Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| குண்டும்குழியும் | சிறு பள்ளங்கள் | potholes |
| குண்டுமல்லி | அதிக இதழ்களைக் கொண்ட, பெரிய அளவுடைய ஒரு வகை மல்லிகை | arabian jasmine |
| குண்டூசி | (தாள் போன்றவற்றை) குத்திக் கோத்து வைப்பதற்குப் பயன்படுத்தும், உருண்ட தலைப்பகுதி உடைய சிறு ஊசி | pin |
| குண்டோதரன் | எவ்வளவு உணவு தந்தாலும் தின்று தீர்ப்பவன் | gourmand |
| குணச்சித்திர | குணத்தையும் உணர்ச்சியையும் திறம்பட வெளிப்படுத்தக் கூடிய (நடிகர்) | character (actor, role) |
| குணச்சித்திரம் | (கதை, நாடகம் முதலியவற்றில்) கதாபாத்திரம் | portrayal (of a character in a story, etc.) |
| குணசாலி | (பொதுவாக) நல்ல பண்புகள் நிறைந்தவர்(சிறப்பாக) சகிப்புத் தன்மை உடையவள் | (generally) person of noble traits |
| குணநலன் | (ஒருவரின்) நல்ல இயல்பு | (of a person) positive qualities |
| குணப்படுத்து | (நோயை) நீக்குதல்(நோயாளியை) சுகப்படுத்துதல் | cure |
| குணம்1 | (இப்படிப்பட்டவர், இப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்படியாக இருக்கும்) இயல்பு | nature |
| குணம்2 | (நோய் நீங்கிப் பெறும்) சுகம் | healing |
| குணவதி | நற்குணமுடையவள் | woman of noble character |
| குணாதிசயம்/குணாம்சம் | மேலோங்கிய குணம் | predominant characteristics |
| குத்தகை | உரிமையாளர் அல்லது நிர்வாகம் ஒருவருக்கு அனுபவ உரிமை அளித்துத் தன் பங்கை (நன்செய் நிலமாக இருந்தால்) தானியமாகவும் (தோப்பில் தேங்காய் பறித்தல் போன்ற மற்ற தொழில்களாக இருந்தால்) பணமாகவும் பெற்றுக்கொள்ளும் சட்டபூர்வமான ஒப்பந்தம் | lease |
| குத்தகைதாரர் | குத்தகைக்கு எடுப்பவர் | lessee |
| குத்திட்டு | (உட்காரும்போது) குத்துக்காலிட்டு | squat (while sitting) |
| குத்திடு | (பார்வை, கவனம் முதலியன ஒருவரின் மேல், ஒன்றில்) நிலைத்தல் | (attention, etc.) get fixed on |
| குத்திருமல் | கக்குவான் | whooping cough |
| குத்து2 | (மடக்கிய கைவிரல்களால் விழும்) அடி | hit (with fist) |
| குத்துக்கல் | (எல்லையில்) செங்குத்தாக நட்டுவைக்கப்படும் கல் | stone planted erect in the ground marking boundary |
| குத்துக்காலிடு | (பெரும்பாலும் உட்கார் என்னும் வினையோடு) முழங்காலை மடித்து முகத்துக்கு முன் கொண்டுவந்து இடுப்பின் கீழ்ப்பகுதி தரையைத் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைத்தல் | bend the knees so as to squat (while sitting) |
| குத்துக்கோல் | (தாக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தும்) கூர்மையான முனை உடைய கம்பு | pointed pole (used as a weapon) |
| குத்துச்சண்டை | (விளையாட்டில்) இரு வீரர்கள் கையில் உறை அணிந்து ஒருவர் முகத்தில் ஒருவர் குத்திப் புள்ளிக் கணக்கில் வெற்றி அடையும் விளையாட்டு | (in sports) boxing |
| குத்துச்செடி | செங்குத்தான தண்டிலிருந்து அடர்த்தியாக வளரும் உயரம் குறைந்த செடி | low shrub |
| குத்துப்பாறை | செங்குத்தான பாறை | steep rock |
| குத்துயரம் | முக்கோணத்தில் அடிப்பக்கத்தையும் மேல்முனையையும் இணைக்கும் செங்குத்துக் கோடு | altitude (in a triangle) |
| குத்துவாள் | (பெரும்பாலும் இடுப்பில் செருகி வைத்திருக்கும்) கைப்பிடியுடைய சிறு வாள் | small dagger |
| குத்துவிளக்கு | வட்ட வடிவமான அடிப்பகுதியில் நேராகப் பொருந்திய தண்டின் மேல் உள்ள தட்டுப் போன்ற பாகத்தில் திரியிட்டு எண்ணெய் ஊற்றி ஏற்றும் (உலோக) விளக்கு | oil-lamp with a pedestal (ritually lit in the homes and temples) |
| குத்துவெட்டு | (அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கப்படுவதால் உடலில் ஏற்படும்) வெட்டுக் காயம் | stabs and cuts |
| குத்தூசி | (மூட்டையைப் பிரிக்காமல் உள்ளிருக்கும் தானிய மணிகளை வெளிக்கொண்டுவரப் பயன்படுத்தும்) கூரிய நுனியும் தானியம் வருவதற்கான குழிந்த பகுதியும் கொண்ட ஊசி போன்ற இரும்புக் கம்பி | a sharp grooved hook (to draw grains from the sack to take sample) |
| குத்பா | பள்ளிவாசலில் தொழுகையின்போது நடக்கும் பிரசங்கம் | discourse in a mosque during hours of prayer |
| குதப்பு | (வெற்றிலை, பாக்கு, மிட்டாய் முதலியவற்றை) வாய்க்குள் அடக்குதல்(கடிக்காமல்) சப்புதல் | keep (betel leaf, tobacco, etc as much as fills the mouth) and chew steadily without swallowing |
| குதம் | ஆசனவாய் | anus |
| குதர்க்கம் | (ஒருவர் மற்றொருவர் சொல்வதை) எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையிலோ செய்யும் வாதம் | unreasonable argument |
| குதலை | மழலை | lisping (of a child) |
| குதறு | (பற்களால் கடித்து) உருக்குலையும்படி பிய்த்தல்(கிழித்து) நாசப்படுத்துதல் | tear into shreds (by biting) |
| குதி1 | (காலால் உந்தி) மேல் எழும்பிக் கீழே வருதல்(உயரமான இடத்திலிருந்து) கீழே பாய்தல் | jump |
| குதி2 | (காலால் உந்தி) ஒரு முறை எழும்பிக் கீழே வருதல் | jump |
| குதிகால் | உள்ளங்காலின் (குழிவை ஒட்டிய) பின்பகுதி | heel |
| குதிர்2 | (நெல் முதலிய தானியம் சேமித்து வைப்பதற்கான) மண்ணால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட (பீப்பாய் போன்ற) அமைப்பு | a large barrel-like receptacle for storing grain |
| குதிரை1 | வேகமாக ஓடக் கூடியதும் பிடரியில் மயிர் உடையதும் சவாரி செய்வதற்குப் பழக்கப்படுத்தக் கூடியதுமான விலங்கு | horse |
| குதிரை2 | (தற்காலத்தில் குண்டை வெளியேற்ற விரலால் அமுக்கும்) துப்பாக்கியின் கீழ் உள்ள விசை | trigger |
| குதிரைக்கொம்பு | (கிடைக்காதது கிடைப்பது போன்று) அரியது | rare thing |
| குதிரைச்சக்தி | ஓர் இயந்திரத்தின் இயங்கும் சக்தியை அளவிடப் பயன்படுத்தும் அலகு | horsepower |
| குதிரைச்சதை | ஆடுசதை | calf muscle |
| குதிரைப்பந்தயம் | முதலாவதாக வந்து வெற்றி பெறும் வாய்ப்புள்ள குதிரைகளின் மீது பணம் கட்டும் போட்டி | horse-race |
| குதிரையோடு | ஒருவர் தனக்குப் பதிலாக மற்றொருவரைத் தேர்வு எழுதவைத்து ஆள்மாறாட்டம்செய்தல் | write an examination by proxy |
| குதிரை வண்டி | குதிரையால் இழுக்கப்படும், பயணம் செய்வதற்கான வண்டி | horse-drawn cart (as a mode of transport) |
| குதூகலம் | (உடனே வெளிப்படும்) மகிழ்ச்சி | joy |
| குதூகலி | மகிழ்ச்சியை (உடனே) வெளிப்படுத்துதல் | jump for joy |
| குந்தகம் | (-ஆன) (ஒரு ஒழுங்கில் இருப்பதைக் குலைத்துவிடக் கூடிய) கேடு | thwarting |
| குந்தாணி | உரல் | stone mortar |
| குந்து2 | திண்ணை | raised platform at the entrance of a house |
| குப்-என்று | (அந்தக் கணத்தில்) அதிகமாக | (sweat) breaking out |
| குப்பம் | (பெரும்பாலும்) மீனவர்கள் வாழும் கடலோரப் பகுதி அல்லது சிற்றூர் | fishermen hamlet |
| குப்பல் | குவியல் | heap |
| குப்பாயம் | ஜிப்பா போன்ற மேல் உடை | a kind of loose-fitting shirt |
| குப்பி | (கொம்பு வடிவ) சிறு புட்டி | small (flask like) bottle |
| குப்பை | (கிழிக்கப்பட்ட தாள், கந்தல் துணி போன்ற) உபயோகம் அற்றவை என்று கழிக்கப்பட்டவை | trash |
| குப்பைக் கூடை | குப்பை போடுவதற்கான கூடை வடிவச் சாதனம் | waste (paper) basket |
| குப்பைகொட்டு | சொல்பவர் நோக்கிலும் கேலியாகவும் பயனற்ற வேலையில் பங்குபெறுதல் | (jocularly) take part in an unproductive work |
| குப்பைத் தொட்டி | குப்பை போடுவதற்காக (வீட்டுக்கு வெளியே அல்லது தெருவில்) வைத்திருக்கும் சிமிண்டினால் செய்த தொட்டி போன்ற அமைப்பு | dustbin |
| குப்பைமேனி | இலை தண்டோடு சேரும் இடத்தில் சிறுசிறு காய்கள் காய்க்கும் ஒரு வகைச் செடி | indian acalypha |
| குபீர் | பீறிட்டுவரும் | a fit of |
| குபீர்-என்று | திடீரென்று | like a flash or shot |
| குபுகுபு-என்று | (திடீரென்று) பெருக்கெடுத்தாற்போல் | (of water, etc.) gushing out |
| குபேரன் | பெரும் பணக்காரன் | millionaire |
| கும்பகர்ணன் | அதிக நேரம் ஆழ்ந்து தூங்குபவன் | one who sleeps soundly for long hours |
| கும்பம்1 | (பெரும்பாலும் சமயத் தொடர்பாக) குடம் | (often in religious context) (earthen or metal) pot |
| கும்பம்2 | குவியல் | heap |
| கும்பல் | (மனிதர்களின்) கூட்டம் | throng |
| கும்பா | (சோறு பிசைவதற்கோ சந்தனம் வைப்பதற்கோ பயன்படுத்தப்படும்) வெள்ளியால் அல்லது வெண்கலத்தால் விரிந்த தாமரை மலர் வடிவத்தில் செய்யப்பட்ட பாத்திரம் | silver or brass bowl (for mixing rice with curd, etc or for keeping sandal paste) |
| கும்பாபிஷேகம் | (கோயிலில் மூலவரைப் பிரதிஷ்டை செய்யும்போது) கோபுரக் கலசத்துக்கும் மூலவருக்கும் செய்யும் அபிஷேகம் | pouring the sanctified water, etc over the pot-like structure on the tower and over the main deity at the time of installation |
| கும்பி | வயிறு | belly |
| கும்பிடு1 | (தெய்வத்தை வழிபடும்போது அல்லது பெரியவர்களுக்கு மரியாதை தெரிவிக்கும்போது) இரு கை கூப்பி வணங்குதல் | make obeisance with folded hands (as in offering prayers or paying respects to elders) |
| கும்பிடு2 | (தெய்வ வழிபாட்டின் அறிகுறியாக அல்லது பெரியவர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் முறையாக) இரு கை கூப்பிய வணக்கம் | worship |
| கும்மட்டி | கரி, மரத் தூள் போன்றவற்றால் தணல் மட்டும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் (சட்டி போன்ற) இரும்பு அடுப்பு | a kind of stove in which coal or chaff is filled to provide heat without flame |
| கும்மாளம் | மகிழ்ச்சி நிறைந்த ஆரவாரம் | uncontrolled merriment |
| கும்மியடி | (பெண்கள் சுற்றிவந்து) கைகொட்டிப் பாடி ஆடுதல் | (of girls) dance round clapping hands rhythmically |
| கும்மிருட்டு | செறிந்த இருள் | pitch darkness |
| கும்மு | (துவைக்கும்போது துணியை ஒரு பந்தாகச் சுருட்டி இரு கைகளாலும் தூக்கி) ஒரு பரப்பில் அழுத்திஅழுத்தி எடுத்தல் | pound gently (clothes on a hard surface holding in both hands while washing) |
| குமட்டல் | (வாந்தியெடுக்கும் உணர்வாக வயிற்றை) புரட்டல் | nausea |
| குமட்டு | (வாந்தியெடுக்கும் உணர்வில் வயிற்றை) புரட்டுதல் | turn (the stomach at the time of vomiting) |
| குமரன் | இளைஞன் | young man |
| குமராகு | (பெண்) பருவமடைதல் | (of girls) come of age |
| குமரி | பருவமடைந்த பெண் | girl who has come of age |
| குமரு | இளம் பெண் | unmarried young girl |
| குமாரத்தி | (பெரும்பாலும் திருமண அழைப்பிதழ் முதலியவற்றில்) மகள் | (often in wedding invitations, etc.) daughter |
| குமாரன் | (பெரும்பாலும் திருமண அழைப்பிதழ் முதலியவற்றில்) மகன் | (often in wedding invitations, etc.) son |
| குமாரி | (முகவரி முதலியவை எழுதும்போது) திருமணமாகாத பெண்ணின் பெயருக்கு முன் மதிப்புத் தரும் வகையில் சேர்க்கும் சொல் | miss |
| குமாஸ்தா | (அலுவலகப் பணியில்) எழுத்தர் | clerk (in an office) |
| குமிழி | (காற்றால் திரவத்தில் தோன்றும்) சிறு அரைப் பந்து வடிவத் தோற்றம் | bubble |
| குமிழியிடு | (நீரில்) குமிழி தோன்றுதல் | bubble |
| குமுறல் | (எரிமலை, கடல் முதலியவற்றின்) ஆரவாரம் | rumbling (of volcano, sea, etc.) |
| குமுறு | (எரிமலை வெடிக்கும் முன்) முழங்குதல்(காற்றால் கடல்) ஆரவாரித்தல் | (of volcano) rumble |
| குமை | (புகை, நெருப்பு முதலியவை வெளியேற வழி இல்லாமல் ஒரே இடத்தில்) சுழன்றுவருதல் | (of smoke, fire) spiral (without any outlet) |
| குமைச்சல் | (மன) புழுக்கம் | (of emotions) state of being pent-up |
| குயவன் | (சக்கரத்தில் மண் வைத்துச் சுற்றி) மட்பாண்டங்கள் செய்பவன் | potter |
| குயில் | இனிய குரல் உடைய கரிய நிறப் பறவை | koel |
| குர்ஆன் | முகமதுநபிமூலமாக இறைவனால் அருளப்பட்ட வேதம் | koran |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.