Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| வலிப்பு | (நோயின் காரணமாகத் திடீரென்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு) வெட்டிவெட்டி இழுக்கும் வலியுடன் கூடிய விறைப்பு | convulsions |
| வலிமை | பலம் | strength |
| வலிய | (பிறரின் வேண்டுகோளின்படி இல்லாமல் ஒருவர்) தானாகவே | without being invited or asked |
| வலியுறுத்து | (கருத்து, எண்ணம் முதலியவற்றை) உறுதிப்படுத்துதல் | stress |
| வலிவு | வலிமை | strength |
| வலிவூட்டு | (கருத்து போன்றவற்றை) உறுதிப்படுத்துதல் | support |
| வலு1 | (இருக்கும் நிலையைவிட) அதிகரித்தல் | (of rain) become heavy |
| வலு3 | படு | very |
| வலுச்சண்டை | வலிந்து ஆரம்பிக்கும் சண்டை | deliberate or planned quarrel |
| வலுப்படுத்து | (ஒன்றை) வலிமை அடையச்செய்தல் | strengthen |
| வலுப்பெறு | வலுத்தல் | get strengthened |
| வலுவில் | வலிய | without being asked or invited |
| வலை | (கயிறு, இழை போன்றவற்றால்) ஒரே அளவிலான இடைவெளிவிட்டுப் பின்னப்பட்ட அல்லது இடைவெளியோடு தயாரிக்கப்பட்ட சாதனம் | net |
| வலைவிரி | மாட்டிக்கொள்ளும்படியாகத் தக்க ஏற்பாடுகள் செய்தல் | lay a snare (to trap somebody) |
| வலைவீசு | தப்பாமல் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல் | take measures (to get s |
| வழக்கம்1 | (குறிப்பிட்ட சமூகம், மதம், ஜாதி போன்றவற்றில்) அங்கீகரிக்கப்பட்டுத் தொடர்ந்து வழிவழியாகப் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை | custom |
| வழக்கம்2 | (கை, கால் முதலியவற்றின்) இயக்கம் | functioning |
| வழக்கறிஞர் | நீதிமன்றத்தில் வாதாடுவதற்குத் தகுதியும் முறையான அங்கீகாரமும் பெற்றவர் | advocate |
| வழக்காடு | வாதாடுதல் | argue (a case in a court of law) |
| வழக்காடுமன்றம் | கொடுக்கப்பட்ட தலைப்புப் பொருளை ஆதரித்து ஒருவரும் எதிர்த்து மற்றொருவரும் நீதிமன்றத்தில் வழக்காடுவது போன்று நடத்தும் நிகழ்ச்சி | a debating forum |
| வழக்காறு | மக்களின் வாழ்க்கையில் காலம்காலமாக எல்லோராலும் பகிர்ந்துகொள்ளப்பட்டு நடைமுறையில் வழங்கி வருபவை | custom and usage |
| வழக்கு1 | (நீதிமன்றம், பஞ்சாயத்து போன்றவற்றில்) தீர்வுக்காக முன்வைக்கப்படுவது | suit |
| வழக்கு2 | மக்களால் பின்பற்றப்படுவதாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் இருப்பது | that which is current |
| வழங்கு1 | (மொழி, சொல், கதை முதலியவை) பயன்பாட்டில் அல்லது புழக்கத்தில் இருத்தல் | be current |
| வழங்கு2 | கொடுத்தல் | distribute |
| வழமை | வழக்கம் | habit |
| வழி1 | நிரம்பி வடிதல்(பக்கவாட்டில்) ஒட்டி இறங்குதல் | overflow |
| வழி3 | ஓர் இடத்துக்குச் செல்ல அமைக்கப்பட்டிருப்பது | way (to a place) |
| வழி அலகு | நீளம், நிறை, காலம் ஆகிய அடிப்படை அலகுகளிலிருந்து பெறப்படும் பிற அலகு | derived unit |
| வழிக்குக்கொண்டுவா | உரிய முறையை அல்லது ஒழுங்கைப் பின்பற்றச்செய்தல் | bring s |
| வழிகாட்டி | (ஊரைச் சுற்றிப்பார்க்க வந்தவர்களைத் தன்னுடன்) அழைத்துச்சென்று விளக்கம் தரும் பணியைச் செய்பவர் | guide (to tourists) |
| வழிகாட்டி மரம் | ஓர் இடத்திலிருந்து பல சாலைகள் பிரியும்போது அவை எங்கு செல்கின்றன என்பதைத் தெரிவிக்கும் பலகைகளை உடைய கம்பம் | signpost at crossroads |
| வழிகாட்டு | (பிறர் பின்பற்றத் தகுந்த) முன்மாதிரியாக விளங்குதல் | set an example |
| வழிகோலு | அடிப்படையாக, மூலமாக, வழியாக அமைதல் | pave the way |
| வழிச்செலவு | பிரயாணத்தின்போது ஏற்படும் சிறு செலவு | sundry expenses |
| வழிசெய் | (ஒன்று நிகழ) வேண்டியவற்றைச் செய்தல்(தீர்வுக்கு, முடிவுக்கு) வழிமுறை ஏற்படுத்துதல் | find a way |
| வழிதவறு | ஒழுக்கம் தவறி நடத்தல் | go astray |
| வழிநடத்து | முன்னின்று நடத்துதல் | lead |
| வழிநூல் | முதலில் தோன்றிய நூலில் சொல்லப்பட்டவற்றை ஏற்றுத் தேவையான மாற்றங்களைச் செய்து எழுதப்படும் நூல் | a treatise based on the thesis of a previous work entirely but with additional materials |
| வழிப்பறி | (பெரும்பாலும் சாலையில்) பிரயாணம் செய்வோரிடமிருந்து பணம் முதலியவற்றைக் கொள்ளையடிப்பது | highway robbery |
| வழிப்போக்கன் | கால்நடையாகப் பயணம் செய்பவன் | traveller |
| வழிபடு | (கடவுளை) வணங்குதல் | pray |
| வழிபாடு | (இறைவனை) வணங்கும் செயல் | prayer |
| வழிமுறை | (ஒன்றை) முறையாகச் செய்வதற்கான வழி | proper way |
| வழிமொழி | (முன்மொழிந்ததை) ஆதரிப்பதாகக் கூறுதல் | second (a motion, proposal, etc.) |
| வழியனுப்பு | செல்வதற்கு விடைகொடுத்து அனுப்புதல் | see (one) off |
| வழிவகை | நடைபெறுவதற்கான ஏற்பாடும் திட்டமும் | way or method |
| வழிவழியாக | (மரபு, செய்தி முதலியவை தொடர்வதைக் குறிக்கையில்) முதல் பரம்பரையிலிருந்து அடுத்தது என்ற வகையில் | from generation to generation |
| வழிவிடு | (வருவதற்கும் போவதற்கும் தடையாக இல்லாமல்) பாதையிலிருந்து விலகுதல் | make way (for somebody) |
| வழு | (முறையிலிருந்து நீங்குவதால் ஏற்படும்) தவறு | violation (of law, established convention, etc |
| வழுக்கல் | (இளநீர்) வழுக்கை | soft kernel of the tender coconut |
| வழுக்கு1 | (உராய்வு இல்லாத பரப்பில்) பிடிப்பு இல்லாமல் நழுவிச் சரிதல்/நழுவிச் சரியச்செய்யக் கூடியதாக இருத்தல் | slip/be slippery |
| வழுக்கு2 | வழுக்கும்படியாக இருப்பது | being slippery |
| வழுக்குமரம் | (உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளைக் கைப்பற்றப் போட்டியிட்டு ஏறும்) எண்ணெய் தடவப்பட்ட வழுவழுப்பான பெரிய கம்பம் | greased pole (for competitors to climb up in a particular sport) |
| வழுக்கை | (ஒருவரின்) தலை முடி உதிர்ந்த பின் மழமழப்பாகக் காணப்படும் தலைப் பகுதி | baldness |
| வழுவழுப்பு | உராய்வு இல்லாமல் வழுக்குவதாக அமையும் தன்மை | smoothness |
| வள்-என்று | (விழுதல் என்ற வினையோடு) எரிச்சலைக் காட்டும் முறையில் | barking at |
| வள்ளம் | சிறு தோணி | small boat |
| வள்ளல் | கேட்டவர்களுக்கு இல்லை என்று கூறாமல் கேட்ட பொருள் தருபவர் | philanthropist |
| வள்ளிசாக | முழுதாக | a good, round sum |
| வள்ளுவம் | வள்ளுவரின் திருக்குறள் கூறும் நெறிமுறைகள் | philosophy of Valluvar, the author of Tirukkural |
| வளப்பம் | வளம் | richness |
| வளமை | வளம் | richness |
| வளர்2 | (ஒன்றை) தோன்றச்செய்து விருத்தியாக்குதல்(அளவில்) பெரிதாகுமாறு விடுதல் | grow |
| வளர்ச்சி | (உயிரினங்கள், தாவரம் முதலியவை) வளர்கிற முறை | growth |
| வளர்த்தி | உயரம் | being tall |
| வளர்த்து | (பேச்சு, கதை முதலியவற்றை) நீளச்செய்தல் | prolong (a conversation, etc.) |
| வளர்ப்பு | வளர்க்கிற செயல் அல்லது விதம் | raising |
| வளர்பிறை | (அமாவாசைக்கு மறு நாளிலிருந்து பௌர்ணமிக்கு முன்தினம்வரை) நிலவு படிப்படியாக முழுமை பெறுவதாகக் காணப்படும் தோற்றம் அல்லது மேற்குறிப்பிட்ட தோற்றம் அளிக்கும் காலம் | waxing moon |
| வளர்முக நாடு | (பெரும்பாலும் பன்மையில்) பொருளாதார அல்லது தொழில் ரீதியில் வளர்ச்சியடைந்து வரும் நாடு | developing country |
| வளவள-என்று | சுருக்கமாக இல்லாமலும் தெளிவு இல்லாமலும் | unendingly |
| வளவு | தெருவிலிருந்து உட்பக்கமாக அமைந்திருக்கும், ஒரு வழியே உடைய பல வீடுகளின் தொகுதி | a cluster of houses inside a compound with one entry |
| வளாகம் | (குறிப்பிட்ட நிறுவனம், அலுவலகம் முதலியவற்றின்) சுற்றுச் சுவர்களுக்கு உள்ளாக அமைந்திருக்கிற பகுதி | campus |
| வளி | காற்று | wind |
| வளிமண்டலம் | பூமி முதலிய கிரகங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட எல்லைவரை அமைந்திருக்கும் காற்று வெளி | atmosphere |
| வளை1 | (பொருள்) நேராக அல்லது செங்குத்தாக இல்லாமல் பக்கங்களில் மடங்குதல்/(உடல்) உட்புறமாக மடங்குதல் | bend/wind |
| வளை2 | வளையச்செய்தல் | (cause to) bend or curve |
| வளை3 | (எலி, நண்டு முதலியவை) குடைந்து ஏற்படுத்திய நீளமான துவாரம் | (rat) hole |
| வளை5 | கூரைச் சட்டத்தை அமைக்கச் சுவரின் மேல்பகுதியிலும் முகட்டிலும் வைக்கும் நீளமான மரக் கட்டை | wooden beam (to support rafters) |
| வளைகுடா | விரிகுடாவைவிடக் குறைந்த பரப்பைக் கொண்ட கடல் பகுதி | gulf |
| வளையம் | (பெரும்பாலும் உலோகக் கம்பியால் செய்த) வட்டமான அமைப்பு | (metal) ring |
| வளையல் | (உலோகம், கண்ணாடி முதலியவற்றால் ஆன, பெண்கள் முன்கையில் அணியும்) வளையம் போன்ற அணிகலன் | bangle |
| வளைய வா | வளைந்து திரும்புதல் | move about |
| வளைவு | நேராக இல்லாமல் வளைந்து அமையும் பகுதி | bend |
| வற்புறுத்து | (ஒன்றைச் செய்யுமாறு திரும்பத்திரும்பக் கூறி) கட்டாயப்படுத்துதல் | compel |
| வறட்சி | (மழை இல்லாததாலோ வெப்ப மிகுதியாலோ) தேவையான அளவு நீர் இல்லாமல் போகும் நிலை | drought |
| வறட்டி | சாணத்தை வட்டமாகத் தட்டிக் காயவைத்த எரிபொருள் | dried cowdung cake (used as fuel) |
| வறட்டு | காரணம் இல்லாத(விட்டுவிட வேண்டியதை) விட்டுவிடாத | meaningless |
| வறள் | ஈரமற்றதாகுதல் | become dry |
| வறிய | வறுமையில் உள்ள | poverty-stricken |
| வறியோன் | வறுமையில் இருப்பவன் | poverty-stricken person |
| வறு | சூட்டில் காயச்செய்து வேண்டிய நிலைக்குக் கொண்டுவருதல் | roast |
| வறுமை | அடிப்படைப் பொருளாதார வசதி இல்லாத நிலை | poverty |
| வறுமைக்கோடு | இதற்குக் குறைந்திருந்தால் வறுமை நிலை என நிர்ணயிக்கப் பயன்படும் கீழ்மட்ட வருமான வரம்பு | poverty line |
| வறுவல் | (சில காய்கறி, மீன் முதலியவற்றை) துண்டுகளாக்கி எண்ணெய்யிலிட்டுப் பொரித்தெடுப்பது | (generally) anything fried, |
| வன்செயல் | வன்முறைச் செயல் | violence |
| வன்மம் | (சமயம் பார்த்துத் தீங்கு விளைவிக்கத் துணிகிற வகையில் மனத்தினுள் கொண்டிருக்கும்) தீராத பகை உணர்வு | spite |
| வன்முறை | உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படும் முறை | violence |
| வன்மை | (-ஆக, -ஆன) மிகவும் தீவிரம் | forcefulness |
| வனதேவதை | வனத்தில் இருப்பதாகவும் நன்மையும் தீமையும் விளைவிக்கக் கூடியதாகவும் உள்ள பெண் தெய்வம் | wood-nymph |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.