Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| மனவசியம் | மனத்தின் விழிப்பு நிலையை இழக்கச்செய்து உறக்கம் போன்ற நிலையில் ஆழ்த்தும் உளவியல் முறை | hypnotism |
| மனவிகாரம் | இயல்புக்கு விரோதமான திரிபுற்ற ஆசை, எண்ணம் முதலியவை | perversion or aberrations of the mind |
| மனவேற்றுமை/மனவேறுபாடு | (பிறரோடு ஒன்றைக்குறித்து) கருத்து வேற்றுமை | difference of opinion |
| மனனம் | மனப்பாடம் | memorizing |
| மனிதச்சங்கிலி | (ஒன்றைக்குறித்த தங்கள்) கருத்தை வெளிப்படுத்தும் விதமாகவோ எதிர்ப்பைக் காட்டும் விதமாகவோ திரண்டு வந்து சாலை ஓரத்தில் ஒருவரோடொருவர் கை கோர்த்து நிற்றல் | human beings forming a chain by joining hands to demonstrate their support or protest |
| மனிதத்தன்மை | அன்பு, இரக்கம் முதலிய மனிதனுடைய அடிப்படைப் பண்பு | human quality |
| மனிதநேயம் | மனிதன் மனிதனை மதித்துச் செலுத்தும் அன்பு | love for one another |
| மனிதம் | மனிதத்தன்மை | humanity |
| மனிதர் | (ஒருவரைக் குறிப்பிடுகையில்) நபர் | person |
| மனிதன் | (பொதுவாக) சிந்திக்கும் ஆற்றல் உடைய இனத்தில் ஒரு நபர்(குறிப்பாக) ஆண் | human being |
| மனிதாபிமானம் | மனிதன் மனிதனின் மீது காட்டும் பரிவு கலந்த உணர்வு | humanitarianism |
| மனிதாபிமானி | மனிதாபிமானம் உள்ளவர் | humanitarian |
| மனு | (வேலை முதலியவற்றிற்காக) விண்ணப்பிக்கும் படிவம் | application |
| மனுச்செய் | (வேலை முதலியவற்றுக்கு) மனு எழுதி அனுப்புதல் அல்லது தருதல் | make an application |
| மனுதாரர் | மனு அளிப்பவர் | applicant |
| மனுஷன் | மனிதன் | human being |
| மனுஷி | பெண் | woman |
| மனை | (வீடு கட்டுவதற்காக) அளந்து பிரிக்கப்பட்டிருக்கும் நிலம் | site (for a house) |
| மனைபூஜை/மனைமுகூர்த்தம் | மனையில் கட்டடம் கட்டும் வேலை துவங்குவதற்கு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து அந்த நாளில் இறைவனை வேண்டிச் செய்யும் பூஜை | inaugurating the construction work of a building with a puja invoking the blessings of god for successful completion |
| மனையாட்டி | மனைவி | wife |
| மனையாள் | மனைவி | wife |
| மனையியல் | வீட்டை அலங்கரித்தல், நிர்வகித்தல், சத்து நிறைந்த உணவு தயாரித்தல் முதலியவற்றை அறிவியல் முறையில் கற்றுத்தரும் படிப்பு | home science |
| மனைவி | ஓர் ஆணைச் சட்டப்படி திருமணம் செய்துகொண்டவள் | wife |
| மனோகரம்1 | மனத்துக்கு இன்பம் தரும் முறையில் அமைவது | delightfulness |
| மனோகரம்2 | கடலை மாவை அச்சில் வைத்துப் பிழிந்து பின்னர் வெல்லப் பாகில் கலந்து செய்த இனிப்புப் பண்டம் | a sweet prepared with the paste of chick-pea pressed through a mould, cooked in oil and rolled into balls with treacle |
| மனோதத்துவம் | உளவியல் | psychology |
| மனோதர்மம் | (இசை முதலியவற்றில்) கற்பனை வளம் | power of imagination |
| மனோபாவம் | மனப்பான்மை | attitude |
| மஜ்ஜை | எலும்பின் உள்ளீடாக இருப்பது | marrow |
| மஹர் | திருமணத்தின்போது மணப்பெண்ணின் நலனுக்காக மணமகனால் கொடுக்கப்படும் பணம் | a sum of money offered by the bridegroom to the bride at the time of wedding for her welfare and security |
| மா2 | விலங்கு | animal |
| மா3 | (அரிசி முதலியவற்றின்) பொடி | flour |
| மா4 | (நில அளவையில்) நூறு குழி கொண்ட அளவு | a land measure of hundred pit (equal to one-third of an acre) |
| மாக்கல் | வெளிர்ச் சாம்பல் நிறக் கல் | greyish blue soft stone |
| மாக்கோலம் | அரிசிமாவை நீரில் கரைத்துப் போடும் கோலம் | a கோலம் drawn using the paste of rice flour |
| மாகாணசபை | மாகாண நிர்வாகத்தைக் கவனிக்கும் உறுப்பினர்களைக் கொண்ட சபை | provincial council |
| மாகாணம் | (முன்பு) நிர்வாக வசதியை மட்டுமே கருதிப் பிரிக்கப்பட்டிருந்த நிலப்பகுதி | (formerly) province |
| மாங்கல்யம் | தாலி | wedding chain |
| மாங்காய் | மாமரத்தின் புளிப்புச் சுவையுடைய காய் | unripe mango |
| மாச்சரியம் | பகைமை | hostility |
| மாசாலம் | மாய்மாலம் | pretension |
| மாசி1 | பதினோராவது தமிழ் மாதத்தின் பெயர் | name of the eleventh Tamil month, i |
| மாசி2 | ஒரு வகை மீனைக் காயவைத்து இடித்துத் தயாரிக்கும் பொடி | powdered dry fish |
| மாசிக்காய் | (நாட்டு வைத்தியத்தில் மருந்தாகப் பயன்படும்) ஒரு வகை மரத்தின் இறுகிக் கெட்டியான பால் | galls (used as a medicine) |
| மாசு | (ஒரு பொருளில் நீக்க வேண்டியதாக உள்ள அல்லது ஒன்றின் தூய்மையைக் கெடுக்கும் வகையில் சேரும்) அழுக்கு | dirt |
| மாசுமறுவற்ற | எந்த வித அழுக்கும் இல்லாத | pure |
| மாஞ்சா | (பட்டத்தின் கயிற்றில் தடவுவதற்குப் பயன்படுத்தும்) கண்ணாடிப் பொடி கலந்த வஜ்ரப் பசை | a kind of glue mixed with glass dust (to strengthen the string of a kite) |
| மாட்சி | பெருமை பொருந்திய உயர்நிலை | glorious state |
| மாட்டல் | காதில் அணிந்திருக்கும் ஆபரணத்தோடு இணைந்த, தலைமுடியில் செருகிக்கொள்ளக் கூடிய சங்கிலி | a chain attached to the ear-stud to be hooked to the hair above |
| மாட்டு1 | (செருகுதல், நுழைத்தல், திருகுதல் முதலியவற்றின் மூலமாக ஒன்றை மற்றொன்றில் நிற்குமாறு) பொருத்துதல் | hang (on a peg, etc.) |
| மாட்டுத்தாவணி | மாடுகள் வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தை | cattle fair |
| மாட்டுப்பெண் | மருமகள் | daughter-in-law |
| மாட்டுவண்டி | ஒரு மாடு அல்லது இரு மாடுகள் இழுத்துச் செல்லும், மரத்தால் செய்த வண்டி | bullock cart |
| மாடம்1 | ஏற்றிய விளக்கை வைப்பதற்குச் சுவரில் உள்ள குழிவான சிறிய அமைப்பு | a small niche in the wall of a house to keep an oil lamp |
| மாடம்2 | (அரண்மனை, மாளிகை முதலியவற்றில்) பலகணிகளுடன் கூடிய மாடிப் பகுதி | upper storey (of a palace) with (lattice) windows |
| மாடி | (கட்டடத்தில்) தரை மட்டத்தில் அமைந்திருக்கிற தளத்துக்கு மேல் இருக்கும் தளம் | upper floor |
| மாடு | உழுதல், வண்டி இழுத்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் ஆணினத்தையும் பால்தரக் கூடிய பெண்ணினத்தையும் உள்ளடக்கிய, (கொம்புடைய) வீட்டுவிலங்கின் பொதுப்பெயர் | common name for cow, ox and buffalo |
| மாண்பு | உன்னதத் தன்மை | dignity |
| மாணவன் | பள்ளியிலோ கல்லூரியிலோ கல்வி கற்பவன் | pupil |
| மாணவி | மாணவன் என்பதன் பெண்பால் | feminine of மாணவன் |
| மாணாக்கன் | மாணவன் | pupil |
| மாணிக்கம் | கரும் சிவப்பு நிறத்தில் உள்ள விலை உயர்ந்த கல் | ruby |
| மாத்திரை1 | சிறிய வில்லை வடிவ மருந்து | tablet |
| மாதம் | ஓர் ஆண்டின் மொத்த நாட்களைப் பன்னிரண்டாகப் பகுத்த பிரிவுகளுள் ஒன்று | month |
| மாதர் | பெண்கள் | women |
| மாதவிடாய்/மாதவிலக்கு | (பெண்களுக்கு) மாதம் ஒரு முறை ஏற்படும் இரத்த வெளியேற்றம் | menstrual period |
| மாதா | அன்னை | mother |
| மாதா கோயில் | மரியன்னையின் கோயில் | church |
| மாதாந்தர/மாதாந்திர | மாதத்திற்கு ஒரு முறையான | monthly |
| மாதிரி1 | (-ஆக, -ஆன) தினுசு | kind |
| மாதிரி2 | (பெயரெச்சத்தின் பின்) உண்மைக்கு ஒத்த நிலையில் இருப்பதைக் காட்ட இணைக்கப்படும் சொல் | used to indicate that sth. is close to the reality or sth. equals another |
| மாது | பெண் | woman |
| மாதுளை | பவள நிறச் சதை ஒட்டிய முத்துகளை உள்ளீடாக உடைய, தடித்த மேல் தோல் உடைய பழம்/மேற்குறிப்பிட்ட பழம் காய்க்கும் மரம் | pomegranate (fruit and tree) |
| மாந்தம் | குழந்தைகளுக்குப் பல நோய்கள் வரக் காரணமாகும் ஒரு வித அஜீரணம் | indigestion of infants |
| மாந்தர் | மக்கள் | human beings |
| மாந்திரீகம் | தீய சக்திகளை மந்திரம் கூறி அடக்கும் அல்லது வெளியேற்றும் வித்தை | art of controlling or driving out the evil spirits by means of incantation |
| மாந்திரீகன் | மாந்திரீகம் தெரிந்தவன் | sorcerer |
| மாநகரம் | பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பெரிய நகரம் | city |
| மாநகராட்சி | மாநகரத்தை நிர்வகிக்கும் உள்ளாட்சி அமைப்பு | corporation of a city |
| மாநாடு | பெருமளவில் உறுப்பினர்களும் பார்வையாளர்களும் கலந்துகொள்ளும் கூட்டம் | conference |
| மாநிலங்களவை | சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோடு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட, இந்தியப் பாராளுமன்றத்தின் ஓர் அவை | upper house of the Indian parliament |
| மாநிலம் | (இந்தியாவில் பொதுவாக) மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிலப் பகுதி | (in India) state (organized on the basis of a common language) |
| மாநிறம் | (மனிதர்களின் உடல் நிறத்தைக் குறிப்பிடும்போது) சிவப்பு என்றோ கறுப்பு என்றோ சொல்ல முடியாத, இரண்டுக்கும் இடைப்பட்ட நிறம் | complexion that is neither too fair nor too dark |
| மாப்பிள்ளை அழைப்பு | திருமணம் நடக்கும் இடத்துக்கு மாப்பிள்ளையை உரிய மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வரும் சடங்கு | the ceremony of receiving and taking the bridegroom in a procession to the wedding |
| மாப்பிள்ளை மாடு | பொலிகாளை | stud bull |
| மாப்பு | மன்னிப்பு | pardon |
| மாம்பழம் | இனிப்புச் சுவைக்காக விரும்பி உண்ணப்படும், மாமரத்தின் பழம் | mango fruit |
| மாமரம் | முதலில் புளிப்பாகவும் பழுத்த பின் இனிப்பாகவும் இருக்கும் காயைத் தரும் மரம் | mango tree |
| மாமன்னன் | பேரரசர் | emperor |
| மாமனார் | கணவனுடைய அல்லது மனைவியுடைய தந்தை | father-in-law |
| மாமாங்கம் | பன்னிரண்டு ஆண்டுகள் கொண்ட காலம் | a period of twelve years |
| மாமிசப்பட்சிணி | பிற விலங்கின் இறைச்சியை உணவாக உட்கொள்ளும் பிராணி | carnivorous animal |
| மாமிசம் | (பொதுவாக விலங்கினத்தின்) தசை | meat (of animals in general) |
| மாமியார் | கணவனுடைய அல்லது மனைவியுடைய தாய் | mother-in-law |
| மாமியார்வீடு | சிறை | (used ironically) prison |
| மாமூல் | (-ஆக, -ஆன) (மக்களின் வாழ்க்கை நிலையைக் குறிப்பிடும்போது) சகஜம் | normalcy |
| மாய்ச்சல் | சோம்பல் | laziness |
| மாய்ந்துமாய்ந்து | மிகவும் சிரமப்பட்டுச் சக்தி முழுவதையும் செலவழித்து | slaving away |
| மாயம் | இல்லாதது இருப்பதாகத் தெரியும் பொய்மை | illusion |
| மாயமான் | தேடி அடையத் தூண்டுகிற வசீகரத் தன்மையுடையதாகவும் தேடிச் சென்றால் கிட்டாததாகவும் உள்ள ஒன்று | elusive |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.