Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| குத்பா | பள்ளிவாசலில் தொழுகையின்போது நடக்கும் பிரசங்கம் | discourse in a mosque during hours of prayer |
| குதப்பு | (வெற்றிலை, பாக்கு, மிட்டாய் முதலியவற்றை) வாய்க்குள் அடக்குதல்(கடிக்காமல்) சப்புதல் | keep (betel leaf, tobacco, etc as much as fills the mouth) and chew steadily without swallowing |
| குதம் | ஆசனவாய் | anus |
| குதர்க்கம் | (ஒருவர் மற்றொருவர் சொல்வதை) எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையிலோ செய்யும் வாதம் | unreasonable argument |
| குதலை | மழலை | lisping (of a child) |
| குதறு | (பற்களால் கடித்து) உருக்குலையும்படி பிய்த்தல்(கிழித்து) நாசப்படுத்துதல் | tear into shreds (by biting) |
| குதி1 | (காலால் உந்தி) மேல் எழும்பிக் கீழே வருதல்(உயரமான இடத்திலிருந்து) கீழே பாய்தல் | jump |
| குதி2 | (காலால் உந்தி) ஒரு முறை எழும்பிக் கீழே வருதல் | jump |
| குதிகால் | உள்ளங்காலின் (குழிவை ஒட்டிய) பின்பகுதி | heel |
| குதிர்2 | (நெல் முதலிய தானியம் சேமித்து வைப்பதற்கான) மண்ணால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட (பீப்பாய் போன்ற) அமைப்பு | a large barrel-like receptacle for storing grain |
| குதிரை1 | வேகமாக ஓடக் கூடியதும் பிடரியில் மயிர் உடையதும் சவாரி செய்வதற்குப் பழக்கப்படுத்தக் கூடியதுமான விலங்கு | horse |
| குதிரை2 | (தற்காலத்தில் குண்டை வெளியேற்ற விரலால் அமுக்கும்) துப்பாக்கியின் கீழ் உள்ள விசை | trigger |
| குதிரைக்கொம்பு | (கிடைக்காதது கிடைப்பது போன்று) அரியது | rare thing |
| குதிரைச்சக்தி | ஓர் இயந்திரத்தின் இயங்கும் சக்தியை அளவிடப் பயன்படுத்தும் அலகு | horsepower |
| குதிரைச்சதை | ஆடுசதை | calf muscle |
| குதிரைப்பந்தயம் | முதலாவதாக வந்து வெற்றி பெறும் வாய்ப்புள்ள குதிரைகளின் மீது பணம் கட்டும் போட்டி | horse-race |
| குதிரையோடு | ஒருவர் தனக்குப் பதிலாக மற்றொருவரைத் தேர்வு எழுதவைத்து ஆள்மாறாட்டம்செய்தல் | write an examination by proxy |
| குதிரை வண்டி | குதிரையால் இழுக்கப்படும், பயணம் செய்வதற்கான வண்டி | horse-drawn cart (as a mode of transport) |
| குதூகலம் | (உடனே வெளிப்படும்) மகிழ்ச்சி | joy |
| குதூகலி | மகிழ்ச்சியை (உடனே) வெளிப்படுத்துதல் | jump for joy |
| குந்தகம் | (-ஆன) (ஒரு ஒழுங்கில் இருப்பதைக் குலைத்துவிடக் கூடிய) கேடு | thwarting |
| குந்தாணி | உரல் | stone mortar |
| குந்து2 | திண்ணை | raised platform at the entrance of a house |
| குப்-என்று | (அந்தக் கணத்தில்) அதிகமாக | (sweat) breaking out |
| குப்பம் | (பெரும்பாலும்) மீனவர்கள் வாழும் கடலோரப் பகுதி அல்லது சிற்றூர் | fishermen hamlet |
| குப்பல் | குவியல் | heap |
| குப்பாயம் | ஜிப்பா போன்ற மேல் உடை | a kind of loose-fitting shirt |
| குப்பி | (கொம்பு வடிவ) சிறு புட்டி | small (flask like) bottle |
| குப்பை | (கிழிக்கப்பட்ட தாள், கந்தல் துணி போன்ற) உபயோகம் அற்றவை என்று கழிக்கப்பட்டவை | trash |
| குப்பைக் கூடை | குப்பை போடுவதற்கான கூடை வடிவச் சாதனம் | waste (paper) basket |
| குப்பைகொட்டு | சொல்பவர் நோக்கிலும் கேலியாகவும் பயனற்ற வேலையில் பங்குபெறுதல் | (jocularly) take part in an unproductive work |
| குப்பைத் தொட்டி | குப்பை போடுவதற்காக (வீட்டுக்கு வெளியே அல்லது தெருவில்) வைத்திருக்கும் சிமிண்டினால் செய்த தொட்டி போன்ற அமைப்பு | dustbin |
| குப்பைமேனி | இலை தண்டோடு சேரும் இடத்தில் சிறுசிறு காய்கள் காய்க்கும் ஒரு வகைச் செடி | indian acalypha |
| குபீர் | பீறிட்டுவரும் | a fit of |
| குபீர்-என்று | திடீரென்று | like a flash or shot |
| குபுகுபு-என்று | (திடீரென்று) பெருக்கெடுத்தாற்போல் | (of water, etc.) gushing out |
| குபேரன் | பெரும் பணக்காரன் | millionaire |
| கும்பகர்ணன் | அதிக நேரம் ஆழ்ந்து தூங்குபவன் | one who sleeps soundly for long hours |
| கும்பம்1 | (பெரும்பாலும் சமயத் தொடர்பாக) குடம் | (often in religious context) (earthen or metal) pot |
| கும்பம்2 | குவியல் | heap |
| கும்பல் | (மனிதர்களின்) கூட்டம் | throng |
| கும்பா | (சோறு பிசைவதற்கோ சந்தனம் வைப்பதற்கோ பயன்படுத்தப்படும்) வெள்ளியால் அல்லது வெண்கலத்தால் விரிந்த தாமரை மலர் வடிவத்தில் செய்யப்பட்ட பாத்திரம் | silver or brass bowl (for mixing rice with curd, etc or for keeping sandal paste) |
| கும்பாபிஷேகம் | (கோயிலில் மூலவரைப் பிரதிஷ்டை செய்யும்போது) கோபுரக் கலசத்துக்கும் மூலவருக்கும் செய்யும் அபிஷேகம் | pouring the sanctified water, etc over the pot-like structure on the tower and over the main deity at the time of installation |
| கும்பி | வயிறு | belly |
| கும்பிடு1 | (தெய்வத்தை வழிபடும்போது அல்லது பெரியவர்களுக்கு மரியாதை தெரிவிக்கும்போது) இரு கை கூப்பி வணங்குதல் | make obeisance with folded hands (as in offering prayers or paying respects to elders) |
| கும்பிடு2 | (தெய்வ வழிபாட்டின் அறிகுறியாக அல்லது பெரியவர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் முறையாக) இரு கை கூப்பிய வணக்கம் | worship |
| கும்மட்டி | கரி, மரத் தூள் போன்றவற்றால் தணல் மட்டும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் (சட்டி போன்ற) இரும்பு அடுப்பு | a kind of stove in which coal or chaff is filled to provide heat without flame |
| கும்மாளம் | மகிழ்ச்சி நிறைந்த ஆரவாரம் | uncontrolled merriment |
| கும்மியடி | (பெண்கள் சுற்றிவந்து) கைகொட்டிப் பாடி ஆடுதல் | (of girls) dance round clapping hands rhythmically |
| கும்மிருட்டு | செறிந்த இருள் | pitch darkness |
| கும்மு | (துவைக்கும்போது துணியை ஒரு பந்தாகச் சுருட்டி இரு கைகளாலும் தூக்கி) ஒரு பரப்பில் அழுத்திஅழுத்தி எடுத்தல் | pound gently (clothes on a hard surface holding in both hands while washing) |
| குமட்டல் | (வாந்தியெடுக்கும் உணர்வாக வயிற்றை) புரட்டல் | nausea |
| குமட்டு | (வாந்தியெடுக்கும் உணர்வில் வயிற்றை) புரட்டுதல் | turn (the stomach at the time of vomiting) |
| குமரன் | இளைஞன் | young man |
| குமராகு | (பெண்) பருவமடைதல் | (of girls) come of age |
| குமரி | பருவமடைந்த பெண் | girl who has come of age |
| குமரு | இளம் பெண் | unmarried young girl |
| குமாரத்தி | (பெரும்பாலும் திருமண அழைப்பிதழ் முதலியவற்றில்) மகள் | (often in wedding invitations, etc.) daughter |
| குமாரன் | (பெரும்பாலும் திருமண அழைப்பிதழ் முதலியவற்றில்) மகன் | (often in wedding invitations, etc.) son |
| குமாரி | (முகவரி முதலியவை எழுதும்போது) திருமணமாகாத பெண்ணின் பெயருக்கு முன் மதிப்புத் தரும் வகையில் சேர்க்கும் சொல் | miss |
| குமாஸ்தா | (அலுவலகப் பணியில்) எழுத்தர் | clerk (in an office) |
| குமிழி | (காற்றால் திரவத்தில் தோன்றும்) சிறு அரைப் பந்து வடிவத் தோற்றம் | bubble |
| குமிழியிடு | (நீரில்) குமிழி தோன்றுதல் | bubble |
| குமுறல் | (எரிமலை, கடல் முதலியவற்றின்) ஆரவாரம் | rumbling (of volcano, sea, etc.) |
| குமுறு | (எரிமலை வெடிக்கும் முன்) முழங்குதல்(காற்றால் கடல்) ஆரவாரித்தல் | (of volcano) rumble |
| குமை | (புகை, நெருப்பு முதலியவை வெளியேற வழி இல்லாமல் ஒரே இடத்தில்) சுழன்றுவருதல் | (of smoke, fire) spiral (without any outlet) |
| குமைச்சல் | (மன) புழுக்கம் | (of emotions) state of being pent-up |
| குயவன் | (சக்கரத்தில் மண் வைத்துச் சுற்றி) மட்பாண்டங்கள் செய்பவன் | potter |
| குயில் | இனிய குரல் உடைய கரிய நிறப் பறவை | koel |
| குர்ஆன் | முகமதுநபிமூலமாக இறைவனால் அருளப்பட்ட வேதம் | koran |
| குரக்கன் | கேழ்வரகு | ragi |
| குரக்கு பிடி | (கை, கால் முதலியவற்றில் திடீரென்று குத்தி இழுப்பது போன்ற) தசை வலி உண்டாதல் | suffer muscle pull or sprain |
| குரங்காட்டி | குரங்கைக் குட்டிக்கரணம் போடுதல் போன்ற வித்தைகள் செய்யவைத்துப் பிழைப்பு நடத்துபவன் | one who makes a living by making a monkey do some tricks |
| குரங்கு | மரங்களில் வாழ்வதும் கிளைக்குக் கிளை தாவிச் செல்வதும் நீண்ட வால் உடையதுமான (மனித இனத்தோடு ஒற்றுமை உடைய) ஒரு வகை விலங்கு | monkey |
| குரங்குப்புத்தி | (முடிவு எடுக்காமல்) தடுமாறும் குணம் | ficklemindedness |
| குரல் | (பேச்சை அல்லது பாட்டை வெளிப்படுத்த) தொண்டையில் உள்ள நாளங்களின் அசைவால் உண்டாகும் ஒலி | voice |
| குரல்வளம் | பல வித ஏற்றஇறக்கங்களை எளிதாகவும் இனிமையாகவும் காட்டக் கூடிய குரலின் செழுமை | range of voice |
| குரவை1 | (முற்காலத்தில்) பெண்கள் கைகோத்து ஆடும் ஒரு வகை நடனம் | (formerly) dancing in a circle by women holding hands |
| குரு1 | ஆசிரியர் | (venerable) teacher |
| குரு2 | வியாழன் என்னும் கோள் | (the planet) Jupiter |
| குருக்கள் | சிவனுக்கும் சிவனோடு தொடர்புடைய பிற தெய்வங்களுக்கும் சைவ ஆகமப்படி பூஜை செய்யும் தகுதி உடையவர் | one who is entitled to perform பூஜை in temples dedicated to சிவன் and other related deities |
| குருகுலக் கல்வி | குருவின் இல்லத்தையே கல்விக்கூடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு பெறும் கல்வி | (formerly) learning by living with the teacher |
| குருகுலம் | (குருவோடு இருந்து கற்கும்) பாடசாலை | school (where disciples live together with the teacher) |
| குருசாமி | முதன்முறையாக ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் நபருக்கு உரிய சடங்குகள் செய்வித்து அவரைத் தன் குழுவில் சேர்த்துக்கொள்ளும் (மூத்த) பக்தர் | (a senior) devotee who initiates one into the worship of ஐயப்பன் |
| குருட்டாம்போக்கு-ஆக,-இல்/-ஆன | முன்யோசனை இல்லாமல்/முன்யோசனை இல்லாத | blindly/blind |
| குருட்டு | காரணகாரியத்துக்கு உட்படாத | blind |
| குருட்டுப்பாடம் | பொருளைப் புரிந்துகொள்ளாமல் படிக்கும் பாடம் | anything committed to memory without knowing its meaning |
| குருடன் | பார்க்கும் திறன் இல்லாதவன் | blind man |
| குருடி | குருடன் என்பதன் பெண்பால் | feminine of குருடன் |
| குருடு | பார்வை இல்லாமை | blindness |
| குருடுபற்று | (எண்ணெய் இல்லாமல் விளக்குத் திரி கருகி) ஒளி குறைதல் | (of lamps) become dim (due to the burning of the wick for want of oil) |
| குருத்துஞாயிறு | குருத்தோலைகளுடன் இயேசுவின் புகழ்பாடிக் கொண்டாடப்படும் திருவிழா | palm Sunday |
| குருத்துப்பூச்சி | நெற் பயிரின் தண்டைத் துளைத்துச் சேதப்படுத்திக் கதிரை வெண்மையாக்கிவிடக் கூடிய ஒரு வகைப் பூச்சி | stemborer |
| குருத்துமணல் | பொடி மணல் | fine sand |
| குருத்தெலும்பு | காதுமடல், மூக்கின் முன்பகுதி முதலியவற்றில் இருப்பது போன்ற மடங்கக் கூடிய மென்மையான எலும்பு | cartilage |
| குருதி | இரத்தம் | blood |
| குருநாதன் | வணக்கத்திற்கு உரிய குரு | revered master |
| குருபூசை | தீட்சை தந்த குருவிற்கு அவர் முக்தி அடைந்த தினத்தில் சீடர்களால் நடத்தப்படும் பூஜை | worship offered by the disciples to their guru, who initiated them into a religious order, on his death anniversary |
| குரும்பை1 | (தென்னையிலும் பனையிலும் நீரோ பருப்போ வருவதற்கு முன் உள்ள) இளம் காய் | small unripe fruit (of coconut or palmyra trees) |
| குரும்பை2 | குறும்பி | ear-wax |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.