Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
சலவைக் கல் மெருகேற்றிப் பளபளப்பாக்கப்பட்ட ஒரு வகைச் சுண்ணாம்புக் கல்marble
சலனம் (ஒன்றின்) பாதிப்பால் ஏற்படும் கிளர்ச்சிarousal of emotion
சலாம் (இஸ்லாமியர்) உள்ளங்கையை நெற்றிக்கு நேரே கொண்டுவந்து வணக்கம் தெரிவிக்கும் முறை(காவல்காரர் முதலியோர்) விரித்த உள்ளங்கை வெளியே தெரியும்படி நெற்றியில் வைத்து வணக்கம் தெரிவிக்கும் முறைa form of salute
சலி1(ஒன்றையே திரும்பத்திரும்பச் செய்ய நேர்வதால் அல்லது ஒன்றின் மிகுதியால்) வெறுப்படைதல்(மனம்) களைத்தல்அலுத்தல்be fed up with
சலி2(சல்லடையில் போட்டு) பக்கவாட்டில் ஆட்டி அல்லது கையால் அலைத்து வேண்டாதவற்றை (மேலே தங்குமாறுசெய்து) நீக்குதல்sift (flour, sand, etc in a sieve)
சலிப்பு (ஒன்றையே திரும்பத்திரும்பச் செய்வது முதலியவற்றால் அல்லது துன்பம் முதலியவற்றின் மிகுதியால்) வெறுப்புweariness
சலுகை விதிமுறைகளைத் தளர்த்தி வழங்கப்படும் விலக்குconcession
சலூன் முடிதிருத்தகம்hair dressing saloon
சவ்வு ஒன்றைத் தன் வழியே ஊடுருவ விடும் தன்மையும் நெகிழக்கூடிய தன்மையும் கொண்ட (உடல் உறுப்புகளில் அல்லது தாவரங்களில் அமைந்திருக்கும்) மென்மையான தோல்membrane
சவக்களை (பயம், துக்கம் முதலியவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரின் முகத்தில் தோன்றும்) பொலிவு இழந்த தோற்றம்pallor (as of death)
சவக்காலை மயானம்place of burial or cremation
சவக்கிடங்கு (மருத்துவமனைகளில்) பிணங்களைக் கெடாமல் வைத்திருப்பதற்கான அறைmortuary
சவக் குழி பிணத்தைப் புதைப்பதற்காகத் தோண்டப்படும் குழிgrave
சவப் பெட்டி பிணத்தை வைத்து மூடிப் புதைப்பதற்கான மரப் பெட்டிcoffin
சவம் பிரேதம்corpse
சவர அலகு (முகத்தை மழிப்பதற்குப் பயன்படும்) இரண்டு பக்கங்களிலும் கூரிய விளிம்புடைய இரும்பினாலான மெல்லிய தகடுblade
சவரக் கத்தி மடக்கி உறைக்குள் வைத்துக்கொள்ளக் கூடிய, சவரம் செய்வதற்கான கத்திknife used as a razor
சவரம் (பெரும்பாலும் முகத்தில் உள்ள) முடியை அடியோடு மழித்தல்removal of hair (from the face)
சவரன் (தங்கத்தை நிறுக்க) எட்டு கிராம் கொண்ட ஓர் அளவு(a measure of gold equal to) eight grams
சவாரி (குதிரை, யானை போன்ற விலங்குகளின் மீது அல்லது வாகனத்தில்) அமர்ந்து செல்லும் பயணம்ride (on a horse, elephant, etc or in a vehicle)
சவு நமர்த்தல்lose crispness
சவுக்கடி கசையடிwhipping
சவுக்கம் (குறிப்பிட்ட தாளத்தில்) அட்சரத்தைக் காலத்தில் நீட்டி இசைக்கும் முறைthe rendering of a கிருதி in slow tempo
சவுக்காரம் (பெரும்பாலும் துணி துவைப்பதற்கான) சோப்புsoap (used for washing clothes)
சவுக்கு1(அடிப்பதற்குப் பயன்படுத்தும்) தோல் அல்லது கயிற்றுப் பின்னல்whip
சவுக்கு2ஊசி போன்ற இலைகளை உடையதும் உயரமாக வளரக் கூடியதுமான மரம்casuarina
சவுக்கை2சதுரக் கொட்டகை போடப்பட்ட திண்ணைa shed with a square roof (to relax and chat)
சவுரி (பெண்கள் தம்) தலைமுடியோடு இணைத்துப் பின்னிக்கொள்ளத் தயாரிக்கப்பட்ட முடிக்கற்றைfalse hair
சவை மெல்லுதல்chew
சள்ளை1தொல்லைtrouble
சள்ளை2விலாrib
சளசள-என்று (பேச்சு, நீரோட்டம் முதலியவற்றைக் குறிக்கையில்) ஓயாத இரைச்சலோடுincessantly noisy
சளி (தொண்டையில், நுரையீரலில் உண்டாகிப் பெரும்பாலும்) மூக்கு, வாய் வழியாக வெளியேறும் குழகுழப்பான திரவம்phlegm
சளை களைப்படைதல்become weary or tired
சற்குரு உண்மையான ஞானத்தைக் கற்றுத் தரும் ஆசிரியர்spiritual preceptor
சற்று குறைந்த அளவுa little (of space or time)
சற்றும் (எதிர்மறை வினைகளோடு) கொஞ்சம்கூடeven a little
சற்றைக்கொருதரம் சிறிது நேரத்துக்கு ஒரு முறைquite frequently
சறணி கீல்hinge
சறுக்கு (இருக்கும் நிலையிலிருந்து) பிடிப்பு தவறிச் சரிதல்slide
சறுக்குக்கட்டை ஓடும் தேரின் முன் சக்கரத்தின் கீழே வைத்து அது செல்லும் திசையைத் திருப்ப உதவும் செதுக்கிய கட்டைblock of wood with inclined plane set before the front wheels of a தேர் to turn its course
சறுக்கு(மரம்) (சிறுவர் ஏறி அமர்ந்து) சறுக்கி விளையாடுவதற்காக அமைக்கப்படும் சாய்வுத் தளம்slide (in a playground)
சன்மார்க்கம் (ஞானத்தைப் பெறுவதற்கான) நல்ல நெறிpath of virtue (to attain spiritual knowledge)
சன்மானம் (செயலுக்கோ படைப்புக்கோ சாதனைக்கோ) அன்பளிப்பாகத் தரப்படும் பணம் அல்லது பொருள்reward (for a deed)
சன்னதம் தன்னை மறந்த வெறி(religious) frenzy
சன்னது பட்டம்diploma
சன்னம் (பொருள்களின் பருமனைக் குறிக்கையில்) மெல்லியது(when referring to the size) fine
சன்னிதானம் (இறைவன், மகான் போன்றோரின்) முன்னிலைpresence
சன்னிதி (கோயிலில் இறைவன் அல்லது இறைவி) இருக்கும் இடம்(in the temple) the place where the deity is
சன்னியாசம் உலகப் பற்று, குடும்பப் பாசம் முதலியவற்றை விடுத்த நிலைlife of renunciation
சன்னியாசி துறவு பூண்டவர்ascetic
சன்னியாசினி பெண் துறவிwoman ascetic
சனாதனதர்மம் தொன்மையான அற ஒழுக்கம்eternal law (according to Hindu scriptures)
சனி சூரியனிலிருந்து ஆறாவதாக உள்ள கிரகம்saturn
சனிமூலை வடகிழக்கு மூலைnorth-east quarter
சனியன் தொல்லையாகவும் வேண்டாததாகவும் கருதும்போது கூறும் வசைச் சொல்an expression of impatience
சனீஸ்வரன் சனிக்கிரகத்தின் அதிபதியான கடவுள்presiding deity of planet Saturn
சஷ்டி அமாவாசை அல்லது பௌர்ணமிக்குப் பிறகு வரும் ஆறாவது திதிsixth lunar day
சா2முதன்மை வினையின் தன்மை மிகுதிப்படுவதை உணர்த்தும் துணை வினைan auxiliary to indicate that the action of the main verb is greatly intensified
சாக்கடை கழிவுநீருக்கான கால்வாய் அல்லது குழாய்ப் பாதைopen gutter
சாக்காடு சாவுdeath
சாக்கிட்டு (ஒன்றைச் செய்ய அல்லது செய்யாமலிருக்க மற்றொன்றை) சாதகமாக அல்லது காரணமாகக் காட்டிshowing
சாக்கு1கோணிgunny bag
சாக்கு2பொய்யான காரணம்excuse
சாக்குக்கட்டி (கரும்பலகையில் எழுதப் பயன்படுத்தும்) நீள் உருண்டை வடிவச் சுண்ணாம்புத் துண்டுchalk piece (to write on the blackboard)
சாக்குப்போக்கு (கூறப்படும்) நம்பிக்கை ஏற்படுத்தாத சமாதானம்excuses
சாக்தம் சக்தியை முதன்மைத் தேவதையாகக் கொண்டு வழிபடும் இந்து மதப் பிரிவுa sect of Hindu religion having the feminine principle of Sakti as the prime deity
சாகசம் வீரதீரச் செயல்daring act
சாகடி கொல்லுதல்kill
சாகபட்சிணி தாவர உண்ணிherbivorous animal
சாகரம் (பெரும்பாலும் உருவகமாக) கடல்(mostly metaphorically) sea
சாகாவரம் (புராணத்தில்) இறக்காமல் இருக்கப் பெற்ற வரம்(in puranas) boon of immortality
சாகித்(தி)யம் (இசையில்) பாடம்the text of a composition
சாகுபடி விளைச்சல்cultivation
சாங்கோபாங்கமாக (நடந்ததை அல்லது செய்ததை) மிக விரிவாகin great detail
சாசனம் (ஓர் அமைப்பின்) முக்கிய நோக்கங்களையும் கொள்கைகளையும் விளக்கி எழுதப்பட்ட ஆவணம்charter (of an organization)
சாட்சி ஆதாரம்evidence
சாட்சிக்காரன் சாட்சி சொல்பவன்(male) witness
சாட்சிசொல் (நீதிமன்றத்தில் வாதி அல்லது பிரதிவாதி சார்பில் ஒரு வழக்கைக்குறித்து) நேரில் அறிந்ததை எடுத்துரைத்தல்give testimony or evidence (in court)
சாட்சியம் (வழக்கைக்குறித்து) நேரில் அறிந்தவர் கூறும் கூற்று அல்லது ஆதாரமாக அளிக்கப்படும் சான்றுtestimony
சாட்டு சாக்குப்போக்குpretext
சாட்டை (பெரும்பாலும் வண்டி இழுக்கும் விலங்குகளை அடிக்கப் பயன்படுத்தும்) பிரம்பின் நுனியில் சிறிய தோல்பட்டையும் முறுக்கப்பட்ட நீண்ட கயிறும் உடைய சாதனம்whip (used mostly by cart-drivers)
சாடு2(பீளை அதிக அளவில்) திரளுதல்(of dirt) collect (in the eyes)
சாண் விரல்களை அகல விரித்த நிலையில் சுண்டுவிரல் நுனியிலிருந்து கட்டைவிரல் நுனிவரை உள்ள தூரம்span (as a measure)
சாணக்கியம் தந்திரத்தோடு கூடிய அறிவு நுட்பம்stratagem
சாணம்/சாணி (மாடு வெளியேற்றும்) கழிவு(cow) dung
சாணிதட்டு (வறட்டியாக்க) சாணத்தை வட்டமாகத் தட்டுதல்beat cow-dung into flat round cakes (to be used as fuel after being dried)
சாணிப்பால் (களத்தில் நெற்குவியலின் மேல் குறியிடுவதற்காகக் கரைக்கப்படும்) சாணிக் கரைசல்solution of cow-dung (to mark the heap of paddy)
சாணை(க்கல்) (கத்தி, அரிவாள் போன்றவற்றைத் தீட்டுவதற்கான) சொரசொரப்பான பரப்பு உடைய கல்whetstone
சாணைபிடி (கத்தி முதலிய கருவிகளை) சாணைக்கல்லில் கூர்மைப்படுத்துதல்whet
சாத்தமுது ரசம்a kind of watery soup added to the rice
சாத்தான் கடவுளின் எதிரியாகவும் தீய சக்தியாகவும் கருதப்படும் தீய ஆவிsatan
சாத்தியக்கூறு/சாத்தியப்பாடு (ஒன்று நிகழ்வதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்குக் காரண அடிப்படையிலான) வாய்ப்புa possibility
சாத்தியம் ஒன்று செய்யக் கூடியதாக அல்லது நிகழக் கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமைகிற நிலைfeasibility
சாத்து1(கதவு போன்றவற்றை) மூடுதல்shut (the door, etc.)
சாத்து2அடித்தல்thrash
சாத்து3(கூரையில் ஓடு, கீற்று முதலியவற்றை) பொருத்திப் பிடிக்குமாறு போடப்படும் நீண்ட மூங்கில் பட்டை அல்லது கழிrafters (for tiles, roof)
சாத்துக்குடி தடித்த மஞ்சள் நிறத் தோலினுள் சுளைகள் நிறைந்த இனிப்புச் சுவையுடைய பழம்sweet lime
சாத்துப்படி (கோயிலில் விக்கிரகங்களுக்கு மலர்கள், நகைகள் முதலியவற்றைக்கொண்டு செய்யும்) அலங்காரம்bedecking (of idols)
சாத்(து)வீகம் அமைதிpeacefulness
   Page 67 of 204    1 … 65 66 67 68 69 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil