Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
குடலைப்பிடுங்கு (பசி) வயிற்றை மேலும் கீழும் புரட்டுதல்(of hunger) pinch the bowels
குடவண்டிபோடு குடைசாய்தல்overturn
குடவரைக் கோயில் மலைச் சரிவை அல்லது பாறையைக் குடைந்து சிற்பங்கள் செதுக்கிய மண்டபம் போன்ற அமைப்புrock-cut temple
குடவிளக்கு சிறு குட வடிவ விளக்குlamp which is shaped like a small pot
குடவோலை (முற்காலத்தில்) கிராம நிர்வாக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் குடத்தில் போட்டுக் குலுக்கி எடுக்கப்படும் ஓலை(formerly) vote as recorded on ஓலை used as ballot paper and cast into a pot and drawn from it
குடாநாடு தீபகற்பம்peninsula
குடி1(பானத்தையோ திரவ உணவையோ வாய் வழியாக) உட்கொள்ளுதல்take (liquid food)
குடி2(மதுபானம்) குடித்தல் அல்லது குடிக்கும் பழக்கம்drink
குடி3குடிமகன்citizen
குடிகாரன் (அளவுக்கு மிஞ்சி) மதுபானம் குடிப்பவன்drunkard
குடிகேடன் குடிப் பழக்கத்தால் குடும்பப் பெருமையைக் கெடுப்பவன்one who brings infamy to his family by his misdeeds such as drinking
குடிசை அதிக உயரம் இல்லாத மண் சுவரின் மேல் ஓலையால் வேயப்பட்ட கூரை உடைய சிறு வீடுhut with a thatched roof
குடிசைத்தொழில் மின்சாரத்தின் தேவையும் இயந்திரங்களின் உதவியும் இல்லாமல் வீட்டு நபர்களின் உதவியுடன் வீட்டிலேயே செய்யப்படும் சிறு தொழில்cottage industry
குடித்தனக்காரர் வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பவர்tenant
குடித்தனம் குடும்ப வாழ்க்கைdomestic life
குடித்தொகை மக்கள்தொகைpopulation
குடிநீர் மனிதர்கள் குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர்drinking water
குடிப்பிறப்பு ஒருவர் பிறந்த (உயர்) குடிancestry
குடிபுகு (ஒரு வீட்டில்) வசிக்கச் செல்லுதல்occupy (a house, a new house)
குடிபெயர் ஓர் இடத்தை விட்டு வேறொரு இடத்துக்கு வாழச் செல்லுதல்migrate
குடிபோதை (அளவுக்கு அதிகமாக) மது அருந்தியதால் ஏற்படும் தன் நினைவு அற்ற நிலைstate of being drunk
குடிமக்கள் (பிறப்பினால் அல்லது சட்டப்படி) ஒரு நாட்டில் வாழும் உரிமை உடைய மக்கள்citizens
குடிமகன் குடிமக்களில் ஒருவன்a citizen
குடிமுழுகு (பெரும்பாலும் எதிர்மறை வடிவத்தில் அல்லது எதிர்மறைத் தொனியில்) கேடு விளைதல்be lost
குடிமைப்பொருள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான (அரிசி, எண்ணெய் போன்ற) பொருள்கள்civil supplies
குடியமர்த்து (ஓர் இடத்தில்) தங்கி வாழச்செய்தல்settle
குடியரசு அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே என்ற அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியல் அமைப்புrepublic
குடியரசுத் தலைவர் குடியரசு அரசியல் அமைப்பில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத் தலைவர் அல்லது மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத் தலைவர்president of a republic
குடியானவன் (பிறர் நிலத்தில்) பயிர் செய்பவன்cultivating tenant
குடியிரு (ஒரு வீட்டில்) வாழ்க்கை நடத்துதல்(ஓர் ஊரில்) வசித்தல்take up residence (in a house)
குடியுரிமை (ஒரு நாட்டில்) தங்குவதற்கான அரசு அங்கீகாரம்citizenship
குடியெழுப்பு (மக்களை) வாழும் இடத்தைவிட்டு வேறு இடத்துக்குப் போகச் செய்தல்evacuate
குடியெழும்பு (மக்கள்) வாழும் இடத்தைவிட்டு வேறு இடத்துக்குப் போதல்(of people) move out (to another place)
குடியேற்றம் (வசிப்பதற்காக ஒரு நாட்டுக்கு) புதிய மக்களின் வரவுimmigration
குடியேற்று (ஒரு நாட்டில் மக்களைக் கொண்டுவந்து) நிரந்தரமாக வாழச் செய்தல்colonize
குடியேறு (தம் நாட்டைவிட்டு வேறொரு நாட்டுக்குச் சென்று) நிலையாகத் தங்குதல்emigrate
குடில் (உ.வ.) (முற்காலத்தில் முனிவர் போன்றவர் தங்கும்) குடிசை(formerly) hut (of hermits).
குடிவா (காலியாக இருக்கும் வீட்டுக்கு அல்லது புதிய வீட்டில்) வசிப்பதற்காக வருதல்move in (to a vacant or new house)
குடிவெறி (அளவுக்கு அதிகமாக) மது அருந்தியதால் ஏற்படும் கட்டுப்பாடற்ற நிலைstate of being intoxicated
குடிவை (பெரும்பாலும் புதிதாகத் திருமணம் ஆனவர்களை ஒரு வீட்டில்) குடும்பம் நடத்தச்செய்தல்set up a family (finding a house for the newly married)
குடுக்கை உள்ளீடு நீக்கப்பட்டுக் காயவைக்கப்பட்ட சுரை முதலியவற்றின் கூடுdry and hollow shell of some gourds (used as a vessel, etc.)
குடுகுடு-என்று (ஓடு, நட ஆகிய வினைகளுடன்) குறுகிய எட்டு வைத்து வேகமாக (உருண்டுவருவது போல)with short quick steps (as if rolling down)
குடுகுடு கிழம் (நடப்பதற்கே தட்டுத்தடுமாற வேண்டிய) தள்ளாத நிலையில் இருக்கும் நபர்tottering old man or woman
குடுகுடுப்பை (கையால் ஆட்டினால் கடகடவென்ற ஒலியை எழுப்பும்) உடுக்கை வடிவில் இருக்கும் ஒலிப்பதற்கான கருவிa drum shaped like an hour-glass (with strings which produce a rattling sound when vigorously shaken)
குடுகுடுப்பைக்காரன் குடுகுடுப்பையை ஆட்டிக்கொண்டு வீடுவீடாகச் சென்று குறிசொல்லிப் பிச்சை எடுப்பவன்fortune-teller with a குடுகுடுப்பை in his hand
குடும்ப அட்டை உணவுப்பொருள்கள், மண்ணெண்ணெய் முதலியவற்றை நியாய விலைக்குப் பெற அரசாங்கத்தால் குடும்பத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் வழங்கப்படும் (உறுப்பினர்களின் எண்ணிக்கை, வருமானம் முதலியவை பதிவுசெய்யப்பட்ட) குறிப்பேடுration card
குடும்பக்கட்டுப்பாடு (கருத்தடை, அறுவை மருத்துவம் முதலியவற்றின் மூலம்) குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக்கொள்ளும் குடும்பத் திட்டம்planned family
குடும்பம் கணவனும் மனைவியும் தம் குழந்தையோடு (மற்றும் நெருங்கிய உறவினரோடு) கூடி வாழும் சமூக அமைப்புfamily
குடும்பஸ்தன் மனைவி மக்களோடு வாழ்பவன்man with family
குடும்பி (பெரிய) குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளவன்one who has a (large) family
குடுமி (கொண்டைபோல் முடிந்துகொள்ளக் கூடிய அளவுக்கு) ஆண்கள் வளர்த்திருக்கும் நீண்ட முடி(of men) tuft of hair
குடை1(சில பறவைகள், வண்டு முதலியவை) துளைத்து ஊடுருவுதல்/(கருவியால் மரச் சாமான்களை) துளைத்தல்(of some birds, beetles, etc.) make holes
குடை2கீழ்நோக்கிய கம்பிகளைக் கொண்டு மடக்கி விரிக்கக் கூடியதாகச் செய்த ஒரு அமைப்பின் மேல் (பெரும்பாலும் கறுப்பு நிற) துணி பொருத்தப்பட்டு மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காத்துக்கொள்ளக் கையில் பிடித்துச் செல்லும் சாதனம்umbrella
குடைச்சல் (கை, கால், மூட்டு முதலிய இடங்களில் உண்டாகும்) குடைவது போன்ற வலிgnawing pain (in the limbs, joints, etc.)
குடைசாய் (மாட்டுவண்டி போன்ற வாகனங்கள்) ஒரு பக்கமாகவோ தலைகீழாகவோ விழுதல்(of bullock cart, vehicles) overturn
குடைராட்டினம் (பொருட்காட்சி, திருவிழா நடக்கும் இடங்களில்) பெரிய குடை போன்ற அமைப்பின் கீழ்த் தொங்கவிடப்பட்ட பல (வடிவ) இருக்கைகளில் (சிறுவர்) ஏறிச் சுற்றிவரும் விளையாட்டுச் சாதனம்merry-go-round
-குண்டம் (வேள்வியில், சடங்கில்) தரையில் தீ வளர்ப்பதற்கான சிறு தொட்டி போன்ற அமைப்புsmall structure on the ground for sacred fires (at sacrifice or ritual)
குண்டர் (பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல், ஆட்களை அடித்துப் பயமுறுத்துதல், கலவரம் செய்தல் போன்ற) சமூகவிரோதச் செயல்களில் இறங்கும் நபர்hooligan
குண்டலம் (முற்காலத்தில் அரசரும் முனிவரும் அணிந்துகொண்ட) சிறு குண்டோ மணியோ தொங்கும் காதணிa spherical pendant (worn on the ear by kings and sages in olden days)
குண்டலினி (யோகம் செய்வதன்மூலம் நடு நெற்றிக்குக் கொண்டுவரக் கூடிய) மூலாதாரத்தில் இருப்பதாகக் கூறப்படும் சக்திan occult power which is said to be latent with its centre in the lower abdomen below the navel (which can be drawn up to the forehead by yoga)
குண்டன் பருத்து (உடல் வலிமையோடு) இருப்பவன்stout (and strong) person
குண்டாந்தடி (அடிப்பதற்குப் பயன்படுத்தப்படும்) சற்றுப் பருமனான சிறு கைத்தடிshort stout club
குண்டான் அகன்ற வாயும் குவிந்த அடிப்பாகமும் உடைய உலோகப் பாத்திரம்vessel with a wide mouth and a tapering bottom
குண்டி இரு பிரிவாக அமைந்திருக்கும் (சதைப்பற்றுடைய) ஆசனவாய்ப் பகுதி(of persons) bottom
குண்டிகாய் பசியால் வாடுதல்be famished
குண்டு1(முற்காலத்தில் பீரங்கியில் பயன்படுத்திய) இரும்பு உருண்டை(cannon) ball
குண்டு2குண்டம்small structure on the ground for the sacred fire
குண்டு எறிதல் உலோகக் குண்டை எறியும் விளையாட்டுப் போட்டிshotput
குண்டுக்கட்டாக (பெரும்பாலும் தூக்குதல், கட்டுதல் ஆகிய வினைகளுடன்) கழுத்தையும் காலையும் ஒன்றுசேர்த்துப் பந்து போல் சுருட்டிbundling
குண்டுச்சட்டி உருண்டை வடிவச் சிறு பாத்திரம்a small round bottomed vessel
குண்டும்குழியும் சிறு பள்ளங்கள்potholes
குண்டுமல்லி அதிக இதழ்களைக் கொண்ட, பெரிய அளவுடைய ஒரு வகை மல்லிகைarabian jasmine
குண்டூசி (தாள் போன்றவற்றை) குத்திக் கோத்து வைப்பதற்குப் பயன்படுத்தும், உருண்ட தலைப்பகுதி உடைய சிறு ஊசிpin
குண்டோதரன் எவ்வளவு உணவு தந்தாலும் தின்று தீர்ப்பவன்gourmand
குணச்சித்திர குணத்தையும் உணர்ச்சியையும் திறம்பட வெளிப்படுத்தக் கூடிய (நடிகர்)character (actor, role)
குணச்சித்திரம் (கதை, நாடகம் முதலியவற்றில்) கதாபாத்திரம்portrayal (of a character in a story, etc.)
குணசாலி (பொதுவாக) நல்ல பண்புகள் நிறைந்தவர்(சிறப்பாக) சகிப்புத் தன்மை உடையவள்(generally) person of noble traits
குணநலன் (ஒருவரின்) நல்ல இயல்பு(of a person) positive qualities
குணப்படுத்து (நோயை) நீக்குதல்(நோயாளியை) சுகப்படுத்துதல்cure
குணம்1(இப்படிப்பட்டவர், இப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்படியாக இருக்கும்) இயல்புnature
குணம்2(நோய் நீங்கிப் பெறும்) சுகம்healing
குணவதி நற்குணமுடையவள்woman of noble character
குணாதிசயம்/குணாம்சம் மேலோங்கிய குணம்predominant characteristics
குத்தகை உரிமையாளர் அல்லது நிர்வாகம் ஒருவருக்கு அனுபவ உரிமை அளித்துத் தன் பங்கை (நன்செய் நிலமாக இருந்தால்) தானியமாகவும் (தோப்பில் தேங்காய் பறித்தல் போன்ற மற்ற தொழில்களாக இருந்தால்) பணமாகவும் பெற்றுக்கொள்ளும் சட்டபூர்வமான ஒப்பந்தம்lease
குத்தகைதாரர் குத்தகைக்கு எடுப்பவர்lessee
குத்திட்டு (உட்காரும்போது) குத்துக்காலிட்டுsquat (while sitting)
குத்திடு (பார்வை, கவனம் முதலியன ஒருவரின் மேல், ஒன்றில்) நிலைத்தல்(attention, etc.) get fixed on
குத்திருமல் கக்குவான்whooping cough
குத்து2(மடக்கிய கைவிரல்களால் விழும்) அடிhit (with fist)
குத்துக்கல் (எல்லையில்) செங்குத்தாக நட்டுவைக்கப்படும் கல்stone planted erect in the ground marking boundary
குத்துக்காலிடு (பெரும்பாலும் உட்கார் என்னும் வினையோடு) முழங்காலை மடித்து முகத்துக்கு முன் கொண்டுவந்து இடுப்பின் கீழ்ப்பகுதி தரையைத் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைத்தல்bend the knees so as to squat (while sitting)
குத்துக்கோல் (தாக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தும்) கூர்மையான முனை உடைய கம்புpointed pole (used as a weapon)
குத்துச்சண்டை (விளையாட்டில்) இரு வீரர்கள் கையில் உறை அணிந்து ஒருவர் முகத்தில் ஒருவர் குத்திப் புள்ளிக் கணக்கில் வெற்றி அடையும் விளையாட்டு(in sports) boxing
குத்துச்செடி செங்குத்தான தண்டிலிருந்து அடர்த்தியாக வளரும் உயரம் குறைந்த செடிlow shrub
குத்துப்பாறை செங்குத்தான பாறைsteep rock
குத்துயரம் முக்கோணத்தில் அடிப்பக்கத்தையும் மேல்முனையையும் இணைக்கும் செங்குத்துக் கோடுaltitude (in a triangle)
குத்துவாள் (பெரும்பாலும் இடுப்பில் செருகி வைத்திருக்கும்) கைப்பிடியுடைய சிறு வாள்small dagger
குத்துவிளக்கு வட்ட வடிவமான அடிப்பகுதியில் நேராகப் பொருந்திய தண்டின் மேல் உள்ள தட்டுப் போன்ற பாகத்தில் திரியிட்டு எண்ணெய் ஊற்றி ஏற்றும் (உலோக) விளக்குoil-lamp with a pedestal (ritually lit in the homes and temples)
குத்துவெட்டு (அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கப்படுவதால் உடலில் ஏற்படும்) வெட்டுக் காயம்stabs and cuts
குத்தூசி (மூட்டையைப் பிரிக்காமல் உள்ளிருக்கும் தானிய மணிகளை வெளிக்கொண்டுவரப் பயன்படுத்தும்) கூரிய நுனியும் தானியம் வருவதற்கான குழிந்த பகுதியும் கொண்ட ஊசி போன்ற இரும்புக் கம்பிa sharp grooved hook (to draw grains from the sack to take sample)
   Page 54 of 204    1 … 52 53 54 55 56 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil