Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| இலவம் பஞ்சு | இலவமரத்தின் முற்றிய காயிலிருந்து எடுக்கப்படும் பஞ்சு | cotton from the silk-cotton tree |
| இலவமரம் | பஞ்சு இழைகளைக் கொண்ட நீண்ட காய் காய்க்கும் உயரமான மரம் | silk-cotton tree |
| இலா(க்)கா | அமைச்சகம் | ministry |
| இலுப்பை | எண்ணெய் வித்துகளாகப் பயன்படுத்தும் விதைகளைக் கொண்ட உறுதியான பெரிய மரம் | south Indian mahua |
| இலை | தாவரத்தின் தண்டிலிருந்து அல்லது கிளையிலிருந்து தோன்றுவதும் பச்சையாகவும் தட்டையாகவும் இருப்பதுமான பாகம் | leaf |
| இலைசுருட்டுப் புழு | நெற்பயிரின் தோகையில் உள்ள பச்சையத்தைச் சேதப்படுத்தி இலை சுருண்டுவிடுமாறு செய்யும் ஒரு புழு | leafroller (that causes the leaf to roll up) |
| இலைபோடு | (இலையைப் போட்டு) உணவு பரிமாறுவதற்கான ஆயத்தம்செய்தல் | prepare to serve food (on the laid out leaf) |
| இலைமறைவு காய்மறைவாக | தெரிந்தும் தெரியாமலும் | not overtly |
| இலையான் | ஈ | fly |
| இவ்வளவுக்கும் | இத்தனைக்கும் | for all |
| இவ்வாறு | இப்படி | in the manner (as told, decided, requested, etc at this time) |
| இவ்விடம் | (பெரும்பாலும் கடிதம் எழுதும்போது) இங்கு | (mostly in letter writing) here (where the sender is) |
| இவர்கள் | அருகில் இருக்கும் ஆண், பெண் ஆகிய இரு பாலுக்கும் உரிய படர்க்கைப் பன்மைப் பெயர் | third person plural (of those who are nearer to the speaker) |
| இவை | அருகில் இருக்கும் அஃறிணைப் பொருள்களைச் சுட்டும் பெயர் | neuter plural (for those which are nearer) |
| இழ | (இருப்பதை) பறிகொடுத்தல் | lose |
| இழப்பு | இழத்தல் | loss |
| இழிந்த | தாழ்ந்த | degraded |
| இழிநிலை | கீழ்நிலை | degraded or disgraceful state |
| இழிவு | (-ஆக, -ஆன) கீழ்த்தரம் | degradation |
| இழுக்கப்பறிக்க | (பணம், பொருள் முதலியன) பற்றாக்குறை நிலையில் | barely sufficient |
| இழுக்கு | களங்கம் | blemish |
| இழுத்தடி | (தொல்லைதரும் நோக்கத்தோடு) அலையவைத்தல் | cause (one to) come (many times with the intention of harassing) |
| இழுத்து | (மூடு, சாத்து போன்ற வினைகளோடு) வேறு வழி இல்லாமல் வலுக்கட்டாயமாக | deliberately |
| இழுத்துப்பிடி | கட்டுப்பாட்டுடன் இருத்தல் | reduce expenditure |
| இழுத்துப்போட்டுக்கொள் | (வேலைகளை அல்லது பொறுப்புகளை) வலிய ஏற்றுக்கொள்ளுதல் | take upon oneself (jobs, responsibilities, etc voluntarily) |
| இழுப்பறை | (மேஜை, பீரோ போன்றவற்றில்) வெளியே இழுக்கக் கூடிய முறையில் உள்ள, மேல்புறம் திறந்திருக்கும் பெட்டி | drawer (of a table, desk, etc.) |
| இழுபறி | முடிவு எவ்வாறு இருக்கும் என்பது தெரியாத நிலை | (state of) uncertainty (about the outcome of an issue) |
| இழை1 | (இணைந்து) உணரத்தக்க முறையில் வெளிப்படுதல் | touch (with affection, etc.) |
| இழை2 | (மரக்கட்டையை வழவழப்பாக்க இழைப்புளியால்) சீவுதல் | shave (in order to smoothen the surface of a block of wood with a plane) |
| இழை3 | (குற்றம், துரோகம் போன்ற கேடான செயல்களைக் குறிக்கும் சொற்களோடு மட்டும்) செய்தல் | (with words suggesting harm, injustice, etc.) do |
| இழை4 | பஞ்சிலிருந்து திரிக்கப்பட்டு ஆடை நெய்வதற்குப் பயன்படுத்தும் மெல்லிய நூல் | yarn |
| இழையோடு | (ஒரு செய்தி அல்லது உணர்வு ஒன்றின் பின்புலத்தில்) ஊடுருவி இருத்தல் | (of emotion, motif) run through |
| இளக்கம் | (மலம்) இளகுதல் | loosening of the constipated excreta, phlegm, etc |
| இளக்காரம் | (-ஆக, -ஆன) தாழ்வான கருத்து வெளிப்படும்படியான போக்கு | tendency to slight, humiliate or look down upon |
| இளக்கு | (கெட்டித் தன்மையிலிருந்து) நெகிழச்செய்தல் | melt |
| இளகு | (தார், மெழுகு போன்றவை வெப்பத்தால்) கெட்டித் தன்மை இழத்தல் | soften |
| இளங்கலை | பல்கலைக்கழகப் படிப்பில் முதல் நிலைப் பட்டப் படிப்பு | undergraduate (course) |
| இளசு | (காய்கறி, தேங்காய் முதலியவற்றைக் குறிப்பிடும்போது) முற்றாதது | (of vegetables, coconut, etc.) tender |
| இளந்தாரி | இளைஞன் | young man |
| இளநிலை | (பல நிலைகளைக் கொண்ட பதவி வரிசையில்) தொடக்க நிலை | junior grade |
| இளநீர் | இனிப்பான நீரும் முற்றாத பருப்பும் கொண்ட, மட்டை உரிக்காத தேங்காய் | tender coconut |
| இளப்பம் | இளக்காரம் | tendency to look down upon |
| இளம் | (மனிதர்களின், மிருகங்களின் வயதைக் குறிப்பிடுகையில்) இளமையான(மிருகங்களில்) சிறுவயதுடைய | (when referring to the age of human beings, animals) young |
| இளம்பிள்ளைவாதம் | இளம் குழந்தைகளின் கைகால்களில் உள்ள தசைகளை வளர்ச்சியற்றதாக்கி, இயங்கும் சக்தியை இழக்கச் செய்யும் ஒரு வகை நோய் | poliomyelitis |
| இளமை | உடல் பலமும் தோற்றக் கவர்ச்சியும் உடைய கட்டம் | youth |
| இளரத்தம் | விளைவுகளை எண்ணிப்பார்க்காமல் துணிச்சலுடன் எதிலும் இறங்கிவிடக் கூடிய இளம் வயது | daring young age |
| இளவட்டம் | மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்க விரும்பும் இளைஞன் | pleasure loving, carefree youth |
| இளவயதினர் | (பொதுவாக) பதினெட்டு வயது நிறைவடையாதவர் | minor |
| இளவரசன் | அரசனின் அல்லது அவனுடைய நெருங்கிய உறவினர்களின் புதல்வன் | prince |
| இளவரசி | அரசனின் அல்லது அவனுடைய நெருங்கிய உறவினர்களின் புதல்வி | princess |
| இளவல் | தம்பி | younger brother |
| இளவேனில் | கோடைக் காலத்தின் தொடக்கம் | beginning of summer, i |
| இளி | அர்த்தம் இல்லாமல் (பல்லைக் காட்டி) சிரித்தல் | laugh silly or sheepishly |
| இளிச்சவாயன் | எளிதில் ஏமாற்றப்படக் கூடிய ஒருவன் | one who is gullible |
| இளிப்பு | அர்த்தமறற சிரிப்பு | foolish grin |
| இளை1 | (முன்பு இருந்ததைக்காட்டிலும் இப்போது உடல்) மெலிதல் | reduce in weight |
| இளை2 | இரைத்தல் | pant |
| இளைஞன் | இளமைப் பருவத்தில் இருக்கும் ஒருவன் | young man |
| இளைப்பாற்றுச் சம்பளம் | ஓய்வூதியம் | pension |
| இளைப்பாறு | (களைப்பைப் போக்க) ஓய்வெடுத்தல் | have respite |
| இளைப்பு | இரைப்பு | pant |
| இளைய | பின்னால் பிறந்த | younger (as opposed to elder) |
| இளையாள் | ஒருவர் மணந்துகொண்ட பெண்களில் இளையவள் | the younger of the two wives (and married later in time) |
| இற | சாதல் | die |
| இறக்கம் | கீழ் நோக்கிய சரிவு | downward slope |
| இறக்குமதி | (பிற மாநிலங்களிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து பொருள்கள்) வரவழைத்தல் | the act of importing |
| இறக்கை | பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியக் கூடியதும் மெல்லிய இறகுகளாலானதும் பறப்பதற்கு ஏற்றதுமான உறுப்பு | wing (of a bird, insect, etc.) |
| இறகு | மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக் கொண்ட இறக்கையின் தனிப்பகுதி | feather |
| இறங்கு | மேலிருந்து (கீழே) வருதல் | come down |
| இறங்கு துறை | நீர்நிலைகளில் கப்பல், படகு முதலியன வந்து நிற்பதற்காகக் கட்டிய அமைப்பு | jetty |
| இறங்குமுகம் | (வியாபாரம், விலை முதலியவை) தற்போதைய நிலையிலிருந்து சரியும் நிலை | downward trend |
| இறங்கு வரிசை | முறைப்படுத்தப்பட்ட வரிசையில் இறுதியாக உள்ளதிலிருந்து முதலாவதாக உள்ளதை நோக்கிச் செல்லும் முறை | descending order |
| இறந்த | கடந்த | beyond-less (as in countless) |
| இறந்துபடு | சாதல் | fall |
| இறப்பு | சாவு | death |
| இறவாமை | மரணம் இல்லாத நிலை | immortality |
| இறவை | நீர் பாய்ச்சி விளைவித்தல் | cultivation by irrigation |
| இறால் | மெல்லிய ஓடு போன்ற மேல்புறம் உடைய (மனிதர் உணவாகப் பயன்படுத்தும்) நீர்வாழ் பிராணி | prawn |
| இறு1 | (மரம், கம்பு போன்றவை) உளுத்துப் பொடிந்துவிடும் நிலையில் இருத்தல்/(கயிறு, தோல் போன்றவை) அறுதல் | (of wood, stick, etc.) crumble/(of rope, etc.) get snapped |
| இறு2 | (விடை, பதில்) சொல்லுதல் அல்லது அளித்தல் | give (answer) |
| இறு3 | (நீர் முதலியவற்றில் தெளிந்த பகுதியை) வடித்தல் | decant |
| இறுக்கம் | (கவ்விப் பிடித்திருப்பதால் அல்லது தொய்வு இல்லாமல் சுற்றியிருப்பதால் ஏற்படும்) அழுத்தம் | tightness |
| இறுக்கு | (நெகிழ்வோ தொய்வோ இல்லாமல் அல்லது கவ்விப்பிடித்து) அழுத்துதல் | tighten |
| இறுக | (இடைவெளி இல்லாமல்) அழுத்தமாக | tight or tightly |
| இறுகு | (நெகிழ்வோ தொய்வோ இடைவெளியோ இல்லாமல்) அழுத்தமாக இருத்தல் | become tight |
| இறுதி | (தொடங்கப்பட்ட ஒன்று அடையும்) முடிவு | end |
| இறுதி ஊர்வலம் | இறந்தவரின் உடலை மயானத்திற்குத் தக்க மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லுதல் | funeral procession |
| இறுதிச் சடங்கு | இறந்துபோன ஒருவரை அடக்கம் அல்லது தகனம் செய்யும்வரை சம்பிரதாயப்படி பின்பற்றப்படும் முறைமைகள் | funeral rites |
| இறுதி மரியாதை | (பொதுவாக) பிரபலமானவரின் அந்திமச் சடங்கின்போது செலுத்தும் அஞ்சலி | homage (to a dead person who was esp |
| இறுதியாக/இறுதியில் | எல்லாவற்றுக்கும் பின் | at last |
| இறும்பூது எய்து | பெருமிதம் அடைதல் | feel elated |
| இறுமா | (தன் உயர் நிலையை எண்ணி) கர்வம் அடைதல் | exult in |
| இறுமாப்பு | செருக்கு | pride |
| இறை1 | (பொருள்கள்) சிதறுதல் | be spread in all directions |
| இறை2 | (தாறுமாறாக அள்ளி) வீசுதல் | throw (in a disorderly way) |
| இறை3 | (நீரை) வெளிக்கொண்டுவருதல் | draw (water from a well) |
| இறை4 | கடவுள் | god |
| இறைச்சி | (ஒருசில விலங்குகளின், பறவைகளின், மீன்களின்) உணவாக உண்ணும் சதைப்பகுதி | meat (of certain animals, birds and fish) |
| இறைமை | தெய்வீகம் | divinity |
| இறையரசு | மனிதரை மீட்க அவர் மனத்தில் இறைவன் செலுத்தும் ஆட்சி | kingdom of God |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.