Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| உள்ளிட்டு | (கூறப்பட்டவற்றையும் அல்லது கூறப்பட்டதையும்) சேர்த்து | including |
| உள்ளிப்பூண்டு | வெள்ளைப்பூண்டு | garlic |
| உள்ளிருப்பு வேலைநிறுத்தம் | தொழிலாளர்கள் தொழிற்சாலையின் உள்ளேயே தங்கியிருந்து நடத்தும் வேலைநிறுத்தம் | a form of protest where the employees stay on the premises of the factory and strike work |
| உள்ளீடு | (ஒன்றுக்கு) திண்மையைத் தரும் வகையில் உள்ளிருக்கும் பொருள் | (the hard) core or material (of the plants that gives them the solidness) |
| உள்ளுக்கு | (மாத்திரை, மருந்து முதலியவற்றை) வாய்வழியாக வயிற்றுக்குள் | (of drugs) orally |
| உள்ளுக்குள் | மனத்தின் அடித்தளத்தில் | in the innermost of the mind |
| உள்ளுணர்வு | (காரணம் தெரியாவிட்டாலும் ஒரு நிகழ்ச்சி நடக்கப்போவதை) மனம் தானே உணரும் திறன் | intuition |
| உள்ளும்புறமும் | முழுமையாக | in and out |
| உள்ளுறை1 | (சங்க இலக்கிய அகப்பாடல்களில்) வெளிப்படையாகப் பொருளைக் கூறாமல் குறிப்பால் உணர்த்தும் உவமை | (in akam poems) implicit simile |
| உள்ளுறை2 | உள்ளார்ந்த | intrinsic |
| உள்ளுறை வெப்பம் | ஒரு திடப் பொருள் திரவ நிலையை அல்லது திரவம் வாயு நிலையை அடையும்போது வெப்ப நிலையில் மாற்றம் இல்லாமல் அது உள்வாங்கும் அல்லது வெளிவிடும் வெப்பச் சக்தி | latent heat |
| உள்ளூர் | (தான்) வாழும் (அதே) ஊர் | home town |
| உள்ளூர் வரி | பொருள்களின் மீது உள்ளாட்சி நிர்வாகமோ மாநில அரசோ விதிக்கும் விற்பனை வரி போன்ற வரி | tax levied on commodities either by the state government or local bodies |
| உளநூல் | உளவியல் | psychology |
| உளப்பாங்கு | மனப்பாங்கு | attitude |
| உளவாளி | உளவு வேலையில் ஈடுபடுபவர் | spy |
| உளவியல் | மனித மனம் செயல்படுவதைக் குறித்தும் மனத்தின் வெளிப்பாடுகளான நடத்தை, குணம் குறித்தும் ஆராயும் (அறிவியல்) துறை | psychology |
| உளவு | ஒரு நாட்டின் ராணுவ ரகசியம் போன்றவற்றையோ ஒரு போட்டி அமைப்பின் திட்டம் முதலியவற்றையோ தந்திரமாகச் சேகரிக்கும் முறை | spying |
| உளவு பார் | உளவு வேலையில் ஈடுபடுதல் | spy |
| உளறுவாயன் | ரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாமல் எளிதில் வெளியே சொல்லிவிடுபவன் | one who blurts out |
| உளு | (காய்ந்த மரம், மரத்தாலான பொருள்கள் புழு, சிறு வண்டு முதலியவற்றால் அரிக்கப்பட்டு) பொடியாதல் | (of wood) be worm eaten |
| உளுத்தம் பருப்பு/உளுந்தம் பருப்பு | உடைத்துத் தோல் நீக்கிய உளுந்து | broken blackgram (the outer cover of which is removed) |
| உளுந்து | மெல்லிய கரு நிற மேல்தோல் மூடிய உருண்டை வடிவப் பருப்பு | blackgram (which is the main ingredient with rice in preparing இட்லி) |
| உளை1 | (கை, கால், மூட்டு போன்ற இடங்களில்) குத்திக் குடைந்து வலித்தல் | (of limbs and joints) have pricking and gripping pain |
| உளை2 | (வயலில் அல்லது மண் சாலையில்) மண்ணும் நீரும் கலந்த கலவை | mire |
| உளைச்சல் | (கை, கால், மூட்டு போன்ற இடங்களில் ஏற்படும்) கடுமையான குடைச்சல் வலி | pricking and gripping pain (in limbs and joints) |
| உற்சவம் | (கோயிலில்) இறைவன் விக்கிரகத்தை அலங்கரித்து வீதியுலா வரச்செய்து நிகழ்த்தும் விழா/(சமயத் தொடர்பான) கொண்டாட்டம் | (Hindu) temple festival (in which the deity is decorated and taken out in procession, etc.)/(religious) celebration |
| உற்சவமூர்த்தி/உற்சவர் | (கோயிலில்) உற்சவக் காலங்களிலும் கும்பாபிஷேகத்தின்போதும் மூலவராகவே பாவிக்கப்படும் விக்கிரகம் | idol (to which the sanctity is transferred) worshipped during festivals and during purificatory ceremonies |
| உற்சாகம் | (-ஆக, -ஆன) (ஒன்று முடிந்ததும் ஏற்படும்) மகிழ்ச்சி | cheerfulness |
| உற்பத்தி | (பொருள்) தயாரித்தல் | act of producing (products)/(agricultural) production |
| உற்பத்தியாகு | (நதி ஓர் இடத்திலிருந்து) தோன்றுதல் | (of river) originate |
| உற்பாதம் | தீய விளைவு | serious misfortune |
| உற்ற | மிகவும் வேண்டிய | trusted |
| உற்றறிவு | தொடு உணர்வு | sense of touch |
| உற்றார் | (நெருங்கிய) உறவினர் | (close) relative |
| உறக்கம் | தூக்கம் | sleep |
| உறங்கு | தூங்குதல் | sleep |
| உறவாடு | உரிமையுடன் பழகுதல் | move closely |
| உறவினர் | சொந்தக்காரர் | relative |
| உறவு | (பிறந்த குடும்பத்தின்மூலமாகவும் திருமணத்தின்மூலமாகவும் ஏற்படும்) சொந்தம் | relationship |
| உறவுமுறை | (இருவரிடையே உள்ள) உறவு அழைக்கப்படும் விதம் | manner of relationship (between two persons related or otherwise) |
| உறி1 | உறிஞ்சுதல் | draw in |
| உறி2 | (வீடுகளில் பால், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்திரத்திலிருந்து தொங்கவிட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்பு வடிவ அமைப்பு | a conical network of rope or chain (suspended from the roof beam for placing pots containing foodstuff such as milk, butter to keep them away from ants, etc.) |
| உறிஞ்சு | (உதடுகளைக் குவித்தோ சிறு குழல் வழியாகவோ திரவத்தை) உள்ளிழுத்தல்(மூக்கினால் பொடி முதலியவற்றை) உள்ளிழுத்தல் | sip (a drink) |
| உறிஞ்சுதாள் | மை முதலியவற்றை உறிஞ்சி உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மை கொண்ட ஒரு வகைக் காகிதம் | blotting-paper |
| உறு2 | வினைப்படுத்தும் வினை | a verbalizer |
| உறுத்து | தொல்லையான நெருடல் உணர்ச்சி தருதல் | get an uneasy feeling (caused by some irritant) |
| உறுதி1 | (பொருளின் தன்மையைக் குறிக்கையில்) பலம் | strength |
| உறுதி2 | பத்திரம் | deed |
| உறுதிசெய் | உண்மையாக்குதல் | confirm |
| உறுதிப்பாடு | திட நம்பிக்கை | firm faith |
| உறுதிப்பொருள் | மனிதன் வாழ்வில் அடையத் தகுந்தவையாகக் கூறப்படும் (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு) குறிக்கோள் | objectives worthy of human pursuit (viz |
| உறுதிமொழி | கட்டுப்படுத்தும் (வாய்மூலமான) தீர்மானம் அல்லது (எழுத்துமூலமான) ஒப்பந்தம் | (solemn) promise |
| உறுதுணை | (ஒருவருக்கு அல்லது ஒன்றைச் செய்வதற்கு) இன்றியமையாத பெரும் உதவி | unflinching support |
| உறுப்பினர் | வரையறுக்கப்பட்ட அமைப்பை அல்லது குழுவைச் சார்ந்தவர் | member (of an organized group) |
| உறுப்பு | உடலில் ஒரு பாகம் | part of the body |
| உறுமல் | (சில விலங்குகள்) உறுமும் ஒலி | (of pig) grunt |
| உறுமிமேளம் | வளைந்த முன்பகுதியைக் கொண்ட கோலால் பக்கப் பகுதியில் அழுத்தி இழுக்கும்போது ஒரு வகையான உறுமல் சத்தத்தை எழுப்பும் நீள் உருண்டை வடிவத் தோல் கருவி | a kind of two-headed drum which produces a sound like a growl when played with a curved stick |
| உறை1 | (நீர், எண்ணெய், இரத்தம் முதலியன) கெட்டித் தன்மை அடைதல் | (of water) freeze |
| உறை2 | காரமாக இருத்தல் | be pungent or hot |
| உறை3 | (கடிதம் முதலியவற்றை வைப்பதற்குப் பயன்படுத்தும்) ஒரு பக்கம் திறக்கக் கூடிய (தாளால் ஆன) கூடு(பொருளை மூடுவதற்குப் பயன்படுத்தும்) துணி அல்லது துணி போன்ற பொருளால் ஆன மூடி | envelope (for letters, etc.) |
| உறை ஊற்று | (காய்ச்சி ஆறவைத்த) பாலைத் தயிராக்குவதற்காகச் சிறிது புளிப்பு (பெரும்பாலும் மோர்த் துளிகள்) சேர்த்தல் | make curds by adding sour substance (usually a few drops of buttermilk) |
| உறைநிலை | ஒரு திரவப் பொருள் திட நிலைக்கு மாறத் தொடங்கும் வெப்பநிலை | freezing or solidifying point |
| உறைப்பு | மிளகாய் போன்றவற்றைக் கடிக்கும்போது உணரப்படுகிற சுவை | (taste of) pungency |
| உறைபனி | (நீர் உறைந்துவிடக் கூடிய வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையில்) நிலத்தின் மேல் நீர் உறைந்து ஏற்படுகிற குளிர் | frost |
| உறை மோர் | பாலைத் தயிராக்குவதற்காக ஊற்றப்படுகிற மோர் | buttermilk (used for making curds) |
| உறையுள் | தங்கும் இடம் | boarding |
| உறைவிடம் | தங்கியிருக்கிற அல்லது வசிக்கிற இடம் | abode |
| உன்மத்தம் | உணர்ச்சியின் உக்கிர நிலை | frenzy |
| உன்னதம் | (தன்மையில், பண்பில், இயல்பில்) மிக உயர்வானது | eminence |
| உன்னிப்பு | கூர்மை | watchfulness |
| உஷ்ணம் | (ஒருவருடைய உடலின் அல்லது நெருப்பு, சீதோஷ்ணம் போன்றவற்றின்) வெப்பம் | heat |
| உஷ்ணமானி | வெப்பமானி | thermometer |
| உஷார் | (-ஆக, -ஆன) (செயலில் காட்டும்) விழிப்புணர்வு | watchfulness |
| ஊக்க ஊ??தியம் | (பெரும்பாலும் தொழிற்சாலைகளில்) உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டுத் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துக்கு மேல் அதிகமாகத் தரப்படும் தொகை | incentive |
| ஊக்கச் சலுகை | தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் தொழில் துவங்குபவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் வரி முதலியவற்றில் அரசு அளிக்கும் சலுகை | concessions (by the government to entrepreneurs) as incentives |
| ஊக்கம் | (ஒரு செயலைச் செய்வதற்குப் பிறர் தரும்) உற்சாகமான தூண்டுதல் | inducement |
| ஊக்கு | சிறு தகடு பொருத்தப்பட்ட தலைப்பாகத்தினுள் கூரான முனை உடைய பகுதி இருக்கும்படி வளைக்கப்பட்ட கம்பி | safety-pin |
| ஊக்குவி | (ஒரு வேலையைத் தொடங்குமாறு அல்லது செய்யும் வேலையைத் தொடர்ந்து செய்யுமாறு) தூண்டுதல் | induce |
| ஊகம் | (தெரிந்ததை வைத்துத் தெரியாததை அறியும் நோக்கில் செய்யும்) உத்தேசமான கணிப்பு | guess |
| ஊகி | (இப்படி இருக்கலாம் அல்லது இப்படி நடக்கலாம் என்று) உத்தேசமாக எண்ணுதல் | guess |
| ஊசல்1 | (பொருளின் அலைவு நேரம் அதன் நீளத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதை விளக்குவதற்காக) முறுக்கற்ற மெல்லிய நூலில் உலோகக் குண்டு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் அமைப்பு | pendulum |
| ஊசல்2 | பதம்கெட்டது | that which has become stale or rotten |
| ஊசலாட்டம் | (முடிவெடுக்க முடியாத) தடுமாற்றம் | vacillation |
| ஊசி | முள் போல் கூரிய முனையும் நூல் கோர்க்கச் சிறு துளையும் உடைய தைக்கப் பயன்படும் சிறு கம்பி | needle (for sewing) |
| ஊசிக்காது | சிறு ஒலியையும் கேட்கும் திறன் படைத்த செவி | (very) sharp ear |
| ஊசித்தொண்டை | காதைத் துளைக்கும் குரல் | a shrill or high pitched voice |
| ஊசிபோடு | ஊசியால் குத்தி (உடம்பில் திரவ மருந்தை) உட்செலுத்துதல் | inject |
| ஊசியிலைக் காடு | (குளிர்ப் பிரதேசத்தில்) ஊசி போன்ற கூரிய இலைகளை உடைய மரங்கள் வளரும் நிலப்பகுதி | coniferous forest |
| ஊசிவெடி | (பட்டாசுகளில்) குறைந்த ஒலியை எழுப்பக் கூடிய குச்சி போன்ற வெடி வகை | a small slender cracker (producing a sharp shrill popping noise) |
| ஊசு | (சமைத்த உணவுப் பொருள்) பதம் கெடுதல் | (of foodstuffs) become stale |
| ஊஞ்சல் | உட்கார்ந்து காலால் உந்தி முன்னும் பின்னும் ஆடும் வகையில் உள்ள தொங்கும் அமைப்பு | swing |
| ஊஞ்சலாடு | முன்னும்பின்னும் அசைதல் | move to and fro |
| ஊட்டச் சத்து | (உடல் நலத்திற்கு அல்லது பயிர் வளத்திற்குத் தேவையான) சத்துப் பொருள் | nutrition |
| ஊட்டம் | உடல் வளர்ச்சிக்கு வேண்டிய சத்து | nutrition |
| ஊட்டு | (உணவைக் கையால் அல்லது கரண்டியால் எடுத்து) வாயில் கொடுத்தல்(பால்) குடிக்கத் தருதல் | put (small quantity of food) into the mouth (either by hand or by spoon) |
| ஊடகம் | ஒளி முதலியவற்றை ஊடுருவிச்செல்ல அனுமதிக்கும் (காற்று, நீர், கண்ணாடி முதலிய) பொருள் | medium (of any substance that allows light, etc |
| ஊடல் | (காதலர்களிடையே அல்லது கணவன் மனைவிக்குள் ஏற்படும்) சிறு பிணக்கு | fit of sulkiness as (between lovers) |
| ஊடாடு | ஊசலாடுதல் | vacillate |
| ஊடு1 | (காதலனிடம் காதலி அல்லது கணவனிடம் மனைவி) பொய்க் கோபம் கொள்ளுதல் | (of lovers) sulk |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.