Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| உய்வு | (தீவினையிலிருந்து நீங்கிப் பெறும்) நற்கதி | deliverance (from evil) |
| உயர்1 | (ஒன்று தன் நிலையிலிருந்து) மேல்நோக்கி எழும்புதல் | raise |
| உயர்2 | (பல நிலைகளாகப் பகுக்கக் கூடியதில்) மேல் | higher (in grades or in hierarchical set up) |
| உயர் அளவு | (விலை, திட்ட மதிப்பு முதலியவற்றின்) இறுதி எல்லை | maximum (limit) |
| உயர்ச்சி | (ஒன்றின்) மேலோங்கிய நிலை | highest form |
| உயர்திணை | மனிதரையும் தெய்வங்களையும் உள்ளடக்கிய பெயர்ச்சொல் பகுப்பு | a class of nouns which includes human beings and celestial beings |
| உயர்ந்த | உயரமான | highest |
| உயர்ந்தபட்சம் | அதிக அளவு | maximum |
| உயர்ந்தோங்கு | (வாழ்க்கை, தொழில் போன்றவற்றில்) சிறப்பான நிலையை அடைதல் | attain a high level |
| உயர்நிலைப் பள்ளி | பத்தாம் வகுப்புவரை உள்ள பள்ளிக்கூடம் | high school (up to the 10th standard) |
| உயர் நீதிமன்றம் | (இந்தியாவில்) மாநிலத்திற்கான தலைமை நீதிமன்றம் | high Court (of a State in India) |
| உயர்மட்டக் குழு | நிர்வாகம் தொடர்பாக எழும் பிரச்சினைகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்கும் பொருட்டு அரசால் நியமிக்கப்படும் குழு | high level committee (constituted by the government to study and report on specified issues) |
| உயர்விளைச்சல் ரகம் | பொறுக்கு விதைகள் மூலமோ வீரிய விதைகள் மூலமோ பெறப்படும் அதிக மகசூல் தரும் பயிர் ரகம் | high yielding variety |
| உயர்வு | (அளவு, விலை, மதிப்பு போன்றவற்றில்) அதிகரிப்பு | raise (in salary) |
| உயர்வு மனப்பான்மை | மற்றவர்களைவிடத் தான் எல்லா வகையிலும் உயர்ந்தவன் என்ற (தவறான) மனப்போக்கு | superiority complex |
| உயரம் | (ஒருவரின் அல்லது ஒன்றின்) அடிப்பகுதியிலிருந்து மேல்பகுதிவரை உள்ள அளவு | height |
| உயரிய | உயர்ந்த | noble |
| உயரே | மேலே | above |
| உயிர்1 | (கருவாக) உருவாதல் | (of life) evolve |
| உயிர்2 | (மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவற்றின் எல்லா இயக்கங்களுக்கும்) ஆதார சக்தி | sign of life |
| உயிர்க் கொலை | உயிரைப் போக்கும் கொடும் செயல் | act of murder |
| உயிர்கா | ஆபத்திலிருந்து காத்தல் | save life |
| உயிர்ச்சத்து | உடல் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு அவசியமானதும் சில வகை உணவுப் பொருள்களில் காணப்படுவதுமான பல வகைச் சத்துப் பொருள் | vitamin |
| உயிர்ச்சேதம் | (மனிதன், விலங்கு ஆகியவற்றின்) இழப்பு | loss of life |
| உயிர்த்துடிப்பு | உடலில் உயிர் இருப்பதை உணர்த்தும் அசைவு | pulse of life |
| உயிர்த்தெழு | மீண்டும் உயிர்பெறுதல் | come back to life again |
| உயிர்நாடி | (ஒன்று) நிலைப்பதற்கு ஆதாரமானது | seat of life |
| உயிர்நிலை | உயிர்நாடி | vital element |
| உயிர்ப்பி | (வழக்கற்றுப்போன ஒன்றை) மீண்டும் வழக்குக்குக் கொண்டுவருதல் | resurrect (custom, etc.) |
| உயிர்ப்பிச்சை | உயிர் நிலைக்க மன்றாடிக் கேட்டுக்கொள்ளுதல் | sparing of life |
| உயிர்ப்பு | உயிர் இருப்பதை வெளிப்படுத்தும் மூச்சு, இயக்கம் முதலியன | animating factor (such as breath, movement, etc.) |
| உயிர்பிழை | மரணத்திலிருந்து தப்பித்தல் | escape certain death |
| உயிர்போ | மிகுந்த வேதனை ஏற்படுதல் | (nearly) die (of pain, etc.) |
| உயிர்மெய் | மெய்யெழுத்து முன்னும் உயிரெழுத்து பின்னுமாக வந்து இணைந்து ஒலிக்கும் ஒலி | the combination of a consonant and a vowel sound |
| உயிர்வாழ் | உயிரோடிருத்தல் | live |
| உயிர்விடு | (நம்பும் ஒருவருக்காக அல்லது கொள்கைக்காக) உயிரை இழத்தல் | give up life |
| உயிரணு | உயிரினங்களின் உடல் இயக்கத்திற்கும் அமைப்பிற்கும் அடிப்படையான, கண்ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய கூறு | cell |
| உயிரி | உயிர்வாழும் ஜந்து | living creature |
| உயிரியல் | உயிர் வாழ்வனபற்றிய அறிவியல் | biology |
| உயிரியல் பூங்கா | விலங்குகளும் பறவைகளும் தம்முடைய இயற்கையான சூழ்நிலையில் வாழ்வது போலவே தோற்றமளிக்கும் வகையில் பெரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இடம் | zoological garden |
| உயிரினம் | உயிருள்ளவை அனைத்தையும் குறிக்கும் பொதுப்பெயர் | common term referring to living beings or creatures |
| உயிரூட்டு | புது வேகம் அல்லது எழுச்சி தருதல் | enliven |
| உயிரெடு | (ஒருவருடைய பொறுமை எல்லை மீறிப்போகும் அளவிற்கு) தொந்தரவுசெய்தல் | trouble or pester |
| உயிரெழுத்து | உயிர் | vowel |
| உயிரைக்கொடு | மிகுந்த ஈடுபாட்டுடன் தன்னால் இயன்றது அனைத்தையும் செய்தல் | give heart and soul |
| உயிரை வாங்கு | (புயல், வெள்ளம் அல்லது போர், நோய், முதலியவை) உயிரை இழக்கச்செய்தல் | take a toll of life |
| உயிரை வைத்திரு | உயிர்வாழ்தல் | keep alive |
| உயிரோட்டம் | (கதை, ஓவியம் முதலியவற்றுக்கு) உணர்ச்சி தரும் அம்சம் | verve |
| உயில் | தன் சொத்துகளைத் தன் மரணத்துக்குப் பின் பிறர் எவ்வாறு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை ஒருவர் எழுதிவைக்கும் சட்டபூர்வமான பத்திரம் | (last) will (and testament) |
| உர்-என்று | முறைப்பாக | unfriendly |
| உரக்க | (பேசுதல், சிரித்தல், படித்தல் போன்ற செயல்களில்) குரல் ஒலி அதிகரிக்கும்படியாக | aloud |
| உரசல் | (ஒருவர் மற்றொருவரின் மீது ஏற்படுத்தும்) உராய்வு | body contact through rubbing |
| உரசு | உராய்தல் | rub |
| உரத்த | (குரல் ஒலியைக் குறிப்பிடுகையில்) சத்தம் மிகுந்த | loud |
| உரத்த சிந்தனை | (மேலும் விரிவாக்கும் நோக்கத்துடன்) மனத்தில் தோன்றும் எண்ணம், கருத்து ஆகியவற்றை அப்படியே வெளிப்படுத்துதல் | loud thinking |
| உரம்1 | (பயிர்களின் வளர்ச்சிக்கு இடப்படுகிற) ஊட்டச் சத்து | anything that enriches the soil |
| உரல் | வட்ட வடிவ மேல்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப்பகுதியுடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுவதுமான (முழங்கால் உயர) கல் | a knee-high hour-glass shaped stone with a cup like pit in the middle used for pounding grains |
| உராய் | (ஒன்றின் மீது) ஒழுங்கற்ற முறையில் படுதல் | rub |
| உராய்வு | (ஒன்றோடொன்று) உராயும் செயல் | act of rubbing (one against the other) |
| உரி1 | (உடம்பின் தோல், மரத்தின் பட்டை முதலியன) பிரிந்து வருதல் | (of skin, bark, etc.) come off |
| உரிச்சொல் | பெயருக்கும் வினைக்கும் (பெரும்பாலும்) அடையாக வரும் சொல் | a class of words which have, mostly, an attributive function |
| உரித்தாக்கு | (ஒருவருக்குத் தன் நன்றி, வாழ்த்து முதலியவற்றை) சாரச்செய்தல் | render (thanks, greetings, etc.) |
| உரித்தாகு | (நன்றி, வாழ்த்து முதலியன ஒருவருக்கு) சேர்தல் | (of thanks, wishes, etc.) be due to |
| உரித்தான | இயல்பான | characteristic or typical of |
| உரித்துக்காட்டு | (இதுவரை அறியப்படாமல் இருந்த உண்மையான தோற்றத்தை அல்லது குணத்தை) வெளிப்படுத்துதல் | reveal (the true self of s |
| உரித்துவை | (தோற்றத்தில், குணத்தில் நெருங்கிய உறவினரை) ஒத்திருத்தல் | take after (an older relative) |
| உரிமம் | ஓர் இடத்தைப் பயன்படுத்துதல், ஒரு தொழிலை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கு உரிய அதிகாரியிடமிருந்து பெறப்படும் அனுமதி | licence |
| உரிமை | சட்டபூர்வமாக அல்லது நியாய அடிப்படையில் ஒருவர் கோருவது அல்லது சட்டமோ மரபோ அனுமதிப்பது | right(s) one is entitled to |
| உரிமைக் குழு | சட்டமன்றத்தின் அல்லது நாடாளுமன்றத்தின் உரிமைகளையும் உறுப்பினர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அந்த அவை உறுப்பினர்களுள் சிலரைக் கொண்ட குழு | privileges committee (of the legislative bodies) |
| உரிமைப்பங்கு | காப்புரிமை செய்யப்பட்ட ஒன்றைப் பயன்படுத்துபவர் அதன் உரிமையாளருக்குத் தர வேண்டிய தொகை/அரசுக்கோ தனிப்பட்டவருக்கோ உரிமையாக உள்ள நிலத்திலிருந்து எடுக்கப்படும் (எண்ணெய் முதலிய) பொருளுக்கு ஒரு நிறுவனம் தர வேண்டிய தொகை | royalty |
| உரிமையாளர் | (சொத்துக்கு, பொருளுக்கு) சொந்தக்காரர்(முதலீடு செய்து) தொழிலை நடத்துபவர் | owner |
| உரிமையியல் | சொத்துரிமை, சட்டத்திற்குப் புறம்பான இழப்பு போன்ற தனி நபர் உரிமை தொடர்பான சட்டத் துறை | branch of law concerning civil, private rights and torts |
| உரிய | இயல்பாக அமைந்த அல்லது இருக்கிற | characteristic of or to |
| உரு | (ஒன்றை இன்னது எனத் தெரிந்துகொள்வதற்கு உரிய) புற (அடையாள) தோற்றம் | external (identifiable) appearance |
| உருக்கம்1 | (உள்ள) நெகிழ்ச்சி | melting (of heart) |
| உருக்கம்2 | கடும் வெம்மை | sultriness |
| உருக்கு1 | (உலோகம், வெண்ணெய் போன்றவற்றை வெப்பத்தின்மூலம்) இளகச்செய்தல் | melt |
| உருக்கு2 | எஃகு | steel |
| உருக்குலை1 | (உடலின் வெளித்தோற்றம்) மாற்றம் அடைதல் | lose figure and weight |
| உருக்குலை2 | (உடலின் வெளித்தோற்றத்தை) மாற்றம் அடையச்செய்தல் | deform |
| உருக்கொள் | உருவாகுதல் | take form or shape |
| உருகு | (பனிக்கட்டி, வெண்ணெய் போன்றவை வெப்பத்தினால்) இளகுதல் | melt |
| உருகுநிலை | ஒரு திடப் பொருள் திரவ நிலைக்கு மாறத் தொடங்கும் வெப்பநிலை | melting point |
| உருட்சிதிரட்சி-ஆக/-ஆன | சதைப்பற்றோடு திடமாக/சதைப்பற்றோடு திடமான | stockily/muscular |
| உருட்டல்மிரட்டல் | (முகத்தில் கோபம், கடுமை போன்றவை வெளிப்பட, பலமாக அதட்டி) பயமுறுத்துதல் | brow-beating |
| உருட்டிப்புரட்டி | (செயல் நிறைவேறத் தனக்குத் தெரிந்த) எல்லா வித வழிமுறைகளையும் உபாயங்களையும் கையாண்டு | moving heaven and earth (to accomplish a task) |
| உருட்டு | (பந்து போல்) உருண்டையாக்குதல் | roll |
| உருட்டுப்புரட்டு | (ஒருவர் தான் செய்யும் செயல் நிறைவேறக் கையாளும்) முறைகேடான வழிமுறை | fraud |
| உருண்ட | (தலை, முகம் போன்றவற்றைக் குறிக்கையில்) வட்ட வடிவமான | (of head, face, etc.) round |
| உருது | (இந்தியாவின் சில மாநிலங்களிலும் பாகிஸ்தானிலும் பேசப்படும்) பாரசீக மொழிச் சொற்கள் கலந்த இந்தியோடு தொடர்புடைய மொழி | urdu (the language) |
| உருப்படி | (எண்ணக் கூடிய) பொருள் | (countable) item |
| உருப்படியாக1 | (ஒருவருடைய) உயிருக்கு ஆபத்து இல்லாமல்(ஒரு பொருள்) சேதம் அடையாமல் | intact |
| உருப்படியாக2/உருப்படியான | பயனுள்ள விதத்தில் | constructively/constructive |
| உருப்படு | (பெரும்பாலும் எதிர்மறையில்) (வாழ்க்கையில்) நல்ல நிலை அடைதல் | rise to a position |
| உருப்பெருக்காடி | பொருளின் வடிவ அளவைப் பெரிதாக்கிக் காட்டும் தன்மை கொண்ட குவியாடி | magnifying glass |
| உருப்பெறு | (கனவு, கருத்து, எண்ணம் முதலியன மனத்தில்) வடிவம் பெறுதல் | (of ideas, thought, etc.) take shape |
| உருப்போடு | பல முறை படித்துப்படித்து நினைவில்வைத்தல் | learn by rote |
| உருபு | பொருளின் வேற்றுமையைக் காட்டும் அல்லது உவமையைக் குறிக்கும் இடைச்சொல் | case suffix |
| உருமால் | தலைப்பாகை | turban |
| உருவ அமைதி | (கதை, கவிதை, ஓவியம் போன்ற கலைப் படைப்புகளில்) வடிவ ஒழுங்கு | harmony in form |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.