Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| பிரார்த்தனை | (வேண்டுகோளுடன் கூடிய) வழிபாடு | (petitionary) prayer |
| பிரார்த்தி | பிரார்த்தனைசெய்தல் | pray |
| பிரான் | (பெரும்பாலும் தெய்வப் பெயரோடு இணைந்து) தேவன் | ( with names of deities) god |
| பிரி2 | (கட்டு, முடிச்சு போன்றவற்றை) பிணைக்கப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு வரச்செய்தல் | unfasten |
| பிரி3 | (கயிறு போன்று) முறுக்கப்பட்ட வைக்கோல் | twisted hay |
| பிரிமணை | (பானை முதலியவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளால் ஆன வட்ட வடிவ இருக்கை | ring-shaped pad of twisted hay |
| பிரியம் | விருப்பத்துடன் கூடிய அன்பு | affection |
| பிரியன் | (ஒன்றை) மிகவும் விரும்புபவன் | one who has an intense liking (for the thing mentioned) |
| பிரியாணி | இறைச்சித் துண்டுகளையோ காய்கறித் துண்டுகளையோ சாதத்தில் கலந்து மசாலாப் பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் உணவு | a kind of spicy rice dish mixed with pieces of meat or vegetables |
| பிரியாவிடை | பிரிய மனம் இல்லாமல் வழியனுப்புதல் | emotional leave taking |
| பிரியை | பிரியன் என்பதன் பெண்பால் | feminine of பிரியன் |
| பிரிவினை | (குறிப்பிட்ட வகையில்) பிரித்தல் | division |
| பிரிவினைவாதம் | (இனம், மதம், மொழி போன்ற அடிப்படையில் நாட்டை) தனித்தனியாகப் பிரிக்க வேண்டும் என்ற போக்கு | separatism |
| பிரிவினைவாதி | பிரிவினைவாதத்தைக் கடைப்பிடிப்பவர் | separatist |
| பிரிவு | (ஓர் அடிப்படையில்) வகைப்படுத்தப்பட்டது | division (obtained by classifying) |
| பிரிவுபசாரம் | (ஒருவரை) வாழ்த்தி வழியனுப்பும் விழா | farewell (to s |
| பிரீதி | (ஒன்றைச் செய்து ஏற்படுகிற) மனநிறைவு | satisfaction |
| பிருகா | கமகம் | voice modulation |
| பிருடை | (வீணை போன்ற கருவிகளில் சுருதிக்காக நரம்புகளின் நீளத்தைக் கூட்டவும் குறைக்கவும் பயன்படுகிற, நுனிப் பகுதியில் இருக்கிற) திருகாணி | turning key (in musical instruments such as வீணை) |
| பிருஷ்டம் | பிட்டம் | buttocks |
| பிரேதப் பரிசோதனை | (இயற்கையான சாவாக இல்லாதபோது) மரணத்தின் காரணத்தை அறிவதற்காக இறந்தவரின் உடலை அறுத்துச் செய்யும் பரிசோதனை | post-mortem |
| பிரேதம் | உயிரற்ற மனித உடல் | dead body |
| பிரேத விசாரணை | சந்தேகத்திற்கு உரிய மரணத்தின் காரணத்தைக் கண்டறிய உரிய அதிகாரியால் நடத்தப்படும் விசாரணை | inquest |
| பிரேமம்/பிரேமை | காதல் | love |
| பிரேரணை | தீர்மானம் | resolution |
| பிரைகுத்து | உறைகுத்துதல் | add a few drops of buttermilk (to the milk) in order to make curds |
| பில்லிசூனியம் | (ஒருவருடைய வாழ்க்கை கெட்டுப்போவதற்கு எதிரிகளால்) மந்திரம் செய்து துஷ்ட தேவதைகளை ஏவுகிற சூனிய வித்தை | witchcraft |
| பிலாக்கணம் | ஒப்பாரி | lamentation |
| பிலுபிலு-என்று | மறுப்புத் தெரிவித்தல், எதிர்த்துச் செயல்படுதல் போன்ற வகையில் சமாளிக்கவே இடம் தராமல் ஒரேடியாக | giving no chance to argue |
| பிழம்பு | (நெருப்பு போன்றவற்றின்) பெரும் திரள் அல்லது திரட்சி | mass or column (of fire, light, etc.) |
| பிழி | (ஒன்றில் இருக்கும் நீர், சாறு முதலியவை வெளியேறக் கையாலோ இயந்திரத்தாலோ) அழுத்துதல்(நனைந்திருப்பதிலிருந்து ஒரு திரவத்தை) முறுக்கி வெளியேற்றுதல் | press (to extract juice, etc.) |
| பிழை1 | வாழ்க்கை நடத்துதல் | survive |
| பிழை2 | தவறு | error |
| பிழை திருத்தம் | (நூலில் காணப்படும்) அச்சுப் பிழைகளும் அவற்றின் சரியான திருத்தமும் குறிக்கப்பட்ட பட்டியல் | errata |
| பிழை திருத்துநர் | (அச்சகத்தில்) அச்சடித்த மாதிரிப் பிரதியில் உள்ள பிழைகளைக் கண்டுபிடித்துத் திருத்தும் பணி செய்பவர் | proof-reader |
| பிள் | (உணவுப் பொருளைப் பிய்த்து அல்லது உடைத்து) துண்டாக்குதல் | break (items of food into bits) |
| பிள்ளைகுட்டி | குழந்தைகள் | children |
| பிள்ளைத்தாய்ச்சி | கர்ப்பிணி | expectant mother |
| பிள்ளைப்பூச்சி | தலைப்பிரட்டைக்கு இருப்பது போன்ற தலையும் சாம்பல் நிற உடலும் உடைய ஊர்ந்து செல்லும் பூச்சி | gryllo talpa |
| பிள்ளைப்பேறு | குழந்தை பெறும் பாக்கியம் | the blessing of having children |
| பிள்ளை பிடிப்பவன் | குழந்தைகளைக் கடத்துபவன் | kidnapper of children |
| பிள்ளையாண்டான் | இளைஞன் | young man |
| பிள்ளையார் | விநாயகர் | the elephant-headed god |
| பிள்ளையார் எறும்பு | (கடித்து வலி ஏற்படுத்தாத) கறுப்பு நிறமுடைய எறும்பு | a kind of harmless black ant |
| பிள | (நிலம், பாறை, மரம் முதலியவை) தனித்தனியாகப் பிரியும்படி இரண்டாதல்/(பாறை, மரம் முதலியவற்றை) இரண்டாக்குதல் | (of earth, rock, etc.) split/split (a block of wood, etc.) |
| பிளந்துகட்டு | (பாராட்டும் விதத்தில்) அருமையாக அல்லது சிறப்பாகச் செய்தல் | do extremely well |
| பிளவு | பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளி | cleft (of a rock) |
| பிளாச்சு | நீளவாக்கில் பிளக்கப்பட்ட மூங்கில் துண்டு | bamboo split |
| பிளாஸ்திரி | (காயத்தின் மீது வைக்கும் பஞ்சு, துணி முதலியவை விலகாமல் இருக்கப் பயன்படுத்தும்) ஒட்டும் பரப்புடைய நீண்ட பட்டையான துணி(காயத்தின் மீது போடும்) மருந்து தடவப்பட்ட, ஒட்டும் பரப்புடைய துண்டுத் துணி | sticking plaster |
| பிளிறு | (யானை) பேரொலி எழுப்புதல் | (of an elephant) trumpet |
| பிற்காலம் | (நிகழ்கிற காலத்துக்கு அல்லது முன்னர் குறிப்பிட்ட காலத்துக்கு) அடுத்து வருகிற காலம் | future |
| பிற்சேர்க்கை | (புத்தகம், ஆய்வேடு முதலியவற்றில்) உள்ளடக்கத்தில் தரப்படாத கூடுதல் தகவல் | appendix (in a book, etc.) |
| பிற்பகல் | நண்பகலுக்கும் மாலைக்கும் இடைப்பட்ட பொழுது | afternoon |
| பிற்பட்ட | (காலத்தில்) பிந்திய | later (development, etc.) |
| பிற்படு | (காலத்தால்) பிந்துதல் | lag behind (in time) |
| பிற்படுத்தப்பட்ட வகுப்பு | (அரசின் கணிப்பில்) கல்விக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் விசேஷக் கவனம் தேவை என்று குறிப்பிடப்பட்ட இனம் | communities identified by the government as needing special attention because of their economic and social backwardness |
| பிற்பாடு | பிறகு | after |
| பிற்போக்கு | மாற்றத்தை விரும்பாமல் முன்னேற்றத்தைத் தடைசெய்யும் விதத்தில் செயல்படும் போக்கு | being reactionary |
| பிற1 | (நான்காம் வேற்றுமை உருபோடு) (குழந்தை) பெறுதல்/(ஆணோடு தொடர்புபடுத்திக் கூறும்போது) (குழந்தை) அடையப்பெறுதல்/(விலங்கினத்தைக் குறிப்பிடும்போது) வெளிவருதல் | give birth to/be born |
| பிற2 | வேறு சில | the other |
| பிறகு1 | (குறிப்பிட்ட செயல் நிகழ்ந்து அல்லது குறிப்பிட்ட நேரம் கழிந்து வரும்) அடுத்த நேரம் | during the time that follows |
| பிறகு2 | தொடர்ந்து அடுத்ததாக | after |
| பிறகு3 | குறிப்பிடப்படும் கூற்றுக்கு நேர் எதிரான கூற்று நிகழ முடியாது என்பதைக் குறிப்பிடும்போது இரு கூற்றுக்கும் இடையில் வரும் சொல் | used as a connective between opposing statements the latter of which has the effect of a rhetorical question |
| பிறத்தியார் | பிறர் | others |
| பிறந்த நாள் | ஒருவர் பிறந்த ஆண்டு, மாதம், நாள் ஆகியவை | date of birth |
| பிறந்தமேனி | (பிறக்கும்போது இருப்பது போன்று) உடை எதுவும் அணியாத நிலை | state of being nude |
| பிறப்பி | (சட்டப்படியான ஆணையை) நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் அதிகாரபூர்வமாக அறிவித்தல்(புதிய சட்டத்தை) நடைமுறைக்குக் கொண்டுவருதல் | issue (an order) |
| பிறப்பிடம் | (ஒருவர்) பிறந்த ஊர் | place of birth |
| பிறப்பு | (ஒருவர் உலகில்) பிறத்தல் | birth (of s |
| பிறப்புரிமை | தான் பிறந்த நாட்டில் ஒருவருக்கு இயற்கையாகவே உள்ள உரிமை | birthright |
| பிறப்புறுப்பு | ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டை இனம் காட்டும் விதமாக அமைந்திருக்கும் இனப்பெருக்கத்திற்கான உறுப்பு | genitals |
| பிறர் | (தன்னைத் தவிர்த்த) மற்ற நபர்கள்(குறிப்பிட்ட ஒன்றில்) சம்பந்தப்படாத நபர்கள் | someone else |
| பிறவி | (குறிப்பிட்ட வடிவில் அல்லது தன்மையில்) பிறந்து வாழும் உயிர் | (human, divine, strange) birth |
| பிறவினை | பிறரைக் கொண்டு ஒரு செயல் நடத்தப்படுவதைத் தெரிவிக்கும் வினை | causative verb |
| பிறழ் | இடத்திலிருந்து பெயர்தல் | get dislocated |
| பிறன் | பிறர் என்பதன் ஒருமை | singular of பிறர் |
| பிறாண்டு | (ஒரு பரப்பில் அல்லது பரப்பை) நகத்தால் கோடு கிழிப்பது போல் அழுத்தி இழுத்தல் | scratch (as with nails or claws) |
| பிறிது | (குறிப்பிடப்படும் ஒன்று அல்லது ஒருவர் அல்லாமல்) வேறு | another |
| பிறை1 | கூர்மையான முனைகளோடு வளைந்த கீற்றாகத் தோற்றமளிக்கும் நிலவு | crescent (moon) |
| பிறை2 | (சுவரில் விளக்கு வைக்கும்) சிறு மாடம் | niche |
| பிறை வளைவு | பிறை போல இருக்கும் அடைப்புக் குறி | parenthesis |
| பின்1 | (இடத்தில் அல்லது பொருளின்) முன் இருப்பதற்கு நேர் எதிர்த் திசையில் இருப்பது | back |
| பின்2 | பின்னால் | backward |
| பின்3 | பின்னால் | behind |
| பின்தங்கிய | பிற்படுத்தப்பட்ட | backward |
| பின்தங்கு | (கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில்) நிறைவானது என்று கருதத் தகுந்த நிலையை எட்ட முடியாமல் இருத்தல் | lag behind |
| பின்தொடர் | (ஒருவர் அல்லது ஒன்று செல்லும் திசையிலேயே அவரை அல்லது அதனை) இலக்காகக் கொண்டு பார்வையிலிருந்து நழுவவிடாமல் பின்னால் செல்லுதல் | go after |
| பின்பற்று | (ஒரு கொள்கை, திட்டம் முதலியவற்றை) கருத்தில் கொண்டு அதன்படி நடத்தல் | follow (a path, tradition) |
| பின்பாட்டு | (பாடகருக்கு) பின்னால் இருந்து உடன்பாடும் பாட்டு/(கலைஞருக்கு ஏற்ப) பின்புறம் இருந்து பாடும் பாட்டு | vocal support (to a singer) |
| பின்பு1 | பிறகு1 | see பிறகு1 |
| பின்பு2 | பிறகு2 | see பிறகு2 |
| பின்பு3 | பிறகு3 | see பிறகு3 |
| பின்புத்தி | ஒரு செயலைச் செய்வதற்கு முன்பே அதன் காரணகாரியங்களைப்பற்றிச் சிந்திக்காமல் அந்தச் செயலைச் செய்துவிட்டுப் பின்னர் வருத்தப்படும் குணம் | doing things in haste and repenting at leisure |
| பின்புறம் | பின்பக்கம் | the area behind |
| பின்வரும் | அடுத்து வருகிற | following |
| பின்வருமாறு | (எழுத்தில்) இதற்குப் பின் குறித்துள்ளது போல | (in writing) as follows |
| பின்விளைவு | (பிரச்சினைக்கு உரிய செயல் அல்லது முடிவைத் தொடர்ந்து ஏற்படும்) பாதிப்பு அடையச்செய்யும் விளைவு | consequence |
| பின்னங்கால் | (விலங்கினத்தில்) வாலை ஒட்டி அமைந்திருக்கும் கால் | (of animals) hind leg or foot |
| பின்னடை | பின்தங்குதல் | lag behind |
| பின்னடைவு | முன்னேற்றத்தைத் தடைசெய்யும் வகையிலான பாதிப்பு | relapse |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.