Tamil To Tamil & English Dictionary
Tamil Word | Tamil Meaning | English Meaning |
தேடித்தா | (புகழ், வெற்றி போன்றவற்றை) கிடைக்கச்செய்தல் | earn (fame, victory, etc for s |
தேடு | (முன்னே இல்லாத ஒருவரை அல்லது தேவைப்படுகிற ஒன்றை அலைந்து விசாரித்து) கண்டறிய முயலுதல் | search |
தேத்தண்ணீர் | தேநீர் | tea |
தேதி | (மாதத்தில்) குறிப்பிட்ட எண்ணுடைய நாள் | date |
தேநீர் | தேயிலைத் தூளைக் கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி (பாலும் சர்க்கரையும் கலந்து) தயாரிக்கும் பானம் | tea |
தேநீர் விருந்து | இனிப்பு, காரம் ஆகியவற்றுடன் தேநீர் அல்லது காப்பி தந்து அளிக்கப்படும் சிறு விருந்து | tea party |
தேம்பு | (அழும்போது) மூச்சுத் தடைபட்டு ஒலியுடன் வெளிப்படுதல் | sob |
தேமல் | (உடலில் பெரும்பாலும் கழுத்து, மார்பு, முதுகு முதலிய பகுதிகளில் ஏற்படும்) இயல்பான தோலின் நிறத்திலிருந்து வேறுபட்டுச் சிறிது வெள்ளையாகக் காணப்படும் திட்டு | pale white patch on the skin (of the body) |
தேய்1 | (ஒரு பொருள் மற்றொன்றின் மீது) உரசுதல் | rub |
தேய்2 | (ஒன்றை மற்றொன்றின் மீது) அழுத்தி முன்னும் பின்னுமாக இழுத்தல் | rub |
தேய்பிறை | (பௌர்ணமிக்கு மறுநாளிலிருந்து அமாவாசைக்கு முன்தினம்வரை) நிலவு படிப்படியாகத் தன்னுடைய வடிவத்தில் குறைந்து காணப்படும் தோற்றம்/நிலவு மேற்குறிப்பிட்ட வடிவத்தில் தோற்றமளிக்கும் காலம் | waning moon/dark fortnight |
தேய்மானம் | ஒரு பொருள் மற்றொரு பொருளில் உராய்வதால் அல்லது தேய்க்கப்படுவதால் பொருளுக்கு ஏற்படும் எடைக்குறைவு | loss (of weight) |
தேயிலை | தேநீர் தயாரிக்கப் பயன்படும் பதப்படுத்தப்பட்ட இலை | tea-leaf |
தேர்1 | (ஒரு துறையில்) நுணுக்கமான அறிவும் திறமையும் பெற்றிருத்தல் | attain proficiency |
தேர்2 | உற்சவ மூர்த்தியை வைத்து நீண்ட வடக்கயிற்றைக் கொண்டு இழுத்துச் செல்லப்படும், கோபுரம் போன்ற மேல் அமைப்பையும் பெரிய சக்கரங்களையும் கொண்ட கோயில் வாகனம் | temple car |
தேர்ச்சி | (-ஆன) (ஒரு துறையில்) பயிற்சிமூலம் பெறும் நுணுக்கமான அறிவு அல்லது திறமை | proficiency |
தேர்தல் | (ஓர் அரசை அல்லது அமைப்பை நடத்துவதற்காக) பிரதிநிதிகளை அல்லது பதவிக்கு உரியவரை வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி | election (of representatives to form a government, etc.) |
தேர்ந்த | (கைத்தொழிலில்) திறமை வாய்ந்த | (in crafts) highly skilled |
தேர்ந்தெடு | (ஒரு பயனுக்கென அல்லது தகுதிக்கென) தரம் அறிந்து பிரித்தல்(பலவற்றுள் ஒன்றை) வேண்டியது எனத் தீர்மானித்தல் | choose |
தேர்ப்பாகன் | தேர் ஓட்டும் பணி புரிபவன் | driver of a chariot |
தேர்முட்டி | (கோயில்) தேரை நிலையாக நிறுத்திவைக்கும் இடம் | station for a temple car |
தேர்வர் | தேர்வு எழுதுபவர் | examinee |
தேர்வாணைக் குழு | அரசு வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புடைய, அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு | public service commission (to select employees for government service) |
தேர்வு | கல்வி நிறுவனங்களில் அல்லது தொழில் நிறுவனங்களில் ஒருவருடைய திறமை, படிப்பு முதலியவற்றைச் சோதித்துப் பார்க்கும் முறை | examination (in academic institutions) |
தேர்வுநிலை | குறிப்பிட்ட வருடங்கள் பணியாற்றியவருக்கு அரசுப் பணியில் அதே பதவியில் அதிக ஊதியம் தந்து வழங்கும் உயர்நிலை/வருமான அடிப்படையில் நகராட்சி, பேரூராட்சி போன்றவற்றுக்கு வழங்கும் உயர்நிலை | selection grade (as related to a post entitling the holder to a higher salary or to municipalities, etc on the basis of the higher revenue raised) |
தேரை1 | (பெரும்பாலும் கல் இடுக்குகளில் காணப்படும்) நீர்க்கசிவான தோலை உடைய ஒரு வகைத் தவளை | tree toad |
தேரை2 | தேங்காயில் ஏற்படும் ஒரு வகை நோய் | a blight that affects coconut |
தேரோட்டம் | தேர்த் திருவிழா | temple festival in which the temple car is drawn along |
தேவ ஆவி | பரிசுத்த ஆவி | holy Spirit |
தேவகன்னி | என்றும் இளமை மாறாமல் இருப்பதாகக் கூறப்படும் தேவலோகப் பெண் | celestial damsel |
தேவ குமாரன் | தேவனின் குமாரனாகிய இயேசு | jesus Christ, the Son of God |
தேவட்டை | எழுத்து அழிந்த காசு | disfigured coin (which is no longer in circulation) |
தேவடியாள் | விபச்சாரி | whore |
தேவதாசி | (முன்னர்) கோயிலில் நடனமாடுவதைக் குலத் தொழிலாகக் கொண்ட பெண் | (formerly) dancing girl attached to a temple |
தேவதாரு | மலைப் பிரதேசங்களில் உயர்ந்து வளர்ந்து கிளைகள் பரப்பிக் கொத்துக்கொத்தாகப் பூக்கள் பூக்கும் ஒரு பெரிய மரம் | red cedar |
தேவதை | அழகிய வானுலகப் பெண் | nymph |
தேவர் | (புராணத்தில்) சொர்க்கலோகத்தில் வாழும், இறவாத்தன்மை பெற்றவர்கள் | (in puranas) heavenly immortals |
தேவலாம்/தேவலை | (மோசம் என்று கருதப்படுகிற இரண்டில் அல்லது இருவரில்) ஏற்கத் தகுந்தது/ஏற்கத் தகுந்தவர் | (of two unsatisfactory alternatives, etc one the) more acceptable |
தேவஸ்தானம் | (பெரிய) கோயிலின் நிர்வாக அமைப்பு | governing body of a (big) temple |
தேவாங்கு | தட்டையான முகத்தில் பெரிய கண்களை உடைய, வால் இல்லாத, குரங்கைப் போன்ற சிறிய விலங்கு | slender loris |
தேவாமிர்தம் | (தேவர்களுடைய உணவாகிய) கிடைப்பதற்கு அரிய அமிர்தம் | the food of the gods |
தேவாலயம் | கிறித்தவர்களின் கோயில் | church |
தேவி | பெண் தெய்வம் | goddess |
தேவை | (-ஆன) இல்லாததை அல்லது குறைவாக இருப்பதை நிரப்ப வேண்டிய நிலை | need |
தேள் | இடுக்கி போன்று பிளவுள்ள முன்னங்கால்களையும் விஷமுடைய கொடுக்கையும் உடைய கரு நிற அல்லது செந்நிற உயிரினம் | scorpion |
தேற்று | (வருந்துபவரை) அமைதியடையச்செய்தல் | console |
தேறு | (தேர்வு, பரிசீலனை ஆகியவற்றில்) தகுதியுடையதாகத் தேர்ந்தெடுக்கப்படுதல் | pass (an examination) |
தேறுதல் | (வருத்தத்திலிருந்து, துக்கத்திலிருந்து மீளும் வகையில் பிறர் சொல்லும்) ஆறுதல் | consolation |
தேன் | பூக்களிலிருந்து தேனீக்கள் சேகரிக்கும் இனிமையான திரவம் | honey |
தேன்நிலவு | புதுமணத் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காகச் செல்லும் சுற்றுலா | honeymoon |
தேன் பூச்சி | தேனீ | honeybee |
தேன் மெழுகு | மரச் சாமான்களுக்கு மெருகேற்றுதல், மெழுகுவர்த்தி செய்தல் முதலியவற்றுக்குப் பயன்படும், தேனடையிலிருந்து எடுக்கும் மஞ்சள் நிற மெழுகு | beeswax |
தேனடை | தேனைச் சேமித்து வைப்பதற்காகத் தேனீக்கள் தங்கள் உடலில் உள்ள மெழுகினால் பல அறைகள் கொண்டதாக அமைக்கும் கூடு | honeycomb |
தேனிரும்பு | பிற தனிமங்களின் கலப்பில்லாத மிக உறுதியான இரும்பு | wrought iron |
தேனீ | தேனைச் சேகரிப்பதும் கூட்டமாக வாழ்வதும் கொட்டக் கூடியதுமான ஒரு வகைப் பூச்சி | honeybee |
தை1 | (துணி முதலியவற்றில்) ஊசியை இரு புறமும் மாறிமாறிச் செலுத்தி நூலை இழுத்து இணைத்தல் அல்லது பொருத்துதல் | stitch |
தை2 | பத்தாவது தமிழ் மாதத்தின் பெயர் | the name of the tenth Tamil month, i |
தையல்1 | தைக்கப்பட்ட ஆடைகளில் உள்ள நூல் பின்னல்(துணி, தோல் போன்றவற்றில் இரு துண்டுகளை அல்லது கிழிசலை) இணைத்திருக்கும் நூல் இணைப்பு | stitching |
தையல்2 | பெண் | woman |
தையல் இயந்திரம் | ஆடை முதலியவற்றைத் தைப்பதற்கான இயந்திரம் | sewing machine |
தையல் இலை | (உணவுப் பொருள்களை வைப்பதற்கு) ஈர்க்குச்சி கொண்டு ஒன்றோடு ஒன்று இணைத்த சில மரங்களின் காய்ந்த இலைகள் | dry broad leaves of certain trees joined together by thin ribs of palm (used for serving food, etc.) |
தையல்காரன் | ஆடை தைக்கும் தொழில் செய்பவன் | tailor |
தைரியம் | பயம் இல்லாத தன்மை(மனத்தில்) துணிவு | courage |
தைலம் | (மேல்பூச்சு மருந்தாக அல்லது வாசனைப் பொருளாகப் பயன்படுத்த) சில தாவரங்களிலிருந்தோ சில விலங்குகளிலிருந்தோ எடுத்துப் பக்குவப்படுத்தித் தயாரிக்கப்படும் எண்ணெய் | oil-like extract from certain flora and fauna |
தொக்கு1 | (உணவோடு சேர்த்து உண்ணப் பயன்படும்) மாங்காய் முதலியவற்றைத் துருவி எண்ணெய்யில் வதக்கிக் காரம் சேர்த்துத் தயாரிக்கப்படும் தொடுகறி | strong relish made from vegetables and mixed with tamarind, chillies, etc மாங்காய்த் தொக்கு/ தக்காளித் தொக்கு |
தொக்கு2 | இளப்பம் | butt (of ridicule) |
தொக்கை | தடிமன் | fat |
தொகு | பொதுவாக உள்ள அம்சத்தை அடிப்படையாகக்கொண்டு சேகரித்தல் | collect |
தொகுதி | (பல கதைகளையோ கட்டுரைகளையோ) தொகுத்து உருவாக்கப்பட்டது | collection (of essays, stories, etc.) |
தொகுப்பு | ஒன்றாகத் தொகுக்கப்பட்டது அல்லது மொத்தமாகச் சேர்க்கப்பட்டது | collection |
தொகுப்பூதியம் | சில வகைப் பணியாளருக்கு அடிப்படைச் சம்பளமோ அகவிலைப்படியோ இல்லாமல் மொத்தமாக அளிக்கப்படும் (மாத) ஊதியம் | consolidated pay (without the distinction of basic pay, allowances, etc.) |
தொகை | குறிப்பிட்ட அளவு பணம் | amount |
தொங்கட்டான் | தோட்டோடு சேர்த்துத் தொங்கவிடும் காதணி | ornament attached to and suspended from the ear stud |
தொங்கல்1 | தொங்கட்டான் | ornament suspended from the ear stud |
தொங்கல்2 | (நூல் முதலியவற்றின்) முனை(வரிசையில்) கடைசி | (of thread, etc.) end |
தொங்கு | மேல் முனையில் மட்டும் பிடிப்புடன் இருந்து அல்லது ஒன்றில் மாட்டப்பட்டுக் கீழ்நோக்கியவாறு இருத்தல் | hang |
தொங்குபாலம் | (ஆற்றின் குறுக்கே இடையில் தூண்கள் இல்லாமல் கட்டப்படும்) இரு நீண்ட கம்பிகளுக்கு இடையே தொங்கிக்கொண்டிருக்கும் பாலம் | suspension bridge |
தொட்டதற்கெல்லாம் | எடுத்ததற்கெல்லாம் | for each and everything |
தொட்டால்சுருங்கி | ஏதாவது ஒன்று தன் மீது படும்போது மடங்கிக் குவிந்துகொள்ளும் இலைகளை உடைய செடி | (the plant) touch-me-not |
தொட்டி1 | (நீர், எண்ணெய் போன்றவற்றை வைத்துக்கொள்ள உதவும்) மரம், சிமிண்டு போன்றவற்றால் சதுரம், செவ்வகம் போன்ற வடிவில் செய்யப்பட்ட கொள்கலன் | (water) trough |
-தொட்டி2 | பட்டி என்பதோடு இணைந்துவரும் சொல் | a word which occurs in combination with பட்டி |
தொட்டில் | தாங்கு கட்டைகளுக்கிடையே பக்கவாட்டில் ஆடக் கூடிய, குழந்தையைப் படுக்கவைக்கும் அமைப்பு | cradle |
தொட்டு1 | (குறிப்பிடப்படும் காலம்) தொடங்கி | beginning from |
தொட்டுக்கொள் | (சுவைக்காக உணவோடு ஊறுகாய், சட்னி போன்றவற்றை) சேர்த்து உண்ணுதல் | have |
தொடக்கப் பள்ளி | ஒன்று முதல் ஐந்து வகுப்புவரை உள்ள பள்ளிக்கூடம் | primary school |
தொடக்கம் | (காலத்தில்) தொடங்கிய முதல் நிலை | beginning |
தொடங்கிவை | (சிறப்பு நிகழ்ச்சிமூலம் மாநாடு, விற்பனை முதலியவற்றின்) முதல் கட்டப் பணியை நடைபெறச்செய்தல் | inaugurate |
தொடங்கு | (குறிப்பிட்ட ஒன்றைச் செய்ய அல்லது நிகழ்த்த) செயல்பாட்டில் இறங்குதல்/(ஒன்று நடைபெறுவதற்கான) சூழ்நிலை ஏற்படுதல் | begin |
தொடர்1 | (ஒரு செயல், நிலை முதலியவை முடிவு அடையாமல்) நீளுதல் | continue |
தொடர்2 | (வழக்கு) தொடுத்தல் | file (a suit) |
தொடர்3 | ஒன்றை அடுத்து ஒன்றாக அமையும் வரிசை | row |
தொடர் உண்ணாவிரதம் | குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருவர் அல்லது ஒரு குழு என்ற முறையில் இருந்து நடத்தும் உண்ணாவிரதம் | fasting in relay (by way of protest) |
தொடர் ஓட்டம் | ஓட்டத் தூரத்தின் நான்கில் ஒரு பகுதியை ஒருவர் கடந்த பிறகு தன் கையில் உள்ள கட்டையைத் தந்து மற்றவர் அந்த இடத்திலிருந்து ஓட்டத்தைத் தொடர்ந்து நிறைவேற்றும் ஓட்டப் போட்டி | relay race |
தொடர்கதை | (வார, மாதப் பத்திரிகைகளில்) பகுதிபகுதியாகத் தொடர்ந்து வெளியிடப்படும் நீண்ட கதை | serial (in a periodical) |
தொடர்ச்சி | இருக்க வேண்டிய வரிசையில் அல்லது முறையில் தொடர்ந்து இருப்பது | continuity |
தொடர்ச்சியாக | தொடர்ந்து | continuously |
தொடர்ந்து | இடைவிடாமல் | continuously |
தொடர்பாக/தொடர்பான | சம்பந்தமாக | in connection with/relating to |
தொடர்பு | (பிறப்பு, நட்பு, தொழில் முதலியவற்றால் ஏற்படும்) உறவு | contact |
தொடர்புகொள் | (தொலைபேசி, கடிதம் மூலமாக அல்லது நேரடியாக ஒருவரோடு) செய்திப் பரிமாற்றம் கொள்ள வழிஏற்படுத்துதல் | contact (through phone, letter, etc.) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
