Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
இயலாமை (அந்தந்தச் சூழ்நிலையில் அததற்குத் தகுந்தவாறு) செயல்பட முடியாமைinability (to act in a situation that demands a particular action at that time)
இயற்கணிதம் எண்களுக்குப் பதிலாகக் குறியீடுகளையும் எழுத்துகளையும் பயன்படுத்தும் ஒரு கணிதப் பிரிவுalgebra
இயற்கை உபாதை சிறுநீர் அல்லது மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வுcall of nature
இயற்பியல் பொருள்களின் தன்மை, இயற்கைச் சக்திகளின் இயக்கம், மாற்றம் முதலியவற்றை விவரிக்கும் ஓர் அறிவியல் துறைphysics
இயற்பெயர் பெற்றோர் இட்ட பெயர்name given by parents at the time of birth
இயற்று (பொதுவாக இலக்கியம்) படைத்தல் (in general) create (literary works)
இயேசு/இயேசுநாதர் தெய்வ நிலை மூன்றனுள் மனித குல மீட்சிக்காகத் தோன்றியவர்jesus, the Saviour
இயை (முரண்பாடு இல்லாமல்) பொருந்துதல்be in harmony
இயைபு (முரண்பாடு இல்லாத) பொருத்தம்harmonious relation
இர கெஞ்சிப் பெறுதல்beg
இரக்கம் (பிறர் துன்பம் கண்டு) வருந்தும் உணர்வுpity
இரங்கல் ஒருவர் மரணம் அடைந்ததற்குத் தெரிவிக்கும் வருத்தம்condolence
இரங்கற்பா இரங்கல் தெரிவித்துப் பாடப்படும் பாடல்a verse in praise of the dead (composed on the occasion of death)
இரசவாதம் உலோகங்களைப் பொன்னாக மாற்றும் முயற்சிthe attempt of turning metals into gold
இரட்சகர் இயேசுநாதர்(Jesus) the Saviour
இரட்சகன் காப்பவன்protector
இரட்சி காத்தல்(துன்பம், பாவம் முதலியவற்றிலிருந்து) மீட்டல்protect
இரட்டிப்பு (ஒன்றின்) இரு மடங்குdouble
இரட்டு (எழுத்து) இரட்டித்தல்double
இரட்டைநாடி இரு பிரிவாக இருப்பது போல் தோற்றம் தரும் அகன்ற முகவாய்double chin
இரட்டைப்படை எண் (2, 4, 6, 8 போன்ற) இரண்டால் மீதியின்றி வகுபடும் எண்even number
இரட்டைப்பிள்ளை ஒரே பிரசவத்தில் பிறந்த இரு குழந்தைகள்twins
இரட்டைமண்டை இரு தலை ஒன்றாக இணைந்தது போன்ற நீண்ட தலைa long head (almost double the size of a normal head)
இரண்டகம் நம்பிக்கைத் துரோகம்breach of trust
இரண்டறக் கல (தனித்தனியானவை வேற்றுமை தெரியாதபடி) ஒன்றாதல்become one with
இரண்டாம்பட்சம் (மதிப்பு, முக்கியத்துவம் முதலியவற்றில்) ஒரு படி குறைந்ததாகவோ அடுத்த படியானதாகவோ இருப்பதுsecondary
இரண்டு ஒன்று என்ற எண்ணுக்கு அடுத்த எண்(the number) two
இரண்டுக்குப்போ (பெரும்பாலும் குழந்தையோடு தொடர்புபடுத்திக் கூறும்போது) மலம் கழித்தல்empty the bowels
இரண்டுங்கெட்டான்2எந்தக் காரியத்துக்கும் ஏற்றதாக இல்லாதinconvenient
இரண்டுபடு (குடும்பம், ஊர் முதலானவை பகைமை உணர்ச்சியோடு) இரு கட்சியாகப் பிரிதல்(of family, village) split into two (opposing factions)
இரத்த அழுத்தம் இரத்த ஓட்டத்தின் காரணமாக இரத்தக் குழாயில் ஏற்படும் அழுத்தம்the normal pressure in the blood vessels
இரத்த ஓட்டம் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் சென்று மீண்டும் இதயத்திற்கே திரும்பும் தொடர்ச்சியான இரத்தச் சுழற்சிblood circulation
இரத்தக்களரி இரத்தம் சிந்திக் காணப்படும் கோர நிலைhorrible sight of blood splattered
இரத்தக் குழாய் இதயத்திலிருந்து அல்லது இதயத்திற்கு இரத்தம் செல்லும் தசையாலான குழாய்blood vessel
இரத்தக் கொ??திப்பு இருக்க வேண்டிய அளவுக்கு அதிகமான நிலையில் இருக்கும் இரத்த அழுத்தம்high blood pressure
இரத்தச் சோகை (உடலில் சோர்வு உண்டாவதற்கும் தோல் வெளிறுவதற்கும் காரணமாக இருக்கும்) இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைவால் ஏற்படும் நோய்anaemia
இரத்தப்போக்கு அதிக அளவிலான இரத்த வெளியேற்றம்excessive bleeding
இரத்தம் சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் கொண்டதும் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மீண்டும் இதயத்துக்கே திரும்புவதுமான சிவப்பு நிறத் திரவம்blood
இரத்த வெறி (சிங்கம், புலி போன்ற மிருகங்களின்) பிற உயிர்களைக் கொன்று தின்னும் வெறிbloodthirstiness
இரவல் தன் உபயோகத்திற்காகப் பிறர் பொருளைப் பெற்றுத் திருப்பித் தரும் முறை(of articles, items) borrowing
இரவல் குரல் (திரைப்படம் முதலியவற்றில்) பின்னணிக் குரல்dubbing voice
இரவலர் பொருளைத் தானமாகப் பெறுபவர்a person who receives sth. as charity
இரவு சூரியன் மறைந்ததிலிருந்து (மறுநாள்) சூரியன் உதிக்கும்வரை உள்ள இருண்ட நேரம்night
இரவோடு இரவாக (ஒரு செயலைப் பிறர் அறியாவண்ணம்) இரவில் ஆரம்பித்து அதே இரவுக்குள்in the thick of the night
இருக்கை உட்காருவதற்கான ஓர் அமைப்புseat
இருசு (வாகனங்களின்) அச்சுaxle
இருசுக்கட்டை வண்டியின் அச்சில் பதிந்திருக்குமாறு உள்ள மரக்கட்டைa block of wood resting on the axle
இருட்டடிப்பு ஒரு செய்தி அல்லது நிகழ்ச்சி வெளியே தெரியாதவாறு அல்லது பரவாதவாறு மறைத்தல்black out
இருட்டு1(பகல் பொழுது முடிந்து இரவின் துவக்கமாக) இருள் சூழ்தல்get dark (at the end of the day)
இருட்டு2(இரவின்) இருள்darkness (of the night)
இருண்ட இருள் நிறைந்தdark
இருத்தலியல் தனி மனிதன் சுதந்திரமும் பொறுப்பும் உடையவன் என்றும் அவற்றைப் பயன்படுத்தி அவன் எடுக்கும் முடிவுகள் அவன் வாழ்க்கை நிலையை நிர்ணயிக்கின்றன என்றும் கூறும் தத்துவம்existentialism
இருந்தபோதிலும் தனியான இரு கூற்றுகளில் முதல் கூற்று ஒரு நிலையை விவரிக்க, அதனால் எதிர்பார்க்கும் இயற்கையான விளைவுக்கு மாறான விளைவை இரண்டாவது கூற்று தெரிவிக்கையில் அவற்றைத் தொடர்புபடுத்தும் தொடர்in spite of (it)
இருந்தாலும் இருந்தபோதிலும்nevertheless
இருந்தும் இருந்தபோதிலும்nevertheless
இருப்பிடம் வசிக்கும் இடம்place for living
இருப்பினும் இருந்தபோதிலும்nevertheless
இருப்புக்கொள் (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஓர் இடத்தில்) இருத்தல்be at ease
இருப்புச்சட்டி (தாளித்தல் போன்ற சமையல் வேலைகளுக்குப் பயன்படும்) குழிந்த உட்பகுதி உடைய உலோகப் பாத்திரம்a kind of deep round pan (used for seasoning dishes or frying)
இருப்புப்பாதை தண்டவாளம் போடப்பட்ட (புகைவண்டி செல்வதற்கான) பாதைrailway track
இருபது பத்தின் இரு மடங்கைக் குறிக்கும் எண்(the number) twenty
இருபாலார்/இருபாலினர் (மக்களில்) ஆண்பெண்male and female
இரும்பு (இயந்திரம், கருவி முதலியன செய்யப் பயன்படும்) கறுப்பு நிறத்தில் இருக்கும் உறுதியான உலோகம்iron
இரும்புத்திரை மேலைநாடுகள் தமக்கும் ஐரோப்பியக் கம்யூனிச நாடுகளுக்கும் இடையே இருந்ததாகக் கருதிய, நேரடி வாணிபத் தொடர்பும் செய்திப் பரிமாற்றமும் கொள்ள முடியாத கட்டுப்பாடுiron curtain
இருமல் தொண்டையிலிருந்து வெடிப்புடன் வெளிப்படும் காற்றுcough
இருமு தொண்டையிலிருந்து வெடிப்பது போல் காற்று வெளிப்படுதல்cough
இருமுடி (சபரிமலைக்குச் செல்பவர்கள் பூஜைக்கும் பயணத்திற்கும் வேண்டிய பொருள்களை வைத்திருக்கும்) இரு பை கொண்ட துணிa piece of cloth with two bag-like compartments containing offerings, personal effects carried on the head by pilgrims to the temple at Sabari
இருமுனை வரி ஒரு பொருள் (உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து) முதலில் விற்கப்படும்போதும் (கடையிலிருந்து வாங்குபவர்களுக்கு) கடைசியாக விற்கப்படும்போதும் விதிக்கப்படும் விற்பனை வரிsales tax levied on goods at the point of first sale and at the point of last sale
இருவழி போவதற்கும் வருவதற்கும் தனியாகவும் அல்லது (ஒரே வழியில்) இரண்டாகவும் பிரிக்கப்பட்டிருக்கும் தடம்(of railway) double line or track
இருவாட்சி இரவில் மலரும் மணம் மிக்க சிறு வெண்ணிறப் பூ/மேற்குறிப்பிட்ட பூவைத் தரும் சிறு மரம்tuscan jasmine
இருள்1(வெளிச்சம் குறைந்து) கருமை கவிதல்become dark (when the light is blocked)
இருள்2(வெளிச்சம் குறைவதால் ஏற்படும்) ஒளி இன்மைabsence of light
இரை1உரத்த குரலில் திட்டுதல்admonish
இரை2(இயல்பைவிட) வேகமாக சுவாசித்தல்pant
இரை3பிற உயிரினத்தைத் தின்று வாழும் விலங்குகளின் அல்லது பறவைகளின் உணவுprey
இரைச்சல் பெரும் சத்தம்noise and bustle
இரைப்பு இயல்பைவிட அதிக வேகத்தோடு வெளிப்படும் சுவாசம்pant
இரைப்பை உணவைக் கூழாக்குவதற்குத் தேவையான அமிலங்களைக் கொண்டதும் சுருங்கி விரியக் கூடியதுமான பை போன்ற உறுப்புstomach
இரை மீட்டு அசைபோடுதல்ruminate
இரையாக்கு (தீ, வெள்ளம் முதலியவற்றுக்கு) பலிகொடுத்தல்subject
இரையாகு (தீ, வெள்ளம் முதலியவற்றுக்கு) பலியாதல்/(நோய் முதலியவற்றுக்கு) உட்படுதல்be subject to destruction (by fire, flood, etc.)/be a victim to (disease, etc.)
இல்லம் வீடுhouse
இல்லறம் கணவன் மனைவி சேர்ந்து நடத்தும் வாழ்க்கைlife of a householder
இல்லாத உள்ள, உடைய, இருக்கிற ஆகிய சொற்களின் எதிர்மறைச் சொல்antonym of உள்ள (=which is), உடைய (=that has) and இருக்கிற (=that exists or is present)
இல்லாமல் (ஒருவர்) உடனிருக்காமல்(ஒன்று ஓர் இடத்தில்) காணப்படாமல்/(குணம், தன்மை முதலியன) அமையாமல்without
இல்லாமை இல்லாத நிலை அல்லது தன்மைthe state of not having
இல்லாவிட்டால்/இல்லாவிடில் (முதலில் கூறும் நிலை) இல்லை என்றால்(ஒருவர்) உடனிருக்காவிட்டால்(ஒன்று) காணப்படாவிட்டால்
இல்லாள் மனைவிwife
இலக்கணம் மொழியின் ஒலி, எழுத்து, சொல், வாக்கியம் முதலியவற்றின் அமைப்பை வழக்குகளின் அடிப்படையில் விவரிக்கும் விதிகள்/அந்த விதிகளைக் கூறும் நூல்grammar (of a language)/grammatical treatise
இலக்கம் எண்number
இலக்கியத் திருட்டு பிறருடைய படைப்பை அல்லது படைப்பின் ஒரு பகுதியை மற்றொருவர் (மூல ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடாமல்) தன் எழுத்தில் எடுத்தாளும் முறையற்ற செயல்plagiarism
இலக்கியம் கலை நயம் தோன்ற ஏதேனும் ஒரு வடிவத்தில் எழுதி வெளிப்படுத்தும் படைப்பு(creative) literature
இலக்கு குறிaim
இலகு1எளிதுeffortlessly
இலகு2கனமற்றதுlight (in weight)
இலங்கு அனைவரும் அறியும்படியாக அமைந்திருத்தல்be an illuminating example of
இலச்சினை (பெரும்பாலும்) ஓர் அரசனின் அல்லது அரசின் அதிகாரத்தைக் குறிப்பிடும் சின்னம்(royal) insignia
இலட்சியம் (வாழ்வில்) அடைய விரும்பும் உன்னத நிலைideal(s)
இலந்தை சிவந்த பழுப்பு நிறத் தோல் உடையதும் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை உடையதும் சற்றுப் பெரிய கொட்டையைக் கொண்டதுமான சிறு பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தரும், முட்கள் நிறைந்த சிறு மரம்jujube fruit or the tree
இலவசம் பணம் பெறாமல் தருவதுfree (of cost)
   Page 13 of 204    1 11 12 13 14 15 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil