Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
காரணி ஒரு செயல் நிகழ அல்லது உருவாகக் காரணமாக அமைவது(causative) factor
காரம்1(-ஆக, -ஆன) உறைப்புpungency
-காரம்2சுட்டும் முறையாகவும் ஒலிப்பு முறை கருதியும் உயிரெழுத்திலும் உயிர்மெய்யெழுத்திலும் நெடில் எழுத்துகளோடு சேர்க்கப்படும் இடைச்சொல்a particle added to long vowels and consonant-vowels for the purpose of their designation and pronunciation
காராச்சேவு கடலை மாவுடன் மிளகாய்ப் பொடி கலந்து பிசைந்து அச்சின்மூலம் சிறு குச்சியாகப் பிழிந்து எண்ணெய்யில் இட்டுச் செய்யும் தின்பண்டம்a kind of snack made from a paste of chickpea flour mixed with chilli powder and fried in oil in the shape of small sticks
காராப்பூந்தி கடலை மாவில் மிளகாய்ப் பொடி கலந்து பிசைந்து துளைகளை உடைய பெரிய கரண்டியில் தேய்த்து எண்ணெய்யில் இட்டுச் செய்யப்படும் தின்பண்டம்a snack made from a paste of chickpea flour mixed with chilli powder and fried in oil in the shape of tiny balls
காராமணி (புன்செய் நிலத்தில் ஊடுபயிராகப் பயிரிடப்படும்) கரும் பச்சை நிறத்தில் தட்டையாகவும் சற்று நீளமாகவும் இருக்கும் ஒரு வகைப் பருப்புchowlee bean
-காரி காரன் என்பதன் பெண்பால்feminine of -காரன்
காரிகை பெண் lady
காரியக்காரன் சுயநல நோக்கத்தோடு காரியங்களைச் செய்துகொள்பவன்one who is self-centred
காரியக்காரி காரியக்காரன் என்பதன் பெண்பால்feminine of காரியக்காரன்
காரியதரிசி செயலாளர்secretary (to s
காரியம் (ஒருவர் செய்கிற அல்லது செய்ய வேண்டிய) வேலை அல்லது செயல்work
காரியவாதி சுயநல நோக்கத்தோடு காரியங்களைச் செய்துகொள்ளும் நபர்one who acts in self-interest
காரியஸ்தன் பண்ணை, தோட்டம் முதலியவற்றைப் பொறுப்பாக இருந்து கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டவர்an agent who looks after an estate
காரியாலயம் அலுவலகம்office
காரீயம் கறுப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வகை ஈயம்lead, black in colour
காருண்யம் இரக்கம்compassion
காரை (செங்கல் போன்றவற்றை இணைத்துக் கட்டவோ சுவரின் மேல் பூசவோ பயன்படும்) சுண்ணாம்பும் மணலும் கலந்து நீர் ஊற்றிக் குழைத்த கலவைlime plaster
கால்1நிற்றல், நடத்தல், ஓடுதல் முதலிய செயல்களைச் செய்யத் தேவையான (மனிதனின் இடுப்பின் கீழும், விலங்கு, பறவை முதலியவற்றின் உடலின் கீழ்ப்புறத்திலும் இருக்கும்) ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புleg
கால்2நான்கில் ஒரு பகுதிquarter
கால்4(பெயரெச்சத்தின் பின்) போது(after a பெயரெச்சம்) at the time (of)
கால் இறுதி (விளையாட்டுப் போட்டியில்) அரை இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற விளையாடும் ஆட்டம்quarter final
கால்கட்டு (ஆணுக்குத் திருமணம்மூலமாக ஏற்படுத்தும்) கட்டுப்பாடுfetters of marriage (as a check on wayward sons)
கால்கடுதாசி (திடீர்) ராஜினாமாக் கடிதம்letter of resignation (especially one written huffily)
கால்கழுவு (மலம் கழித்த பிறகு) நீரால் சுத்தம்செய்தல்(euphemistically) wash after defecation
கால்கெஞ்சு (மேலும்) நடக்க முடியாதபடி இருத்தல்have no further strength to walk
கால்கோள் அடிப்படைbasis
கால்சட்டை (ஆண்களின்) இரு பகுதிகளாகப் பிரித்துத் தைத்த முழங்கால்வரை உள்ள உடைshorts
கால்நடை (பால், இறைச்சி முதலியவற்றிற்காக அல்லது பயிர்த்தொழிலுக்காக வளர்க்கும்) ஆடு, மாடு முதலிய விலங்குகள்cattle (including sheep and goats)
கால்நடையாக (கால்களால்) நடந்துon foot
கால்பந்து பந்தைக் காலால் உதைத்து எதிர் அணியினர் பக்கம் கொண்டுசென்று இரு கம்பங்களுக்கு இடையே தள்ளி விளையாடும் ஆட்டம்football
கால்புள்ளி பொருள் புரியும்படி நிறுத்திப் படிக்க வாக்கியத்தின் இடையில் அல்லது பல இலக்க எண்களில் எண்ணின் இடத்தை அறிய இடப்படும் குறிcomma
கால்மாடு (படுத்த நிலையில் இருக்கும் ஒருவரின்) கால் இருக்கும் பகுதிfoot (of s
கால்மிதி (காலில் உள்ள தூசு முதலியவற்றை அகற்றிக்கொள்வதற்காக வாசல் முன் போடப்பட்டிருக்கும்) மிதியடிdoormat
கால்முளை (நான்காம் வேற்றுமையோடு) தனியாக வெளியே போய்வரத் துணிவு வருதல்(of the young and the inexperienced) be presumptuous
கால்மேசு காலுறைsocks
கால்வழி சந்ததி அல்லது வம்சம் கிளைத்துவந்த முறைlineage
கால்வாய் பாசனத்துக்காக அல்லது போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட நீர்வழிப் பாதைcanal (for irrigation or transport)
கால்வை (முதல் முறையாக) நுழைதல்(நீண்ட இடைவெளிக்குப் பிறகு) வருதல்set foot (for the first time or after a long interval)
கால அட்டவணை (பேருந்து, ரயில் போன்றவற்றிற்கான அல்லது பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள், தேர்வுகள் ஆகியவற்றிற்கான) நேர விவரப் பட்டியல்(bus, train or school) time table
காலச்சக்கரம் (சக்கரம் சுற்றுவது போல்) தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கும் காலம்wheel of time
காலணி காலுக்குப் பாதுகாப்பாகப் பாதத்தில் அணியும் செருப்பு முதலியவைfootwear (such as sandal, shoes, etc.)
காலதேசவர்த்தமானம் குறிப்பிட்ட காலத்துக்கும் இடத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி இருப்பதுconditioning factors such as time, space and environment
காலதேவன் யமன்god of death
காலப்போக்கில் காலம் செல்லச்செல்லin the course of time
காலம் கடத்து (வேண்டும் என்றே) தாமதம்செய்தல்delay
காலம்காலமாக நீண்டநெடும் காலமாகfor ages
காலம்செல் (மங்கல வழக்காகக் கூறும்போது) இறந்துபோதல்(euphemistically) die
காலம்தள்ளு (ஏதேனும் ஒரு வசதிக்குறைவுடன் மகிழ்ச்சி இல்லாமல்) வாழ்க்கை நடத்துதல்lead a difficult life (as a result of deprivation)
காலரா வாந்திபேதிcholera
காலவரையறை இவ்வளவு காலம் என்ற எல்லை அல்லது வரம்புtime limit
காலன் யமன்god of death
காலனி (ஒரு நகரத்தில்) புதிய குடியிருப்புப் பகுதி(in a town) cluster of houses forming a new settlement
காலனியாட்சி/காலனியாதிக்கம் ஒரு நாட்டைத் தன் அதிகாரத்துக்கு உட்படுத்தி வல்லரசு நாடு நடத்துகிற ஆட்சிcolonial rule
காலாகாலத்தில் அததற்கு உரிய அல்லது குறிப்பிட்ட நேரத்தில்in due time
காலாட்படை தரைப்படைinfantry
காலாண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறைquarter
காலாவதியாகு (ஏதேனும் ஒன்றிற்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடு) முடிவுக்கு வருதல்expire
காலி2அடாவடித்தனம் செய்பவன்rogue
காலிசெய் (குடியிருக்கும் வீடு, அறை முதலியவற்றைவிட்டு) வெளியேறுதல்(இருக்கும் இடத்தை அல்லது இருக்கையைவிட்டு) நீங்கிப்போதல்vacate (house, room, etc.)
காலுறை பாதத்திலிருந்து முழங்காலுக்குச் சற்றுக் கீழ்வரை இறுக்கமாக அணியப்படும், நூலால் பின்னப்பட்ட (ஒரு ஜோடி) உறை(pair of) sock(s)
காலூன்று (ஒரு துறையில்) இடம்பிடித்தல்be established or settled
காலை1சூரியன் உதித்து உச்சிக்கு வரும் முன் உள்ள நேரம்morning
காலை2ஊருக்கு வெளியே ஆடு, மாடு வளர்ப்பதற்கான இடம்pasture
காலை3(பெயரெச்சத்தின் பின்) பொழுது(after the relative participle) at the time of
காலைக்கடன் (காலையில் எழுந்ததும் செய்யும் பல் துலக்குதல், சிறுநீர் கழித்தல், குளித்தல் முதலிய) உடல் தூய்மையாக்கும் வேலைmorning routine (such as brushing the teeth, attending the call of nature, taking bath)
காவடி (முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் தோளில் எடுத்துவருவதும் நாட்டுப்புறக் கலை ஆட்டத்தில் பயன்படுத்தப்படுவதுமான) உருளை வடிவக் கட்டையின் இரு முனைகளையும் இணைக்கும் அரைவட்ட வடிவ மரப்பட்டையின் முனைகளில் மயில் தோகைகள் பொருத்தப்பட்ட அமைப்புa cylindrical wooden rod joined by semi-circular wooden strip to both ends of which feathers of peafowls are fixed erect (used in the worship of Lord Murugan and in a folk dance)
காவல்துறை (அரசு ஏற்படுத்தியுள்ள) சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான அமைப்புthe police (department)
காவல்தெய்வம் (எல்லைப்புறத்திலிருந்து) ஊரைக் காத்துவரும் தெய்வம்deity guarding the village
காவல்நிலையம் (சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஒரு ஊரில் அல்லது நகரத்தின் பல பிரிவுகளில் இருக்கும்) காவலர்கள் பணிபுரியும் அலுவலகம்police station
காவலர் சட்டம்ஒழுங்கை நிலைநிறுத்தும் அரசுப் பணியாளர்policeman
காவலாளி (வீடு, தோட்டம் போன்றவற்றை) காவல்செய்பவர்person employed to protect or guard (a house, garden, etc.)
காவலில் வை (குற்றம்சாட்டப்பட்டவரை விசாரிக்கும் முன்) சிறையில் வைத்தல்keep under detention
காவாலி காலிrogue
காவி செங்கல் நிறம்saffron (colour)
காவியம் காப்பியம்epic
காவு (தோளில் அல்லது கையில்) தூக்குதல்carry
காவுகொடு (காளி முதலிய தெய்வங்களுக்கு) உயிரை பலி கொடுத்தல்offer (animal/human) sacrifice
காவுகொள் (உயிர்) பலி ஏற்றல்accept or take (animal/human) sacrifice
காவெட்டு பழுக்கத் தொடங்கியிருக்கும் காய்the state before becoming fruit
காழ்ப்பு பகைமையுடன் கூடிய வெறுப்பு(feeling of) intense dislike or hatred
காளவாய் மட்பாண்டங்கள், செங்கற்கள், சுண்ணாம்பு முதலியவற்றைச் சுட்டு எடுக்கப் பயன்படுத்தும் பெரிய அடுப்புkiln (for brick, lime, etc.)
காளான் மழை பெய்த சில நாட்களுக்குப் பின் நிலத்தில் முளைக்கும் ஒரு வகைத் தாவரம்mushroom
காளி கரிய நிறமுடைய ஒரு பெண் தெய்வம்a female deity of dark complexion
காளை இளமைப் பருவத்தில் உள்ள (இனவிருத்திக்கான) ஆண் மாடுstud
காற்றாட காற்றுப் படும்படிfor an airing
காற்றாடி ஒரு சட்டத்தின் மீது துணி அல்லது காகிதம் ஒட்டப்பட்டு வால் போன்ற நீளமான பகுதி சேர்க்கப்பட்டு நூலின்மூலமாகக் காற்றில் பறக்கவிடப்படும் ஒரு விளையாட்டுப் பொருள்kite
காற்றாலை காற்றின் இயக்கத்தைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கவோ இயந்திரங்கள் இயக்கவோ பயன்படும் அமைப்புwindmill
காற்று உலகில் வெளியெங்கும் நிறைந்திருப்பதும் உயிரினங்கள் உயிர் வாழ சுவாசிப்பதும் உணரக் கூடியதுமான ஒன்றுair
காற்றுகறுப்பு பேய், பிசாசு முதலியவைevil spirits
காற்றுவாக்கில் (நேரடியாகக் கேள்விப்படாமல்) பிறர் சொல்லிby word of mouth
காற்றுவாங்கு நல்ல காற்று வீசும் இடத்தில் இருந்து அனுபவித்தல்enjoy fresh air
காற்றோட்டம் சுத்தமான காற்று வந்து போகும்படியாக இருக்கும் முறைventilation
காறல் (தொண்டையில்) அரிப்பு அல்லது கரகரப்பு உணர்வை ஏற்படுத்தும் நெடிmusty flavour (inducing one to hawk)
காறாக்கருணை சேனைக்கிழங்குelephant yam
காறையெலும்பு கழுத்தின் கீழ் இரு பக்கமும் தோள் மூட்டுவரை அமைந்துள்ள எலும்புcollar bone
கானகம் காடுjungle
கானம் இசைmusic
கானல்நீர் வெப்பப் பிரதேசங்களில் அனல் காற்றால் நீரோடை ஒன்று அருகில் ஓடுவதுபோல இருக்கும் மாயத் தோற்றம்mirage
காஜா உடையில் பொத்தானைப் பொருத்த வசதியாக வெட்டித் தைக்கப்படும் சிறிய துவாரம்buttonhole
   Page 51 of 204    1 … 49 50 51 52 53 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil