Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| பரஸ்பரம் | (ஒன்றில் சம்பந்தப்பட்ட இருவரும் அல்லது அனைவரும் பயனடையும்படி அல்லது பாதிப்படையும்படி) ஒருவருக்கொருவர்(நாடு, நிறுவனம் முதலியவை) ஒன்றுக்கொன்று | mutuality |
| பராக்கிரமம் | உடல் வலிமையும் வீரமும் | prowess and strength |
| பராபரியாக | பிறர் சொல்லக் கேட்டதன்மூலமாக | by hearsay |
| பராமரி | (நலமுடன் இருக்க அல்லது நல்ல நிலையில் இருக்கத் தேவையானவற்றைச் செய்து) கவனித்துக்கொள்ளுதல் | look after |
| பராமரிப்பு | கவனிப்பு | care |
| -பராரி | (பெரும்பாலும் பஞ்சை என்ற சொல்லோடு இணைந்து) தன் ஊரில் வாழ முடியாமல் வெளியேறிய நபர் | one who has abandoned his home |
| பரிகசி | பரிகாசம்செய்தல் | ridicule |
| பரிகாசம் | கேலி | making fun of |
| பரிகாரம் | தீர்வு | solution (to a problem, etc.) |
| பரிச்சயம் | (ஒருவரைத் தெரிந்துவைத்திருக்கும் அல்லது ஒன்றைப் பல முறை அறிந்து ஏற்படுத்திக்கொண்டிருக்கும்) பழக்கம் | acquaintance |
| பரிசல் | மூங்கில், பிரம்பு போன்றவற்றால் பெரிதாகக் கூடை போலப் பின்னப்பட்ட நீர்வழிப் போக்குவரத்துச் சாதனம் | boat in the shape of a basket |
| பரிசாரகன் | (திருமண வீட்டில், கோயிலில்) சமையல்காரன் | cook (hired for an occasion, employed in a temple) |
| பரிசில் | (புலவர், கலைஞர் போன்றோருக்கு அரசர் வழங்கிய) பரிசு | gift (by a king to a poet, artiste) |
| பரிசீலனை | (திட்டம், கோரிக்கை முதலியவை பற்றி) முடிவெடுப்பதற்கான ஆய்வு | consideration |
| பரிசீலி | (திட்டம், கோரிக்கை முதலியவை பற்றி முடிவுக்கு வருவதற்கு) சீர்தூக்கிப்பார்த்தல் | weigh |
| பரிசு | வெற்றிக்கு உரிய அல்லது பாராட்டுக்கு உரிய செயலுக்கு வழங்கப்படுவது | prize |
| பரிசுச்சீட்டு | குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துப் பணம் பரிசாகத் தருவதற்கு விற்கப்படும், வரிசை எண் அச்சிட்ட தாள் | lottery ticket |
| பரிசுத்த ஆவி | திரித்துவம் என்னும் தெய்வ நிலை மூன்றனுள் புனிதப்படுத்துபவர் | the Holy Spirit |
| பரிசுத்தம் | (களங்கம் எதுவும் இல்லாத) தூய்மை | pristine purity |
| பரிசோதனை | (தக்க கருவிகளைக்கொண்டு) ஆராய்ந்து அறியும் முறை | examination |
| பரிசோதனைச்சாலை | சோதனைக்கூடம் | laboratory |
| பரிட்சகர் | வினாத் தாள் தயாரிப்பவர் அல்லது (விடை) தாள்களைத் திருத்துபவர் | examiner (who sets the question paper or who corrects the examination papers) |
| பரிட்சார்த்தம் | (பெருமளவில் மேற்கொள்ளவிருக்கும் திட்டத்தை) சிறிய அளவில் செயல்படுத்திக் குறைநிறைகளை அறிந்துகொள்வதற்கான சோதனை முயற்சி | experiment |
| பரிட்சார்த்தி | தேர்வு எழுதுபவர் | one who appears for an examination |
| பரிட்சி | சோதித்தல் | examine |
| பரிட்சை | தேர்வு | examination (in academic institutions) |
| பரிணமி | (ஒன்று மற்றொன்றாக) படிப்படியாக வளர்ச்சி அடைதல்(ஒன்றிலிருந்து மற்றொன்று) தோன்றுதல் | undergo transformation |
| பரிணாமம் | (உயிரினங்கள்) மாறும் சூழ்நிலைக்குத் தக்கவாறு எளிய அடிப்படையான வடிவங்களிலிருந்து புதிய அமைப்பும் இயக்கமும் கொண்ட வடிவத்தை அடையும் படிப்படியான மாற்றம் | evolution |
| பரிதவி | (பரிதாபமான நிலையில்) வருந்தித் தவித்தல் | suffer |
| பரிதவிப்பு | வருத்தத்துடன் கூடிய தவிப்பு | suffering |
| பரிதி1 | சூரியன் | sun |
| பரிதி2 | வட்டத்தின் சுற்றாக அமையும் கோடு | circumference |
| பரிந்து பேசு | (பிரச்சினை, தகராறு முதலியவற்றில் ஒருவருக்கு) சார்பாக அல்லது ஆதரவாகப் பேசுதல் | speak in favour of |
| பரிந்துரை1 | (கருத்து, ஆலோசனை ஆகியவற்றை) பயன்படுத்திக்கொள்ளும்படி அல்லது நடைமுறைப்படுத்தும்படி முன்வைத்தல் | make recommendation |
| பரிந்துரை2 | (இவ்வாறு செய்யலாம் என்னும் முறையில் வழங்கும்) கருத்து | recommendation |
| பரிபாலனம் | நிர்வாகம் | rule |
| பரிபாலி | (நாட்டை) நிர்வகித்தல் | rule |
| பரிபாஷை | குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே புரிந்துகொண்டு பயன்படுத்தும் மொழி | cant |
| பரிபூரணம் | குறைவு எதுவும் இல்லாத முழுமை | completeness |
| பரிமளம் | நறுமணம் | fragrance |
| பரிமளி | சிறந்து விளங்குதல் | add lustre to |
| பரிமாணம் | நீளம், அகலம், உயரம் அல்லது காலம் ஆகிய அளவுகளுள் ஒன்று | dimension |
| பரிமாற்றம் | (இருவரிடமும் உள்ளவற்றை) கொடுத்துப் பெறும் முறை | exchange |
| பரிமாறு | (ஒருவர் மற்றவருக்கு இலையில், தட்டில் உணவை) உண்பதற்கு உரிய முறையில் வைத்தல் | serve (food) |
| பரியந்தம் | (முடிவான) எல்லை | (end) limit |
| பரியாரி | (கிராமங்களில்) முடிவெட்டுபவர் | (in villages) barber |
| பரிவட்டம் | (கோயிலில்) மரியாதைக்கு உரியவர்களை கௌரவிக்கும்பொருட்டு அவர்கள் தலையில் அணிவிக்கும், கடவுளுக்குச் சாத்திய பட்டுத் துணி | a piece of silk cloth that is first put on the consecrated idol and then tied round the head of a distinguished guest as a mark of honour (in temples) |
| பரிவர்த்தனை | பரிமாற்றம் | exchange |
| பரிவாரம் | (அரசர் போன்றோருடன்) உடன் வருவோர்/(பெரும்பாலும் கேலியாகக் கூறும்போது) உடன் வரும் கூட்டம் | (formerly) retinue (of a king, etc.)/(often humorously) attendants |
| பரிவேடம் | சந்திரனை அல்லது சூரியனைச் சுற்றிக் காணப்படும் வட்டம் | halo (around the moon) |
| பரு2 | (பெரும்பாலும் முகத்தில் சீழ் உள்ள) சிறு கட்டி | pimple |
| பருக்கை | சாதத்தில் உதிரிஉதிரியாக இருப்பதில் ஒன்று | single grain of cooked rice |
| பருகு | குடித்தல் | drink |
| பருத்தி | பஞ்சு/பஞ்சைத் தரும் செடி | cotton/cotton plant |
| பருத்திக்கொட்டை | (மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்) பருத்திச் செடியின் விதை | cotton seed (used as cattle feed) |
| பருந்து | (இறைச்சி முதலியவற்றைத் தின்று வாழும்) பிளவுபட்ட வால் பகுதி உடைய கழுகு இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை | common kite |
| பருப்பு | (உடைத்துக் காயவைத்து) சமையலுக்குப் பயன்படுத்தும் துவரை, உளுந்து போன்றவற்றின் விதை | dhal |
| பருப்புத்தேங்காய் | தேங்காய்த் துருவலையும் கடலைப் பருப்பையும் வறுத்து வெல்லப்பாகில் போட்டுக் கிளறிக் கூம்பு வடிவத்தில் செய்து சில சடங்குகளில் பயன்படுத்தும் ஓர் இனிப்புப் பண்டம் | a cone shaped confection of fried coconut scrapings and bengal gram mixed with jaggery displayed on certain occasions such as wedding |
| பருப்புப்பொடி | (சாதத்துடன் சேர்த்துக்கொள்ள) வறுத்த துவரம் பருப்பு, மிளகு முதலியவற்றை இடித்துத் தயாரிக்கும் பொடி | powdered lentil mixed with pepper (added to cooked rice to give a mild flavour) |
| பருப்பொருள்1 | கண்ணால் காணக் கூடியதும் தொட்டு உணரக் கூடியதுமான பொருள் | object that can be seen or felt |
| பருப்பொருள்2 | (செய்யுளில்) வெளிப்படையாகத் தெரியும் பொருள் | obvious meaning |
| பருவக்காற்று | (பெரும்பாலும் தெற்கு ஆசியப் பகுதிகளில்) குறிப்பிட்ட காலத்தில் மட்டும் கடலிலிருந்து நிலப் பகுதிக்குள் குறிப்பிட்ட திசையில் வீசி மழை பெய்யச்செய்யும் காற்று | the monsoon |
| பருவம் | (ஒருவர் அல்லது ஒன்று) தோன்றியதிலிருந்து கடந்து வருகிற வளர்ச்சி நிலை | stage (in the development of s |
| பருவமழை | பருவக்காற்றினால் பெய்யும் மழை | the monsoon rain |
| பருவமுறை | (உயர்கல்வி நிறுவனங்களில்) ஆறு மாதத்துக்கு ஒரு பாடத்திட்டமும் தேர்வும் கொண்ட கல்வி முறை | semester (system) |
| பருவமெய்து | பூப்படைதல் | come of age |
| பருவெட்டு | தடித்த தன்மை | thick |
| பரோட்டா | மைதா மாவைப் பிசைந்து மெல்லியதாக இழுத்துப் பின் சுருட்டித் தட்டித் தோசைக் கல்லில் சுட்டுத் தயாரிக்கப்படும் ஒரு வகை ரொட்டி | unleavened bread of maize flour, thick in size and round in shape |
| பரோபகாரம் | பிறருக்குத் தாராளமாகச் செய்யும் உதவி | the willingness to help others |
| பரோபகாரி | தயங்காமல் தாராளமாக உதவி செய்பவர் | one who is willing to help others |
| பரோல் விடுப்பு | தண்டனைக் காலத்தில் நன்னடத்தை நிபந்தனையின்பேரில் சிறைக் கைதி குறிப்பிட்ட காலத்துக்கு வெளியில் செல்ல வழங்கப்படும் அனுமதி | parole |
| பல்1 | (வாயில் உணவைக் கடித்து மெல்லுவதற்கு ஏற்ற வகையில் இரு தாடைகளிலும் வரிசையாக அமைந்திருக்கும்) தட்டையான அல்லது கூரிய முனை கொண்ட உறுதியான வெண்ணிற உறுப்பு | tooth |
| பல்2 | பல | many |
| பல்கலைக்கழகம் | தேர்வுகள் நடத்துதல், பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்துதல் போன்ற பணிகளைச்செய்வதும் ஆராய்ச்சி மையமாக விளங்குவதுமான உயர்கல்வி நிறுவனம் | university |
| பல்கு | மிகுதல் | increase (in numbers) |
| பல்குச்சி | (பெரும்பாலும் ஆலம்விழுதிலிருந்தும் வேப்பமரத்திலிருந்தும் ஒடித்த) பல் தேய்ப்பதற்குப் பயன்படுத்தும் சிறு குச்சி | a twig (mostly of banyan or neem tree) used as a toothbrush |
| பல் சக்கரம் | (இயந்திரங்களில் ஒன்று மற்றொன்றோடு பொருந்திச் சுழல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்த) பற்கள் போன்ற முனைகள் நிறைந்த சக்கரம் | gear |
| பல்பொருள் அங்காடி | தேவையான அனைத்துப் பொருள்களும் ஒரே கட்டடத்தில் விற்பனைசெய்யப்படுகிற இடம் | supermarket |
| பல்லக்கு | தூக்கிச்செல்வதற்கு ஏற்ற வகையில் நீண்ட கழி இணைக்கப்பட்ட, ஏறுவதற்குப் பக்கத் திறப்புடைய, பயணம் செய்வதற்கு உரிய சாதனம் | palanquin |
| பல்லவி | கீர்த்தனையின் முதல் உறுப்பு | the opening or the first unit of a composition |
| பல்லாங்குழி | சோழிகள் அல்லது புளியங் கொட்டைகளைப் போட்டு விளையாட வசதியான குழிகளை வரிசைக்கு ஏழு என இரண்டு வரிசைகள் கொண்ட சாதனம் | a board with two rows each having seven hollows filled with five counters |
| பல்லி | (சுவர் போன்றவற்றில்) ஒட்டிக்கொண்டு விழாமல் செல்லக் கூடியதும் பெரும்பாலும் சாம்பல் நிறத்தில் காணப்படுவதுமான சிறு பிராணி | house lizard |
| பல்வேறு | பல வித | (many) different |
| பல1 | (மழை பெய்வது, காற்று அடிப்பது) வலுத்தல் | (of rain, wind) become heavy |
| பல2 | எண்ணிக்கையில் அதிகம் | many |
| பலகணி | (பெரும்பாலும் கண் போன்ற துளைகள் உடைய) ஜன்னல் | (latticed) window |
| பலகாரம் | இனிப்பு அல்லது கார வகைத் தின்பண்டம் | (sweet or hot) snacks |
| பலகை | செவ்வக அல்லது சதுர வடிவில் அறுக்கப்பட்ட மரத் துண்டு | plank |
| பலசரக்கு | அன்றாடம் உணவு தயாரிப்பதற்குத் தேவைப்படும் உப்பு, புளி, மிளகாய், எண்ணெய் முதலிய பொருள்கள் | groceries |
| பலத்த | (அளவில்) அதிகமான | (in quantity) heavy |
| பலதரப்பட்ட | பல வகையான | of all sorts |
| பலதாரமணம் | ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து வாழும் முறை | polygamy |
| பலப்படுத்து | வலுப்படுத்துதல் | strengthen |
| பலப்பம் | சிலேட்டுக் குச்சி | slate pencil |
| பலப்பரிட்சை | யாருக்கு அதிக ஆதரவு என்பதைத் தீர்மானிக்கும் போட்டி | test or trial of strength |
| பலப்பிரயோகம் | (தீர்வு காணும் வழியாக) பலத்தைப் பயன்படுத்துதல் | use of force |
| பலபட | (பேசுதல், எழுதுதல் தொடர்பான வினைகளோடு மட்டும்) பல்வேறு விஷயங்கள்குறித்துப் பலவாறு | in a variety of ways |
| பலம்2 | (தற்போது வழக்கில் இல்லாத) முப்பத்தைந்து கிராம் கொண்ட நிறுத்தலளவை | (a former) measure of weight, roughly about 35 grams |
| பலமுனை வரி | உற்பத்தி செய்யப்பட்ட பொருள் ஒவ்வொரு முறையும் விற்கப்படும்போது அரசால் விதிக்கப்படும் விற்பனை வரி | sales tax levied at every point of sale from production to the last sale |
| பலர் | பல நபர் | many (people) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.