Tamil To Tamil & English Dictionary
Tamil Word | Tamil Meaning | English Meaning |
தனிப்பட்ட | சொந்த | personal |
தனிப்பாடல் | (ஒரு நீண்ட கவிதை, காவியம், கதைப்பாடல் முதலியவற்றின் பகுதியாக இல்லாமல்) அவ்வப்போது இயற்றிய, தன்னளவில் நிறைவுடைய செய்யுள் | occasional verse |
தனிப் பெரும்பான்மை | அறுதிப் பெரும்பான்மை | absolute majority (for a political party) |
தனிமம் | மேலும் எளிய பொருளாகப் பிரிக்க முடியாததும் ஒரே தன்மையைக் கொண்ட அணுக்களால் ஆனதுமான பொருள் | element |
தனிமை | அருகில் துணையாக யாரும் இல்லாத நிலை | seclusion |
தனிமைப்படு | யாரும் இல்லாதபடி ஒதுக்கப்படுதல் | get isolated |
தனிமைப்படுத்து | (மக்களிடமிருந்து அல்லது குழுவிலிருந்து ஒருவரை) பிரித்து ஒதுக்குதல் | isolate |
தனியா | கொத்தமல்லி (விதை) | coriander (seed) |
தனியார் | தனிப்பட்டவர்/தனிப்பட்டவருக்குச் சொந்தமானது | private party/private ownership |
தனியுடைமை | தனி நபர் சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை | right of holding private property |
தனியே | யாரும் உடன் இல்லாத சூழலில் | all alone |
தனிவட்டி | (கூட்டுவட்டி முறையில் இல்லாமல்) கொடுத்த அல்லது வாங்கிய பணத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடப்படும் வட்டி | simple interest |
தனுசு | வில் | bow |
தனுர்வாதம் | தசைவிறைப்பு ஜன்னி | tetanus |
தஸ்தாவேஜு | ஆவணம் | document |
தா1 | கொடு1 | see கொடு1 |
தா2 | கொடு2 | see கொடு2 |
தாக்கம் | (மாற்றம் அல்லது விளைவை ஏற்படுத்தும் வகையிலான) பாதிப்பு | impact |
தாக்கல்செய் | (நீதிமன்றம் முதலியவற்றில் வழக்கை) பதிவுசெய்தல்/(சாட்சியம் முதலியவற்றை) ஒப்படைத்தல் | institute |
தாக்கீது | (ஒரு செயல்பற்றி நீதிமன்றத்தின் அல்லது அரசின்) எழுத்துமூலமான உத்தரவு | summons |
தாக்கு | அடித்தல், வெட்டுதல் முதலியவற்றுக்கு உட்படுத்துதல் | assault |
தாக்குதல் | (கால்பந்து முதலிய விளையாட்டுகளில்) (எதிர் அணிப் பகுதியை நோக்கி) முன்னேறி நெருக்குதல் | (of football, etc.) offensive game |
தாக்குப்பிடி | (நிலைமைக்குத் தக்கவாறு செயல்பட்டு) தாங்கி நிலைத்தல் | withstand |
தாகசாந்தி | தாகத்தைத் தணித்தல் | quenching thirst |
தாகம் | நீர் குடிக்க வேண்டும் என்று எழும் உணர்வு | thirst |
தாங்கள் | முன் இருப்பவரை மரியாதையுடன் அழைக்கப் பயன்படும் சொல் | (honorific) you |
தாங்கி1 | ஒன்றைத் தாங்கி நிற்பதற்காகப் பயன்படுத்தும் சாதனம் | stand (to keep things) |
தாங்கி2 | ஒரு பக்கமாகச் சாய்ந்து | (while walking) leaning on one side |
தாங்குகட்டை | (காலை ஊன்றி நடக்க முடியாதவர்) தாங்கி நடக்கப் பயன்படுத்தும் கோல் | crutches |
தாசன் | (சில தொடர்களில்) ஒரு தெய்வத்தைத் தீவிரமாக வழிபடுபவன் | fervent devotee (of a deity) |
தாசி | கணிகை | courtesan |
தாசில்தார் | (மாவட்ட ஆட்சியருக்கு) நிர்வாகம், வரி வசூலிப்பு முதலியவற்றில் உதவும் அதிகாரி | revenue official in charge of a sub-division of a district |
தாசில்பண்ணு | அதிகாரம் செலுத்துதல் | be at the helm |
தாட்சண்யம் | (மனிதாபிமானம் நிறைந்த) பரிவு | consideration (for s |
தாட்டுபூட்டு-என்று | (ஒருவருடைய பேச்சுக்குறித்து வருகையில்) (அதிகாரத்தைக் காட்டும் வகையில்) ஆர்ப்பாட்டமாக | blustering out |
தாடை | (முகத்தில்) பற்களைத் தாங்கியிருக்கும் எலும்புப் பகுதி | jaw |
தாண்டவம் | (புராணங்களில்) (சிவன், காளி ஆகிய கடவுளர் ஆடியதாகக் கூறப்படும் ஆனந்தம், அழிவு போன்றவற்றை வெளிப்படுத்தும்) நடனம் | (in puranas) dance (expressing bliss or destruction) |
தாண்டவமாடு | (வன்முறை, வறுமை போன்றவை) பெருமளவில் பரவியிருத்தல் | (of violence, poverty, etc.) show up (in its ugliest form) |
தாண்டி | (குறிப்பிட்ட இடத்திற்கு) அடுத்து | beyond |
தாண்டு | (இடைப்பட்ட ஒன்றைக் கடப்பதற்காக) தாவுதல்(ஒன்றை) தாவிக் கடத்தல் | jump over |
தாத்தா | தாயின் அல்லது தந்தையின் தந்தை | grandfather |
தாத்பரியம் | (ஒன்றினுடைய) நோக்கம் அல்லது பொருள் | purpose |
தாதி | (மருத்துவமனை, முதியோர் இல்லம் போன்றவற்றில் தங்கியிருப்பவரை அல்லது வீட்டில் குழந்தைகளை) கவனித்து உதவிபுரியும் பணியைச் செய்யும் பெண் | woman employee to look after the aged or children |
தாது1 | உடலுக்கு மிகவும் தேவையான இரும்பு முதலிய உலோகச் சத்து | mineral |
தாது2 | (மலரின்) மகரந்தத் தூள் | pollen |
தாது3 | உடலில் அமைந்திருக்கும் ரசம், இரத்தம், மாமிசம், மேஜஸ், அஸ்தி, மஜ்ஜை, சுக்கிலம் ஆகிய ஏழு பொருள்கள் | tissues (which are of seven kinds in the Siddha medical system) |
தாதுப் பொருள் | மருந்தாகப் பயன்படுத்தும் படிகாரம், உப்பு போன்ற பொருள்கள் | minerals |
தாந்திரிகம் | ஆசைகளை அடக்குவதை எதிர்ப்பதும் தான் என்பதை மறந்த உணர்வு நிலையை அடைய, தேவையானால், போதைப்பொருள் உட்கொள்வதை அனுமதிப்பதுமான கோட்பாடு | a school of Indian philosophy which accepts physical desires and admits, if necessary, the use of drugs to reach creative awareness |
தாபம்1 | ஏக்கம் | longing |
தாம்2 | மரியாதை ஒருமைப் பெயருடன் அல்லது பன்மைப் பெயருடன் இணைக்கப்பட்டு அழுத்தம் தரும் சொல் | emphatic particle suffixed to plural nouns or pronouns |
தாம்பத்தியம் | (கணவன்மனைவியாக வாழும்) குடும்ப வாழ்க்கை | married life |
தாம்பாளம் | சாய்வான விளிம்புப் பகுதியைக் கொண்ட பெரிய தட்டு | a large salver with raised rim |
தாம்புக்கயிறு | (பெரும்பாலும் கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும்) தென்னை நாரினால் முறுக்கப்பட்ட பருமனான கயிறு | a thick twisted rope |
தாம்பூலம் | வெற்றிலைபாக்கு | betel leaves and areca nuts (to chew) |
தாம்பூலம்தரி | வெற்றிலை போடுதல் | chew betel |
தாம்பூலம்மாற்று | (பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் திருமணம் நிச்சயம் செய்வதின் அடையாளமாக) வெற்றிலைபாக்கு மாற்றுதல் | conclude a proposal of marriage by exchanging betel |
தாமரை | ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் வளரும், மிதக்கக் கூடிய பெரிய வட்டமான இலைகளைக் கொண்ட ஒரு வகைக் கொடி/அதன் இளம் சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர் | lotus (the plant and the flower) |
தாமிரம் | செம்பு | copper |
தாய் | அம்மா | mother |
தாய்க்குலம் | பெண் இனத்தவர் | women as a community |
தாய்சேய் நல விடுதி | பிரசவம்பார்க்க அரசு ஏற்படுத்திய மருத்துவமனை | maternity and child care hospital |
தாய்நாடு | (தானோ தன் பெற்றோரோ) பிறந்த நாடு | mother country |
தாய்ப்பத்திரம் | நிலம், சொத்து, கட்டடம் முதலியவற்றின் உரிமைகுறித்து முதன்முதலாக எழுதப்படும் பத்திரம் | title deed (as distinguished from sale deed, etc.) |
தாய்மாமன் | (மாமன் முறையில் பலர் இருந்தாலும் தனித்துக்காட்டும் விதத்தில்) தாயின் சகோதரர் | maternal uncle |
தாய்மை | குழந்தை பெறும் நிலை | condition of being pregnant |
தாய்மொழி | (தானோ தன் பெற்றோரோ) பிறந்ததிலிருந்து பேசிவரும் மொழி | mother tongue |
தாயக்கட்டை | (தாயம் என்னும் விளையாட்டில் உருட்டும்) நான்கு பக்கத்திலும் வெவ்வேறு எண்ணிக்கையைக் காட்டும் புள்ளிகள் குறிக்கப்பட்ட கன சதுர அல்லது செவ்வகக் கட்டை | (a pair of four-sided) dice |
தாயத்து | (மந்திரவாதி, பூசாரி போன்றவர்) மந்திரித்த பொருளை உள் அடைத்துத் தரும் நீள் உருண்டை வடிவ உலோகக் குப்பி | talisman (cylindrical in shape) |
தாயம் | தாயக் கட்டைகளை உருட்டி அல்லது சோழிகளைப் போட்டு அவை காட்டும் எண்களுக்கு ஏற்பக் கட்டங்களில் காயை நகர்த்தும் விளையாட்டு | an indoor game for two or more players which is played by moving the counters on a chequered board according to the numbers shown by the dice |
தாயாதி | தந்தையின் ஆண் மூதாதையர் வழியில் உறவினர் | male descendants of the same ancestors |
தாயார் | தாய் | mother |
தார்1 | (வாழையின்) குலை | bunch (of plantain fruits) |
தார்2 | (சாலை போடப் பயன்படுத்தும்) சூடுபடுத்தினால் இளகக் கூடிய தன்மை கொண்ட, நிலக்கரியிலிருந்து கிடைக்கும் பிசுபிசுப்பான கறுப்பு நிறப் பொருள் | (liquid) tar |
தார்3 | (துணி, காகிதம் போன்ற பொருள் துண்டாகும்போது) அகலம் குறைந்த நீண்ட பட்டை | strip |
தார்க்குச்சி | (மாட்டை ஓட்டுவதற்காக) கூர்மையான இரும்பு முனை கொண்ட சிறு கம்பு | goad |
தார்ப்பாய் | (பொருள்கள் நனைந்துவிடாமல் பாதுகாக்கப் பயன்படும்) தார் பூசப்பட்ட முரட்டுத் துணி | tarpaulin |
தார்ப்பாய்ச்சு | வேட்டியின் முன்முனையைப் பட்டையாக மடித்துக் கால்களுக்கு இடையில் கொடுத்துப் பின்பக்கம் இழுத்துச் செருகுதல் | wear the வேட்டி by tucking one end of it |
தார்மீக | (சட்டப்படியோ நியதிப்படியோ பார்க்காமல்) எது உண்மையோ நியாயமோ தர்மமோ அதன் அடிப்படையிலான | moral |
தாரகை | நட்சத்திரம் | star |
தாரதம்மியம் | ஏற்றத்தாழ்வு | difference |
தாரம் | மனைவி | wife |
-தாரர் | ஒன்றை உடையவர், வைத்திருப்பவர், செய்பவர் முதலிய பொருள்களைத் தரும் வகையில் பெயர்ச்சொற்களோடு இணைக்கப்படும் விகுதி | a suffix added to nouns to indicate the possessor, doer, holder, etc குத்தகைதாரர்/ குடும்ப அட்டைதாரர்/ விண்ணப்பதாரர் |
தாரா | உருவத்தில் குள்ளமாக இருக்கும் வாத்து | cotton teal |
தாராளம் | (கொடுப்பதில்) சிக்கனமற்ற தன்மை | lavishness |
தாரை1 | ஊதக் கூடிய பகுதி குறுகியும் ஒலி வெளிவரும் பகுதி அகன்றும் இடைப்பகுதி மேல் நோக்கி நீண்டு வளைந்தும் காணப்படும் குழல் வடிவ உலோக வாத்தியக் கருவி | long brass trumpet |
தாரை2 | (நீர், கண்ணீர் முதலியவற்றின்) கம்பி போன்ற ஒழுக்கு | (of water, tears) stream |
தாரைவார் | (திருமணத்தில் மகளை அல்லது ஒரு பொருளைத் தானம் செய்யும்போது) கைகளில் நீரை வார்த்து ஒப்படைத்தல் | offer |
தாலாட்டு1 | (குழந்தையைத் தூங்கவைப்பதற்காக) தாலாட்டுப் பாடுதல் | rock (a child) singing lullabies |
தாலாட்டு2 | குழந்தையைத் தூங்கவைப்பதற்காக இனிய மெட்டுடன் பாடும் (நாட்டுப்புற அல்லது அந்தப் பாணியில் எழுதப்பட்ட) பாடல் | lullaby (song) |
தாலிப்பொட்டு | தாலிச் சங்கிலியில் அல்லது கயிற்றில் கோக்கப்படும் மங்கல உருவம் பதிக்கப்பட்ட வட்டத் தகடு | coin shaped structure impressed with holy figures which is strung to the nuptial chain |
தாலு(க்)கா | மாவட்டத்தின் உட்பிரிவு | subdivision of a district |
தாவங்கட்டை | முகவாய் | chin |
தாவணி1 | (இளம் பெண்கள்) மார்பில் அணிந்துகொள்ளும் ஒரு சுற்றே வரக் கூடிய, சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை | upper garment (worn by young girls) over the skirt, lengthwise less than half a saree |
தாவர உண்ணி | தாவரங்களை உணவாக உண்ணும் உயிரினம் | herbivore |
தாவர எண்ணெய் | தேங்காய், கடலை, எள் முதலியவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் | oil extracted from coconut, groundnut, etc |
தாவரம் | நிலத்தில் வேர்விட்டு அல்லது நீரில் மிதந்து தண்டோடும் இலைகளோடும் வளர்வது | plant |
தாவரவியல் | தாவரங்களைப்பற்றி விவரிக்கும் அறிவியல் துறை | botany |
தாவரவியல் பூங்கா | (அரிதாகக் காணப்படுபவை உட்பட) பல வகையான தாவரங்கள் காட்சிக்காக வளர்க்கப்பட்டுள்ள இடம் | botanical garden |
தாவா | (பெரும்பாலும் நாடுகள், மாநிலங்கள் இவற்றிற்கு இடையில்) பிணக்கு | dispute (mostly between countries, states, etc.) |
தாவு1 | (கீழிருந்து மேலாகவோ இருந்த இடத்திலிருந்து மற்றோரிடத்துக்கோ) உந்திப் பாய்தல் | leap |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
