Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| பலர்பால் | உயர்திணையில் பலரைக் குறிப்பிடும் சொல் | the term for human plural |
| பலவந்தப்படுத்து | (ஒரு பெண்ணை) வற்புறுத்தி உடலுறவுகொள்ளுதல் | force (a woman) to have sex |
| பலவாறு/-ஆக | பல விதமாக | variously |
| பலவான் | பலமுடையவன் | man of strength |
| பலவின்பால் | அஃறிணையில் பலவற்றைக் குறிப்பிடும் சொல் | the term for neuter plural |
| பலவீனம் | (-ஆக, -ஆன) செயல்படுவதற்குத் தேவையான வலு இல்லாத நிலை | debility |
| பலா | பலாப்பழத்தைத் தரும் மரம் | jackfruit tree |
| பலாத்காரம் | பலவந்தம் | force |
| பலாப்பழம் | முட்கள் அடர்ந்த, பச்சை நிறத் தடித்த மேல்தோலையும் வெளிர் மஞ்சள் நிறத்தில் சுளைசுளையாக அமைந்த சதைப் பகுதியையும் கொண்ட பெரிய பழம் | jackfruit |
| பலாபலன் | நன்மை தீமை | good and bad effects |
| பலி1 | (இவ்வாறு நடக்கும் என்று சொல்வது அல்லது இவ்வாறு நடக்க வேண்டும் என்று விரும்புவது) உண்மையாகவே நடத்தல் அல்லது நிகழ்தல் | be effective |
| பலி2 | (தெய்வத்திற்கு அளிக்கும்) உயிர்க் கொலை | offering lives (as sacrifice) |
| பலிகடா | (தான் தப்பித்துக்கொள்ள) அநியாயமாகப் பயன்படுத்தப்படும் மற்றொருவர் | scapegoat |
| பலிதம் | (எண்ணத்தின்) நிறைவேற்றம் | fulfilment |
| பலிபீடம் | (தெய்வங்களின் சன்னிதியில்) பலிகொடுக்கப் பயன்படுத்தப்படும் மேடை | (sacrificial) altar |
| பலியிடு | பலி கொடுத்தல் | offer (animal as sacrifice) |
| பலே | ஒருவரின் திறமையைக் கண்டு பாராட்டிக் கூறப் பயன்படுத்தும் சொல் | a term used in appreciation of the skill of s |
| பவ்வியம் | (பேச்சில், செயலில் வெளிப்படுத்தும்) மரியாதை கலந்த பணிவு | politeness |
| பவழம் | (நகையில் பதிப்பதற்குப் பயன்படுத்தும்) இளஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கும் (கடல் வாழ் உயிரினங்களின் எலும்பிலிருந்து பெறும்) விலை மதிப்புடைய பொருள் | (pink or red) coral |
| பவழமல்லி | வெண்ணிற இதழ்களையும் சிவப்பு நிறக் காம்பையும் கொண்ட மணம் மிகுந்த சிறிய பூ | jasmine (that blooms at night) |
| பவளவிழா | எழுபத்தைந்தாம் ஆண்டின் நிறைவை ஒட்டிக் கொண்டாடப்படும் விழா | celebration marking the completion of 75th year |
| பவனி | (அரசர் முதலியோர்) ஓர் இடத்திற்கு ஊர்வலமாகச் செல்லுதல் | ceremonial procession |
| பவிசு | (திடீரென்று வரும்) மேல்நிலை | status (newly acquired) |
| பவித்திரம் | புனிதம் | sacredness |
| பவுண்டு | (ஆடு, மாடுகளை அடைத்துவைக்கும்) பட்டி | (cattle) pound |
| பவுந்திரம் | மூல நோய் | piles |
| பவுன் | சவரன் | (gold) sovereign (of eight grams) |
| பழக்கதோஷம் | பழக்கத்தால் ஏற்பட்ட விளைவு | force of habit |
| பழக்கம் | பல முறை செய்து படிந்துவிடுகிற செயல்/முன்னரே அறிந்துவைத்திருப்பது | habit |
| பழக்கவழக்கம் | தொடர்ந்து பின்பற்றப்பட்டுவரும் செயல்முறை | customs and habits |
| பழக்கு | (ஒரு செயலைச் செய்ய) பயிற்சி அளித்தல் | train |
| பழகு | (ஒருவரை) அறிமுகம் செய்துகொண்டு தொடர்புபடுத்திக்கொள்ளுதல் | get acquainted with |
| பழங்குடி | ஒரே விதமான, பழமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றி ஓர் இடத்தில் காலம்காலமாக வாழும் சமூகம் | tribe |
| பழசு | (பயன்பாட்டில், கைவசத்தில்) ஏற்கனவே இருப்பது | that which is old |
| பழஞ்சோறு | பழையது | cooked rice kept in water (overnight) |
| பழம்2 | (காலத்தால்) முந்திய | ancient |
| பழம் பெருச்சாளி | (பெரும்பாலும் மதிப்புத் தராத முறையில்) ஒரு பதவியில் பல காலமாக இருந்து ஆதாயம் அனைத்தையும் அடைய வழி தெரிந்துவைத்திருப்பவர் | sly old fox |
| பழம்பெரும் | வயது நிறைந்து அனுபவம் மிகுந்த | veteran |
| பழமை | (-ஆன) (காலத்தால்) முந்திய நிலை | antiquity |
| பழமைவாதி | பழமையானது சிறந்தது என்ற கொள்கை உடையவர் | conservative |
| பழமொழி | மக்களிடையே நீண்ட காலமாக வழங்கிவருவதும் பேச்சில் ஆதாரமாகவோ உதாரணமாகவோ காட்டப்படுவதுமான கருத்துத் தொடர் | proverb |
| பழரசம் | பழத்தைப் பிழிந்து தயாரிக்கும் பானம் | fruit juice |
| பழி1 | கடுமையாகக் குற்றம்சாட்டித் தாழ்த்துதல் | slander |
| பழி2 | கடும் குற்றம் | charge |
| பழிகிட | காரியம் நிறைவேறுவதையே கருத்தாகக் கொண்டு (ஓர் இடத்தில் ஒருவருக்காக) காத்திருத்தல் | hang on persistently to achieve an end |
| பழித்துக்காட்டு | (ஒருவரின் பேச்சு, நடை போன்றவற்றை) தரக்குறைவாகவும் கேலியாகவும் நடித்துக்காட்டுதல் | imitate |
| பழிவாங்கு | தீமை செய்தவருக்குத் திருப்பித் தீமை செய்தல் | wreak vengeance on |
| பழுக்க | (காய்ச்சு என்னும் வினையோடு) மிகவும் சிவந்து வரும்படி | red-hot |
| பழுத்த | சிறந்த தேர்ச்சி நிறைந்த | (of experience in a particular field) rich |
| பழுத்த சுமங்கலி | கணவனோடு நீண்ட காலம் வாழ்ந்து வருகிற, மங்கலமான தோற்றம் கொண்ட பெண்மணி | a woman who has been blessed with a long period of married life (and whose husband is living) |
| பழுதடை | சீர்கெடுதல் | (of machines) break down |
| பழுது | சீர்கெட்ட நிலை | damaged state |
| பழுதுபார் | சீர்செய்தல் | repair |
| பழுதை | கயிறாகப் பயன்படுத்தும் வைக்கோல் பிரி அல்லது வாழைச் சருகு | twisted hay or dried banana bark used as rope |
| பழுப்பு | செம்மண்ணின் அல்லது வறுத்த காப்பிக்கொட்டையின் நிறம் | brown (of various shades) |
| பழுப்பு நிலக்கரி | கரும் பழுப்பு நிறத்திலிருக்கும் மிகுந்த எரி சக்தி இல்லாத நிலக்கரி | lignite |
| பழைய | (காலத்தால்) முந்திய/முன்பு இருந்த | old (in time)/old (by use) |
| பழைய ஆகமம்/பழைய ஏற்பாடு | கிறிஸ்துவின் வருகையை அறிவிக்கும் வாசகங்களைக் கொண்ட நூல் | old Testament |
| பழையது | (முதல் நாளே வடித்து) நீர் ஊற்றி வைக்கப்பட்ட சோறு | cooked rice kept in water (overnight) |
| பள்ளத்தாக்கு | மலைகளுக்கு இடையே அமையும் சரிந்த பக்கப் பகுதிகளையுடைய நிலப் பகுதி | valley |
| பள்ளம் | அருகிலிருக்கும் பிற பகுதிகளைவிடத் தாழ்ந்த பகுதி | hollow in the ground |
| பள்ளிக்கணக்கு | பள்ளிக்கூடத்தில் கற்ற பாடம் அல்லது அதில் பெற்ற அறிவு | acquired knowledge |
| பள்ளிக்கூடம் | (கல்லூரிப் படிப்புப் போன்ற மேற்படிப்புக்கு அடிப்படையாக அமையும்) முதல் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை உள்ள கல்விச்சாலை | school (up to the XII standard) |
| பள்ளிகொள் | (பெரும்பாலும் இறைவன், மகான் போன்றோரைக் குறித்து வருகையில்) படுத்து உறங்குதல் | (mostly of gods or saints) be resting |
| பள்ளியறை | (தம்பதியருக்கான) படுக்கை அறை | bedroom (for husband and wife) |
| பள்ளிவாசல் | இஸ்லாமியர் இறைவனை வழிபடுகிற இடம் | mosque |
| பள்ளு | பிறர் நிலத்தில் உழுது பயிர்செய்பவர்களைப் பாத்திரங்களாகக் கொண்ட சிற்றிலக்கிய வகை | a kind of poetical work having peasants or tenant farmers as characters |
| பளபள | (ஒன்றின் பரப்பு ஒளியால்) மினுங்குதல் | glitter |
| பளபளப்பு | (ஒளியால் ஒரு பரப்பின்) மினுமினுப்பு | glitter |
| பளார்-என்று | (அடி, அறை போன்றவை) சுரீரென்று வலிக்கும்படி சத்தத்தோடு | (of slap, etc.) with a sharp sound |
| பளிங்கு/பளிங்குக் கல் | பளபளப்பாக்கப்பட்ட சலவைக் கல் | (highly polished) marble |
| பளிச்-என்று | கண்ணைப் பறிக்கிற வகையில் ஒளி வீசி | brightly |
| பளிச்சிடு | (கண்ணைப் பறிக்கும் வகையில்) மின்னுதல் | flash |
| பளிச்பளிச்-என்று | (மின்னல், விளக்கின் ஒளி) கண்ணைக் கூசவைக்கும் அளவுக்குப் பிரகாசமாகவும் விட்டுவிட்டும் | in bright flashes |
| பளீர்-என்று/-என்ற | (கண்ணைக் கவரும் அல்லது கூசவைக்கும் வகையில்) பிரகாசமாக/பிரகாசமான | brightly |
| பளு | (பொருளின்) கனம் | heaviness |
| பளுதூக்கி | தடித்த கம்பிகளைப் பயன்படுத்திக் கனமான பொருள்களைத் தூக்கும் ஒரு வகை இயந்திரம் | crane |
| பளுதூக்கும் போட்டி | வட்ட வடிவ இரும்பு எடைகள் இரு முனைகளில் இணைக்கப்பட்ட இரும்புக் கம்பியைக் குறிப்பிட்ட முறையில் தலைக்கு மேல் தூக்கிப் பிடிக்கும் ஒரு விளையாட்டுப் போட்டி | weight lifting |
| பற்பசை | பல் துலக்குவதற்குப் பயன்படுத்தும் ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட வழுவழுப்புத் தன்மை உடைய பொருள் | toothpaste |
| பற்பல | வெவ்வேறான | different |
| பற்பொடி | பல் துலக்குவதற்குப் பயன்படுத்தும் ரசாயன அல்லது மூலிகைப் பொடி | tooth-powder |
| பற்றவை | ஒன்றில் நெருப்புப் பற்றும்படியாகச்செய்தல் | light (a candle, etc.) |
| பற்றாக்குறை | தேவைக்கும் குறைவாக உள்ள நிலை | scarcity |
| பற்றி | (குறிப்பிடப்படும் ஒருவரின் அல்லது ஒன்றின்) தொடர்பாக | concerning |
| பற்றிக்கொண்டுவா | (ஒருவருக்கு) மிக அதிக அளவில் கோபம், எரிச்சல் போன்றவை உண்டாதல் | get enraged |
| பற்றிய | (குறிப்பிடப்படும் ஒன்றின் அல்லது ஒருவரின்) தொடர்பான | concerning |
| பற்று1 | பிடித்தல் | hold |
| பற்று4 | (உலக வாழ்க்கை மீது ஒருவர் கொண்டிருக்கும்) பிடிப்பு | (worldly) attachment |
| பற்றுக்கோடு | ஆதரவு | support |
| பற்றுக்கோல் | ஈயம் பற்றவைக்கும் கருவி | soldering iron |
| பற்றுதல் | பிடிப்பு | attachment |
| பற்றுவரவு | (கடை முதலியவற்றில் கணக்கு எழுதும்போது) செலவும் வருமானமும் | (in bookkeeping) expenditure and income |
| பற்றை | புதர் | bush |
| பற | வானவெளியில் வேகமாகச் செல்லுதல் | fly |
| பறக்கும் தட்டு | வேறு கிரகத்தைச் சார்ந்ததாகவும் வானில் சஞ்சரிப்பதாகவும் கூறப்படும் தட்டு வடிவப் பறக்கும் பொருள் | flying-saucer |
| பறக்கும் படை | உடனடியாக விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பதற்காகவோ முன்னறிவிப்பு இல்லாமல் சோதனை செய்வதற்காகவோ எப்போதும் தயார் நிலையில் இருக்கும் அலுவலர் குழு | flying squad |
| பறங்கி | (பெரும்பாலும் மதிப்புக் குறைவான முறையில்) வெள்ளைக்காரன் | (not in polite use) white man |
| பறங்கிக்காய் | (காய்கறியாகப் பயன்படுத்தும்) பக்கவாட்டில் புடைத்து உருண்டையாக உள்ள வெளிர்ச் சிவப்பு நிறக் காய்(சில இடங்களில்) பூசணி | pumpkin |
| பறத்து | வேகமாகச் செலுத்துதல் | drive fast |
| பறந்தோடு | விரைந்து நீங்குதல் | vanish |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.