iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 166 of 197

அலக்கொடுத்தல் ஊறு செய்தல்
அலக்கொடுப்பு ஊறு
அலங்க மலங்க திருதிருவென்று
அலங்கடை அல்லாதவிடத்து. ரழவலங்கடையே (தொல்.எழுத்.30)
அலங்கடை அல்லாதவிடத்து
அலங்கனாரி முத்துச்சிப்பி
அலங்கமலங்க பொறிகலங்க
அலங்கமலங்க (பார், விழி ஆகிய வினைகளுடன்) ஒன்றும் புரியாமல்
அலங்கம் அரண் கொத்தளம் ஆற்றிடைக்குறை
அலங்கரணம் ஒப்பனை
அலங்கரி அழகுபடுத்துதல்
அலங்கரித்தல் அழகுபடுத்துதல்
அலங்கரிப்பு சிங்காரிப்பு
அலங்கலம் அசைதல்
அலங்கல் பூமாலை மயிர்ச்சூட்டு மாலை தளிர் அசையுங்கதிர் துளசி ஒழுங்கு ஒளி அசைதல் மனங்கலங்கல்
அலங்கார மீன் அலங்காரத்திற்காகக் கண்ணாடித் தொட்டிகளில் வளர்க்கப்படும் சிறிய மீன்
அலங்காரசாத்திரம் அணியிலக்கண நூல்
அலங்காரத்திருவிழா விசேடத் திருவிழா
அலங்காரபஞ்சகம் ஒரு பிரபந்தம்
அலங்காரபஞ்சகம் வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சந்தவிருத்தம் ஆகிய இவ்வைந்தும் அந்தாதியாக வரப் பாடப்படும் நூல்
அலங்காரப்படுத்தல் ஒப்பனை செய்தல்
அலங்காரப்படுத்துதல் சிங்காரித்தல்
அலங்காரப்பிரியன் விஷ்ணு
அலங்காரப்பேச்சு சிங்காரப்பேச்சு புனைவுரை
அலங்காரம் அணி ஒப்பனை
அலங்காரம் சிங்காரம் அழகு அணிகலன் செய்யுள் அணி சங்கீத உறுப்புவகை பெருமாள் கோயில்களில் படைக்கப்படும் சோறு, குழம்பு முதலிய உணவு வெடிகாரம்
அலங்காரம் அலங்கரிக்கப்பட்ட நிலை
அலங்காரி சற்று மிகையாக அலங்காரம் செய்து கொள்ளும் பெண்
அலங்காரி அழகு செய்யப்பெற்றவள்
அலங்காரி சற்று மிகையாக ஒப்பனை செய்துகொண்ட பெண்
அலங்காரித்தல் அலங்கரித்தல்
அலங்கியம் கடத்தற்கரியது
அலங்கிருதம் சிங்காரம்
அலங்கிருதி சிங்காரம்
அலங்குதல் அசைதல் மனம் தத்தளித்தல் இரங்குதல் ஒளிசெய்தல்
அலங்கை துளசி
அலங்கோலம் சீர்குலைவு தாறுமாறான தோற்றம்
அலங்கோலம் (பொருள்களின்) சீர்குலைவு(ஆடை, அலங்காரத்தில்) தாறுமாறான தோற்றம்
அலசகம் உதரவாயு சோம்பு
அலசடி துன்பம்
அலசத்துவம் சோம்பு
அலசம் ஒரு மரம் சோம்பு மந்தம் கால்விரல்களுக்கு இடையே உண்டாகும் சேற்றுப்புண்
அலசல் அடர்த்தியின்மை நெருக்கமின்மை
அலசல் இழை விலகியிருக்கை இழை நெருக்கமில்லாத ஆடை சிதறுண்ட பொருள் பயனற்ற வேலை சோம்பல்
அலசல்1 அடர்த்தியின்மை
அலசல்2 பல்வேறு அம்சங்களையும் அடக்கிய விளக்கம்
அலசி நத்தைவகை
அலசு (அழுக்கு நீங்குவதற்காக பாத்திரம் துணி போன்றவற்றை) நீரில் கழுவுதல் (ஒரு விசயத்தின்)எல்லா அம்சங்களையும் விவாதித்தல் (ஒரு இடத்தை அல்லது பொருளை)துருவித் துருவிப் பார்த்தல்,ஆராய்தல்
அலசு (அழுக்கு நீங்குவதற்காகத் துணி, பாத்திரம் போன்றவற்றை நீரில்) முக்கி ஆட்டி எடுத்தல்
அலசுதல் அலைதல் சோர்தல் வெட்கும்படி பலபடப் பேசுதல் வருந்துதல் நீரில் கழுவுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together