Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| வித்தை | வியப்பு அடையச்செய்யும் வகையில் நிகழ்த்தப்படும் செயல் | feat |
| விதண்டாவாதம் | தான் முன்வைக்கும் கருத்தின் நியாயமின்மையை உணர்ந்தும் வீணாகச்செய்யும் வாதம் | argument leading nowhere |
| விதந்து | (பிரித்து) சிறப்பாக | in praise of |
| விதம் | வகை | sort |
| விதரணை | (ஒன்றைச் செய்யும் அல்லது வெளிப்படுத்தும்) நேர்த்தி | adroitness |
| விதவா விவாகம் | விதவை மறுமணம் | widow remarriage |
| விதவை | கணவனை இழந்த பெண் | widow |
| விதானம் | சுவாமி எழுந்தருளியிருக்கும் இடத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும் அல்லது பல்லக்கு, தேர் ஆகியவற்றில் வீதி உலா வரும்போது நான்கு கம்பங்கள் கொண்ட அமைப்பில் மேலே கட்டியிருக்கும் அலங்காரமான பட்டுத் துணி | cloth to cover the canopy over the head of the deity or a kind of movable canopy while taking the deity in procession |
| விதானை | கிராம அதிகாரி | village officer |
| விதி1 | (வரி, கட்டணம் முதலியவற்றை) வசூலிக்க அறிவித்தல் | levy (taxes) |
| விதி2 | முன்கூட்டியே வகுக்கப்பட்டதாகவும் மனிதனால் மாற்ற முடியாததாகவும் கருதப்படும் நியதி | destiny |
| விதிமுறை | (ஒன்றிற்கான) நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நியதி | prescribed rule |
| விதிர் | (அதிர்ச்சி, பயம் போன்றவற்றால்) திடுக்கிட்டு நடுங்குதல் | be shaken |
| விதூஷகன் | (நாடகம், கூத்து போன்றவற்றில்) பேச்சு, பாட்டு போன்றவற்றின்மூலம் பார்வையாளருக்குச் சிரிப்பூட்டுபவன் | (in plays) jester |
| விதேசி | வெளிநாட்டில் தயாராவது | of foreign origin or make |
| விதை1 | (விதையை ஓர் இடத்தில்) முளைப்பதற்கு ஊன்றுதல் அல்லது தெளித்தல் | sow (seed) |
| விதைப்பாடு | குறிப்பிட்ட அளவு விதையை விதைக்கக் கூடிய அளவுக்கான நிலம் | measure of land in terms of seeds sown |
| விதைப்பு | (வயல்களில் பயிரிட) விதைத்தல் | sowing seeds |
| விந்து1 | (நடக்கையில்) கெந்துதல் | (while walking) limp |
| விந்து2 | (ஆண் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும்) பெண்ணின் கருமுட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை படைத்த உயிரணு | sperm |
| விந்தை | வியப்பானது | strange |
| விநாசம் | பெரும் தீமை | utter destruction |
| விநாயகர் | யானை முகமும் பெருத்த வயிறும் கொண்ட கடவுள் | the elephant-headed god (of the Hindu pantheon) |
| விநாயகர் சதுர்த்தி | ஆவணி மாதத்தில் அமாவாசை முடிந்த நான்காவது நாளில் பண்டிகையாகக் கொண்டாடப்படும் விநாயகர் வழிபாடு | a festival dedicated to விநாயகர் on the fourth day after the new moon in the Tamil month of ஆவணி |
| விப(ச்)சாரம் | (ஒரு பெண்) பணம் பெற்று உடலுறவு கொள்ளுதல் | prostitution |
| விப(ச்)சாரி | பணம் பெற்று உடலுறவு கொள்பவள் | prostitute |
| விபத்து | எதிர்பாராத வகையில் சேதத்தையோ துன்பத்தையோ ஏற்படுத்தும் செயல் | accident |
| விபரீதம் | அச்சம் கொள்ளவைக்கும் விளைவு | disaster |
| விபூதி | திருநீறு | sacred ash |
| விம்மல் | அழும்போது மூச்சுத் தடைப்படுவதால் ஏற்படும் மெல்லிய ஒலி | sob |
| விம்மு | அழும்போது மூச்சுத் தடைப்படுவதால், நெஞ்சுபுடைக்க, மெல்லிய ஒலி வெளிப்படுதல் | sob |
| விமர்சகன் | விமர்சனம்செய்பவன் | reviewer |
| விமர்சனம் | (ஒருவரின் அல்லது ஒன்றின்) நல்ல அம்சங்களையும் குறைகளையும் ஆராய்ந்து வழங்கும் மதிப்பீடு | critical review |
| விமர்சி | விமர்சனம்செய்தல் | review critically |
| விமரிசை | (விழா, வரவேற்பு முதலியவை குறித்து வருகையில்) சிறப்பான ஏற்பாடுகளுடன் கூடியது | grand or impressive manner |
| விமானத்தளம் | ராணுவ விமானங்கள் பயன்படுத்தும் ஓடுதளம் அமைந்த இடம் | air base |
| விமான நிலையம் | (பெரும்பாலும் பயணிகளைக் கொண்ட) விமானம் புறப்பட அல்லது வந்து இறங்க ஏற்ற வசதிகள் நிறைந்த பரந்த இடம் | airport |
| விமானப்படை | போர் விமானங்கள் கொண்ட ராணுவப் பிரிவு | air force |
| விமானப் பணிப்பெண் | விமானப் பயணத்தின்போது பயணிகளின் வசதியைக் கவனிக்கும் பொறுப்பு உடைய பெண் ஊழியர் | air hostess |
| விமானம்1 | இயந்திர சக்தியினால் வானில் மிக விரைவாகப் பறந்துசெல்லும் போக்குவரத்துச் சாதனம் | aeroplane |
| விமானம்2 | கர்ப்பக்கிரகத்தின் மேல் கலசத்தோடு இருக்கும் கோபுரம் போன்ற அமைப்பு | the structure that is built over the sanctum sanctorum |
| விமானம்தாங்கிக் கப்பல் | மேல் தளத்தில் ராணுவ விமானங்கள் தங்கவும் புறப்பட்டுச் செல்லவும் வசதி கொண்ட பெரிய போர்க் கப்பல் | aircraft carrier |
| விமானி | விமானத்தைச் செலுத்துபவர் | pilot |
| விமோசனம் | (சாபம், பாவம் முதலியவற்றிலிருந்து) விடுபடும் நிலை | absolution |
| விய | ஆச்சரிய உணர்வு எழுதல் | wonder at |
| வியத்தகு | வியப்பு அடையும்படியான | of amazing nature |
| வியப்பு | ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு | amazement |
| வியர் | (உடம்பில்) வியர்வை உண்டாதல் | perspire |
| வியர்க்கவிறுவிறுக்க | அவசரத்துடன் வேகவேகமாக | in extreme hurry |
| வியர்த்தம் | பயனற்றது | that needs specific mention |
| வியர்வை | (உடலிலிருந்து) வெப்பம் தணிவதற்காகத் தோலில் உள்ள நுண்ணிய துளைகள் வழியாக வெளியேறும் உப்புத் தன்மை உடைய திரவம் | perspiration |
| வியாக்கியானம் | (நூலுக்கு) விளக்க உரை | explanatory commentary (on a text) |
| வியாகூலம் | கவலை | anxiety |
| வியாசம் | கட்டுரை | essay |
| வியாதி | நோய் | disease |
| வியாதியஸ்தன் | நோயாளி | sick person |
| வியாபகம் | எங்கும் நிறைந்திருக்கும் அல்லது பரவியிருக்கும் தன்மை | pervasiveness |
| வியாபாரம் | லாப நோக்கில் பொருள்களை வாங்கி விற்கும் தொழில் | trade |
| வியாபாரி | வியாபாரம் செய்பவர் | merchant |
| வியாபி | (எங்கும்) பரவுதல் | pervade |
| வியாழன் | சூரியனைச் சுற்றிவரும் கோள்களுள் ஐந்தாவதாக அமைந்திருக்கும் மிகப் பெரிய கிரகம் | (the planet) Jupiter |
| வியாஜ்யம் | (நீதிமன்றத்தில் தொடுக்கப்படும்) வழக்கு | litigation |
| வியூகம் | தாக்குவதற்காக அல்லது தற்காத்துக்கொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட முறையில் ஏற்படுத்திக்கொள்ளும் அணிவகுப்பு | line of arrangement |
| விர்-என்று | மிகவும் வேகமாக | swiftly |
| விரக்தி | (துக்கம், இழப்பு, கவலை முதலியவற்றால்) தன் மேல் ஏற்படும் வெறுப்பு(எதன் மீதும்) ஈடுபாடு காட்டாத தன்மை | bitterness (caused by frustration) |
| விரகதாபம் | (காதல் வயப்பட்டவர்களின்) ஏக்கம் அல்லது வேதனை | (of lovers) pangs of separation |
| விரட்டு | (ஒன்றை அல்லது ஒருவரை ஓர் இடத்திலிருந்து) போகச்செய்தல் | drive away |
| விரதம் | உண்ணாமல் இருந்து செய்யும் வழிபாடு | austerity |
| விரயம் | பயனற்ற செலவு | waste |
| விரல் | கையின் அல்லது காலின் முன்பகுதியில் ஐந்தாகப் பிரிந்துள்ள, நகத்தோடு கூடிய சிறு உறுப்பு | finger |
| விரவு | கலத்தல் | mix |
| விரிகுடா | அரைவட்டமாக நிலம் சூழ்ந்திருக்கும் கடல் பகுதி | bay |
| விரிசல் | (சுவர், பலகை போன்றவற்றின் பரப்பில் கோடு போல் ஏற்படும்) சிறு பிளவு | crack |
| விரிப்பு | (ஒரு பரப்பின் மேல் அலங்கரிக்கும் விதத்தில்) விரித்து வைக்கப்படுவது அல்லது விரித்திருப்பது | spread (on an object, floor, etc.) |
| விரியன் | உடலில் பழுப்பு அல்லது கரு வளையக் கோடுகளை உடைய விஷப் பாம்பு | viper |
| விரிவாக்கப் பணியாளர் | (விவசாயிகளுக்குத் தேவையான) சாகுபடி முறைகளை எடுத்துரைத்தல், செயல்முறை விளக்கம் செய்துகாட்டுதல் போன்ற பணிகளைச் செய்யும் அரசு ஊழியர் | extension worker (in the agriculture department) |
| விரிவாக்கம் | (நகரம் இட அளவிலும், திட்டம் பயன்பாட்டு அளவிலும்) பெரிதாக்கப்பட்டது | extension |
| விரிவாக்கு | பெரிய அளவில் அமைத்தல் | expand |
| விரிவு | (-ஆக, -ஆன) (அளவில்) அதிகம் | extensive |
| விரிவுரை | விளக்கமான உரை | explanatory commentary |
| விரிவுரையாளர் | (பல்கலைக்கழகம் முதலியவற்றில்) பட்ட வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்கும் இளநிலை ஆசிரியர் | lecturer (in universities, etc.) |
| விருச்சிகம் | தேளைக் குறியீட்டு வடிவமாக உடைய எட்டாவது ராசி | eighth constellation of the zodiac having scorpion as its sign |
| விருட்-என்று | ஒன்றின் பாதிப்பினால் உடனடியாக | suddenly |
| விருட்சம் | மரம் | tree |
| விருத்தம்1 | பா வகைகளுள் ஒன்று | a kind of metre in Tamil prosody |
| விருத்தம்2 | (தாயம் போன்ற விளையாட்டில்) அடுத்தடுத்துத் தொடர்ந்து கிடைக்கும் பெரிய எண்கள் | (in games where dice are used) getting big numbers one after another |
| விருத்தி | (இனத்தின்) பெருக்கம் | (of species) propagation |
| விருதா | உபயோகமற்றது | useless |
| விருது | (ஒருவரின் சாதனை, திறமை, சேவை முதலியவற்றை) பாராட்டி வழங்கப்படும் சான்றிதழ் அல்லது பட்டம் | award |
| விருந்தினர் | நட்பு அல்லது உறவு அடிப்படையில் வீட்டுக்கு வருகைதருபவர் | guest |
| விருந்தினர் விடுதி | (அரசின் அல்லது ஒரு நிறுவனத்தின்) விருந்தினர் தங்கும் விடுதி | guest house (of the government, an institution, etc.) |
| விருந்து | (ஒருவரை அல்லது பலரை அழைத்து) உபசரித்து வழங்கும் சிறப்பான உணவு | feast |
| விருந்தோம்பல் | விருந்து தந்து உபசரித்தல் | entertaining guests |
| விருப்பப்பாடம் | சில உயர் வகுப்புகளில் மாணவன் தன் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பாடம் | optional subject (chosen by a student) |
| விருப்பம் | (-ஆக, -ஆன) தனக்கு உகந்ததாகக் கருதுவதை அடைய வேண்டும் என்ற உணர்வு | desire |
| விரும்பு | தனக்கு உகந்ததாகக் கருதுவதை அடைய நினைத்தல் | want |
| விரை1 | (ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு) வேகமாகப் போதல் | rush |
| விரை2 | ஆண்குறியில் இனப்பெருக்கத்திற்கான விந்துவை உருவாக்கும் உறுப்பு | testicle |
| விரைப்பை | விரைகளை உள்ளே கொண்ட பை போன்ற உறுப்பு | scrotum |
| விரைவாக/விரைவில் | மிகக் குறைவான காலத்தில் | quick |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.