Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| கெட்டுப்போ | காணாமல்போதல் | (of goods) be lost |
| கெட்டுப்போனவள் | ஒழுக்கம் தவறியவள் | woman of loose character |
| கெடு3 | (ஒரு காரியத்தை முடிக்கத் தரப்படும்) கால வரம்பு(நிர்ணயிக்கப்பட்ட) கால எல்லை | deadline |
| கெடுதல் | மோசமான விளைவுகளை ஏற்படுத்துவது | damage |
| கெடுதி | அழிவு | ruin |
| கெடுபிடி | (-ஆக, -ஆன) (விதிமுறைகள், கட்டளைகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதில் காட்டப்படும்) கடுமை | severity (in enforcement of regulations) |
| கெண்டி | (குழந்தைகளுக்குப் பால், நீர் முதலியவை ஊற்றிக் குடிக்கக் கொடுக்கும்) சற்று நீண்ட குழல் போன்ற மூக்குடைய குவளை | a small cup-like vessel with a spout (used for feeding children) |
| கெண்டை | (ஏரி, ஆறு முதலியவற்றில் காணப்படும்) செதில்கள் நிறைந்த வெள்ளை நிற மீன் | carp (fish) |
| கெண்டைக்கால் | முழங்காலின் பின்பகுதி | calf (muscle) |
| கெத்து | தன்னுடைய உயர்வையும் பெருமையையும் காட்டிக்கொள்ளும் போக்கு | being haughty |
| கெந்து | (நடக்கும்போது) பாதத்தின் முன்பகுதியை மட்டும் தரையில் ஊன்றி எம்புதல் | (while walking) hop |
| கெம்பு | (ஆபரணங்களில் பதிக்கும்) கரும் சிவப்பு நிறக் கல் | a (precious) stone in dark red |
| கெல்லு | தோண்டுதல் | dig up |
| கெலி | (போட்டியில்) ஜெயித்தல் | win (in a contest) |
| கெளுத்தி | (ஏரி, ஆறு முதலியவற்றில் காணப்படும்) செவுளின் இரு புறத்திலும் முள்ளும் மீசையும் உடைய பழுப்பு நிற மீன் | cat fish |
| கேசரம் | (பூக்களில்) மகரந்தத் தூளைத் தாங்கியிருக்கும் மெல்லிய காம்பு | stamen |
| கேசரி | ரவையை நீரில் போட்டுக் கொதிக்கவைத்துச் சர்க்கரை, முந்திரி முதலியவை சேர்த்து நிறத்திற்காகப் பொடி தூவிக் கிளறிச் செய்யும் ஒரு வகைத் தின்பண்டம் | a sweet dish made by boiling the semolina with cashew, cardamom, etc added to it |
| கேசரிப் பவுடர் | (கேசரி, ஜிலேபி போன்ற சில தின்பண்டங்களுக்கு) சிவந்த மஞ்சள் நிறம் சேர்ப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு வகைப் பொடி | a powder which turns a dish to light saffron colour |
| கேட்டை | இருபத்தேழு நட்சத்திரங்களில் பதினெட்டாவது | the eighteenth of the twenty seven stars |
| கேட்பார் இல்லாமல்/கேட்பாரற்று | கவனிப்பதற்கோ கண்காணிப்பதற்கோ உரிமை கொண்டாடுவதற்கோ யாரும் இல்லாமல் | without anyone to care for or claim or oversee |
| கேட்புக் காசோலை | பிறர் உடனடியாகப் பணம் மாற்றிக்கொள்ளத் தகுந்த வகையில் ஒருவர் வங்கியில் பணத்தைச் செலுத்திப் பெறும் படிவம் | demand draft (encashable on presentation) |
| கேட்புத் தொகை | ஏலம் விடுபவரால் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஏலத் தொகை | lowest acceptable selling price (in auction) |
| கேடயம் | பெற்ற வெற்றி, புரிந்த சாதனை முதலிய செய்தி பொறித்த தட்டு வடிவ அலங்காரப் பரிசு | a memento in the form of a shield awarded to a winner |
| கேடி | திருடுதல், வழிப்பறிசெய்தல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுபவன் | known delinquent (abbreviated as KD) |
| கேடு | (நல்ல நிலைக்கு நேரும்) தீங்கு | harm |
| கேடுகாலம் | தீங்கு, அழிவு முதலியவை நிகழும் காலம் | bad time |
| கேடுகெட்ட | சீரழிந்த | wretched |
| கேணி | கிணறு | well |
| கேதம்கேள் | துக்கம் கேட்டல் | condole (death) |
| கேது | தனியான ராசியாக இல்லாததும் தான் இருக்கும் வீட்டின் தன்மைகளைக் கொண்டதும் இடமிருந்து வலமாக நகர்வதுமான கிரகம் | a nodal point having no house of its own in the zodiac but possessing the virtues of the owner of the house it occupies and moving in an anticlockwise direction |
| கேந்திரம் | (ஆராய்ச்சி, பயிற்சி முதலியவற்றை ஒருங்கிணைக்கும்) மையம்/(ராணுவ) தளம் | centre (for research, training, etc.)/(military) base |
| கேப்பை | கேழ்வரகு | ragi |
| கேப்பை மாடு | அதிகப் பால் தரும் உயர் சாதி மாட்டு இனம் | a variety of high yielding cow |
| கேரியர் | சாப்பாடு எடுத்துச்செல்லும் பாத்திர அடுக்கு | box in tier system for packing lunch |
| கேரு | (முட்டை போடும் சமயத்தில்) கோழி ஒரு விதமான ஒலி எழுப்புதல் | cackle (as at the time of laying eggs) |
| கேலிக்கூத்து | (-ஆக, -ஆன) (ஒன்றின் முக்கியத்துவத்தை) அர்த்தமற்றதாகச் செய்து, சிரிக்கும் அளவுக்குத் தாழ்த்திவிடும் செயல் | farce |
| கேலிச்சித்திரம் | முக்கியத் தலைவரை அடையாளம்காட்டக் கூடிய ஓர் அம்சத்தைச் சிரிப்பு தரும் வகையில் பெரிதுபடுத்தி வரையப்படும் படம் | caricature |
| கேலிசெய் | (முக்கியம் வாய்ந்ததை) அர்த்தம் அற்றதாகச்செய்து சிரிப்புக்கு உள்ளாக்குதல் | make a travesty or mockery |
| கேவல் | விக்கல் போன்ற அழுகை ஒலி | sobbing |
| கேவு | (அழும்போது) மூச்சை விக்கல் போன்ற ஒலியுடன் உள்ளிழுத்தல் | sob |
| கேழ்வரகு | (மாவாக்கி உணவாகப் பயன்படுத்தும்) கடுகு போன்ற உருண்டையான சிவப்பு நிறத் தானியம் | ragi (grain) |
| கேள்வி | பதிலை எதிர்பார்க்கும் அல்லது தகவலைக் கோரும் (ஏன், எதற்கு, யார் போன்ற வார்த்தைகளைக் கொண்ட) வாக்கியம்/தேர்வில் திறமையைக் கணிக்க எழுத்து வடிவிலோ வாய்மொழியாகவோ கேட்கப்படுவது | interrogation/question (in a test, etc.) |
| கேள்விஞானம் | (ஒரு துறையில்) முறையாகப் பயிற்சி பெறாமல், கேட்பதால் பெறும் அறிவு | knowledge gained through observation and hearing |
| கேள்வித்தாள் | (தேர்வு எழுதுபவர்களுக்கு அளிக்கப்படும்) கேள்விகள் அடங்கிய தாள் | question paper |
| கேள்விநேரம் | பாராளுமன்றம் போன்றவற்றில் உறுப்பினரின் கேள்விகளுக்காக ஒதுக்கப்படும் முதல் ஒரு மணி நேரம் | the first hour of every sitting of parliament, etc |
| கேள்விப்படு | (ஒரு செய்தியை நேரடியாக அல்லாமல் பிறர் கூற) கேட்டுத் தெரிந்திருத்தல் | get to know |
| கேள்விப்பத்திரம் | ஒப்பந்தப்புள்ளி அறிக்கை | tender notice |
| கேள்விமுறை | (எதிர்மறை வினைகளோடு மட்டும்) (தவற்றைச் சுட்டிக்காட்டி) கண்டிக்க வழி | means of admonishing |
| கேளா ஒலி | மனிதக் காதினால் உணரப்பட முடியாததும் நவீனக் கருவிகளால் பதிவுசெய்யக்கூடியதுமான ஒலி | ultrasound |
| கேளிக்கை | (உல்லாசமாக இருக்க உதவும் இசை, திரைப்படம் போன்ற) பொழுதுபோக்கு | entertainment |
| கேளிக்கை வரி | பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு உரிய அனுமதிக் கட்டணத்தோடு சேர்த்து வசூலிக்கப்படும் வரி | entertainment tax |
| கை1 | உப்புச்சுவை தெரிதல் | taste salty |
| கைக்கடிகாரம் | மணிக்கட்டில் கட்டிக்கொள்ளும் கடிகாரம் | wristwatch |
| கைக்குட்டை | (முகம், கை முதலியவற்றைத் துடைத்துக்கொள்ளப் பயன்படுத்தும்) சதுர வடிவச் சிறு துணி | handkerchief |
| கைக்குழந்தை | (தூக்கிச்செல்ல வேண்டியிருக்கும்) சிறு குழந்தை | infant in arms |
| கைக்கூலி | பணத்திற்காகவும் சலுகைகளுக்காகவும் பிறருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து அவர் சார்பாகவே நடப்பவர் | lackey |
| கைக்கொள் | (பயன் கருதி) மேற்கொள்ளுதல்(பழக்கமாக) ஏற்றல் | take to |
| கைகட்டி | மிகவும் பணிந்து | most humbly |
| கைகட்டிக்கொண்டு | (தடுக்கவோ எதிர்க்கவோ செய்யாமல்) சும்மா | doing nothing (at the time when one could intervene) |
| கைகண்ட | நிச்சயம் பலன்தருவது என்று அனுபவத்தில் கண்டறிந்த | efficacious |
| கைகலப்பு | கையால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் சண்டை | hand-to-hand fight |
| கைகாட்டி | (புகைவண்டி ஒரு நிலையத்திற்கு வர அனுமதி தரும் வகையில் இருப்புப்பாதை ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும்) விளக்குப் பொருத்தப்பட்ட, மேலும் கீழும் இயங்கக் கூடியதான கை போன்ற அமைப்பு | semaphore (for signalling on railways) |
| கைகாட்டி மரம் | (பெரும்பாலும் பல்வேறு மார்க்கங்களுக்குப் போகும் சாலைகளைச் சுட்டிக்காட்டும் விதத்தில்) ஊர்ப் பெயர் எழுதிய பலகைகள் கொண்ட கம்பம் | signpost |
| கைகாட்டு | (வாழ்க்கையில் முன்னேறத் துவக்கத்தில்) உதவிசெய்தல் | guide (one at the initial stages) |
| கைகுலுக்கு | (வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் முறையாக அல்லது வரவேற்பு முதலியவற்றின் அடையாளமாக) கையை இறுகப் பற்றி ஆட்டுதல் | shake hands |
| கைகொட்டிச் சிரி | இகழ்ச்சியை வெளிப்படுத்துதல் | laugh at |
| கைகோத்துக்கொண்டு | (வேறுபாடு இல்லாமல்) இணைந்து | hand in hand |
| கைச்சரக்கு | (ஆதாரமான தகவல்களோடு ஒருவர் சேர்க்கும்) சொந்தக் கற்பனை | fictitious addition |
| கைச்சாத்து | கையெழுத்து | signature |
| கைச்சுத்தம் | (திருடுதல், லஞ்சம் வாங்குதல் முதலிய நியாயமற்ற செயல்களில் ஈடுபடாத) நாணயம் | clean-hand |
| கைச்செலவு | (பயணம் செய்யும்போது அல்லது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும்) சிறு செலவு | pocket expenses |
| கைத்தடி | (வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோர்) நடக்கும்போது ஊன்றிக்கொள்ளப் பயன்படும் மரக் கம்பு அல்லது கழி | walking stick |
| கைத்தறி | கையால் இயக்கப்படும் தறி | handloom |
| கைத்தாங்கலாக | (நடக்க முடியாத நிலையில் இருப்பவரை) கீழே விழாத வகையில் ஆதரவாகத் தாங்கிப் பிடித்து | throwing the hand around a person in a supporting manner |
| கைத்திட்டம் | கையால் எடுத்து அளவிடும் குத்துமதிப்பு | rough estimation of weight or measure by hand |
| கைத்திருத்தம் | (கையால் செய்வதில்) நேர்த்தி | deftness |
| கைத்திறன் | (கைவேலையில் வெளிப்படும்) திறமை, நுணுக்கம், லாவகம் முதலியவை | skill in craft |
| கைத்துப்பாக்கி | (ஒரு கையாலேயே பிடித்துச் சுடக் கூடிய அமைப்புடைய) சிறிய துப்பாக்கி | hand-gun |
| கைத்தொழில் | கைத்திறமையாலோ சிறு கருவிகளைப் பயன்படுத்தியோ செய்யப்படும் தச்சுவேலை, கூடைமுடைதல் போன்ற தொழில் | craft |
| கைதட்டல் | கரகோஷம் | applause |
| கைதட்டு | இரு கைகளையும் ஒலி வரும்படி தட்டுதல் | clap |
| கைதாகு | (குற்றம் புரிந்ததாகக் கருதப்படுபவர் காவலரால்) பிடிக்கப்படுதல் | get arrested |
| கைதி | தண்டனை பெற்றுச் சிறையில் அடைக்கப்பட்டவர் | prisoner (serving a sentence) |
| கைது | கைதுசெய்யப்படுதல் | being under arrest |
| கைதுசெய் | (குற்றவியல் சட்டப்படி காவல்துறையினர் ஒருவரை) தன்னிச்சைப்படி செயல்பட விடாமல் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தல் | arrest (a person) |
| கைதூக்கிவிடு | (பொருளாதார ரீதியாக) நல்ல நிலைக்குக் கொண்டுவருதல் | help (one) come out (of financial straits) |
| கைதேர்ந்த | (கலையில், தொழிலில்) திறமையான | adept (in craft, a profession, etc.) |
| கைநாட்டு | (எழுதப்படிக்கத் தெரியாததால் கையெழுத்துக்குப் பதிலாக) கட்டைவிரல் ரேகை பதித்தல் | thumb impression (instead of signature) |
| கைநிறைய | (வருமானம், சம்பளம் ஆகியவற்றைக் குறிக்கையில்) தேவைக்கும் அதிகமாகவே | (of income, remuneration) substantially |
| கைநீட்டு | (கையை நீட்டிக் கேட்பது போல) (பண) உதவி செய்யும்படி கேட்டல் | ask for (monetary) help |
| கைநீள் | (கட்டுப்பாட்டை மீறித் தேவை இல்லாமல்) கையால் அடித்தல் | behave intemperately (where restraint is needed) |
| கைப்பக்குவம் | (உணவு, மருந்து) பதமாகத் தயாரிக்கும் திறமை | preparation (in cooking, compounding home medicine) that has an inimitable flavour |
| கைப்பணி | கைத்தொழில் | handicraft |
| கைப்பந்து | நடுவில் வலை கட்டிப் பந்தை ஓர் அணியினர் கையால் அடிக்க அதை எதிர் அணியினர் திரும்பிச் செல்லுமாறு அடித்து விளையாடும் விளையாட்டு | volley-ball |
| கைப்பற்று | (தனக்கு உரிமையானது பிறரிடம் இருப்பதை அல்லது சட்ட நடவடிக்கையாக ஒன்றை) எடுத்துக்கொள்ளுதல் | take possession of (things kept unlawfully) |
| கைப்பாவை | (பாவைக் கூத்தில் இருப்பது போல் பிறர்) இயக்க இயங்கும் நிலை | puppet (figuratively) |
| கைப்பிடி1 | திருமணம் செய்துகொள்ளுதல் | marry |
| கைப்பிடி2 | (மண்வெட்டி போன்ற கருவிகளிலும் சில வகைப் பாத்திரங்களிலும்) பிடித்துக்கொள்வதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்ட தண்டு அல்லது வளையம் | handle |
| கைப்பிடிச் சுவர் | (படிக்கட்டு, பாலம் முதலியவற்றின் பக்கங்களில்) நடப்பவர் விழுந்துவிடாமல் இருப்பதற்கு உதவியாகப் பக்கவாட்டில் அமைக்கப்படும் உயரக் குறைவான சுவர் | wall similar to railings on both the sides of a staircase, bridge, etc |
| கைப்பிரதி | (ஓலைச் சுவடியில் உள்ளதைப் பார்த்து) தாளில் எழுதிவைத்த நகல் | handwritten copy (of a palm leaf manuscript) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.