி | share |
| பங்குத்தந்தை | ஒரு பகுதியில் வாழும் மக்களை வழிநடத்த ஆயரால் நியமிக்கப்பட்ட குரு | parish priest |
| பங்குதாரர் | (நிறுவனம், வியாபாரம் போன்றவற்றுக்கான) மூலதனத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையைத் தன் பங்காகச் செலுத்தியிருப்பவர் | partner |
| பங்கு பணி | (ஒரு திட்டம், செயல் முதலியவற்றில்) ஒருவருடைய பங்காக அமையும் செயல்பாடு | role |
| பங்குபெறு | (ஒரு நிகழ்ச்சி, கூட்டம், விழா முதலியவற்றில்) பங்குகொள்ளுதல் | take part |
| பங்குபோடு | (ஒவ்வொருவருக்கும்) குறிப்பிட்ட அளவு எனப் பிரித்தல் | divide |
| பங்குனி | கடைசி தமிழ் மாதத்தின் பெயர் | the name of the last month in the Tamil calender, i |
| பங்கேற்பாளர் | (கூட்டம், விழா, நிகழ்ச்சி முதலியவற்றில்) பங்குகொள்பவர் | participant |
| பச்சடி | மாங்காய், வெண்டைக்காய் முதலிய காய்கறிகளில் ஒன்றைப் பொடியாக நறுக்கி வேகவைத்து வெல்லம் அல்லது மிளகாய் போட்டுத் தாளித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி | a variety of side dish mildly sweet made with vegetables |
| பச்சரிசி | நெல்லை (அவிக்காமல்) காயவைத்துப் பெறும் அரிசி | rice hulled without boiling |
| பச்சாதாபம் | மனத்தை நெகிழ வைக்கும் இரக்கம் அல்லது பரிவு | remorse |
| பச்சிலை | (மருந்தாகப் பயன்படும்) பறித்த இலை | leaf of medicinal plants just collected |
| பச்சிளம் குழந்தை | பிறந்து சில நாட்களே ஆன குழந்தை | an infant just born or a few days old |
| பச்சை1 | இலை, புல் போன்றவற்றில் உள்ள நிறம் | green (colour) |
| பச்சை2 | வேகவைத்தல், சுடவைத்தல் போன்ற எந்த விதத் தயாரிப்புக்கும் உள்ளாகாத நிலை | not subjected to any process such as cooking, heating, etc |
| பச்சை3 | (ஒளிவுமறைவோ நயமோ இல்லாத) வெளிப்படை | bluntness |
| பச்சை உடம்பு | (பிரசவத்திற்குப் பின்) தளர்ச்சி அடைந்திருக்கும் உடல் | tenderness of body (after child birth) |
| பச்சைக்கல்1 | மரகதம் | emerald |
| பச்சைக்கல்2 | சுடாத செங்கல் | unbaked brick |
| பச்சைக் கற்பூரம் | (சமையலில் வாசனைக்காகச் சேர்க்கப்படும்) கற்பூர வாசனை உடைய வெண்ணிறப் பொருள் | medicated camphor |
| பச்சைக்குதிரை | ஒருவரைக் குனிய வைத்து அவர் முதுகில் கை ஊன்றித் தாண்டும் ஒரு வகைச் சிறுவர் விளையாட்டு | (the game of) leap-frog |
| பச்சைக்கொடி காட்டு | (ஒன்றைச் செய்வதற்கு) அனுமதி அளித்தல் | give |
| பச்சைகுத்து | (படம், பெயர் முதலியவை அழியாமல்) கரும் பச்சை நிறத்துடன் இருக்குமாறு ஒரு வகை மையில் ஊசியைத் தொட்டு உடலில் குத்துதல் | tattoo |
| பச்சைப்பசேல்-என்று/-என்ற | (தாவரங்கள் செழிப்பாக இருப்பதைக் குறிக்கையில்) மிகுந்த பசுமையாக/மிகவும் பசுமையான | looking green/lush green |
| பச்சைப்பாம்பு | கூர்மையான வாயையும் மெல்லிய உடலையும் உடைய பச்சை நிறப் பாம்பு | whip-snake |
| பச்சைபிடி | (நடப்பட்ட பயிர் ஊட்டமாக வளர்வதற்கு அறிகுறியாக) பச்சை நிறம் தோன்றுதல் | (of crops) turn rich green |
| பச்சைமிளகாய் | மிளகாய்ச் செடியில் காய்க்கும் (காரம் மிகுந்த) காய் | green chilli |
| பச்சையம் | இலைகளுக்குப் பச்சை நிறம் தரும் இயற்கைப் பொருள் | chlorophyll |
| பச்சோந்தி | தான் இருக்கும் இடத்தின் சூழலுக்கு ஏற்பத் தன் தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மையை இயற்கையாகப் பெற்ற ஒரு வகை ஓணான் | chameleon |
| பசங்கள் | குழந்தைகள் | children |
| பசப்பு1 | (தன் செயலை நிறைவேற்றிக்கொள்ள) ஒருவரின் அனுதாபத்தைப் பெறும் வகையில் பேசுதல் அல்லது நடந்துகொள்ளுதல் | ingratiate oneself |
| பசப்பு2 | பிறரின் அனுதாபத்தைப் பெறும் வகையிலான பேச்சு அல்லது நடவடிக்கை | ingratiating oneself (by talk or behaviour) |
| பசலி | கிராமத்தில் விளைநிலம்பற்றிய கணக்குகளுக்கான (பயிரிடும் காலமான ஜூலை முதல் அறுவடை முடியும் காலமான மே-ஜூன்வரை கணக்கிடும்) ஓர் ஆண்டு | accounting year for land revenue |
| பசலை | (பெரும்பாலும் இலக்கியத்தில்) (தலைவன் பிரிவதால்) பெண்ணின் உடலில் தோன்றும் பொன் நிறத் தேமல் | (mostly in literature) pale yellow spots supposed to appear on the body of a woman (due to love-sickness |
| பசலைக்கீரை | (சமையலில் பயன்படும்) வெளிர்ப் பச்சை நிறத்தில் வழுவழுப்பான இலைகளைக் கொண்ட செடி/கரும் பச்சை நிறப் பெரிய இலைகளைக் கொண்ட கொடி | purslane or malabar nightshade |
| பசி1 | (ஒருவருக்கு) உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல் | (with dative) be hungry |
| பசி2 | உணவு உண்ணத் தூண்டும் உணர்வு | hunger |
| பசிய | பசுமையான | green |
| பசு1 | பாலுக்காக வீட்டில் வளர்க்கப்படும் (எருமை அல்லாத) மாட்டினத்தில் பெண் | cow |
| பசு2 | (சைவ சித்தாந்தத்தில்) ஆன்மா | (in Saiva siddhanta) soul |
| பசுந்தாள் உரம் | தழைக்காக வளர்க்கப்பட்ட பயிரை அந்த நிலத்திலேயே உழுது சேர்க்கும் உரம் | green manure |
| பசும் | (தாவரங்களைக் குறிக்கையில்) பச்சை நிறம் உடைய | (of plants) green |
| பசுமைப் புரட்சி | நவீன முறைகளால் குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் ஏற்படும் வகையில் விவசாயத்தில் நடந்த பெரும் மாற்றம் | great change that took place within a short period in agriculture resulting in large yields |
| பசை1 | ஒட்டும் தன்மை கொண்ட வழுவழுப்பான பொருள் | semi-solid adhesive material |
| பசை2 | பண வசதி | affluence |
| பஞ்சகச்சம் | வேட்டியை மூன்று முனைகளாக ஆக்கி இரு முனைகளை இடுப்பின் முன்புறத்தில் செருகி மற்றொரு முனையைக் கால்கள் இடையே கொடுத்து இடுப்பின் பின்புறத்தில் செருகிக் கட்டும் முறை | a particular mode of wearing வேட்டி running one end of it through the legs |
| பஞ்சணை | பஞ்சு மெத்தை | mattress stuffed with cotton |
| பஞ்சப் படி | அகவிலைப் படி | dearness allowance |
| பஞ்சபட்சி சாஸ்திரம் | வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய பறவைகள் எழுப்பும் ஒலிகளை வைத்துப் பலன் சொல்லும் சோதிட முறை | system of divination from the call of certain birds |
| பஞ்சபூதம் | நிலம், நீர், காற்று, வானம், தீ ஆகிய ஐந்து இயற்கைச் சக்திகள் | the five elements, viz |
| பஞ்சம் | உணவு கிடைக்காத நிலை | famine |
| பஞ்சலோகம் | தங்கம், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி ஆகிய ஐந்து உலோகங்களின் கலவை | alloy of five metals, viz |
| பஞ்சவர்ணக்கிளி | உருவத்தில் சற்றுப் பெரிதாகவும் பல வண்ணம் உடையதாகவும் உள்ள கிளி | macaw |
| பஞ்சாங்கம் | (ஜாதகம் கணிப்பதற்கும் நல்ல நேரம் பார்ப்பதற்கும் பயன்படுத்தும்) ஜோதிட முறைப்படி குறிப்பிட்ட ஆண்டுக்கு உரிய நாள், நட்சத்திரம், திதி, கிரகநிலை முதலியவை குறித்த விபரங்கள் அடங்கிய நூல் | almanac (containing astrological and some astronomical information) |
| பஞ்சாமிர்தம் | (இறைவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்) வாழைப்பழம், தேன், நெய், சர்க்கரை, திராட்சை முதலியவற்றைச் சேர்த்துச் செய்த இனிப்புச் சுவை மிகுந்த கலவை | a mixture of five substances, usually banana, honey, ghee, sugar and raisin, used for anointing idols and later distributed among devotees |
| பஞ்சாயத்து | கிராமங்களில் உருவாகும் பிரச்சினைகளை ஊர் வழக்கம், மனசாட்சி அடிப்படையில் தீர்த்துவைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஊர்ப் பெரியவர்களின் குழு | a body of villagers which settles disputes according to custom and good conscience |
| பஞ்சாயத்து யூனியன் | ஊராட்சி ஒன்றியம் | panchayat union |
| பஞ்சாலை | பஞ்சில் உள்ள தூசு, கொட்டை போன்றவற்றை நீக்கிச் சுத்தப்படுத்துவதற்கான தொழிற்சாலை | ginning factory |
| பஞ்சி | சோம்பல் | laziness |
| பஞ்சு | (பருத்திச் செடியிலிருந்து அல்லது இலவ மரத்தின் காயிலிருந்து கிடைக்கும்) நுண்ணிய இழைகளாலான, திரவத்தை உறிஞ்சக் கூடிய, எளிதில் தீப்பற்றக் கூடிய, கனமற்ற வெண்ணிறப் பொருள் | cotton (wool) |
| பஞ்சு மிட்டாய் | குச்சியில் பந்து போல் சுற்றியிருக்கும், வண்ணப் பஞ்சு போன்ற, சீனிப் பாகினால் ஆன தின்பண்டம் | candy-floss |
| பஞ்சை | ஏழை | poor |
| பட்-என்று | எதிர்பார்க்காத முறையில் அல்லது வேகத்தில் | in an unexpected manner or with unexpected quickness |
| பட்சணம் | (சில நாட்கள் வைத்துக்கொள்ளக் கூடிய) இனிப்பும் காரத் தின்பண்டங்களும் | sweet and other refreshments (that can be preserved for a few days) |
| பட்சபாதம் | பாரபட்சம் | partiality |
| பட்சி | பறவை | bird |
| பட்டணப் பிரவேசம் | (கொண்டாடும் நோக்கத்தோடு மதத்தலைவர், மணமகன் போன்றோரை வரவேற்று) நகர வீதியில் அழைத்து வரும் சடங்கு | custom of welcoming religious heads, a bridegroom, etc taking them in procession through the streets of the town |
| பட்டணம் | (பொதுவாக) நகரம்(குறிப்பாக) சென்னை நகரம் | (generally) city |
| பட்டணம்படி | இரண்டு லிட்டர் அளவு கொண்ட படி | a measure of approximately two litre capacity |
| பட்டத்தரசி | அரசனின் மனைவி | wife of a king |
| பட்டத்து இளவரசன் | அரசனுக்குப் பிறகு முடிசூட்டிக்கொள்ளும் உரிமை படைத்த இளவரசன் | crown prince |
| பட்டத்து யானை | அரசச் சின்னங்களைத் தாங்கியதும் அரசர் பவனி வருவதற்கு உரியதுமான யானை | royal elephant |
| பட்டதாரி | (பல்கலைக்கழக) பட்டம் பெற்றவர் | graduate |
| பட்டப்பகல் | நல்ல வெளிச்சம் இருக்கிற பகல் நேரம் | broad daylight |
| பட்டம்2 | (காற்றில் பறக்க விடப்படும்) காற்றாடி | kite |
| பட்டம்3 | பயிரிடுவதற்கான பருவம் | agricultural season |
| பட்டமளிப்பு விழா | (பல்கலைக்கழகத்தில்) பட்டம் பெற்றவருக்கு அதிகாரபூர்வமாகப் பட்டத்திற்கு உரிய சான்றிதழை வழங்கும் விழா | a ceremony for the conferring of degrees upon students |
| பட்டயம் | (முற்காலத்தில்) அரசனால் வழங்கப்பட்ட நிலம்குறித்த அதிகாரபூர்வமான தகவல் அல்லது அரசனுடைய வெற்றி போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தி பொறிக்கப்பட்ட செப்புத்தகடு | copper plate bearing inscription on the grants made, etc by kings |
| பட்டர் | திருமாலுக்கு வைணவ ஆகமப்படி பூஜை செய்யும் தகுதி உடையவர் | one who is entitled to perform பூஜை in temples dedicated to Vishnu |
| பட்டவர்த்தனமாக/பட்டவர்த்தனமான | (எந்த வித ஒளிவுமறைவுமின்றி) வெளிப்படையாக/வெளிப்படையான | candidly |
| பட்டறிவு | நேரடி அனுபவத்தின்மூலம் பெறும் அறிவு | knowledge gained by experience |
| பட்டறை1 | தச்சு வேலை போன்றவை நடைபெறும் இடம் | carpentry or smithy (shop) |
| பட்டறை2 | (நெல்லைச் சேமித்து வைப்பதற்கான) சாக்கு அல்லது வைக்கோலால் ஆன அமைப்பு | a structure made of gunny bags or hay for storing grains |
| பட்டா | குறிப்பிட்ட எண்ணுள்ள நிலம், வீட்டு மனை முதலியவற்றுக்கு வரி செலுத்த வேண்டிய உடமையாளர் யார் என்பதைக் காட்டும் ஆவணம் | a settlement record which shows who, as the owner of a specified land, is obliged to pay the tax |
| பட்டாக்கத்தி | பட்டையான பரப்புடைய வாள் | sword with broad blade |
| பட்டாசு | நெருப்பு வைத்ததும் பூப்பூவாகத் தெறிக்கும் அல்லது சத்தத்துடன் வெடிக்கும் வகையில் ரசாயனத் தூள் அடைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் பொருள் | sparklers and crackers |
| பட்டாணி | காயவைத்து உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுக்கப்பட்ட உருண்டையான பயறு | fried peas of the garden pea (prepared as a snack) |
| பட்டாதாரர் | (நிலம், மனை முதலியவற்றுக்கு அளிக்கப்பட்ட) பட்டாவின் உரிமையாளர் | holder of பட்டா |
| பட்டாபிஷேகம் | ஒரு நாட்டின் அரசராக அல்லது அரசியாக முடிசூடும் சடங்கு | coronation |
| பட்டாம்பூச்சி | அழகான, விதவிதமான வண்ணத்தில் இறக்கைகளை உடைய ஒரு வகைப் பூச்சி | butterfly |
| பட்டாமணியம் | வருவாய்த் துறை அதிகாரிகளால் முன்பு நில வரி போன்ற வரிகளை வசூலிக்க நியமிக்கப்பட்டிருந்த கிராம அதிகாரி | village officer (formerly appointed in each village by the district revenue establishment for the collection of land revenue) |
| பட்டாளம் | ராணுவம் | army |
| பட்டி1 | சிற்றூர் | hamlet |
| பட்டி2 | (கிராமத்தில்) பிறர் நிலத்தில் பயிர்களை மேயும் ஆடு, மாடு ஆகியவற்றை (உரிமையாளர் வந்து மீட்டுச் செல்லும்வரை) அடைத்து வைக்கும் இடம் | (cattle) pound |
| பட்டி3 | (சட்டை, பாவாடை முதலிய உடைகளில்) விளிம்பை மடித்துத் தைக்கும் பகுதி | hemming |
| பட்டிக்காட்டான் | நகர்ப்புற நாகரிகம் அறியாத கிராமவாசி | rustic |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.