Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| பெயர்ப் பலகை | கடை, அலுவலகம் முதலியவற்றின் வாசல் முகப்பில் அல்லது வீட்டின் கதவில்) பெயர், அலுவல் விபரம் ஆகியவை எழுதி மாட்டப்பட்டிருக்கும் பலகை | name-plate |
| பெயர்பண்ணு | ஒரு செயலை உண்மையாகச் செய்யாமல் செய்ததாகத் தோற்றம் தரும் வகையில் செய்தல் | do sth. for the sake of formality |
| பெயர்பெற்ற/பெயர்போன | புகழ்பெற்ற | well-known |
| பெயரடை | பெயர்ச்சொல்லுக்கு அடையாக வரும் சொல் | noun qualifier |
| பெயரளவில்/பெயரளவுக்கு | (உண்மையாக இல்லாமல்) வெறும் தோற்ற அளவில் | in name only |
| பெயரால் | (குறிப்பிடப்படுபவரோ குறிப்பிடப்படுவதோ நேரடியாகச் சம்பந்தப்படாவிட்டாலும் அவரை அல்லது அதை) காரணம்காட்டி/(அவரின் அல்லது அதன்) பெயரைப் பயன்படுத்தி | in the name of |
| பெயரியல் | பெயர்ச்சொற்களின் அமைப்பு, வகைகள் முதலியவற்றை விளக்கும் பிரிவு | chapter on nouns (in a treatise on grammar) |
| பெரிது | (உருவில், வடிவில், அளவில்) விரிவானது | that which is big or large |
| பெரிதுபடுத்து | (சாதாரண சண்டை, பிரச்சினை முதலியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவை) பெரிய அளவில் உருவாகுமாறு அல்லது தீவிரம் அடையுமாறு செய்தல் | make a big issue (of small matters) |
| பெரிதும் | அதிக அளவில் | to a great extent |
| பெரிய | (உருவில், வடிவில், அளவில்) அதிகப் பரப்புடைய | big |
| பெரிய ஆள் | பிறர் எதிர்பாராத வகையில் சிறப்பாக அல்லது சாமர்த்தியமாகக் காரியங்கள் செய்த ஒருவரைக் குறிப்பிடப் பயன்படுத்துவது | clever or great guy |
| பெரிய ஆஸ்பத்திரி | (அரசு நடத்தும்) எல்லாப் பிரிவுகளும் கொண்ட மருத்துவமனை | general Hospital (run by the government) |
| பெரிய தலை | (தகுதி, அந்தஸ்து போன்றவற்றில்) மேம்பட்டவர்(ஊரில்) செல்வாக்கு உள்ளவர் | influential person |
| பெரியதனம் | பெரிய மனிதத் தோரணை | uppishness |
| பெரிய புள்ளி | செல்வாக்கு உள்ளவர் | influential person |
| பெரியம்மை | கடும் காய்ச்சலையும் வடு உண்டாக்கக் கூடிய பெரிய கொப்புளங்களையும் ஏற்படுத்தக் கூடிய நோய் | smallpox |
| பெரியமனதுபண்ணு | (பெரும்பாலும் வேண்டிக் கேட்டுக்கொள்ளும்போது) கருணைகாட்டுதல் | be large-hearted |
| பெரியமனம் | தாராளமாக உதவும், எதையும் பொறுத்துப்போகும் மனப்பாங்கு | magnanimity |
| பெரிய மனிதர் | பெரியவர் | man of status |
| பெரிய மனுஷன் | பெரிய புள்ளி | influential man |
| பெரிய மனுஷி | மூதாட்டி | respected elderly woman |
| பெரியமனுஷியாகு | (பெண்) பருவமடைதல் | (of a girl) attain puberty |
| பெரிய முள் | (கடிகாரத்தில்) நிமிடத்தைக் காட்டும் முள் | minute hand (of a clock) |
| பெரியமேளம் | குச்சியால் தட்டி வாசிக்கப்படும் இரு புறமும் தோல் கட்டப்பட்ட, பித்தளையாலான நடுப்பகுதி கொண்ட பீப்பாய் வடிவ வாத்தியம் | a barrel-shaped two-headed drum played with a stick |
| பெரியவர் | வயதில் முதிர்ந்தவர் | old man |
| பெரிய வெள்ளிக்கிழமை | புனிதவெள்ளி | good Friday |
| பெரியோர் | முதிர்ந்த அனுபவம் உடையவர் | the experienced |
| பெரு1 | பருத்தல் | grow thick |
| பெரு2 | அதிக அளவிலான | immense |
| பெருக்கம் | (எண்ணிக்கை, அளவு) மிகுதி | increase |
| பெருக்கல் | ஓர் எண்ணைக் குறிப்பிட்ட எண்ணின் மடங்குக்கு அதிகப்படுத்தும் முறை | multiplication |
| பெருக்கு1 | ஓர் எண்ணைக் குறிப்பிட்ட மற்றோர் எண்ணின் மடங்குக்கு அதிகப்படுத்துதல் | multiply |
| பெருக்கு2 | குப்பையைத் துடைப்பத்தால் தள்ளுதல் | sweep (the floor, etc.) |
| பெருக்கு3 | (நீரின் அளவு) மிகுதி | increase in volume (of flowing water) |
| பெருக்கெடு | (நீர் முதலிய திரவம்) அதிக அளவில் வேகத்துடன் செல்லுதல் | flood |
| பெருகு | (எண்ணிக்கையில்) மிகுதல் | increase |
| பெருங்காயம் | (குழம்பு, ரசம் முதலியவற்றில் வாசனைக்காகச் சேர்க்கப்படும்) ஒரு வகை மரப்பாலிலிருந்து எடுக்கப்படும் செம்பழுப்பு நிறத் திடப் பொருள் | asafoetida (used in cooking for aromatic purposes) |
| பெருங்குடல் | சிறுகுடலைச் சுற்றி அமைந்திருப்பதும் கழிவுகளை மலவாய்க்கு அனுப்புவதுமாகிய குடலின் பகுதி | large intestine |
| பெருச்சாளி | (வீடுகளில் புகுந்து உணவுப் பொருளைத் தின்னும்) எலி இனத்தைச் சேர்ந்த, பருத்த உடம்பை உடைய ஒரு பிராணி | large rat |
| பெருத்த | பெரும் | immense |
| பெருந்தகை | மதிப்பிற்கும் பெருமைக்கும் உரியவரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல் | a term used to refer to a person who is held in high esteem |
| பெருந்தன்மை | (பிறருடைய குற்றம்குறைகளைப் பெரிதுபடுத்தாமல் எதற்கும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளும்) உயர்ந்த மனப்பாங்கு | generosity |
| பெருநகர்/பெருநகரம் | மாநகரம் | metropolitan city |
| பெருநாள் | (முஸ்லிம்களின்) பண்டிகை | festival (of the Muslims) |
| பெருநோய் | தொழுநோய் | leprosy |
| பெரும் | அதிகமான | great |
| பெரும்பாலான | ஒருசிலர் அல்லது ஒருசில நீங்கலாக உள்ள ஏனைய(எண்ணிக்கையில்) கணிசமான | the majority of |
| பெரும்பாலும் | (பலவற்றுள்) சில நீங்கலாக ஏனைய அனைத்தும் | mostly |
| பெரும்பாலோர் | குறிப்பிடப்படுவர்களில் சிலர் நீங்கலாக ஏனையோர் | majority (of the people) |
| பெரும்பான்மை | தேவையான அளவில் அல்லது பலத்தில் உள்ள எண்ணிக்கை | the majority (of people, etc.) |
| பெரும்போக்கு | பெருந்தன்மை | generosity |
| பெருமக்கள் | (முன் வரும் சொல்லால் குறிப்பிடுபவர்களை) மதிப்பிற்கு உரியவர்கள் என்ற பொருளில் அழைக்கப் பயன்படுத்தும் சொல் | a honorific term used in addressing or referring to groups of people |
| பெருமளவில்/பெருமளவு | முழுமையாக இல்லாவிட்டாலும் கணிசமான அளவில் | to a great extent |
| பெருமாட்டி | சீமாட்டி | woman of high status |
| பெருமாள் | திருமால் | vishnu |
| பெருமாள் கோயில் மாடு | (எந்த வேலைக்கும் பயன்படுத்தாத) கொழுத்த மாடு | a fat bull (offered to a Vishnu temple) |
| பெருமான் | கடவுள் | lord |
| பெருமானார் | (இஸ்லாமியர் வழக்கில்) முகமது நபி | mohammed, the Prophet |
| பெருமூச்சு | (நிம்மதியின் அல்லது வேதனை, கவலை முதலியவற்றின் அடையாளமான) நீண்ட மூச்சு | sigh (of relief, sadness, worry, etc.) |
| பெருமை | (-ஆக) (தான் அல்லது தன்னைச் சார்ந்தோர் அடைந்த உயர்நிலை, வெற்றி முதலியவை காரணமாக) மதிப்பில் உயர்ந்துவிட்டதாகக் கொள்ளும் உணர்வு | pride |
| பெருமையடி | (ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி) அளவுக்கதிகமாகப் பெருமையாகச் சொல்லுதல் | brag about |
| பெருவழக்கு | வழிவழியாக அல்லது பரவலாகப் பெரும்பான்மையோரால் பின்பற்றப்பட்டு வரும் வழக்கு | largely prevalent custom or usage |
| பெருவாரி | பெரும்பான்மை | majority |
| பெருவாழ்வு | சீரும் சிறப்பும் நிறைந்த வாழ்க்கை | life of prosperity |
| பெருவியாதி | தொழுநோய் | leprosy |
| பெருவிரல் | கட்டைவிரல் | thumb |
| பெருவெளி | (எல்லையற்ற) பரந்த வெளி | vastness |
| பெற்றோர் | (ஒருவரின்) தாய்தந்தை | parents |
| பெறு1 | (கருத்தரித்துக் குழந்தையை) அடைதல்(குழந்தை) உடையதாக இருத்தல் | bear (a child) |
| பெறுமானம் | (ஒன்றின்) மதிப்பு | worth |
| பென்னம் பெரிய | மிகப் பெரிய | very large |
| பேக்கு | அறிவோ சாமர்த்தியமோ இல்லாத நபர் | simpleton |
| பேச்சாளர் | (கூட்டங்களில்) திறம்படப் பேசுபவர் | one who delivers a speech |
| பேச்சுத்துணைக்கு | பேசிக்கொண்டிருப்பதற்கு ஏற்ற முறையில் | (one to) keep company with |
| பேச்சுமூச்சு | உயிருடன் அல்லது நினைவுடன் இருக்கிறார் என்பதற்கு அடையாளமான பேசுதலும் மூச்சுவிடுதலும் | signs of life |
| பேச்சுவாக்கில் | (ஒரு செய்தி, விஷயம் போன்றவற்றை) முக்கியத்துவம் கொடுத்துத் தனிப்படுத்திச் சொல்லாமல் பேச்சின் இடையில் | in the course of a conversation |
| பேச்சுவார்த்தை | (தீர்வு காணும் முறையில் வெவ்வேறு அமைப்பின் பிரதிநிதிகள்) நேருக்கு நேர் சந்தித்துப் பேசி நிகழ்த்தும் கருத்துப் பரிமாற்றம் | talks |
| பேசரி | (பெரும்பாலும் எட்டு) வைரக்கற்கள் பதித்த பகுதியும் அதனுள் இணைந்த சிறு வளையமும் கொண்ட ஒரு வகை மூக்குத்தி | a kind of nose jewel studded with (eight) diamonds and a ring attached to it |
| பேசா மடந்தை | (பேசத் தெரியாதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு) அமைதியாக இருக்கும் பெண் | a woman who is silent (making one wonder whether she could talk at all) |
| பேசாமல் | (குறிப்பிட்டதற்குப் பதிலாக மற்றொன்றை) தயக்கம் சிறிதும் இல்லாமல் | without any deliberation |
| பேசிவைத்ததுமாதிரி | சொல்லிவைத்தாற்போல | as if agreed upon |
| பேட்டி | (ஒருவரை நேரில் சந்தித்து) கேள்வி கேட்பது, பதில் பெறுவது என்ற முறையில் அமையும் உரையாடல் நிகழ்ச்சி | interview |
| பேட்டி காண் | உரையாடல் நிகழ்ச்சிக்காக (ஒருவரை) நேரில் சந்தித்தல் | have an interview (with s |
| பேட்டு | (தறியில்) கூடுதல் இழைகளைக் கொண்டு நெய்யப்படும் வடிவமைப்பு | pattern or design woven with extra warp threads |
| பேட்டை | (நகர்ப்புறங்களில் ஏழை மக்கள் வசிக்கும்) வசதி குறைந்த பகுதி | area or locality (of a town) |
| பேடி | (பெண் தன்மை மிகுந்த) அலி | eunuch |
| பேடு | பெண் பறவை | female of birds |
| பேணி | மைதா மாவை அப்பளம் போலப் போட்டு, பொரித்துப் பாகில் ஊறவைத்துத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம் | a sweetmeat prepared by dipping the rolled-up dough in sugar syrup |
| பேணு | வேண்டியவற்றைச் செய்து நல்ல முறையில் வைத்துக்கொள்ளுதல் | nurture |
| பேத்தல் | பிதற்றல் | nonsense |
| பேத்தி | மகனின் அல்லது மகளின் மகள் | granddaughter |
| பேத்து | பிதற்றுதல் | talk nonsense |
| பேதம் | வேறுபாடு | difference |
| பேதமை | எதையும் பகுத்தறிந்து செயல்படாத தன்மை | ignorance |
| பேதலி | (புத்தி, மனம்) குழப்பம் அடைதல் | get confused |
| பேதி | வயிற்றுப்போக்கு | diarrhoea |
| பேதை | எதையும் பகுத்தறிந்து பார்த்துச் செயல்படத் தெரியாத தன்மை உடைய நபர் | person of no discernment |
| பேய் | இருப்பதாக நம்பப்பட்டு அஞ்சப்படும் உருவமற்ற, அசுர பலமுடைய தீய சக்தி | evil spirit |
| பேய்ச்சி | பேயன்2 என்பதன் பெண்பால் | feminine of பேயன்2 |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.