Tamil To Tamil & English Dictionary
Tamil Word | Tamil Meaning | English Meaning |
துருவநட்சத்திரம் | வானத்தில் வடக்குத் திசையில் தெரியும் ஒரு பிரகாசமான நட்சத்திரம் | pole star |
துருவம் | பூமியின் வடக்கு அல்லது தெற்கு முனை | (north or south) pole |
துருவல் | (தேங்காய், கேரட் முதலியவற்றிலிருந்து) துருவி எடுக்கப்பட்ட மெல்லிய துகள்கள் | fine scrapings (of coconut, carrot, etc obtained by grating) |
துருவு | (தேங்காய்ப் பருப்பு, கேரட் முதலியவற்றை) தேய்த்து மெல்லிய துகள்களாக விழச்செய்தல் | grate (coconut kernel, carrot, etc.) |
துரை | ஐரோப்பியரைக் குறிப்பிடும் சொல் | word used (formerly) to refer to a European |
துரைசாணி | துரை என்பதன் பெண்பால் | feminine of துரை |
துரைத்தனம் | ஆங்கிலேயர் நடத்திய ஆட்சி | British rule or government |
துரோகம் | (தன்னை நம்பும் ஒருவரின்) நம்பிக்கைக்கும் நலனுக்கும் மாறாக அல்லது எதிராகச் செய்யும் செயல் | betrayal |
துரோகி | காட்டிக்கொடுப்பவன் | traitor |
துல்லியம் | தவறோ குறையோ இல்லாதது | accuracy |
துலக்கம் | (ஒன்றை மற்றவற்றிலிருந்து) வேறுபடுத்தும் வெளிப்படை | obviousness |
துலக்கு | (பற்களை) சுத்தம்செய்தல்(பாத்திரத்தை) (அழுக்கு நீக்கி) பளிச்சிடச்செய்தல் | brush (the teeth) |
துலா | (பெரிய) தராசு | (large) balance |
துலாபாரம் | ஒருவரைத் தராசின் ஒரு தட்டில் அமரச்செய்து மறு தட்டில் மதிப்புடைய பொருள்களை அவருடைய எடைக்குச் சமமாக வைத்துக் காணிக்கை செலுத்துதல் | offering made to god by a person weighing himself against valuable articles |
துலாம் | தராசைக் குறியீட்டு வடிவமாக உடைய ஏழாவது ராசி | seventh constellation of the zodiac having the balance as its sign |
துலாம்பரம் | வெளிப்படை | clearness |
துவக்கப் பள்ளி | ஆரம்பப் பள்ளி | primary school |
துவக்கம் | தொடக்கம் | beginning |
துவக்கு1 | தொடங்குதல் | begin |
துவக்கு2 | துப்பாக்கி | gun |
துவங்கு | தொடங்குதல் | commence |
துவட்டு1 | (உடலில் உள்ள ஈரத்தைத் துணியால்) அழுத்தித் துடைத்தல் | dry (the body with a towel) |
துவட்டு2 | (காய்கறி, கீரை போன்றவற்றை) வதக்குதல் | fry |
துவம்சம் | அழிவு | (total) destruction |
துவர்1 | துவர்ப்புச் சுவை கொண்டிருத்தல் | have the taste of astringency |
துவர்2 | துவர்ப்பு | astringent taste |
துவர்ப்பு | பாக்கு, வாழைப்பூப் போன்றவற்றை உண்ணும்போது உணரப்படும் சுவை | astringent taste |
துவரம்பருப்பு | (சாம்பாருக்குப் பயன்படுத்தும்) உடைத்துத் தோல் நீக்கிய மஞ்சள் நிறப் பருப்பு | broken pigeon pea |
துவரம்பொட்டு | (மாட்டிற்கு உணவாகப் பயன்படக் கூடிய) துவரையின் புறத்தோல் | pod (seed-case) of the pigeon pea (used as cattle feed) |
துவரை | மெல்லிய சிவப்பு நிறத் தோல் மூடிய சற்றே உருண்டையான தானியம் | pigeon pea |
துவஜஸ்தம்பம் | (கோயிலில்) கொடிமரம் | flagstaff (in a temple) |
துவாதசி | (ஏகாதசிக்கு அடுத்த நாள் வரும்) பன்னிரண்டாவது திதி | 12th day of the lunar fortnight |
துவாபரம் | (புராணத்தில்) நான்கு யுகங்களுள் மூன்றாவது யுகம் | (in purana) the third of the four aeons |
துவாய் | (துடைக்கும்) துண்டு | towel |
துவாரபாலகர் | கோயில் வாயிலின் இரு புறத்திலும் அமைக்கப்பட்டிருக்கும் காவல் தெய்வம் | images on either side of the entrance to the sanctum sanctorum of temples, supposed to act as sentries |
துவாரம் | (பெரும்பாலும் இயற்கையாகத் தரை, சுவர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் அல்லது உடலின் உறுப்புகளில் அமைந்திருக்கும்) துளை | (natural) hole |
துவாலை | இழைகள் மேலெழுந்தாற்போலக் காணப்படும் நெருக்கமாக நெய்யப்பட்ட துண்டு | a towel with a fluffy surface |
துவேஷம் | பகை | enmity |
துவை1 | (நெற் பயிரின் தாள் மிதிக்கப்பட்டு) துவளுதல்/(மாவு முதலியவை) குழைதல் | (of sheaves of paddy) become soft (when trodden)/(of soaked rice, etc.) acquire the right consistency (in grinding) |
துவை2 | (துணிகளை அடித்து) தூய்மைசெய்தல் | wash (the clothes by beating against a hard surface) |
துவைதம் | ஆன்மாவும் இறைவனும் இரண்டு என்னும் நிலை நீங்கி ஒன்று என்னும் நிலையை அடைவதில்லை என்றும் இரண்டும் இரண்டாகவே இருக்கும் என்றும் கூறும் தத்துவக் கொள்கை | the doctrine of duality |
துவையல் | தேங்காய், இஞ்சி, கறிவேப்பிலை முதலியவற்றில் ஏதோவொன்றுடன் மிளகாய், உப்பு முதலியவை கலந்து அரைத்து (பெரும்பாலும் தாளிக்காமல்) செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி | a kind of strong relish prepared by adding paste of chilli to coconut, ginger, curry leaf, or to similar things |
துளசி | (வைணவக் கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும்) காரச் சுவையும் மணமும் கொண்ட சிறு இலை | basil (considered sacred in worship) |
துளசிமாடம் | (வீட்டில் வழிபாட்டிற்காக) துளசிச் செடி வளர்க்கப்பட்டிருக்கும் தொட்டி போன்ற மேற்பகுதியுடைய மேடை | basil plant on a raised platform (for worship) |
துளிர்1 | (மரம், செடி முதலியவற்றில்) இலை தோன்றுதல் | put forth tender leaves, shoots, etc/sprout |
துளிர்2 | தளிர் | sprout |
துளும்பு | தளும்புதல் | brim |
துளை1 | (ஒன்று) சிறு வழி உண்டாக்கி உள்ளே செல்லுதல் | bore |
துளை2 | (பெரும்பாலும் வட்ட வடிவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும்) சிறிய இடைவெளி அல்லது திறப்பு | a hole (open at either end) |
துற | (பதவி, பாசம் முதலியவற்றை வேண்டாம் என்று) நீக்குதல் | renounce (worldly possessions, attachments) |
துறட்டி | மேல் முனையில் கொக்கி போன்ற சாதனம் பொருத்தப்பட்ட நீண்ட கம்பு | pole fixed with a hook or hook-like thing (to pluck fruit, etc.) |
துறவறம் | உலகப் பற்றை விடுத்த தவ வாழ்வு | ascetic life |
துறவி | பற்று, பாசம் முதலியவற்றை விடுத்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர் | one who has renounced worldly things and has taken to spiritual life |
துறவு | துறவறம் | renunciation |
துறை1 | வகைப்படுத்தப்பட்ட பகுப்பு அல்லது பிரிவு | branch |
துறை2 | ஆறு, குளம் போன்றவற்றில் இறங்குவதற்கு ஏற்ற வகையில் படிகளுடன் அமைந்திருக்கும் இடம் | flight of steps (leading to water from the bank of a river, pond, etc.) |
துறைமுகம் | (கப்பல் முதலியவை) கரையோரத்தில் வந்து நிற்பதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு | harbour |
துறைவழக்கு | (பெரும்பாலும் கலைச்சொல்லாக) ஒரு குறிப்பிட்ட துறையில் பயன்படுத்தும் (பொது மொழியிலிருந்து வேறுபாடுடைய) மொழி | register |
துன்பம் | மனத்துக்கு மகிழ்வைத் தராத உணர்வு | misery |
துன்பியல் | (நாடகம், புதினம் முதலியவற்றில்) துன்ப முடிவைக் கொண்டது | (of literature) tragedy |
துன்புறு | துன்பத்துக்கு உள்ளாதல் | suffer (pain, misery, etc.) |
துன்புறுத்து | துன்பத்துக்கு உள்ளாக்குதல் | cause suffering |
துன்மார்க்கம் | முறை தவறிய நெறி | evil ways |
துஷ்பிரச்சாரம் | தவறான அபிப்பிராயம் ஏற்படுத்தப் பொய்யான தகவல்களைப் பரப்பிச் செய்யப்படும் பிரச்சாரம் | false propaganda |
தூக்கக் கலக்கம் | தூக்கத்திலிருந்து விடுபடாத அல்லது தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை | state of being not fully awake |
தூக்கணம் | தொங்கட்டான் | ear ornament that is let to hang from the ear stud |
தூக்கணாங்குருவி | (மெல்லிய நாரால் சிறுசிறு அறைகளைக் கொண்டதாகத் தொங்கும் கூட்டைக் கட்டும்) சிறிய சாம்பல் நிறப் பறவை | weaver bird (which builds hanging nests) |
தூக்கம் | (பெரும்பாலும் இரவில்) கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலை | sleep |
தூக்கல் | (ஒன்று மட்டும்) உணரத்தக்க வகையில் கூடுதலாக இருப்பது | (an) excess |
தூக்கி | (பிடி, கொடு போன்ற சில வினைகளோடு வரும்போது) உயரத்தில் செல்லுமாறு | (hold, throw, etc.) up |
தூக்கிக்கொடு | (கேள்வி கேட்காமல், தயக்கம் இல்லாமல் கேட்டதை) உடனடியாகத் தருதல் | gift away |
தூக்கிச்சாப்பிடு | (சிறப்பில், முக்கியத்துவத்தில் மற்றவர் அல்லது மற்றது) ஒன்றும் இல்லை என்னும்படி மிஞ்சுதல் | eclipse |
தூக்கிட்டு | தூக்குப்போட்டு | (commit suicide) by hanging |
தூக்கித்தூக்கிப்போடு | (மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும்போது வண்டி பயணம் செய்பவரை) இருக்கையில் உட்காரவிடாமல் ஆட்டுதல் | jolt (while travelling on a bad road) |
தூக்கிநிறுத்து | (வியாபாரம், அரசியல் முதலியவற்றில்) சரிவு நிலையைத் தடுத்து ஒரு நிலைக்குக் கொண்டுவருதல் | bolster |
தூக்கியெறி | (எந்த வித மதிப்பும் இல்லாமல்) உடனடியாக நீக்குதல் அல்லது அகற்றிவிடுதல் | overthrow |
தூக்கியெறிந்து பேசு | எடுத்தெறிந்து பேசுதல் | talk insolently |
தூக்கிவாரிப்போடு | (பெரும்பாலும் இறந்தகால வடிவங்களில்) (ஒரு நிகழ்ச்சியின் அல்லது செய்தியின்) எதிர்பாராத கடுமையான தன்மையால் அதிர்ச்சி அடைதல் | be startled |
தூக்கு3 | மேற்புறம் வளைவான பிடி உள்ள உருண்டை வடிவச் சிறு பாத்திரம் | a vessel with an arch-shaped handle |
தூக்குக் கயிறு | (கழுத்தை இறுக்கிக் கொல்லும்) சுருக்கு போடப்பட்ட கயிறு | rope with a sling |
தூக்குக்குண்டு | நூற்குண்டு | plumb line |
தூக்குத்தண்டனை | தூக்கிலிட்டுக் கொல்லுமாறு (நீதிமன்றம்) வழங்கும் தண்டனை | sentence of death by hanging |
தூக்குப்பாலம் | (வழிவிடுவதற்காக) நடுவில் பிரிந்து உயரே எழும்பிப் பின் இணையக் கூடிய பாலம் | drawbridge |
தூக்குப்போடு | (உயிர்விட) தூக்குக் கயிற்றில் தொங்குதல் | hang (oneself) |
தூக்குமரம் | (தூக்குத்தண்டனையை நிறைவேற்றும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள) தூக்குக் கயிறு கட்டப்பட்டுள்ள மரச் சட்டம் | gallows |
தூக்குமேடை | தூக்குத்தண்டனை நிறைவேற்றும் இடம் | platform with gallows |
தூக்குவாளி | (சாம்பார், ரசம் முதலியவற்றைப் பரிமாறுவதற்குப் பயன்படுகிற) வாளி போன்ற அமைப்புடைய சிறிய பாத்திரம் | small bucket-like vessel for serving sauce, etc (at wedding dinners, etc.) |
தூங்கிவழி | தூக்கக் கலக்கத்துடன் காணப்படுதல் | be sleepy |
தூங்கு | (ஓய்வெடுக்க) தூக்கம் கொள்ளுதல் | sleep |
தூங்குமூஞ்சி | (செயலில்) சுறுசுறுப்புக் காட்டாமல் அசிரத்தையாக இருப்பவன் | one who is slothful |
தூங்குமூஞ்சி மரம் | மாலை நேரத்தில் கண்மூடித் தூங்குவது போலக் கீழ்நோக்கி மடியும் இலைகளைக் கொண்ட ஒரு வகைப் பெரிய மரம் | rain tree |
தூசி | (காற்றில் பறந்து வரும்) சிறு துகள்(மண்) புழுதி | small particle |
தூசிதும்பு | தூசியும் தூசி போன்ற பிறவும் | dust and the like |
தூண் | (கட்டடம், பாலம் முதலியவற்றில்) மேல்பகுதியைத் தாங்கி நிற்கும் செங்குத்தான அமைப்பு | pillar |
தூண்டில் | (மீன் பிடிக்கப் பயன்படும்) தக்கை இணைக்கப்பட்ட, உறுதியான இழையின் நுனியில் கொக்கி போன்ற இரும்பு முள்ளையுடைய நீண்ட கோல் | fishing rod |
தூண்டில் முள் | (புழு, உணவுத் துண்டு போன்றவற்றைத் தகுந்த வகையில் செருக) தூண்டில் இழையின் முனையில் இணைக்கப்பட்டுள்ள சிறு இரும்புக் கொக்கி | fish hook |
தூண்டிவிடு | எதிராகச் செயல்படும்படி செய்தல் | instigate |
தூண்டு | (எரிவதற்காக விளக்கின் திரியை) முன் தள்ளுதல் | raise or draw out (the wick so that it may burn bright) |
தூண்டுகோல் | (ஒன்று நிகழ்வதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்கு) எழுச்சி தருவது | motivating force |
தூதர் | ஒரு நாட்டின் பிரதிநிதியாக மற்றொரு நாட்டிற்கு அனுப்பப்பட்ட அரசு உயர் அதிகாரி | ambassador |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
