Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
புத்திரன் மகன்son
புத்திரி மகள்daughter
புத்திலக்கியம் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் தற்கால எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இலக்கியம்modern literature
புத்துணர்ச்சி/புத்துணர்வு (சோர்வு நீங்கும் வகையில்) மகிழ்ச்சி உணர்வுrejuvenation
புத்துயிர் (குன்றிய நிலையிலிருந்தோ வீழ்ச்சிக்குப் பின்னோ பெறும்) புதிய மலர்ச்சிrebirth
புதர் உயரம் அதிகம் இல்லாமல் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் தாவரத் தொகுதிbush
புதல்வன் மகன்son
புதல்வி மகள்daughter
புதன் சூரியனைச் சுற்றிவரும் கோள்களுள் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் சிறிய கிரகம்(the planet) Mercury
புதிது பயன்படுத்துதல், பழக்கப்படுத்துதல், அறிதல் போன்ற செயல்களுக்கு இதுவரையில் உட்படாததுthat which is new
புதிய புதிதாக இருக்கிறnew
புதிய ஆகமம்/புதிய ஏற்பாடு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, இறப்பு, உயிர்ப்பு, போதனை முதலியவை பற்றி எடுத்துச் சொல்லும் நூல்the New Testament
புதிர்1(-ஆக, -ஆன) அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்ளவோ விளக்கவோ முடியாத ஒன்றுmystery
புதிர்2அறுவடை முடிந்து வீட்டுக்குக் கொண்டுவந்து உணவுக்கு முதன்முதல் பயன்படுத்தும் நெல்newly harvested paddy
புதினம்2நாவல்novel
புதினா நாக்கில் சுள்ளென்று சுவையை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகைக் கீரைmint
புதுக்கு (பாத்திரம் முதலியவை) பளபளப்படையும்படி செய்தல்polish
புதுப்பி (பழுதற்ற நிலையில் உள்ளதை அல்லது பழைய பாணியில் இருப்பதை) புதுப் பொலிவுடன் மாற்றி அமைத்தல்renovate
புதுமனை புகுவிழா கிரகப்பிரவேசம்house-warming
புதுமுகம் (பெரும்பாலும் திரைப்படம், நாடகம் முதலியவற்றில்) முதன்முதலாக அறிமுகமாகுபவர்person making his or her debut (in film or stage)
புதுமை (-ஆக, -ஆன) இதுவரையில் இல்லாததாகவும் வழக்கமானதிலிருந்து மாறுபட்டதாகவும் இருப்பதுnewness
புதுயுகம் நம்பிக்கை தரக் கூடிய மாற்றங்களும் சுபிட்சமும் நிறைந்த காலம்new age
புதை1(மணல், சேறு போன்ற) உள்ளிறுக்கம் இல்லாத பரப்பினுள் அழுந்தி அல்லது அழுத்தப்பட்டு உட்செல்லுதல்go in
புதைசேறு மேற்பரப்பில் அழுந்தும் எந்த ஒன்றும் உட்சென்றுவிடக் கூடிய ஆழமான சேறுbog
புதைபொருள் நிலத்தின் கீழ் புதைந்திருக்கும் பண்டைக்காலச் சின்னங்கள்buried remains (found in archaeological excavations)
புதைமணல் மேற்பரப்பில் அழுந்தும் எந்த ஒன்றும் உட்சென்றுவிடக் கூடிய மணல்quicksand
புதையல் நிலத்தில் புதைந்துள்ள பழங்காலத் தங்க நாணயங்கள், நகைகள் போன்ற பொருள்கள்(underground) treasure
புயல் (காற்றழுத்தக் குறைவால் ஏற்படும்) பலத்த மழையை விளைவிக்கக் கூடிய வேகம் மிகுந்த காற்றுgale
புரட்சி (சமுதாய அமைப்பில் அல்லது ஒரு நாட்டின் ஆட்சியில்) பெரும் மாற்றத்தை விளைவிப்பதுrevolution
புரட்சிகரம் (பழமையிலிருந்து விலகி) துணிவுடன் செய்யும் புதுமைthe quality of being revolutionary
புரட்டன் உண்மையைத் திரித்தும் மாற்றியும் கூறுபவன்one who distorts facts
புரட்டாசி ஆறாவது தமிழ் மாதத்தின் பெயர்the name of the sixth Tamil month, i
புரட்டு1(ஒருவரை அல்லது ஒரு பொருளை) ஒரு பக்கமாக உருட்டுதல்turn (a thing over)
புரட்டு2உண்மையைத் திரித்துப் பேசும் பேச்சுprevarication
புரதம் முட்டை, இறைச்சி, பருப்புகள் முதலியவற்றில் உள்ளதும் உடலின் தசை வளர்ச்சிக்குத் தேவையானதுமான ஒரு சத்துப் பொருள்protein
புரவலர் ஒரு பொதுநல அமைப்பின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பல வழிகளில் உதவிபுரிபவர்patron
புரவி குதிரைhorse
புரவியாட்டம் பொய்க்கால் குதிரைa folk dance performed with a dummy horse
புரளி (தவறான ஒன்றைப்பற்றிய) வதந்திfalse alarm
புராணிகர் புராணக் கதைகளைச் சொல்லிப் பிரசங்கம்செய்பவர்one who narrates sacred stories (like the Mahabharata, Ramayana)
புராதனம் பழமைantiquity
புரி1(நான்காம் வேற்றுமையோடு) (கூறப்பட்டது) அர்த்தப்படுத்தப்பட்டு மனத்தில் உள்வாங்கப்படுதல்(with dative) understand
புரிதல் ஒன்றை நன்றாகப் புரிந்துகொண்டதன் விளைவாக அடையும் தெளிவுunderstanding
புரிந்துகொள் (கூறப்பட்டதை) அர்த்தப்படுத்தி உள்வாங்குதல்understand
புருடா பொய்fabrication
புருவம் (மனிதனின்) கண்களுக்கு மேல் வளைந்த கோடாக அமைந்திருக்கும் மெல்லிய முடிeyebrow
புருஷலட்சணம் ஆணுக்கு உரியதாகச் சிறப்பித்துக் கூறப்படும் தன்மைmanly characteristics
புருஷன் கணவன்husband
புருஷார்த்தம் உறுதிப்பொருள்objectives worthy of human pursuit
புரையிடம் வீட்டை ஒட்டிய காலி இடம்vacant space at the backyard of a house
புரையேறு (உணவுப் பொருளில் சிறிதளவு) மூச்சுக் குழாயினுள் சென்று எரிச்சல் ஏற்படுத்துதல்get choked
புரையோடு இரத்த ஓட்டம் தடைப்பட்டுப் புண்ணும் புண்ணை ஒட்டியுள்ள சதைப் பகுதியும் உள்ளுக்குள்ளாக அழுகுதல்(of wound) become gangrenous
புரோகிதம் (கல்யாணம், திதி போன்ற) சடங்குகளை மத வழக்கப்படி நடத்துதல்officiating rites (as priest at weddings, etc.)
புரோகிதர் புரோகிதம் செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்(brahmin) priest (who officiates at marriage and other rituals)
புல் (ஆடு, மாடு முதலியவற்றிற்கு உணவாகப் பயன்படும்) பூமியில் முளைத்துக் குறைந்த உயரமே வளரும் மெல்லிய, பச்சை நிற இலை கொண்ட தாவரம்grass (of various kinds)
புல்லர் சிறுமைக் குணம் உடையவர்mean or petty-minded persons
புல்லரி (உடல்) சிலிர்த்தல்be thrilled
புல்லரிப்பு (உடல்) புல்லரிக்கிற நிலைthrilling
புல்லறிவாளன் மேம்போக்கான அறிவுடையவன்man of shallow knowledge
புல்லாக்கு மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடும் (பெண்களின்) அணிa pendant suspended from the partition of the nostrils (worn by women)
புல்லாங்குழல் ஒரு புறம் அடைப்புள்ள குழலில் வாய் வைத்து ஊத ஒரு துளையும், வாயால் ஊதிய காற்று வெவ்வேறு விதங்களில் வெளியேறுவதற்கு ஏற்ப ஆறு முதல் எட்டுத் துளைகளும் உடைய இசைக் கருவிflute
புல்லி வட்டம் (பூவின்) வெளி வரிசை இதழ்sepals (of flower)
புல்லுருவி பெரும்பாலும் மரங்களில் படர்ந்து அவற்றின் சத்தை உறிஞ்சி வளரும் ஒரு வகைக் கொடிparasitic plant
புல்வெளி புல் அடர்ந்து வளர்ந்திருக்கும் நிலப்பரப்புpasture
புலப்படு (பார்வையில்) படுதல்be visible
புலப்படுத்து தெரிவித்தல்make known
புலம் (பல்கலைக்கழகத்தில்) தொடர்புடைய பல துறைகளை உள்ளடக்கிய பிரிவுfaculty
புலம்பல் புலம்பு என்னும் வினையின் இரு பொருளிலும் வரும் பெயர்ச்சொல்a verbal noun, in both the senses of the verb புலம்பு
புலம்பு (ஒருவர் தனக்கு ஏற்பட்ட) இழப்பு, பிரிவு போன்றவற்றைச் சொல்லி அழுதல்lament
புலமை தேர்ந்த அறிவுscholarship
புலர் விடிதல்(of day) break
புலரி விடியல்dawn
புலவர் செய்யுள் இயற்றும் புலமை உடையவர்poet
புலவன் கவிஞன்poet
புலவி (பெண்ணின்) ஊடல்sulkiness (of women)
புலவு இறைச்சி meat
புலன்1பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய அடிப்படை உணர்வுfaculty of the body (viz
-புலன்2நிலம் என்பதோடு இணைந்து வரும் சொல்a word which occurs in combination with நிலம்
புலன்விசாரணை ஒரு குற்றம்பற்றிய சாட்சியங்களைச் சேகரிக்க காவல் துறை அதிகாரி எடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைinvestigation (of an offence)
புலன்விசாரி புலன்விசாரணைசெய்தல்investigate (a crime, etc.)
புலால் இறைச்சிmeat
புலி வெளிர்ப் பழுப்பு நிறத் தோலில் கருப்புப் பட்டைக் கோடுகளை உடையதும் பாய்ந்து சென்று இரையைப் பிடிக்கக் கூடியதுமான காட்டு விலங்குtiger
புலி ஆட்டம்/புலி வேஷம் புலி போல் வேஷம் போட்டுக்கொண்டு ஆடும் ஆட்டம்a performance by a player painted as a tiger (during a festival, etc.)
புவனம் (புராணத்தில் கூறப்படும்) உலகம்world (as mentioned in sacred narratives)
புவி பூமிearth
புவியியல் பூமியின் நிலப்பரப்பு, கடல், தட்பவெப்பம் முதலியவற்றை விவரிக்கும் துறைgeography
புவியீர்ப்பு விசை (பொருள்களை) தன்னை நோக்கி இழுக்கும் பூமியின் ஆற்றல்gravitational force
புழக்கடை வீட்டின் பின்வாயில்open space behind a house
புழக்கம் (நாணயம், சொல் முதலியவை) உபயோகத்தில் அல்லது வழக்கில் இருக்கும் நிலை(of coins, words, etc.) circulation
புழங்கு (நாணயம், சொல் முதலியவை) உபயோகத்தில் அல்லது வழக்கில் இருத்தல்(பயன் கருதி) கையாளப்படுதல்(of coins, words, etc.) be in circulation or currency
புழு1(காய், பயறு முதலியவற்றினுள்) புழு உண்டாதல்/புழு அரித்தல்(of vegetables, etc.) be wormy/be wormeaten
புழு2பொருள்களைத் துளைத்துச் செல்லக் கூடிய, மிருதுவான தசையை உடலாகக் கொண்ட உயிரினம்worm
புழுக்கம் (வியர்க்கும் அளவுக்கு) அதிக வெப்பமாகவும் குறைந்த காற்றோட்டத்துடனும் இருக்கும் நிலைsultriness
புழுக்கு (நெல்) அவித்தல்boil (paddy before husking)
புழுக்கை (ஆடு, எலி முதலியவற்றின்) சிறு உருண்டை வடிவ மலம்dung or droppings (of certain animals, esp
புழுங்கல் அவித்த நெல்paddy parboiled (and dried)
புழுங்கலரிசி அவித்துக் காய வைத்த நெல்லை அரைத்துப் பெறப்படும் அரிசிrice obtained from parboiled paddy
புழுங்கு காற்றோட்டம் இல்லாமலும் வெப்பத்தோடும் இருத்தல்/(மேற்குறிப்பிட்ட தன்மையில் ஒருவர்க்கு) வியர்த்தல்swelter
புழுதி காய்ந்த நிலத்திலிருந்து காற்றால் மேல் எழக் கூடிய மண் துகள்dust
புழுதிக்கால் சாகுபடி புன்செய் நிலத்தை உழுது புழுதியாக்கிச் செய்யும் சாகுபடிdry farming
   Page 151 of 204    1 … 149 150 151 152 153 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil