Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| சாறன் | கைலி | a kind of வேட்டி the two ends of which are sewn together |
| சாறு | பழத்திலிருந்து அல்லது இலையிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் திரவம் | juice |
| சான்றளி | (சான்றிதழ், ஆவணம் முதலியவற்றில் கொடுக்கப்பட்டுள்ள) விபரம் உண்மையானது என்று அல்லது அவற்றின் நகல் உண்மையானது என்று (உரிய அதிகாரி முதலியோர்) கையெழுத்தும் முத்திரையும் போட்டு உறுதியளித்தல் | certify (a fact) |
| சான்றிதழ் | (ஒருவரின் பிறப்பு, கல்வி, திருமணம் முதலியவை பற்றி) குறிப்பிட்ட விபரத்தைத் தந்து உரிய அதிகாரி அல்லது அமைப்பு அதிகாரபூர்வமாக வழங்கும் எழுத்து வடிவிலான சான்று | testimonial |
| சான்றோர் | அறிவு, பண்பு முதலியவற்றில் சிறந்தோர் | one who excels in noble acts |
| சாஷ்டாங்க நமஸ்காரம் | (உடலின் எட்டு இடங்கள்) தரையில் படும்படியாக விழுந்து வணங்கும் வணக்கம் | a prostration in which eight spots of the body touch the ground (as a mode of paying respect) |
| சாஷ்டாங்கமாக | (உடலின் எட்டு இடங்கள்) தரையில் படும்படியாக | prostrating |
| சாஸ்திரம் | (இந்து மதத்தில்) வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள், செய்ய வேண்டிய சடங்குகள் முதலியவற்றைக் கூறும் நூல் | treatise (of Hindu religion) |
| சாஸ்திரிய | பழங்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு, தரம் முதலியவற்றை அடிப்படையாகக்கொண்ட | classical |
| சிக்-என்று2 | (ஒருவரின் உடை அல்லது தோற்றம் குறித்து வருகையில்) கச்சிதமாக | in a chic fashion |
| சிக்கரி | (சுவை முதலியவற்றிற்காக) காப்பித் தூளுடன் சேர்க்கப்படும் ஒரு வகைக் கிழங்கின் பொடி | chicory |
| சிக்கல் | (-ஆன) எளிமையாக இல்லாதது | complexity |
| சிக்கனம் | கட்டுப்படுத்திச் செயல்படும் அல்லது பயன்படுத்தும் விதம் | economy |
| சிக்கிமுக்கிக்கல் | ஒன்றோடொன்றைத் தேய்த்தால் நெருப்பை உண்டாக்கக் கூடிய வழவழப்பான ஒரு வகைக் கல் | flint stone (for making fire) |
| சிக்கு1 | மாட்டுதல் | get stuck (in a manner difficult to extricate) |
| சிக்கு2 | (முடி, நூல் முதலியவை) ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பிரிக்க முடியாதபடி ஆகும் நிலை | tangle |
| சிக்கு3 | (தலையணை முதலியவற்றில்) எண்ணெய் படிவதால் ஏற்படும் அழுக்கு | greasiness |
| சிகரம் | மலையின் உயர்ந்த பகுதி | top of a mountain |
| சிகிச்சை | நோயை அல்லது காயத்தைக் குணப்படுத்துவதற்கான செயல்முறை | treatment |
| சிகை | (தலை) முடி | hair (on the head) |
| சிங்கநாதம் | (கர்ச்சனை போன்ற) போர்வீரர் ஆரவாரம் | victorious battle-cry |
| சிங்கப்பல் | மேல் வரிசையில் கோரைப்பல்லுக்குச் சற்று முன் நீண்டு முளைத்திருக்கும் பல் | projecting extra tooth just above the canine tooth |
| சிங்கம் | (காட்டில் வாழும் எல்லா விலங்குகளையும் விட பலம் வாய்ந்ததாகக் கருதப்படும்) செம்பழுப்பு நிறம் உடைய கொடிய காட்டு விலங்கு | lion |
| சிங்காசனம்/சிங்காதனம் | சிம்மாசனம் | throne |
| சிங்காரம் | அலங்காரம் | beautification |
| சிங்காரி1 | அலங்கரித்தல் | beautify |
| சிங்காரி2 | (பெரும்பாலும் கேலியாக) கவர்ச்சியாக அலங்கரித்துக்கொள்ளும் பெண் | dolled-up woman (used in an uncomplimentary way) |
| சிங்கியடி | (அடிப்படைத் தேவைகளுக்கே) மிகவும் சிரமப்படுதல் | be in straits |
| சிச்சிலுப்பை | சின்னம்மை | chicken-pox |
| சிசு | (வயிற்றில் வளரும் அல்லது பிறந்த) இளம் குழந்தை | foetus |
| சிசுருட்சை | (நோயாளி, முதியவர் முதலியோருக்குச் செய்யும்) பணிவிடை | caring |
| சிட்சை1 | தண்டனை | punishment |
| சிட்சை2 | (மரபு வழியான கல்வி, கலை ஆகியவற்றில்) பயிற்சி | training (in traditional arts) |
| சிட்டம் | எண்ணூற்று நாற்பது கஜ நீள நூலை ஒன்றரை கஜச் சுற்றளவில் சுற்றிய தொகுப்பு | hank |
| சிட்டா | (பொதுவாகக் கடைகளில்) முறையாகக் கணக்கைப் பதிவுசெய்வதற்கு முன்பு எழுதிவைத்திருக்கும் குறிப்பேடு | day book (of shopkeepers for noting down the entries before transferring them to account book) |
| சிட்டிகை | (மூக்குப்பொடி, தூள் போன்றவற்றில்) கட்டை விரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையில் பிடித்து எடுக்கப்படும் அளவு | pinch (of snuff, etc.) |
| சிட்டுக்குருவி | சிறு அலகும் மெல்லிய கால்களும் உடைய பழுப்பு நிறப் பறவை | house sparrow |
| சிடுக்கு | சிக்கு | tangle |
| சிடுசிடு | (பேச்சில், செயலில்) கோபம், எரிச்சல் ஆகியவற்றை வெளிப்படுத்துதல் | be irate |
| சிடுசிடுப்பு | (தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் வெளிப்படுத்தும்) எரிச்சல் கலந்த கோபம் | being irate |
| சிடுமூஞ்சி | சாதாரண விஷயங்களுக்குக்கூட எரிச்சல் அடைபவர் | person who is petulant |
| சிண்டு | சிறிய குடுமி அல்லது குடுமியில் பின்னப்பட்ட ஓரிரு முடி | thin tuft or a strand of plaited tuft |
| சிண்டுமுடி | (ஒருவரைப்பற்றி மற்றொருவரிடம் குற்றம் குறை கூறி இருவருக்கிடையில்) சண்டை மூட்டுதல் | set one against another |
| சிணுங்கல் | மெல்லிய அழுகை | weak cry |
| சிணுங்கு | (குறைபட்டுக்கொண்டு) மெல்லிய குரலில் அழுதல் | cry faintly |
| சித்தபிரமை | புத்தி பேதலிப்பு | insanity |
| சித்தம்2 | தயார் (நிலை) | (state of) readiness |
| சித்தர் | யோகத்தின்மூலம் அரிய சக்திகளைப் பெற்றவர்(இந்து மதத்தில்) மரபு நெறியில் நில்லாதவர் | mystic |
| சித்தரத்தை | ஒரு வகைச் செடியின் இஞ்சி போன்ற காய்ந்த வேர் | (lesser) galangal |
| சித்தரி | (ஓவியத்தைப் பார்ப்பது போல் உணர்வு ஏற்படும்படி) வருணித்தல்(ஒன்றை) விவரித்தல் | describe vividly |
| சித்தவைத்தியம் | தாவரப் பொருள்களோடு உலோகங்களையும், தாதுப் பொருள்களையும் அதிகமான அளவில் பயன்படுத்தி நோய்களுக்குச் சிகிச்சை தரும் (இந்திய) மருத்துவ முறை | siddha medicine (of Indian system) which uses metals and ores along with herbal medicine |
| சித்தாந்தம் | சமூக, பொருளாதார, அரசியல் குறித்த சிந்தனை அல்லது நோக்க அணுகுமுறை | ideology |
| சித்தாந்தி | குறிப்பிட்ட சித்தாந்தத்தைக் கடைப்பிடிப்பவர் | follower of a particular doctrine or ideology |
| சித்தார் | (இந்துஸ்தானி இசையில்) பெரும்பாலும் ஏழு தந்திகள் கொண்ட இசைக் கருவி | guitar-like instrument usually with seven strings and movable frets |
| சித்தாள் | (கட்டடம் கட்டுதல், சாலை போடுதல் போன்ற வேலையில்) கல், கலவை முதலியவற்றை எடுத்துத் தரும் பணி செய்யும் நபர் | unskilled labourer (assisting masons) |
| சித்தி3 | (சித்தர், முனிவர் போன்றோர் யோகத்தின்மூலம் அடைவதாகக் கருதப்படும்) இயற்கையைக் கடந்த சக்தி | spiritual power |
| சித்தியாகு | (பயிற்சியால், பழக்கத்தால் ஒன்றில் திறமை) வாய்க்கப்பெறுதல் | be attained (by practice, etc.) |
| சித்திரக்கவி | (பாம்பு போன்ற) சித்திர வடிவத்தினுள் எழுதப்படும் செய்யுள் | verse composition fitted into figures (such as a snake) |
| சித்திரக்குள்ளன் | மந்திரச் செயல்கள் செய்வதாக நம்பப்படும் குள்ளன் | dwarf (who works miracles) |
| சித்திரவதை | செயலாலோ சொல்லாலோ கொடுமையாகத் துன்புறுத்துதல் | torture |
| சித்திராபௌர்ணமி | சித்திரை மாதம் பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் திருவிழா | festival celebrated on the full moon day in the month of சித்திரை |
| சித்திரான்னம் | சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் முதலிய பல வகை சாதம் | variety of rice dishes treated with lemon juice or tamarind mix or jaggery |
| சித்திரை | முதலாவது தமிழ் மாதத்தின் பெயர் | name of the first month in the Tamil calender, i |
| சித்துவேலை | மாய வித்தை | magic |
| சிதம்பர ரகசியம் | அளவுக்கு அதிகமாகப் பாதுகாக்கப்படும் ரகசியம் | closely guarded secret |
| சிதல் | கரையான் | white ant |
| சிதறல் | (குண்டு போன்றவை வெடித்து அல்லது ஒரு பொருள் உடைந்து) சிதறிய துண்டுகள் | splinters |
| சிதறு | (உடைந்து, சிதைந்து) தனித்தனியாகப் பிரிதல்(பிரிவுபட்டு) விலகுதல்தனித்தனியாதல் | break into pieces |
| சிதறுதேங்காய் | (வேண்டுதல், வழிபாடு முதலியவற்றிற்காக) சில்லாகச் சிதறுமாறு உடைக்கும் தேங்காய் | coconut hurled on the ground to break it into pieces (when offering worship) |
| சிதிலம் | (கட்டடம் முதலியவற்றின்) இடிந்த நிலை | (of building) crumbling state |
| சிதை2 | (ஒன்றின் வடிவம், தன்மை, இயல்பு முதலியவற்றை) கெடுத்தல் | destroy |
| சிதை3 | சடலத்தை எரிப்பதற்காக விறகு, வறட்டி முதலியவை அடுக்கப்பட்ட அமைப்பு | (funeral) pyre |
| சிதைவு | சிதைந்த நிலை | state of decay or ruin |
| சிந்தனாவாதி | தீவிரமாகச் சிந்தித்துக் கருத்துகளை வெளிப்படுத்துபவர் | thinker |
| சிந்தனை | (மனிதனுக்கு மட்டும் உரியதாகக் கருதப்படும்) அறிவைப் பயன்படுத்திப் பகுத்துப்பார்க்கும் திறன் | power of thinking |
| சிந்தி | அறிவால் பகுத்துக்காணுதல் | think about |
| சிந்து1 | (நீர், பூக்கள், தானியம் முதலியவை) பரவலாகக் கீழே விழுதல்/(நீர் முதலியவற்றை) கொட்டுதல் | (of water, grain, etc.) spill/scatter (water, etc.) |
| சிந்து2 | இசைப் பாட்டு வகைகளுள் ஒன்று | song of melodic type |
| சிந்தூரம் | குங்குமத்தில் சேர்க்கும் ஒரு வகைச் சிவப்பு நிறப் பொடி | a kind of red powder added to vermilion |
| சிந்தை | மன உணர்வு | feeling |
| சிநேகபாவம் | நட்புணர்வு | friendliness |
| சிநேகம்/சிநேகிதம் | நட்பு | friendship |
| சிநேகிதன் | நண்பன் | friend |
| சிநேகிதி | சிநேகிதன் என்பதன் பெண்பால் | feminine of சிநேகிதன் |
| சிப்பந்தி | (கடையில்) வேலையாள்/(அலுவலகத்தில்) பணியாளர் | employee |
| சிப்பம் | முடைந்த பனை ஓலையில் அல்லது சிறு கூடைகளில் பொருள்களை வைத்துக் கட்டும் சிறு மூட்டை | small bundle of certain commodities wrapped up in palm leaf or small basket |
| சிப்பாய் | ராணுவ வீரன் | sepoy |
| சிப்பி | ஒரு கடல் வாழ் உயிரினத்தின் இரு பிரிவாகப் பிரியக் கூடிய ஓடு | shell |
| சிப்பிச் சுண்ணாம்பு | சிப்பியைச் சுட்டு நீற்றியெடுக்கும் சுண்ணாம்பு | shell-lime |
| சிப்பில்(தட்டு) | வடிதட்டு | rice-strainer |
| சிபாரிசு | பரிந்துரை | recommendation |
| சிம்பு2 | (மூங்கில்) பிளாச்சு(புளி, சவுக்கு முதலியவற்றின்) மிளாறு | (bamboo) split |
| சிம்மசொப்பனம் | திகிலை ஏற்படுத்தும் பயங்கரம் | nightmare |
| சிம்மம் | (பொதுவாக) சிங்கம்(குறிப்பாக) பெண் சிங்கம் | lion |
| சிம்மாசனம் | (அரசவையில் அரசன் அல்லது அரசி அமரும்) அலங்காரமான ஆசனம் | throne |
| சிமிட்டா | சிட்டிகை | pinch (of snuff, etc.) |
| சிமிட்டு | (கண்) இமைத்தல் | wink |
| சிமிண்டு | பொருளின் மேல் பற்றிக்கொள்ளும் தன்மை உடையதாகச் சுண்ணாம்பு, களிமண் முதலியவற்றைக் குறிப்பிட்ட அளவில் கலந்து தயாரிக்கும் கருஞ்சாம்பல் நிற மாவுப் பொருள் | cement |
| சிமிழ் | (குங்குமம் போன்ற பொருள்களை வைப்பதற்கு வெள்ளி, தந்தம் முதலியவற்றால் செய்யப்படும்) குழிவான அடிப்பாகத்தையும் மூடியையும் கொண்ட சிறிய செப்புப் போன்ற கொள்கலம் | small round box (for குங்குமம், etc.) |
| சிமினி | (காற்றினால் சுடர் அணையாமல் இருக்க) மண்ணெண்ணெய் விளக்கில் பொருத்தும் கண்ணாடிக் கூடு | chimney (for kerosene lamps) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.