Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| மந்தம் | இயக்கக் குறைவு | sluggishness |
| மந்தமாருதம் | தென்றல் | breeze |
| மந்தி1 | (அஜீரணம் போன்ற காரணத்தால்) பசியற்ற நிலையில் இருத்தல் | (of stomach) be sluggish |
| மந்தி2 | (பொதுவாக) குரங்கு(குறிப்பாக) பெண் குரங்கு | (generally) monkey |
| மந்திரக்கோல் | (மந்திரவாதி வைத்திருக்கும்) அபூர்வ சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் சிறு கோல் | magic wand |
| மந்திரம் | (வழிபாடு, சடங்கு முதலியவற்றில் கூறப்படும்) சக்தி வாய்ந்த புனித வார்த்தைகள் அல்லது ஒலிகள் | sacred words or sounds |
| மந்திரவாதம் | மந்திரத்தால் நிகழ்த்தும் வித்தை | magical feats |
| மந்திரவாதி | மந்திரம் கூறி அசாதாரணமான செயல்களை நிகழ்த்தக் கூடிய நபர் | sorcerer |
| மந்திரி1 | (மந்திரவாதி போன்றோர் விஷத்தை இறக்கவோ நோய் முதலியவற்றை நீக்கவோ) மந்திரம் சொல்லுதல் | utter mantras (for effecting cure, etc.) |
| மந்திரி2 | (அரசனின்) அமைச்சன் | minister (to a king) |
| மந்திரிசபை | அமைச்சரவை | cabinet |
| மந்தை | கால்நடைகளின் தொகுதி | flock |
| மந்தைவெளி | மேய்ச்சலுக்கான மைதானம் | pasture ground |
| மப்பு1 | (மழை வருவதற்கு அறிகுறியான) கரு மேக மூட்டம் | overcast (sky) |
| மப்பு2 | (வயிற்றில் அஜீரணம் முதலியவற்றால்) பசியற்ற மந்த நிலை | (of stomach) sluggishness |
| மப்பும்மந்தாரமுமாக | (மழை வருவதற்கு அறிகுறியாக) வானம் இருட்டிக்கொண்டு கரிய மேக மூட்டத்துடன் | overcast |
| மமதை | இறுமாப்பு | haughtiness |
| மய்யத் | உயிரற்ற உடல் | dead body |
| மயக்கமருந்து | மயக்கம் ஏற்படுத்தும் மருந்து | any preparation that causes loss of consciousness or fainting |
| மயக்கு | கவர்ச்சிக்கு உள்ளாக்கிக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல் | charm (s.o.)bring (s.o.) under a spell. |
| மயங்கு | கவர்ச்சிக்கு உள்ளாகிக் கட்டுப்படுதல் | come under the spell |
| மயானம் | இறந்தவர்களைப் புதைக்கும் அல்லது எரிக்கும் இடம் | a place for burying or cremating the dead |
| மயான வைராக்கியம் | இறந்தவரை மயானத்தில் எரிப்பதைக் காணும்போது வாழ்க்கை நிலை இல்லாதது, உலகப் பொருள் மீது விருப்பம் கொள்வது தேவையற்றது என்ற வகையில் எடுக்கும் தற்காலிக உறுதி | a weak resolve to be less attached to worldly things at the sight of death |
| மயிர் | முடி | hair |
| மயிர்க்கால் | ரோமக்கால் | root of the hair |
| மயிர்க்கூச்செறி | உடல் முடி குத்திட்டு நிற்றல் | get goose-flesh |
| மயிர் மாணிக்கம் | (தோட்டங்களிலும் வீட்டு முகப்புகளிலும் அழகுக்காக வளர்க்கப்படும்) கம்பி போன்ற சிறிய இலைகளையும் சிவப்பு நிறப் பூக்களையும் உடைய ஒரு வகைக் கொடி | cypress vine |
| மயில் | மினுமினுப்பான கருநீல நிற உடலும் நீண்டு வளைந்த மெல்லிய கழுத்தும் உடைய பறவை | peacock |
| மயில் துத்தம் | (சாயமேற்றவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படும்) கருநீல நிறப் படிகம் | copper sulphate |
| மயிலாட்டம் | மயில் இறகுகளைக் கோத்து இடுப்பில் கட்டிக்கொண்டு மயில் ஆடுவது போல் ஆடும் ஒரு வகை நாட்டுப்புற நடனம் | a folk dance in which the dancer ties round his or her waist peacock feathers strung together |
| மயிலை | (காளை, பசு முதலியவற்றின் நிறத்தைக் குறிப்பிடும்போது) சாம்பல் நிறம் | (of cattle) mixed colour of white and black |
| மர்ம | (நாவல், திரைப்படம் தொடர்பாக) எதிர்பாராத திருப்பங்களுடன் திகில் அம்சங்கள் நிறைந்த | (of fiction, film, etc.) suspense-packed |
| மர்மம் | தெளிவாக விளங்காமலும் வெளிப்படையாக இல்லாமலும் மறைமுகக் காரணங்கள் கொண்டதாகவும் அமைவது | something puzzling |
| மர்மஸ்தானம் | (ஆணின்) உயிர்நிலையான இனவிருத்தி உறுப்பு | vital part of the body |
| மர | (இரத்த ஓட்டத் தடையால் தசை) கனத்து விறைப்பாக இருத்தல் | (of limbs) get stiff |
| மரக்கலம்/மரக்கலன் | (பொதுவாக) நீரில் செல்லும் மரத்தாலான போக்குவரத்துச் சாதனம்(குறிப்பாக) மரக் கப்பல் | (generally) vessel in waterways |
| மரக்கறி | (சைவ உணவான) காய்கறி, கீரை முதலியவை | (vegetarian food such as) vegetables, greens, etc |
| மரக்கால் | (தானியம் அளக்கும் முகத்தலளவையில்) எட்டு லிட்டர் கொண்ட அளவு | a measure of eight litres |
| மரகதம் | விலை உயர்ந்த பச்சை நிறக் கல் | emerald |
| மரங்கொத்தி | மரத்தைக் கொத்தித் துளைத்துப் பூச்சியைத் தின்பதற்கு ஏற்ற வகையில் அமைந்த நீண்ட, உறுதியான அலகையுடைய பறவை | woodpecker |
| மரச்சீனிக்கிழங்கு | மரவள்ளிக்கிழங்கு | tapioca |
| மரண அடி | மரணம் ஏற்படுவதற்குக் காரணமாகும் விதத்தில் விழும் பலத்த அடி | severe blow (that causes death) |
| மரண தண்டனை | கொலை முதலிய கடும் குற்றம் புரிந்தவரின் உயிரைப் போக்குமாறு நீதிமன்றம் வழங்கும் தண்டனை | sentence of death |
| மரணப்படுக்கை | (நோய் முதலியவற்றால்) மரணம் நெருங்கும் கட்டம் | deathbed |
| மரணம் | சாவு | death |
| மரணவாக்குமூலம் | மரணம் நெருங்கும் தறுவாயில் உள்ள ஒருவர் தரும் வாக்குமூலம் | testimony of a dying person |
| மரணி | மரணமடைதல் | die |
| மரநாய் | பகலில் மரப் பொந்துகளில் இருப்பதும் இரவில் நடமாடுவதுமான கரும் பழுப்பு நிற (பூனை போன்ற) விலங்கு | toddy-cat |
| மரப்பாச்சி | (பெண்) குழந்தைகளுக்கான மரப் பொம்மை | wooden doll (for little girls) |
| மரபியல் | சொல் வழங்கும் மரபைக் கூறும் இலக்கணப் பகுதி | the part of ancient grammar works which deals with convention of words |
| மரபு | (பண்பாட்டின் எல்லா அம்சங்களிலும்) பல காலமாகப் பின்பற்றப்பட்டு வருவது அல்லது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி | established usage |
| மரம் | பருத்த அடிப்பாகத்தையும் கிளைகளையும் உடையதாக உயரமாக வளரும் தாவரம் | tree |
| மரமண்டை | அறிவில்லாதவன் | blockhead |
| மரவள்ளிக்கிழங்கு | தடித்த பழுப்பு நிறத் தோலுடைய (உணவாகும்) ஒரு வகைக் கிழங்கு | tapioca |
| மரவுரி | (முற்காலத்தில் முனிவரும் காட்டில் வந்து வசிப்போரும்) ஆடையாகப் பயன்படுத்திய மரப் பட்டை | bark of tree used as clothing (formerly by ascetics, etc.) |
| மரவேலை | மரச் சாமான்கள் செய்யும் வேலை | carpentry |
| மரவை | (திருநீற்று) மடல் | receptacle (for sacred ash) |
| மராமத்து | கட்டடம், குளம், சாலை முதலியவற்றைப் பழுதுபார்க்கும் வேலை | repairs and maintenance (of public utilities) |
| மரி | சாதல் | die |
| மரியன்னை | இயேசுநாதரின் அன்னை | mother Mary |
| மரியாதை | (வயது, அந்தஸ்து, பதவி முதலியவை அடிப்படையில்) (ஒருவருக்கு) காட்டும் அல்லது ஏற்பட்டிருக்கும் மதிப்பு | respect (shown to or won by s |
| மரியாதைப் பன்மை | பன்மையாக இருந்தாலும் உயர்வு கருதி ஒருவரைக் குறிப்பிடும் முறையில் வழங்கும் சொல் | honorific plural |
| மரியாள் | இயேசுநாதரின் அன்னையைக் குறிப்பிடும் பெயர் | mary |
| மரு1 | பாலுண்ணி | wart |
| மருக்கொழுந்து | நறுமணம் மிகுந்த துளிர்களை இலைகளாகக் கொண்ட ஒரு வகைக் குத்துச் செடி | southern wood |
| மருங்கு | (ஓர் இடத்தின்) ஓரம் | side (of a place) |
| மருட்சி | பயத்தின் விளைவான கலக்கம் | perplexity due to fright |
| மருட்டு | பயமுறுத்துதல் | frighten |
| மருத்துவச்சி | (கிராமப்புறங்களில்) நிறைந்த அனுபவத்தால் பிரசவம்பார்ப்பவள் | midwife (in villages) |
| மருத்துவம் | நோய்க்கான காரணத்தைக் கண்டறிதலையும் நோயைக் குணப்படுத்துதலையும் நோக்கமாகக் கொண்ட சோதனைமுறையிலான வழிமுறை | practice of medicine |
| மருத்துவமனை | நோயாளிகள் சென்று அல்லது தங்கியிருந்து சிகிச்சை பெறும் இடம் | hospital |
| மருத்துவர் | முறையாக மருத்துவம் பயின்று சிகிச்சை அளிப்பதற்குத் தகுதி பெற்றவர் | medical practitioner |
| மருதம் | (ஐந்து வகை நிலப் பாகுபாட்டில்) வயலும் வயல் சார்ந்த இடமும் | (one of the fivefold divisions of land) agricultural tract |
| மருதாணி | அரைத்துப் பூசிக்கொண்டால் (உள்ளங்கை, நகம் முதலியவற்றில்) சிவப்பு நிறம் தரும் ஒரு வகை இலை/அந்த இலையை உடைய செடி | leaves of the plant henna crushed and used as dye (applied on the palms and nails)/(the plant) henna |
| மருந்தகம் | தனிப்பட்ட முறையில் நோயாளிகளைக் கவனித்து அனுப்புவதற்காக மருத்துவர் ஏற்படுத்திக்கொண்ட இடம் | dispensary |
| மருந்தாளுநர் | (ஆங்கில) மருந்துகளைத் தயாரிக்கும் முறையைப் பயின்றவர் | pharmacist |
| மருந்தியல் | மருந்தில் உள்ள மூலப் பொருள்பற்றியும் நலன்கள்பற்றியும் விவரிக்கும் அறிவியல் துறை | pharmacology |
| மருந்து | (நோய், காயம் முதலியவற்றை) குணப்படுத்தும் பொருள் | medicine |
| மருந்துக்கடை | மருந்துகள் விற்கும் கடை | medical shop |
| மருந்துக்குக்கூட | (எதிர்மறைச் சொற்களோடு மட்டும்) சிறிதளவுகூட, (எதிர்பார்க்கப்படும்) குறைந்த அளவிலும் | even a little |
| மருமகள் | மகனின் மனைவி | daughter-in-law |
| மருமகன் | மகளின் கணவன் | son-in-law |
| மருள் | (பயத்தால்) மிரளுதல் | be frightened |
| மரூஉ | மாற்றம் அடைந்து வழங்கும் சொல் | word that undergoes changes such as contraction |
| மரை | (திருகாணி போன்றவற்றின்) நுனியிலிருந்து மேல் நோக்கிச் சுற்றிச் செல்லும் கோடு போன்ற பதிவு | thread (of a bolt or nut) |
| மரைக்கார் | (முஸ்லிம் வழக்கில்) பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர் | trustee |
| மல் | அதிக கனமில்லாத இழைகளால் நெய்யப்பட்ட துணி | fabric woven with medium count yarns |
| மல்கு | (கண்ணீர்) நிறைதல் | (of tears) well up |
| மல்கோவா | திட்டுதிட்டாகப் பச்சை நிறம் காணப்படுகிற மஞ்சள் நிறத் தோலையும், திரட்சியான சதைப் பகுதியையும், மிகுந்த இனிப்புச் சுவையையும் உடைய ஒரு வகை மாம்பழம் | a variety of mango |
| மல்யுத்தம் | முதுகு தரையில் படும்படி பிடிபோட்டுத் தள்ளி விழச்செய்வதால் வெற்றியடையும் விளையாட்டு | wrestling |
| மல்லன் | மல்யுத்தம் செய்வதில் தேர்ச்சி பெற்றவன் | wrestler |
| மல்லாடு | (ஒன்றைச் செய்துமுடிக்க, சமாளிக்க) சிரமப்படுதல் | struggle |
| மல்லாத்து | மல்லாந்து இருக்கும்படிசெய்தல் | make |
| மல்லிகை | மணம் மிகுந்த சிறு கூம்பு வடிவ வெண்ணிறப் பூ/அந்தப் பூப் பூக்கும் செடி | a variety of jasmine (the flower and the plant) |
| மல்லுக்கட்டு1 | மற்போர் செய்தல் | wrestle |
| மல்லுக்கட்டு2 | மற்போர் | wrestling match |
| மல்லுக்கு நில் | (எதிர்த்துப் பேசி) சண்டைபோடுதல்/(எதிர்க்கும் நபரோடு) போராடுதல் | contend with |
| மலச்சிக்கல் | (எளிதில் அல்லது சரிவர) மலம் வெளியேறாதிருக்கும் நிலை | constipation |
| மலடன் | பெண்ணைக் கருத்தரிக்கச்செய்ய முடியாத உடல் குறைபாடு உடையவன் | sterile man |
| மலடி | கருத்தரிக்க முடியாத உடல் குறைபாடு உடையவள் | barren woman |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.