Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
பொதுமு (நீரில்) ஊறிப் பருத்தல்bloat (being soaked in water)
பொதுமை அனைத்துக்கும் அல்லது அனைவருக்கும் பொதுவானதுuniversality
பொதுவாக்கெடுப்பு பொதுமக்களின் கருத்தை அறிகிற விதத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்புreferendum
பொதுவாக (கவனித்ததன் அடிப்படையில்) பெரும்பாலும்generally
பொதுவாழ்வு (ஒரு நபர் ஆற்றும்) மக்கள் நல்வாழ்விற்கான பணிpublic life
பொதுவுடைமை உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், திறமைக்கு ஏற்ற உழைப்பு, தேவைக்கு ஏற்ற பங்கீடு கிடைக்கச் செய்ய வேண்டும், வர்க்கபேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் அரசியல் கோட்பாடுcommunism
பொந்து (மரம், சுவர், நிலம் முதலியவற்றில்) தானாக ஏற்பட்டிருக்கும் குழிவுhole
பொம்மலாட்டம் பாவைக்கூத்துpuppet show
பொம்மை (மரம், மண் போன்றவற்றில்) நிஜப் பொருள்களைப் போன்ற தோற்றத்தில் சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்toy
பொம்மை ஆட்சி நியமிக்கப்பட்ட ஒருவர் அதிகாரம் எதுவும் இல்லாமல் பிறரால் இயக்கப்பட்டு நடத்தும் ஆட்சிpuppet regime
பொய்1(மழை) எதிர்பார்த்த நேரத்தில் பெய்யாமலிருத்தல்(rain) fail
பொய்2நடப்பில் இல்லாதது அல்லது நிகழாததுlie
பொய்க்கால் (சில வகை ஆட்டங்களில் தன்னை உயரமாகக் காட்டிக்கொள்ள) காலில் கட்டிக்கொள்ளும் கால் போன்ற மரக்கட்டைstilts (in some forms of dances)
பொய்க்கால் குதிரை பொய்க்கால் பொருத்தி இடுப்பில் குதிரைப் பொம்மையுடன் ஆடும் நடனம்a kind of dance with a dummy horse
பொய்கை (இயற்கையாக அமைந்த) நீர்நிலை(natural) pond
பொய்சாட்சி (நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு முதலியவற்றில் உள்நோக்கத்துடனோ பணம் பெற்றுக்கொண்டோ) உண்மையை மறைத்து அல்லது திரித்துத் தரும் சாட்சியம்false witness
பொய்ப்பி பொய் என நிறுவுதல்prove false
பொய்மை உண்மை அல்லாததுthat which is unreal
பொய்யன் பொய் சொல்பவன்liar
பொய்யாமை பொய் சொல்லாத தன்மைtruthfulness
பொரி2(கொதிக்கும் எண்ணெய்யில் அல்லது நெய்யில் கடுகு, அப்பளம் முதலியவற்றை) வறுத்தல்fry (in oil)
பொரி3அரிசி, சோளம், அவல் போன்றவற்றைச் சட்டியிலிட்டு வறுத்துத் தயாரிக்கப்படும், உதிரிஉதிரியாக இருக்கும் ஒரு வகைத் தின்பண்டம்puffed grains such as corn, etc
பொரிகடலை பொட்டுக்கடலைfried chick-pea
பொரியல் காய்கறியை அல்லது முட்டையைப் பச்சையாகவோ வேகவைத்தோ எடுத்துப் பொரித்துச் செய்யும் தொடுகறிfried vegetables or scrambled egg
பொரிவிளங்காய் உருண்டை பாசிப்பருப்பு மாவுடன் நிலக்கடலையைச் சேர்த்து வெல்லப்பாகில் இட்டு உருண்டையாகப் பிடிக்கப்படும் (கடிப்பதற்குக் கடினமாக இருக்கும்) தின்பண்டம்a hard ball-shaped sweetmeat made of different kinds of flour
பொருக்கு (பாத்திரத்தில்) ஒட்டிக் காய்ந்த உணவுத் துண்டுbits of dried food sticking (to the vessel)
பொருக்கு விதை தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ரக விதைimproved seed
பொருட்காட்சி பொதுமக்கள் பார்வையிடவும் வாங்கவும் ஏற்ற வகையில் பொருள்களைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தி (சில நாட்கள் அல்லது மாதங்கள்) நடக்கும் நிகழ்ச்சிexhibition
பொருட்டு1(ஒரு என்பதோடு இணைந்தும் எதிர்மறை வாக்கியத்திலும்) கவனத்தில் கொள்ள வேண்டியதுmatter worth considering
பொருட்டு2(முன் குறிப்பிடப்பட்டதன்) காரணமாகbecause of
பொருட்படுத்து (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) முக்கியத்துவம் அளித்துக் கருத்தில் அல்லது கவனத்தில் கொள்ளுதல்give due consideration to
பொருட்பெயர் பொருளைக் குறிக்கும் பெயர்name of things
பொருண்மை (உண்மையான) பொருள் நிலைtrue meaning or substance
பொருண்மையியல் மொழியில் பொருள் என்பதுபற்றி விளக்கும் துறைsemantics
பொருத்தம் (ஏதேனும் காரணத்தால் அல்லது அம்சத்தால் ஒன்று மற்றொன்றுக்கு) ஏற்றதாகவோ இசைந்ததாகவோ இருப்பதுappropriateness
பொருத்து1இணைத்தல்join (one with another)
பொருத்து2(எண்ணெய் விளக்கு, அடுப்பு, மெழுகுவர்த்தி முதலியவற்றை) எரியச்செய்தல்light (a lamp, candle, etc.)
பொருத்து3ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும் இடம் அல்லது இணைப்புjoint
பொருந்திய (ஒன்று) கொண்டwith (in the sense of possessing)
பொருந்து (ஒன்றில்) இணைந்து அல்லது சேர்ந்து அமைதல்fit (properly)
பொருபொருப்பு மொரமொரப்புcrispness
பொருமல் (அஜீரணம் முதலியவற்றால் வயிறு) உப்பி இரைகிற சத்தம்rumbling noise (of a flatulent stomach)
பொருமு (அஜீரணம் முதலியவற்றால்) (வயிற்றில்) இரைச்சல் உண்டாதல்(of stomach) rumble
பொருள்படு (சொல், பேச்சு முதலியவை குறிப்பிட்ட விதத்தில்) பொருள் தொனித்தல் அல்லது வெளிப்படுதல்give the meaning
பொருள்முதல்வாதம் உலகாயதம்materialism
பொருளடக்கம் புத்தகத்தில் தொடர்ச்சியாக வரும் அத்தியாயங்களின் தலைப்புகள், அவை தொடங்கும் பக்கம் முதலியவற்றின் வரிசைக்கிரமமான பட்டியல்contents (of a book)
பொருளாகுபெயர் ஒரு முழுப் பொருளின் பெயர் உறுப்புக்கு வழங்குவதாகிய ஆகுபெயர்a kind of metonymy in which the whole stands for a part
பொருளாளர் (ஓர் அமைப்பின்) நிதி நிர்வாகத்துக்குப் பொறுப்பு வகிப்பவர்treasurer (of an organization)
பொருளியல் மனிதனின் பொருள் தேவைகளை நிறைவுசெய்யும் சாதனங்கள், கிடைப்பதற்கு அரியதாகவும் கிடைத்தாலும் அவை வேறு பலவற்றிற்குப் பயன்படக் கூடியதாகவும் இருப்பதால் அத் தேவைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகளை விவரிக்கும் துறைeconomics
பொல்லாங்கு தீமைanything bad or injurious
பொல்லாத்தனம் தீமை விளைவிக்கும் குணம்wickedness
பொல்லாத தீமை விளைவிக்கிறbad
பொல்லாப்பு (பிறருடைய) வெறுப்புdispleasure (of another)
பொலபொல-என்று (மண், காரை முதலியவற்றைக் குறித்து வருகையில்) பிடிப்பில்லாமல் உதிரிஉதிரியாக(in a) crumbling (manner)
பொலி1சிறப்புடன் வெளிப்படுதல்flourish
பொலி2(களத்தில்) குவித்து வைக்கப்பட்டிருக்கும் (தூற்றாத) நெல்heap of paddy (which is yet to be winnowed)
பொலிகடா/பொலிகாளை (எருமையில், ஆட்டில்) இனவிருத்தி செய்வதற்காக வளர்க்கப்படும் (கொழுத்த) கடாbull or ram reared for purposes of breeding
பொழி (மழை, பனி முதலியவை) அதிக அளவில் கீழே இறங்குதல்/(வானம் மழை, பனி முதலியவற்றை) கொட்டுதல்(of rain, snow, etc.) pour down or fall heavily/shower on
பொழிப்புரை (செய்யுளின்) பொருளைத் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்த உரைparaphrase (of a poem or verse)
பொழில் சோலைgarden
பொழிவு (மழை, பனி முதலியவை) பெய்தல்(rain, snow) fall
பொழுதிருக்க பகல் பொழுது முடியும் முன்before sunset
பொழுது1(பொதுவாக) நேரம்time
பொழுதுபோ இனிமையாக நேரம் கழிதல்be spent
பொழுதுபோக்கு1(பொதுவாக ஒருவர் தன் விருப்பப்படி) நேரத்தைக் கழித்தல்spend time (in recreation)
பொழுதுபோக்கு2ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காகச் செய்வது அல்லது கழிப்பதற்கேற்ற வகையில் அமைவதுpastime
பொளி (அம்மி, ஆட்டுக்கல் முதலியவை சொரசொரப்பாக இருக்க) கொத்துதல்make the surface (of a grinding stone) rough (so as to make grinding easy)
பொற்காலம் (நாடு பல துறைகளிலும் அல்லது பல துறைகள்) சிறப்புற்று விளங்கும் காலம்golden age
பொற்கிழி (பழங்காலத்தில்) பொற்காசுகள் முடிந்த துணிgold (coins) tied up (in a piece of cloth)
பொற்கொல்லன் தங்கத்தினால் நகை முதலியவை செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்goldsmith
பொறாமை (ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிட்டவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும்) எரிச்சல் கலந்த மனக் குறைenvy
பொறி1(கல், உலோகம், மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து, உருவம் முதலியவற்றை) வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்inscribe (letter, figure, etc.)
பொறி2(நெருப்பின்) சிதறும் துகள்spark
பொறி3உணர்வதற்கு உடலில் அமைந்த கருவிsense organ
பொறி4(விலங்கு, பறவை முதலியவற்றை) அகப்படுத்துவதற்கு உரிய சாதனம்trap
பொறிகலங்கு (அதிர்ச்சிக்கு உள்ளாகி சுயக் கட்டுப்பாட்டை இழக்கும் வகையில்) புலன்கள் குழம்புதல்be dazed
பொறியாளர் இயந்திரம், கட்டடம் முதலியவற்றை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உரிய தொழில்நுட்பக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்engineer
பொறியியல் இயந்திரம், கட்டடம் முதலியவற்றை உருவாக்குதல், பராமரித்தல் ஆகியவை குறித்த தொழில்நுட்பம்engineering
பொறு (வலி, துன்பம் முதலியவற்றை அல்லது அவற்றின் விளைவை) தன்னளவில் ஏற்றல்bear
பொறுக்கியெடு தெரிவுசெய்தல்select
பொறுக்கு ஒவ்வொன்றாகச் சேர்த்தல்pick
பொறுத்த (குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்தdepend on
பொறுத்து (குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்துdepending on
பொறுப்பாசிரியர் பத்திரிகை, புத்தகம் போன்றவற்றை வெளியிடுவதில் நிர்வாகப் பொறுப்பை வகிப்பவர்managing editor (of a journal, etc.)
பொறுப்பாளர் (சங்கம், மையம், விடுதி முதலியவற்றை) நிர்வகிக்கும் பொறுப்பை வகிப்பவர்organizer
பொறுப்பாளி (ஒன்றுக்கு) பொறுப்புடையவர்one who is responsible
பொறுப்பு (-ஆக, -ஆன) (செயலைச் செய்வதோடு) விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலைresponsibility
பொறுமை (சிரமம், அசௌகரியம் முதலியவற்றை) பொறுத்துக்கொண்டு அல்லது (சூழ்நிலையை) புரிந்துகொண்டு எரிச்சலும் அவசரமும் காட்டாமல் செயல்படும் தன்மைpatience
பொறை மைதா மாவில் தயாரிக்கும் ரொட்டி போன்ற ஒரு தின்பண்டம்a kind of snack (something like a biscuit)
பொன் தங்கம்gold
பொன்மெழுகு தங்கத்தை உரைத்துப் பார்க்கும் மெழுகுwax used in testing the quality of gold
பொன்மொழி (அறிஞர் போன்றோரின்) கருத்து நிறைந்த சுருக்கமான சொற்றொடர்saying
பொன்வண்டு பளபளப்பான கரும் பச்சை அல்லது மஞ்சள் நிற உடல் கொண்ட ஒரு வகை வண்டுa kind of beetle which has a shiny dark green or yellow colour
பொன்விழா ஐம்பது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் விழாgolden jubilee
பொன்னாங்கண்ணி (நீர்ப்பாங்கான இடங்களில் வளரும்) வழுவழுப்பான சிறு இலைகளைக் கொண்ட ஒரு வகைக் கீரைa kind of greens with shiny little leaves
பொன்னாடை (ஒருவரை கௌரவிக்கும் விதத்தில் அணிவிக்கப்படும்) பட்டு அல்லது பட்டுப் போன்ற துணிbraided shawl (presented to s
பொன்னான (வாய்ப்பு, நேரம் முதலியவற்றைக் குறிக்கையில்) கிடைப்பதற்கு அரியதும் பெரும் பலனை அளிப்பதுமானgolden (opportunity, etc.)
பொன்னிறம் (வறுக்கப்படும் உணவுப்பொருளைக் குறிப்பிடும்போது) சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறம்reddish-yellow
பொன்னுக்குவீங்கி அம்மைக்கட்டுmumps
போ1(பெரும்பாலும், பேசுபவரிடமிருந்து விலகி அல்லது பேசுபவர் குறிப்பிடும் இடத்துக்கு) செல்லுதல்go (mostly away from the speaker or to the place mentioned by the speaker)
   Page 156 of 204    1 … 154 155 156 157 158 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil