English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
galvanometerகல்வனோமானி
galvanometerகல்வனோமானி
galvanoplastyமின்பிரிப்பூச்சுமானம்
மின்பிரி இயக்க மூலம் உலோகத்தின் மேல் மற்றோர் உலோகத்தினால் மேற்பூச்சிடும் முறை.
galvanoscopeகல்வனோகாட்டி
galvaprepகல்வாபிறேப்பு
gamagariteகமகரைற்று
gamba, gambadoசுர மண்டலில் நரப்பிசை ஒலி தரும்இசைமேளத் தடைப்புழை.
gambierபதச்சாறு
தோல் பதனிடுதலிற் பயன்படும் காரமும் உவர்ப்புமுள்ள மூலிகைச்செடிச் சாறு.
gambistசுரமண்டல் இசைக்கருவி வாசிப்பவர்.
gambitசதுரங்க ஆட்டத்திற் காலாட்களை வெட்டுக்கொடுத்து இலக்கிணை அடையும் ஆட்டத்தொடக்க முறை
தொடக்கச் செயற்கட்ட நடவடிக்கை.
gambleசூதாடு
சூதாட்டத்தில் ஈடுபடுதல்
gamblerசூதாடி
சூதாட்டங்களில் ஈடுபடுபவன்
gamblereசூதாடி
செயல்துறைகளில் சூதாட்டமாடுபவர்.
gamblingசூதாட்டம்
காசு வைத்துப் பந்தயம் கட்டி ஆடும் (சீட்டாட்டம், குதிரைப் பந்தயம் போன்ற) ஆட்டம்
gambloeசூதாட்டம்
இடருள்ள முயற்சி ஈடுபாடு
(வினை) சூதாடு
போரிலும் பணத்துறையிலும் பெருவெற்றிகளை அடைவதற்காகப் பேரிடர்ப்பாடுகளை மேற்கொள்
பெருவெற்றி நாடித் துணிவு முயற்சியில் ஈடுபடு.
gambogeமக்கி
மஞ்சள்வண்ணப் பொருளாகப் பயன்படும் மரப்பிசின் வகை.
gambolகுதியாட்டம்
துள்ளிவிளையாடல்
(வினை) துள்ளிவிளையாடு.
gameவிளையாட்டு
வேடிக்கை
ஆட்டமுழு நிகழ்ச்சி
போட்டி விளையாட்டு
சீட்டுவிளையாட்டிலும் வரிப்பந்தாட்டத்திலும் ஆட்டப்பிரிவு
ஆட்டத்தில் வெற்றிக்குரிய எண்ணிக்கதொகுதி
ஆட்டமுறைமை
வாணிகத்துறையில் ஆட்டத்துணைக்கருவிகலத் தொகுதி
வேட்டையாடப்பட்ட விலங்கு புள்ளினத்தின் தசை
தொடரப்பட்ட இலக்க
வளர்ப்பு அன்னத்திரன்
(பெ.) வேட்டைவிலங்கு புள்ளினத்துக்குரிய
சண்டைக்கோழிபோன்ற இயல்புடைய
ஆண்மையுடைய
வீரதீரப்பண்புடைய
செயற்கிளர்ச்சியுடைய
செயல்நடிப்புமிக்க
துடிப்பார்வமிக்க
செயல் விருப்பார்வமிக்க
(வினை) பணயம் வைத்தாடு
சூதாடு
சூதாடியிழ.
gameவிளையாட்டு
பொழுதுபோக்கிற்காகவும் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நிகழ்த்தப்படும், விதிமுறைகளை உடைய செயல்பாடு
game controllersவிளையாட்டுக் கட்டுப்படுத்திகள்
game theoryவிளையாட்டுக் கொள்கை
விளையாட்டுக் கொள்கை
game-actவிலங்கு-புள் வேட்டை உரிமை பற்றிய சட்டம்.
game-bagவேட்டையாளர் கொல்லப்பட்டவற்றைக் கொள்ளும் பை.
game-chickenசண்டைக்காகப் பயிற்றுவித்து வளர்க்கப்படும் கோழிக்குஞ்சு.
game-cockசண்டைச் சேவல்.
game-eggசண்டைக்கோழிக்காகத் தனிப்படப் பேணப்படும் முட்டை.
game-fowlசண்டைக்கோழி.
gamekeeperவேட்டைக்காட்டுக் காவலர்
பறவைகளைப் பயிற்றி வளர்ப்பதற்கும் திருட்டு வேட்டையாடுதலைத் தடுப்பதற்கும் அமர்த்தப்பட்ட பணியாளர்.
game-licenceவிலங்குகளை அல்லது புள்ளினங்களை வேட்டையாடவும் வாணிகம் செய்யவும் உரிய தனி இசைவுரிமை.
game-preserveவேட்டைக்காவற்காடு
வேட்டைக்காகச் சேகரித்துப் பாதுகாத்து வைக்கப்பட்ட விலங்கு பறவை இனமுள்ள நிலப்பரப்பு.
game-preserverவேட்டைக்காவற்கட்டு உரிமையாளர்
வேட்டை உரிமைச் சட்டங்களைச் செயற்படுத்தும் வேட்டைக் காட்டு உரிமையாளர்.
gamesபண்டை ரோமபுரியில் உடற்பயிற்சிப் பொதுக்காட்சிகள்
மற்போர் வாட்போர் அரங்குகள்
இசைநாடகக் காட்சிகள்
ஏய்ப்பு முறைகள்
சூழ்ச்சிமுறைகள்
தட்டிக் கழிப்பு முறைகள்.
gamesவிளையாட்டுக்கள்
games computerகணிப்பொறி விளையாட்டுகள்
gamesomeவிளையாட்டியல்பான
விளையாட்டு விருப்பமுள்ள.
gamesterசூதாடி.
gametangiumபாலணுப்பை
gameteபாலணு
இனப்பெருக்கவகையில் இருபால்களின் சார்பாகவும் இணைந்துகலந்து ஒன்றையொன்று பொலிவுபடுத்தும் பாலினச்சார்பான ஊன்மத் துகட்கூறு.
gameteபால் அணு
gametenantவேட்டையாடுவது மீன்பிடிப்பது முதலிய உரிமையுடைய நிலக் குத்தகையாளர்.
gametogenesisபுணரிப்பிறப்பு
இனச்செல் ஆக்கம்
gamin(பிர.) தெருக்கொடுக்கு.
gaming-houseசூதாடுமனை.
gaming-tableசூதாடு மேசை.
gammaகிரேக்க நெடுங்கணக்கில் மூன்றாவது எழுத்து
அந்துப்பூச்சி வகை.
gammaகாமா
gamma forming elementகாமா ஆகும்மூலகம்
gamma ironகாமா இரும்பு
gamma radiationகாமாக் கதிர்வீசல்
gamma ray thickness gaugeகாமாக்கதிர்வீக்கமானி
gamma raysகாமாக்கதிர்கள்
காமாக்கதிர்கள்
gamma raysகாமாக்கதிர்கள்
gammadionசுஹ்ஸ்திகை வகை.
gammagraphகாமா வரைகோடு
gammagraphyகாமாவரைகோட்டியல்
gammerநாட்டுப்புற வழக்கில் கிழவி.
gammonஉப்பிட்டு உலர்த்திய பன்றியின் பின்கால்விலா அடிப்பகுதி இறைச்சி
பன்றித்துடை இறைச்சி வற்றல்
புகைப்பதனமிட்ட அல்லது பதனப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி
(வினை) பன்றி இறைச்சியைப் பதனஞ்செய்து பக்குவப்படுத்து.
gamogenesisபாலிணைவுச்சார்பான இனப்பெருக்கம்.
gamopetalousபுறவிதழ் இணைவுடைய.
gamopetalousஅல்லி இணைந்த
gamosepalousபுல்லி இணைந்த
gamut(வர.) ஏழிசைத்தொகுதி
நிறைசுரத்தொகுதி
மக்களினத்தின் முழுச்சுரவட்டம்
காலப்பிரிவின் நிறைசுர வட்டம்
இடைநிலைக் காலச்சுரத் தொகுதி
இடைநிலைக்கால அடிச்சுரம்
குரல் இசைச்சுர முழு ஏற்றவிறக்க நிலை
இசைக்கருவி முழு எற்றவிறக்க வீச்சு
ஆற்றல் முழு எல்லை
செயல்திற முழுவீச்சு.
gamutவண்ணக் களம்
வண்ணக் களம்
gamyவேட்டைவிலங்கு புள்வனம் நிறைந்த
வேட்டைவிலங்கு புள்ளினங்கள் முழுச்சுவைப்பதம் பெறும்வரை பேணி வளர்க்கப்படும் நிலையுடைய.
ganderஆண் வாத்து
அறிவிலி
பேதை.
gander-partyஆண்கள் மட்டும் கூடி அளவளாவும் விருந்துக்கூட்டம்.
gandharvasகந்தர்வர்
(புராணத்தில்) தேவர்களுள் (இசையை விரும்பும்) ஒரு பிரிவினர்
gandhismகாந்தியம்
(மகாத்மா) காந்தி கடைப்பிடித்த கொள்கைகள்
gangதனிக்கும்பு
கூட்டுக்குழு
வேலையாள்களின் தொகுதி
குற்றம் செய்யும் நோக்கத்தோடு இயங்கும் அல்லது செல்லும் கும்பல்
விரும்பாத செயலில் ஈடுபடுங் குழு
ஒரே சமயத்தில் வேலை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருவிகலங்களின் தொகுதி
(வினை) விரும்பாத செயலில் ஈடுபடுவதற்காகக் கும்பு சேர்
குழுவுணர்ச்சியுடன் ஒன்றுபட்டு ஒத்தியங்கு
கருவி முதலியவற்றை ஒத்திசைவிக்க ஒழங்குபடுத்து.
gang softeningதிரள் மிருதுவாக்கம்
பரும்படிமென்மையாக்கல்
gang upஆள்சேர்
(படைக்கு அல்லது ஒரு தொழிற்சாலைக்கு) ஆட்கள் தேர்ந்தெடுத்தல்(பக்கத் துணையாக) ஆட்கள் திரட்டுதல்
gang-boardபடகில் ஏறியிறங்குவதற்குரிய பலகையாலான ஊடிணைப்பு வழி.
gangeதூண்டில் முனையை மென்கம்பி வரிந்து காப்பீடு செய்.
gangerகுழுமுதல்வர்
கும்புக் கண்கானி.
gangeticகங்கை ஆறு சார்ந்த.
gangetic plainகங்கைச் சமவெளி
gangliate, gangliatedநரம்பு முடிப்புகளுடைய
நரம்பு மையமான.
ganglingதளர்நிலையிற் கட்டப்பட்ட
தடுமாற்றமுள்ள கட்டுமானமுடைய.
ganglionநரப்புக்கணு
நரப்பு மண்டல மையப்பிழம்பு
மங்கிய சாம்பல்நிற மாப்பொருள் நிரம்பிய நரம்புமண்டல மையம்
ஆற்றல் மையம்
செயல் மையம்
உயிர் மையம்
முக்கிய கூறு.
ganglionநரம்பணுத்திரள்
ganglion-cell, ganglion-corpuscule, ganglionநரம்பு மையக் கருவணு.
ganglionicநரம்பு மையஞ் சார்ந்த
நரம்புக்கணுச் சார்ந்த.
gangmanதடகளப்பணியாள்
gangreneதரையழுலுடன் கூடிய உடலின் உட்கூற்றழிவு
மரத்துப்போதல்
(வினை) அழுகிக்கெட வை
மரத்துப்போ.
gangreneசதையழுகல்
gangsterகொள்ளைக்கூட்டத்தான்.
gangsterகாடையன்
வன்முறையில் இறங்குபவன்
gangueகனிப்பொருள் உலோகக் கலவையுள்ள பாறை.
gangueகாங்கு
கழிபொருள்
gangueகழிவு
கழிமம்
gangueகழிமம்
gangue mineralபயனிலிக் கனிமம்
gangwayஇருக்கைவரிசைகளின் ஊடாகச் செல்லும் இடைநெறி
கப்பல் ஏற்ற இறக்க இடைவழி
ஊடுவழி
சட்டமன்றப் பின்னிருக்கைகளுக்குச் செல்வதற்குரிய குறுக்கு ஊடுபாதை.
ganisterஉலை அடுப்புக்களில் உட்சுவராகப் பூசப்பயன்படும் நுண்மணல் கலந்த களிமண் வகை.
ganisterகனிஸ்தர்
gannnetவாத்துப்போன்ற கடற்பறவை வகை.
ganoidபளபளப்பும் வழவழப்பும் உடைய மீன் செதில்கள்
பளபளப்பும் வழவழப்பும் உடைய செதிகள் வாய்ந்த மீன்
(வினை)பளபளப்பும் வழவழப்பும் உடைய செதிகள் வாய்ந்த
பளபளப்பும் வழவழப்பும் உடைய.
ganoinமீன் செதில்களுக்குப் பளபளப்பைத் த சுண்ணச்சத்து.
gantlemanlikeநன்மகனுக்குச் சிறப்பியல்பான
நன்மகனுக்குகந்த
பெருந்தன்மையான
பண்பாளருக்குரிய.
gantryமிடா வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரத்தாலான நிலைதாங்கி
பாரந்தூக்கி-கைதட்டி முதலியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுசெல்லுவதற்குரிய அடிச்சட்டம்.
   Page 367 of 928    1 365 366 367 368 369 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil