Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| கோணம் | இரு கோடுகள் அல்லது இரு பரப்புகள் ஒன்றையொன்று சந்திக்கும் இடத்தில் உள்ள இடைவெளியின் அளவு | angle |
| கோணல் | நேர்கோடாக அல்லது நேர்கோட்டில் அமையாதது | being crooked |
| கோணல்மாணல் | (நேராக இல்லாமல்) ஒழுங்கற்றுத் தாறுமாறாக இருக்கும் நிலை | irregular manner |
| கோணி | சணலால் செய்த நீள்சதுர வடிவப் பை | gunny bag |
| கோணி ஊசி | (கோணி தைக்க உதவும்) தடித்த நீளமான இரும்பு ஊசி | a long, thick needle for sewing gunny bags |
| கோணு | (நேராக இல்லாமல்) வளைந்திருத்தல்(இயல்பாக இல்லாமல்) ஒரு பக்கமாக இழுத்த நிலையில் இருத்தல் | be slanting |
| கோத்திரம் | (சில சாதிகளில்) ஒரு குடும்பத்தின் கால்வழியைக் காட்டும் பிரிவு | a (caste) group with a common descent which practises exogamy |
| கோதண்டம் | வில் | bow |
| கோதா | (குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகியவை நடத்த) உயரமாக அமைக்கப்பட்ட மேடை | (boxing) ring |
| கோதானம் | (சடங்குசெய்து ஒருவருக்கு) பசுவைத் தானமாகத் தருதல் | making a ritual gift of cow |
| கோது1 | (பறவை சிறகுகளின் ஊடே அலகை நுழைத்து) நீவுதல் | (of birds) preen |
| கோது2 | (பலாப் பழத்தின் தோலை உரிக்கும்போது சுளையின் மேல்) நார் போல் படிந்து காணப்படும் பகுதி | the fibrous strip (attached to the pulp of the jack fruit) |
| கோதுமை | (நேரடியாகவோ மாவாகத் திரிக்கப்பட்டோ உணவாகும்) பழுப்பு நிறத் தானியம்/மேற்சொன்ன தானியத்தைத் தரும் பயிர் | wheat (the grain and the crop) |
| கோந்து | (சில வகை மரங்களிலிருந்து கிடைக்கும் அல்லது ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்படும்) ஒட்டும் தன்மையுடைய கெட்டித் திரவம் | gum |
| கோப்பு | (அலுவலகத்தில்) குறிப்புகள் அடங்கிய தாள்கள், கடிதங்கள் முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துவைத்துப் பயன்படுத்துவதற்கான தொகுப்பு | (in offices) file |
| கோப்பை | (குடிக்கப் பயன்படுத்தும்) ஒரு பக்கத்தில் கைப்பிடியுடைய சிறு பீங்கான் அல்லது கண்ணாடிப் பாத்திரம்(சோறு முதலியவை வைக்கப் பயன்படுத்தும்) அடிப்பகுதி தட்டையாகவும் பக்கப்பகுதி புடைத்தும் இருக்கும் பாத்திரம் | (porcelain) cup |
| கோபதாபம் | கோபமும் அதன் விளைவாக ஏற்படும் மனக்குறையும் | rankling |
| கோபம் | (அநீதி, கொடுமை, தீங்கு, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது) முகத்தில் அல்லது செயலில் வெளிப்படும் (பிறரைப் பயப்பட வைக்கும்) கடுமை உணர்வு | anger |
| கோபி1 | (ஒருவர் மேல்) கோபம் கொள்ளுதல் | get angry |
| கோபி2 | சுண்ணாம்புடன் கலந்து கட்டடங்களுக்கு வர்ணமாகப் பூசப் பயன்படும், சந்தன நிறத்தில் உள்ள ஒரு வகைப் பொடி | yellowish red pigment mixed with lime used for painting a building |
| கோபுரம் | (கோயில் நுழைவாயிலின் மேல் எழுப்பப்படும்) அடிப்பக்கம் அகன்றும் மேல்பகுதி குறுகியும் பக்கங்களில் சிற்ப வேலைப்பாடு கொண்டும் அமைக்கப்படும் உயர்ந்த கட்டடப் பகுதி | (of Hindu temple) tower |
| கோமகன் | (மக்கள் மனத்தில் இடம்பெறும்) மதிப்பிற்கு உரியவர் | eminent person |
| கோமாளி | உடையால், பேச்சால், அங்க அசைவுகளால் சிரிக்க வைப்பவன் | clown |
| கோமேதகம் | பழுப்பு அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள விலையுயர்ந்த கல் | precious stone of light yellow colour |
| கோயில் | (கடவுள் விக்கிரகத்தை மையமாகக் கொண்டு எழுப்பப்படும்) வழிபாட்டுக்கான கட்டடம் | temple |
| கோயில்காளை | கோயிலுக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டுக் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றித் திரியும் (கொழுத்த) காளை | (fat) bull dedicated to a temple which roams around |
| கோயில்பெருச்சாளி | (பிறர் சொத்தை உடனிருந்தே) சிறிதுசிறிதாக அபகரிப்பவர் | (an insider who is a) swindler |
| கோர்வை2 | ஸ்வர அமைப்பின் அல்லது சொற்கட்டு அமைப்பின் முடிவில் வரும் தொடர் | a phrase coming at the end of a sequence of ஸ்வரம் or சொற்கட்டு |
| கோர்வை3 | உடல் பகுதி ஒரு நிறத்திலும் கரையும் முந்தானையும் வேறு நிறத்திலும் இருக்கும்படி கோத்து நெய்யப்பட்ட பட்டுச் சேலை | saree woven with contrasting colour border and palla |
| கோரப்பிடி | (வறுமை, லஞ்சம் முதலியவற்றின்) தப்ப முடியாத தீவிர நிலை | (of poverty, corruption) vice-like grip |
| கோரம் | (அச்சம் தரும்) கொடூரம் | severity |
| கோரி | இறந்தவரைப் புதைத்து அதன் மேல் எழுப்பப்படும் (இஸ்லாமியரின்) சமாதி | tomb-like structure at the burial place (of Muslims) |
| கோரிக்கை | (தேவைகள், குறைகள், விருப்பம் முதலியவற்றைத் தெரிவித்து முன்வைக்கும்) வேண்டுகோள் | demand |
| கோரு1 | (உரிமையுடன்) கேட்டல்(முறையாக) வேண்டுதல் | demand |
| கோரு2 | (நீர் முதலியவற்றைக் கையால் அல்லது பாத்திரத்தால்) அள்ளுதல் | gather (water, etc with the palm of the hand) |
| கோரை | மணல்பாங்கான இடங்களிலும் நீர்நிலைகளின் கரைகளிலும் உயர்ந்து வளர்ந்திருக்கும் (பாய் பின்னப் பயன்படும்) ஒரு வகைப் புல் | sedges and bulrushes |
| கோரைக் கிழங்கு | (மருந்தாகப் பயன்படுத்தும்) கோரைப் புல்லின் கிழங்கு | bulb of the bulrush |
| கோரைப்பல் | கடித்துத் துண்டாக்குவதற்கு வசதியாக மேல்தாடையிலும் கீழ்த்தாடையிலும் உள்ள கூரிய முனையை உடைய பல் | canine tooth |
| கோரைப் பாய் | கோரைப் புல்லின் தண்டைக் கிழித்துப் பதப்படுத்தி நெய்யப்படும் பாய் | bulrush mat |
| கோரோசனை | பசு முதலிய அசைபோடும் மிருகங்களின் வயிற்றிலிருந்து எடுக்கப்படுவதும் நாட்டு வைத்தியத்தில் விஷமுறி மருந்தாகப் பயன்படுவதுமான மஞ்சள் நிறப் பொருள் | bezoar (used as an antidote) |
| கோல் | (சிராய் நீக்கப்பட்ட) வழவழப்பான கம்பு | stick (with smooth surface) |
| கோல்மால் | முறைகேடு | malpractice |
| கோலப் பொடி | கோலம் போடுவதற்காக வெள்ளைக் கல்லை அல்லது அரிசியை இடித்துத் தயாரிக்கும் பொடி | white powder obtained by pounding soapstone or rice for drawing கோலம் |
| கோலம் | (பொடியாலோ மாவாலோ மாவுக் கரைசலாலோ) தரையில் புள்ளிகள் வைத்து அல்லது குறுக்குக்கோடுகள் இழுத்து அவற்றை இணைத்து உருவாக்கும் அலங்கார வடிவம் | decorative designs drawn on floor, etc (with powder, flour, flour-paste) |
| கோலாகலம் | (திருவிழா, வரவேற்பு, பண்டிகை முதலியவற்றில்) மகிழ்ச்சியுடன் கூடிய ஆடம்பரம் | gaiety |
| கோலாட்டம் | (பெரும்பாலும் பெண்கள்) வட்டமாக நின்று வர்ணமிட்ட கோல்களைப் பாட்டுக்கு ஏற்பத் தட்டி ஆடும் ஒரு வகை நடனம் | a popular group dance in which generally women move round striking short coloured sticks to the rhythm of a song |
| கோலி | சிறு கண்ணாடிக் குண்டு | marble |
| கோலு | வகுத்தல் | pave (the way) |
| கோவணம் | (ஆண்கள் பிறப்புறுப்பை மறைக்கும் பொருட்டு) அரைஞாண் கயிற்றில் கோத்து முன்புறமிருந்து பின்புறமாகக் கட்டிக்கொள்ளும் நீளத் துணி | long cloth covering the loins (usually for men) |
| கோவேறுகழுதை | பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்த விலங்கு | mule |
| கோவை1 | (-ஆக, -ஆன) ஓர் ஒழுங்கில் அமைந்த தொடர்ச்சி | continuity |
| கோவை2 | நீள் உருண்டை வடிவச் சிவப்புப் பழத்தைத் தரும் (வேலியில் படரும்) ஒரு வகைக் கொடி | common hedge creeper (which bears red fruits) |
| கோழி | (பொதுவாக) வீடு, பண்ணை ஆகியவற்றில் முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் அதிக உயரம் பறக்காத பறவை | (generally) fowl, (especially) hen |
| கோழித்தூக்கம் | குறைந்த நேரமே தூங்கும் தூக்கம் | sleep for a very short time |
| கோழிப்புரை | கோழிகளை அடைத்து வைக்கும் கூண்டு | enclosure for domestic fowls, esp |
| கோழை1 | மன உறுதியோ துணிச்சலோ இல்லாத நபர் | coward |
| கோழை2 | கபம் | phlegm |
| கோள் | கிரகம் | planet |
| கோள்மூட்டு | (ஒருவரைப்பற்றி) தவறாக (மற்றவரிடம்) கூறுதல்(இருவரிடையே) மனத்தாங்கல் ஏற்படும்படிசெய்தல் | tell tale (against s |
| கோளம் | உருண்டை | sphere |
| கோளரங்கம் | கிரகங்கள், நட்சத்திரங்கள் முதலியன எவ்வாறு வானில் அமைந்துள்ளன என்பதை விளக்கும் விதத்தில் மாதிரிகளைக் கொண்ட ஒரு கட்டடம் | planetarium |
| கோளாறு1 | (இயக்கம், தன்மை, விளைவு முதலியவற்றை) பாதிக்கிற வகையில் ஏற்படுகிற சிக்கல் | fault |
| கோளாறு2 | திறமை | skill |
| கோஷ்டி | (ஒரு நோக்கத்திற்காக) வந்திருப்பவர்களின் திரள் | group |
| கௌபீனம் | கோவணம் | loin-cloth |
| கௌரவம் | (-ஆக, -ஆன) (ஒருவரின் அல்லது ஒருவர் சார்ந்துள்ள ஒன்றின்) மேம்பாடு | (in society) prestige |
| கௌரவி | (ஒருவரை அவர் செய்த பணிகளை) பாராட்டிச் சிறப்பித்தல் | honour (a person) |
| கௌளி | பல்லி | house lizard |
| கௌளி சாஸ்திரம் | பல்லி எழுப்பும் சத்தத்தைக் கொண்டு அல்லது உடம்பில் பல்லி விழும் இடத்தைக் கொண்டு பலன் கூறும் முறை | fortune telling based on the chirps of lizard or by considering the part of the body on which the lizard falls |
| கௌளிசொல் | பல்லி எழுப்பும் சத்தம் | chirp of the lizard |
| க்ஷணம் | கணம் | moment |
| க்ஷயம்/க்ஷயரோகம் | காச நோய் | tuberculosis |
| க்ஷீணி | (பலம்) குன்றுதல் | decrease (in strength) |
| க்ஷேத்திரம் | புனிதத் தலம் | holy place |
| க்ஷேத்திராடனம் | புனிதத் தலங்களுக்குச் செல்லும் யாத்திரை | pilgrimage |
| கா | பாதுகாத்தல் | protect |
| காக்கா(ய்) | காகம் | crow |
| காக்காய்க்கடி | (பெரும்பாலும் சிறுவரிடையே) (தின்பண்டம் போன்றவற்றை) எச்சில் படாமல் துணியால் மூடிக் கடிக்கும் முறை | practice of splitting sweetmeats, etc, in which the object is not directly bitten but through a cloth (prevalent among children) |
| காக்காய்க்குளியல் | (முழு உடம்பையும் நனைக்காமல்) தண்ணீரை அள்ளித் தெளித்துக் குளித்தல் | wash had in a hurry |
| காக்காய்ப்பொன் | சிவந்த பொன் நிறத்தில் இருக்கும் ஒரு வகைத் தகடு | a kind of tinsel (used for decoration) |
| காக்காய்பிடி | (தன் காரியத்துக்காக ஒருவரை) வேண்டியவை செய்து மகிழ்வித்தல் | curry favour with |
| காக்காய்வலிப்பு | (மூளையில் ஏற்படும் பாதிப்பினால்) கைகால்கள் வெட்டிவெட்டி இழுத்து வாயில் நுரைதள்ளிச் சுயநினைவை இழக்கச்செய்யும் ஒரு நோய் | epilepsy |
| காக்கி | (பொதுவாகக் காவல் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலாளிகள் முதலியோருக்குச் சீருடை தைக்கப் பயன்படுத்தும்) ஒரு வகைப் பழுப்பு நிற முரட்டுத் துணி | khaki (fabric) |
| காகிதம் | தாள் | paper |
| காங்கை | வெம்மை | radiation of heat |
| காசம் | (பெரும்பாலும்) நுரையீரலைப் பாதித்து உடலை இளைக்கவைக்கும் நோய் | tuberculosis |
| காசாக்கு | (சுய ஆதாயத்தையே குறியாகக்கொண்டு எதையும்) விற்றுப் பணம் சேர்த்தல் | cash in |
| காசாளர் | (வங்கி, அலுவலகம் முதலியவற்றில்) பணம் தருதல், பெறுதல் ஆகியவற்றையும் அவை தொடர்பான பிற பணிகளையும் கவனிக்கும் பதவி வகிப்பவர் | cashier |
| காசியாத்திரை | திருமணத்தில் தாலி கட்டும் முன் மணமகன் கையில் குடையுடன் சகலத்தையும் துறந்து காசிக்குச் செல்வதாகப் பாவனைசெய்யும் வகையில் நடத்தப்படும் ஒரு சடங்கு | a ritual in certain (Hindu) weddings where the bridegroom feigns to undertake a pilgrimage to Banaras symbolic of renunciation |
| காசு | நாணயம் | coin |
| காசுக்கட்டளை | பணவிடை | money order |
| காசுமாலை | (பெண்கள் கழுத்தில் அணியும்) நாணய வடிவ வட்டத் தகடுகளைக் கோத்துச் செய்யப்பட்ட ஆபரணம் | a necklace made of gold or silver coin-like pieces |
| காசோலை | ஒருவர் வங்கியில் போட்டுவைத்திருக்கும் பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையைத் தான் குறிப்பிடுபவருக்கு வழங்குமாறு வேண்டி வங்கிக்கு அனுப்பும் படிவம் | cheque |
| காட்சி | கண்ணையும் கருத்தையும் கவரும் தோற்றம் | scenery |
| காட்சி கொடு | (இறைவன், மகான்) தரிசனம் தருதல் | (of god) appear (to devotees) |
| காட்சிப்பொருள் | (கண்காட்சி, அருங்காட்சியகம் முதலியவற்றில்) பார்ப்பதற்காக மட்டும் வைக்கப்பட்டிருக்கும் பொருள் | exhibit |
| காட்டம் | (கேட்பவருக்கு உறைக்கும் வகையில் வெளிப்படுத்தும்) எரிச்சல் கலந்த கோபம் | sharpness (of temper) |
| காட்டாறு | (ஆண்டு முழுவதும் வறண்டு கிடந்து) திடீர் வெள்ளத்தால் பெருக்கெடுத்து ஓடும் ஆறு | wild stream (carrying flash floods but remaining dry most part of the year) |
| காட்டான் | நாகரிகமாகப் பழகும் இயல்பு இல்லாதவன் | person of rough manners |
| காட்டிக்கொடு | (ஒரு நபரையோ அவர் இருக்கும் இடத்தையோ) வஞ்சகமாகத் தெரிவித்தல் | inform on (as an act of betrayal) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.