Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| வயிற்றைக்கழுவு | (உணவு, உடை போன்ற) அடிப்படைத் தேவைகளைப் பெறுதல் | subsist |
| வயிற்றோட்டம் | வயிற்றுப்போக்கு | diarrhoea |
| வயிறு | உணவு செரிப்பதற்கு உரிய உறுப்புகள் அல்லது கருப்பை அமைந்திருக்கும் பகுதி | stomach |
| வயிறெரி | (இழப்பு, ஏமாற்றம் முதலியவற்றால்) மனக்கொதிப்பு அடைதல் | be frustrated |
| வயோதிகம் | முதுமை | old age |
| வர்க்கப் போராட்டம் | உற்பத்திச் சாதனங்களைத் தன்வசத்தில் கொண்ட ஆளும் வர்க்கத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையில் நிகழும் சமூகப் போராட்டம் | class struggle |
| வர்க்கம்1 | வருமானம், அதிகார உரிமை, தொழில் முதலியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட பிரிவு | class (in society, based on income, privilege, profession, etc.) |
| வர்க்கம்2 | குறிப்பிட்ட ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கிக் கிடைக்கும் எண் | square (of a number) |
| வர்க்கமூலம் | கொடுக்கப்பட்ட எண்ணை வர்க்கமாகக் கொண்ட எண் | square root |
| வர்ணம்2 | இசை கற்பவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் இரண்டாவது பாடம் | the second lesson in music for the beginners (giving the possible ways of rendering the ஸ்வரம் of ராகம்) |
| வர்ணனை | நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் பேச்சு அல்லது எழுத்து | description |
| வர்த்தகச் சம்மேளனம் | குறிப்பிட்ட பகுதியில் உள்ள வர்த்தகர்கள் ஒன்றுசேர்ந்து வர்த்தக முன்னேற்றத்திற்காக ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பு | chamber of commerce |
| வர்த்தகம் | (இரு நாடுகளுக்கு இடையே அல்லது ஒரு நாட்டினுள்) மொத்த அளவில் நடைபெறும் பொருள் விற்பனை முதலியவை | trade |
| வர்த்தகர் | வர்த்தகம் செய்பவர் | merchant |
| வர்மக்கலை | உடலின் சில குறிப்பிட்ட நரம்புகளை அழுத்துவதன் மூலம் நரம்புப் பிடிப்பு, சுளுக்கு போன்றவற்றுக்கான சிகிச்சை முறை அல்லது ஒருவரைச் செயல் இழக்கச் செய்யும் தற்காப்பிற்கான பயிற்சி முறை | method of curing nervous disorders by massaging certain nerve centres or the art of defending oneself by striking certain nerve centres which paralyses one for the time being |
| வரகு | மணி போலச் சிறியதாக இருக்கும் பழுப்பு நிறத் தானியம்/மேற்குறிப்பிட்ட தானியப் பயிர் | common millet (grain and the crop) |
| வரத்து | (வியாபாரச் சரக்கு) வந்துசேர்தல்(அணை முதலியவற்றுக்கு நீர்) வருதல் | supplies (of goods) |
| வரப்பு | வயலைப் பகுதிபகுதியாகப் பிரிக்கும் சிறு கரை | ridge of a field |
| வரம் | (புராணங்களில்) (கடவுள், முனிவர் ஆகியோர் தங்கள் சக்தியினால் பக்தர்களின்) விருப்பத்தைப் பூர்த்திசெய்வதாக வழங்குவது | boon (granted by gods, saints) |
| வரம்பு | இதற்குள் அமைய வேண்டும் என்றோ இதற்கு மேற்படக்கூடாது என்றோ அமைக்கும் கட்டுப்பாடு | (upper, lower) limit |
| வரலாறுகாணாத | இதற்கு முன் இது போல் இருந்திராத | unprecedented |
| வரவர | காலம் செல்லச்செல்ல | of late |
| வரவழை | (ஒருவரை) வரச்செய்தல்(ஒன்றை) வந்துசேரச்செய்தல் | send for |
| வரவினம் | (ஒருவருக்குப் பல்வேறு இடங்களிலிருந்து) பண வரவு | heads of receipts |
| வரவுசெலவு | வரவினமும் அதில் செய்யப்பட வேண்டிய செலவுகளும் | receipts and expenditure |
| வரவுசெலவு அறிக்கை | வரவுசெலவுத் திட்டத்தைக் கொண்டுள்ள அறிக்கை | budget report |
| வரவுசெலவுத் திட்டம் | நாட்டுக்கு அல்லது நிறுவனத்துக்கு எதிர்வரும் ஆண்டில் கிடைக்கும் வருமானம், வருமானத்திற்கான வழிகள், செலவுகள், செலவுகளுக்கான ஒதுக்கீடு முதலியவை குறிக்கப்பட்ட திட்டம் | budget |
| வரவுவை | (வியாபாரம் முதலியவற்றில்) வரவாகக் கிடைத்த பணத்தைக் கணக்குவைத்தல் | credit (to an account) |
| வரவேற்பு அறை | (வீடு, அலுவலகம் முதலியவற்றில் நுழைவாயிலை அடுத்து) விருந்தினர் அமர்வதற்கான அறை | drawing room |
| வரவேற்பு மடல் | விழாவுக்கு வரும் முக்கிய விருந்தினரை வரவேற்கும் முறையில் புகழ்ந்து கூறும் வாசகங்கள் அடங்கிய தாள் | scripted address of welcome (to be read out) |
| வரவேற்புரை | (விழாவுக்கு வந்துள்ளவரை) வரவேற்று நிகழ்த்தும் உரை | address of welcome |
| வரன் | பெண்ணுக்குத் திருமணம் செய்துவைக்கப் பார்க்கப்படும் இளைஞன் | prospective bridegroom |
| வரன்முறை | வரைமுறை | limit |
| வராகம் | பன்றி | boar |
| வராந்தா | உள் அறைகளுக்கு வெளிப்புறமாகக் கட்டடத்தில் கூரையோடு அமைந்திருக்கும் நடை வழி | sheltered corridor along the side or sides of a building |
| வரி1 | (அணிந்துகொள்ளும் முறையில் உடலில்) சுற்றுதல் | tie around |
| வரி2 | (ஒருவரை) உறுதியாக ஏற்றல் | accept firmly |
| வரி3 | மாற்ற முடியாதபடி மேற்கொள்ளுதல் | accept |
| வரி4 | கோடு | line |
| வரி5 | பொதுநலனுக்காகச் செலவிட வேண்டியிருப்பதால் அதற்கு ஆகும் செலவை ஈடுகட்ட அரசு வசூலிக்கும் கட்டணம் | tax |
| வரி ஏய்ப்பு | சட்டப்படி அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைக் கட்டாமல் ஏமாற்றுதல் | tax evasion |
| வரிக்குதிரை | உடலில் கறுப்பு, வெள்ளைப் பட்டைகளை உடைய குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு | zebra |
| வரிசை1 | (-ஆக, -ஆன) ஒருவருக்குப் பின் ஒருவராக அல்லது ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு | line |
| வரிசைக்கிரமம் | வரிசையின் ஒழுங்கு | proper or due order |
| வரிவடிவம் | (மொழியில் உள்ள ஒலிகளை) எழுதுவதற்கான வடிவம் | script (for language) |
| வரிவிலக்கு | பொதுவான வரி விதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கத் தரும் அனுமதி | tax exemption |
| வரிவிளம்பரம் | பத்திரிகைகளில் வகைப்படுத்தப்பட்டு வெளியாகும் குறைந்த அளவு வரிகளைக் கொண்ட சிறிய விளம்பரம் | classified advertisement (with a few lines) |
| வருகைதரு பேராசிரியர் | பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் குறிப்பிட்ட காலத்துக்குப் பணியாற்ற வந்திருக்கும் பேராசிரியர் | visiting professor |
| வருகைதா | (பெரியோர், தலைவர் முதலியோர்) வருதல் | pay a visit |
| வருகைப்பதிவு | (மாணவர், ஊழியர் முதலியோர் தங்களின்) வருகையைத் தெரிவித்துப் பதிந்துகொள்ளுதல் | marking attendance |
| வருகைப்பதிவேடு | வருகையைப் பதிவுசெய்வதற்காக உள்ள ஏடு | register for attendance |
| வருங்காலம் | இனி வரப் போகும் காலம் | future |
| வருங்கால வைப்புநிதி | ஊழியரின் மாத ஊதியத்திலிருந்து பிடிக்கப்படும் தொகையும், பணிக்கு அமர்த்திய நிறுவனம் தனது பங்காகச் செலுத்தும் தொகையும் கொண்டு ஏற்படுத்தப்படுவதும் ஓய்வு பெற்ற பின் அளிக்கப்படுவதுமான சேமிப்பு | fund made up of the contribution of the employee and of the employer payable at retirement |
| வருடம் | ஆண்டு | year |
| வருடாந்தர/வருடாந்திர | வருடத்திற்கு ஒரு முறையான | annual |
| வருடு | மென்மையாகத் தடவுதல் | stroke gently |
| வருணன் | மழைக்கான தெய்வம் | god of rain |
| வருத்தக்காரன் | நோயாளி | ailing or sick person |
| வருத்தம்2 | நோய் | ailment |
| வருத்து | துன்பப்படவைத்தல் | make one sad |
| வருந்தி | மிகவும் வேண்டி | earnestly |
| வருந்து | (ஒரு செயலுக்காகவோ இழப்பிற்காகவோ) துன்பம் அடைதல் | grieve |
| வரும் | (காலத்தைக் குறிக்கையில்) இனி வரப்போகும் | (of time) coming |
| வரும்படி | வருமானம் | income |
| வருமதி | (ஒருவருக்கு மற்றொருவரிடம் இருந்து) வரவேண்டிய தொகை | amount due (from s |
| வருமானம் | பணி, தொழில் முதலியவற்றின் மூலமாகக் கிடைக்கும் பணம் | income |
| வருமான வரி | (ஒருவருடைய வருட வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு மேற்படுமானால் அந்த) வருமானத்தின் மீது அரசு விதிக்கும் வரி | income tax |
| வருவாய் | (பெரும்பாலும் அரசு, நிறுவனங்கள் தொடர்பாக) வருமானம் | (mostly in connection with government, institutions) revenue |
| வருவி | கொண்டுவரச்செய்தல் | bring |
| வரை1 | (கோடு) இழுத்தல்(படம் முதலியவை) ஏற்படுத்துதல் அல்லது தீட்டுதல் | draw (a line, picture, etc.) |
| வரை2 | (இடம், காலம், அளவு ஆகியவற்றில்) குறிப்பிடப்படுவதே எல்லையாக, இறுதியாக, மேல்வரம்பாக உடையது என்பதைத் தெரிவிப்பது | up to |
| வரைபடம் | (தோற்றம், அமைப்பு முதலியவற்றைக் காட்டும்) கோடுகளால் ஆன படம் | map |
| வரைமுறை | இப்படி அல்லது இவ்வளவு என்ற அளவில் நடவடிக்கையை நிர்ணயிக்கும் கட்டுப்பாடு | limit |
| வரையறு | குறிப்பிடப்படுவது இது என்று அல்லது இவ்வளவு என்று நிர்ணயம்செய்தல் | define |
| வரைவாளர் | வரைபடம் வரைபவர் | draftsman |
| வரைவிலக்கணம் | வரையறை | definition |
| வரைவு | (திட்டம், சட்டம் முதலியவற்றின்) திருத்தத்துக்கு உள்ளாகக் கூடிய நகல் | draft (of a plan, etc.) |
| வல்ல | வலிமை, சக்தி முதலியவை உடைய அல்லது வாய்ந்த | potent |
| வல்லமை | பெரும் வலிமை | might |
| வல்லரசு | (பொருளாதாரத்தில் அல்லது ராணுவத்தில்) பலம் மிக்க நாடு | superpower |
| வல்லவன் | (ஒன்றைச் செய்வதில்) மிகுந்த திறமை உடையவன் | adept |
| வல்லாரை | (மூலிகையாகப் பயன்படும்) நீண்ட காம்புகளில் சிறிய வட்ட வடிவ இலைகளோடு நீர்ப்பாங்கான இடங்களில் வளரும் ஒரு வகைச் செடி | indian penny wort (a herb) |
| வல்லினம் | மெய்யெழுத்துகளின் மூன்று பிரிவுகளில் (இடையினத்தையும் மெல்லினத்தையும் விட ஒலியில் வன்மையாக உச்சரிக்கப்படும்) க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு எழுத்துகளை உள்ளடக்கிய பிரிவு | the six hard consonants of the Tamil (tripartite) system |
| வல்லுநர் | நிபுணர் | expert |
| வல்லூறு | கழுகைவிடச் சிறிய உடலும் கூர்மையான இறக்கை நுனியும் சாம்பல் நிற முதுகுப் பகுதியும் கொண்ட ஊன் உண்ணும் பறவை | falcon |
| வல்லெழுத்து | வல்லினப் பிரிவில் உள்ள எழுத்து | hard consonant |
| வலசை | (பறவைகள், விலங்குகள் தக்க சூழலைத் தேடி) இடம்பெயர்தல் | migration (of birds, etc.) |
| வலது | (பெரும்பாலோர்) உண்ணுவதற்குப் பயன்படுத்தும் கை உள்ள பக்கம் | right (side) |
| வலதுகுறைந்தோர் | உடல் ஊனமுற்றோர் | physically handicapped people |
| வலதுசாரி | முதலாளித்துவத்தை ஆதரிக்கும் இயக்கம் அல்லது நபர் | rightist |
| வலம் | வலது | right (side) |
| வலம்புரிச்சங்கு | வலப்புறமாகச் செல்லும் சுழியை உடைய (அரிய) சங்கு | (a rare) conch with clockwise whorls |
| வலம் வா | (கோயில் முதலியவற்றில்) வலமாகச் சுற்றுதல் | go round (a temple etc in clockwise direction) |
| வலயம் | வளையம் | cycle |
| வலி1 | (உடம்பில்) வேதனை தரும் உணர்வு உண்டாதல் | pain |
| வலி2 | (துடுப்பு, கயிறு முதலியவற்றை) இழுத்தல் | pull |
| வலி3 | (உடம்பில் ஏற்படும்) வேதனை தரும் உணர்வு | pain |
| வலி4 | வலிமை | strength |
| வலித்துக்காட்டு | (கேலிசெய்யும் வகையில் விரலை ஆட்டுதல், வாயைக் கோணுதல் போன்ற) சேட்டைசெய்தல் | make faces at |
| வலிந்து | வேண்டுமென்றே | in a forced way |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.