Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| குரக்கன் | கேழ்வரகு | ragi |
| குரக்கு பிடி | (கை, கால் முதலியவற்றில் திடீரென்று குத்தி இழுப்பது போன்ற) தசை வலி உண்டாதல் | suffer muscle pull or sprain |
| குரங்காட்டி | குரங்கைக் குட்டிக்கரணம் போடுதல் போன்ற வித்தைகள் செய்யவைத்துப் பிழைப்பு நடத்துபவன் | one who makes a living by making a monkey do some tricks |
| குரங்கு | மரங்களில் வாழ்வதும் கிளைக்குக் கிளை தாவிச் செல்வதும் நீண்ட வால் உடையதுமான (மனித இனத்தோடு ஒற்றுமை உடைய) ஒரு வகை விலங்கு | monkey |
| குரங்குப்புத்தி | (முடிவு எடுக்காமல்) தடுமாறும் குணம் | ficklemindedness |
| குரல் | (பேச்சை அல்லது பாட்டை வெளிப்படுத்த) தொண்டையில் உள்ள நாளங்களின் அசைவால் உண்டாகும் ஒலி | voice |
| குரல்வளம் | பல வித ஏற்றஇறக்கங்களை எளிதாகவும் இனிமையாகவும் காட்டக் கூடிய குரலின் செழுமை | range of voice |
| குரவை1 | (முற்காலத்தில்) பெண்கள் கைகோத்து ஆடும் ஒரு வகை நடனம் | (formerly) dancing in a circle by women holding hands |
| குரு1 | ஆசிரியர் | (venerable) teacher |
| குரு2 | வியாழன் என்னும் கோள் | (the planet) Jupiter |
| குருக்கள் | சிவனுக்கும் சிவனோடு தொடர்புடைய பிற தெய்வங்களுக்கும் சைவ ஆகமப்படி பூஜை செய்யும் தகுதி உடையவர் | one who is entitled to perform பூஜை in temples dedicated to சிவன் and other related deities |
| குருகுலக் கல்வி | குருவின் இல்லத்தையே கல்விக்கூடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு பெறும் கல்வி | (formerly) learning by living with the teacher |
| குருகுலம் | (குருவோடு இருந்து கற்கும்) பாடசாலை | school (where disciples live together with the teacher) |
| குருசாமி | முதன்முறையாக ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் நபருக்கு உரிய சடங்குகள் செய்வித்து அவரைத் தன் குழுவில் சேர்த்துக்கொள்ளும் (மூத்த) பக்தர் | (a senior) devotee who initiates one into the worship of ஐயப்பன் |
| குருட்டாம்போக்கு-ஆக,-இல்/-ஆன | முன்யோசனை இல்லாமல்/முன்யோசனை இல்லாத | blindly/blind |
| குருட்டு | காரணகாரியத்துக்கு உட்படாத | blind |
| குருட்டுப்பாடம் | பொருளைப் புரிந்துகொள்ளாமல் படிக்கும் பாடம் | anything committed to memory without knowing its meaning |
| குருடன் | பார்க்கும் திறன் இல்லாதவன் | blind man |
| குருடி | குருடன் என்பதன் பெண்பால் | feminine of குருடன் |
| குருடு | பார்வை இல்லாமை | blindness |
| குருடுபற்று | (எண்ணெய் இல்லாமல் விளக்குத் திரி கருகி) ஒளி குறைதல் | (of lamps) become dim (due to the burning of the wick for want of oil) |
| குருத்துஞாயிறு | குருத்தோலைகளுடன் இயேசுவின் புகழ்பாடிக் கொண்டாடப்படும் திருவிழா | palm Sunday |
| குருத்துப்பூச்சி | நெற் பயிரின் தண்டைத் துளைத்துச் சேதப்படுத்திக் கதிரை வெண்மையாக்கிவிடக் கூடிய ஒரு வகைப் பூச்சி | stemborer |
| குருத்துமணல் | பொடி மணல் | fine sand |
| குருத்தெலும்பு | காதுமடல், மூக்கின் முன்பகுதி முதலியவற்றில் இருப்பது போன்ற மடங்கக் கூடிய மென்மையான எலும்பு | cartilage |
| குருதி | இரத்தம் | blood |
| குருநாதன் | வணக்கத்திற்கு உரிய குரு | revered master |
| குருபூசை | தீட்சை தந்த குருவிற்கு அவர் முக்தி அடைந்த தினத்தில் சீடர்களால் நடத்தப்படும் பூஜை | worship offered by the disciples to their guru, who initiated them into a religious order, on his death anniversary |
| குரும்பை1 | (தென்னையிலும் பனையிலும் நீரோ பருப்போ வருவதற்கு முன் உள்ள) இளம் காய் | small unripe fruit (of coconut or palmyra trees) |
| குரும்பை2 | குறும்பி | ear-wax |
| குருமடம் | குரு ஆவதற்கு உரிய பயிற்சி பெறும் இடம் | seminary |
| குருமா | வேகவைத்த காய்கறிகளுடன் அல்லது இறைச்சியுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்துத் தாளித்துச் செய்யும் (சப்பாத்தி போன்றவற்றிற்குத் தொடுகறியாகும்) கெட்டியான குழம்பு | a kind of thick sauce made of boiled vegetables or meat used as a side dish to go with சப்பாத்தி, etc |
| குருமாணவன் | குரு ஆவதற்கு உரிய பயிற்சி பெறுபவன் | seminarian |
| குருமார் | (சீக்கிய மதத்தின்) முதன்மைக் குரு அல்லது தலைவர் | head priest or leader (of Sikh religious institutions) |
| குருமிளகு | (முதிர்ந்த, மணமுள்ள) காரமான மிளகு | pepper (with a strong smell and taste) |
| குருவி | (தோட்டத்திலும் வீட்டைச் சுற்றியும் காணப்படும்) சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும் சிறு பறவை | sparrow (found in gardens and around the houses) |
| குருவிக்காரன் | குருவி பிடிப்பவன் | bird catcher |
| குரூபி | விகாரமான தோற்றம் உடைய நபர் | ugly person |
| குரூரம் | கொடுமை நிறைந்தது | cruelty |
| குரை | (நாய்) சத்தம் எழுப்புதல் | bark |
| குரோதம் | பகைமை உணர்ச்சி நிறைந்த வெறுப்பு | malicious hatred |
| குல்கந்து | (உடல் குளிர்ச்சிக்காக உட்கொள்ளும்) உலர்ந்த ரோஜா இதழ்களைத் தேனிலும் ஜீராவிலும் போட்டுத் தயாரித்த லேகியம் போன்ற பொருள் | conserve of rose petals prepared in honey and sugar syrup said to have cooling effect |
| குல்லா | (பெரும்பாலும் துணியால்) வட்டமாகவோ நீளமாகவோ தைத்துத் தலையின் மேல்பகுதியில் அணிவது | cloth cap |
| குல்லாப்போடு | (உதவிசெய்யக் கூடிய நிலையில் இருப்பவரை) மகிழ்வித்துக் காரியம் சாதித்தல் | please |
| குலக்கொழுந்து | குடும்பம் தழைப்பதற்கான வாரிசாக இருக்கும் ஒரே மகன் அல்லது மகள் | heir to the family, the one and only child |
| குலதெய்வம் | ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் வழிபடும் தெய்வம் | deity (of a community) |
| குலதேவதை | பெண் குலதெய்வம் | female family deity |
| குலம் | (பெரும் பிரிவைக் குறிப்பிடுகையில்) பொது (வகை) | general class |
| குலவிளக்கு | ஒருவரின் குடும்பம் அல்லது குலம் சிறப்பதற்குக் காரணமாக இருப்பவர் | pride of the family or community |
| குலவு | நெருங்கி உறவாடுதல் | be overly familiar |
| குலவை | (பொங்கல் போன்ற பணடிகை கொண்டாடும்போதோ இறப்பின்போதோ பெண்கள்) நாக்கை வாயின் பக்கவாட்டிலோ அல்லது மேலும் கீழுமாகவோ அசைத்து எழுப்பும் ஒலி | sound produced by moving the tongue rapidly across open mouth while emitting a low-pitched sound (collectively by women) |
| குலுக்கல்1 | (வாகனங்கள் மேடுபள்ளத்தில் ஏறி இறங்குவதால் அல்லது ஏதேனும் தடையால்) தூக்கிப்போடுதல் | (of vehicles) jolt |
| குலுக்கல்2 | (எண்கள் அச்சடிக்கப்பட்ட சீட்டுகளை விற்றுச் சிலவற்றை) பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுத்தல் | draw (of lottery tickets) |
| குலுங்கு | (சில செயல்களால்) அதிர்ந்து ஆடுதல் | shake |
| குலை1 | (உடல் கட்டு) தளர்தல் | (of body) become loose or limp |
| குலை3 | (நாய்) குரைத்தல் | (of dog) bark |
| குலைதள்ளு | (தென்னை, பனை, வாழை முதலிய மரங்கள் காய்க்கும் முறையாக) பூவுடன் கூடிய காம்பை வெளிப்படுத்துதல் | (of trees such as coconut, palm, plantain, etc.) bring forth a stem with flowers (to yield fruits) |
| குலோப்ஜாமுன் | மைதா மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டிப் பொரித்து ஜீராவில் போட்டுத் தயாரிக்கும் ஓர் இனிப்பு வகை | flour-balls soaked in sugar treacle |
| குவடு | மார்பின் மையத்தில் உள்ள குழிவான பகுதி | cavity (seen in the middle of the chest) |
| குவளை1 | (தண்ணீர் முதலியன குடிப்பதற்குப் பயன்படும்) விளிம்பும் பிடியும் இல்லாத கோப்பை | tumbler |
| குவளை2 | (இலக்கியங்களில் பெண்களின் கண்களுக்கு உவமையாகக் கூறப்படும்) ஒரு வகைக் கருநீல நிறப் பூ | blue nelumbo |
| குவி3 | முதன்மை வினையின் தொழில் மிகுதியாகச் செய்யப்படுவதைத் தெரிவிக்கப் பயன்படும் ஒரு துணை வினை | an auxiliary used to indicate that the act of the main verb is being done in excess or in large quantities |
| குவிப்பு | சேர்ந்து ஒன்றாகிக் காணும் நிலை | piling up |
| குவிமுனை/குவிமையம் | ஒளிக் கதிர்கள் ஊடகத்தின் வழியாகச் சென்று மறுபுறத்தில் அல்லது எதிர்ப்புறத்தில் ஒரு சிறு புள்ளியாகக் குவியும் இடம் | principal focus |
| குவியல் | ஒன்றின் மீது ஒன்றாக ஓர் இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருப்பதன் தொகுப்பு | pile |
| குவியாடி | வெளித் தள்ளிய அரைக் கோள வடிவப் பிரதிபலிக்கும் பரப்பைக் கொண்ட ஆடி | convex mirror or lens |
| குழகுழப்பு | பிசுபிசுப்போடு குழைவாக இருக்கும் தன்மை | sticky and slimy nature |
| குழந்தை | தாயின் வயிற்றில் இருக்கிற அல்லது அண்மையில் பிறந்த பிள்ளை | child |
| குழந்தைக்காரி | (தாய்ப்பால் குடிக்கும்) கைக் குழந்தை உடையவள் | a mother who has a nursing baby |
| குழந்தைகுட்டி | பிள்ளைகள் | children |
| குழப்படி | குழப்பப்பட்டுக்கிடக்கும் நிலை | confused state |
| குழப்பம் | (-ஆக, -ஆன) (எதையும் செய்ய இயலாத வகையில் மனத்தின்) தெளிவற்ற நிலை(கருத்து) தெளிவின்மை | confusion (out of indecision) |
| குழப்பு | தெளிவற்ற நிலைக்கு (ஒருவரை) உள்ளாக்குதல் | confuse (a person) |
| குழம்பு1 | தெளிவற்ற நிலைக்கு உள்ளாதல் | be confused |
| குழம்பு2 | காய்கறியை அல்லது இறைச்சியை வேக வைத்துக் காரச் சுவையுடன் (உணவில் ஊற்றிச் சாப்பிடத் தகுந்த வகையில்) தயாரிக்கும் சாறு | thickened sauce or a kind of broth (to be added to boiled rice) |
| குழல்விளக்கு | உட்புறம் ஒளிரும் ரசாயனப் பொருள் பூசப்பட்ட நீண்ட குழாய் அமைப்புடைய வெண்ணிற ஒளி தரும் மின்விளக்கு | neon (tube) light |
| குழவி1 | (அம்மி, ஆட்டுக்கல் முதலியவற்றில்) அரைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீள் உருண்டை வடிவக் கல் | stone roller of அம்மி, etc மாவு ஆட்டி முடித்த பிறகு குழவியைக் கழுவிவை |
| குழவி2 | குழந்தை | child |
| குழாம் | ஒருசிலர் அடங்கிய கூட்டம் | group |
| குழாய் | நடுவில் துளை உடையதும் உருண்டை வடிவில் உள்ளதும் பொருள்களைத் தன் வழி கடத்துவதற்குப் பயன்படுவதுமான நீண்ட பொருள் | tube |
| குழாய்க் கிணறு | (பூமிக்கு அடியில் உள்ள நீரை வெளிக்கொண்டுவரச்செய்யும் வகையில்) குறுகிய வட்டமாகத் தோண்டி அதனுள் குழாய் இறக்கப்பட்ட கிணறு | tube-well |
| குழாய்ப் புட்டு | குழாய் போன்ற நீண்ட கழுத்துடைய பாத்திரத்தில் அரிசி மாவை அடைத்து ஆவியில் வேகவைத்துச் செய்யும் புட்டு | dish prepared by filling a long tube-like structure with rice flour and steaming it |
| குழி1 | குழிவு ஏற்படுதல் | form a hollow |
| குழி3 | உள்நோக்கிச் செல்லுமாறு (அமைக்கப்பட்ட அல்லது அமைந்திருக்கும்) குழிவு | pit |
| குழி4 | நிலத்தை அளப்பதற்கான முறைகளில் நூற்று நாற்பத்து நான்கு சதுர அடி கொண்ட ஒரு அளவு | a land measure equal to 144 sq |
| குழித்தறி | குழியில் கால்மிதிகளைக் கொண்ட தறி | loom having treadles in a pit |
| குழிபறி1 | (ஒரு தளத்தில்) பள்ளம் ஏற்படுதல் | develop potholes |
| குழிபறி2 | கேடு விளைவிக்க மறைமுக ஏற்பாடுசெய்தல் | conspire (to do harm) on the sly |
| குழியாடி | உட்புறம் குழிவான அரைக் கோள வடிவப் பிரதிபலிக்கும் பரப்பைக் கொண்ட ஆடி | concave mirror or lens |
| குழிவு | உள்நோக்கிச் செல்லும் பள்ளம் | hollowness |
| குழு | ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு | committee |
| குழுமம் | ஒரு நோக்கத்தைக் குறிப்பிட்டு அதை நிறைவேற்றச் சில அமைப்புகள் ஒன்று சேர்ந்து தனி விதிமுறைகளை அமைத்து உருவாக்கும் ஓர் அமைப்பு | corporation |
| குழுமு | (ஓர் இடத்திற்கு) கூட்டமாக வருதல்(பலர்) கூடுதல் | collect in large numbers |
| குழூஉக்குறி | ஒரு குழுவினர் தங்களுக்குள் குறியீடாக வழங்கும் சொற்கள் | jargon |
| குழை1 | (அரிசி முதலியவற்றை வேகவைப்பதால்) குழகுழப்புத் தன்மை ஏற்படுதல் | (of rice) be overcooked |
| குழை2 | (சந்தனம், சுண்ணாம்பு, பொடி முதலிய திடப் பொருளை) திரவத்தில் சாந்து போலக் கலத்தல் | mix (a powder, etc, with a liquid) |
| குழை3 | (வாலை) ஆட்டுதல் | wag (the tail) |
| குழை4 | தழை | foliage |
| குழையடி | வேப்பிலை அடித்து மந்திரம் சொல்லி நோய் தீர்த்தல் | drive out the evil spirit by beating the possessed with a bunch of neem leaves chanting mantras |
| குழைவு | (குரலில், பேச்சில்) நெகிழ்வு | tenderness or softness (in tone, speech) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.