iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 54 of 197

அடைமதிற்படுதல் முற்றுகையிடப்படுதல்
அடைமரம் பறவைகள் வசிப்பிடமாக அல்லது இரவில் தங்குமிடமாகக் கொள்ளும் மரம்
அடைமழை கடுமையான மழை
அடைமழை விடாமழை
அடைமழை (மழைக் காலத்தில்) பல நாள் விடாது பெய்யும் மழை
அடைமாங்காய் மாங்காயூறுகாய்
அடைமாங்காய் மாங்காய் வற்றல் மாங்காய் ஊறுகாய்
அடைமானம் வழிவகை ஈடு பிரதி உவமானம்
அடைமானம் ஈடு வழிவகை உவமை
அடைமொழி சிறப்புக் கருதி ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு வழங்கும் சொல் அல்லது தொடர்
அடைய முழுவதும். கோயிலடைய விளக்கேற்றி (பெரியபு. நமிநந்தி.14)
அடைய சேர முழுவதும், எல்லாம்
அடையலர் பகைவர்
அடையாண்கிளவி அடையாளச் சொல்
அடையான் ஏற்காதவன்
அடையார் பகைவர்
அடையாள அட்டை ஒருவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவரது புகைப்படம் பெயர் முகவரி போன்ரவற்றைக் கொண்ட சிறு அட்டை
அடையாள அட்டை ஒருவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவரது புகைப்படம், பெயர், விலாசம் முதலியவற்றைக் கொண்ட பத்திரம்
அடையாள அணிவகுப்பு பாதிக்கப்பட்டவர் அல்லது சாட்சி சொல்பவர் குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்காகச் சந்தேகத்திற்கு உரியவர்களை நீதிபதி தன் முன்னிலையில் அணிவகுத்து நிற்கவைக்கும் செயல்முறை
அடையாள அணிவகுப்பு குற்றவாளியை அடையாளம் காட்டும் வகையில் குற்றவாளிகள் என்று சந்தேகப்படுபவர்களை அணிவகுத்து நிற்கவைத்தல்
அடையாளம் ஒருவரை அல்லது ஒன்ரைத் தெரிந்து கொள்ள உதவும் தோற்றம் அல்லது தன்மைக் குறிப்பு அறிகுறி
அடையாளம் சின்னம் அறிகுறி முத்திரை குறிப்பு மாதிரி
அடையாளம் (இன்னார், இப்படிப்பட்டது என) தெரிந்துகொள்ள உதவும் தோற்றக் குறி
அடையாளம் காட்டு (பிறர் அறிந்திராத ஒன்றை) இனம்கண்டு பிரருக்குத் தெரியப்படுத்துதல்
அடையாள் வேலையாள்
அடையுண்ணுதல் அடைபடுதல்
அடையெழுதுதல் கணக்கில் தாக்கல் செய்தல்
அடையோலை அடைமானப் பத்திரம்
அடைவிகச்சோலம் கஸ்தூரிமஞ்சள்
அடைவு வழி ஈடு உவமானம் எல்லாம் நாளடைவிலேதருமஞ்செய், Practise acts of benevolence daily. (நாலடியுரை.)
அடைவு ஈடு முறை தகுதி வரிசைமுறை அட்டவணை வழி துணை புகலிடம் வரலாறு எல்லாம்
அடைவுகேடு முறைகேடு
அடைவுபடுதல் ஒழுங்காதல்
அடைவே கிரமமாக நெடுக. கரையடைவே போன வாய்க்காலுக்கும் (S.I.I.iii, 103)
அடைவே முறையே நெடுக
அட்காரம்பம் அக்கராரம்பம்
அட்கெனல் கடிய ஓசைக் குறிப்பு
அட்சகம் அட்டகுல யானை ஆடாதோடை
அட்சக்கோடு நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தைக் கணக்கிட அமைத்துக்கொண்ட கற்பனைக் கோடு
அட்சசூலை ஒருவியாதி
அட்சதை மங்கல காரியங்களில் வாழ்த்தும் போது தூவப்படும் மஞ்சள் நீர் கலந்த அரிசி
அட்சதை மங்கல காரியங்களில் வாழ்த்தும்போது தூவப்படும் மஞ்சள் நீர் தெளித்த அரிசி
அட்சன் அக்கன்
அட்சபாடனம் திரைப்படல்
அட்சமாலை அக்கமாலை
அட்சம் அட்சகன்னம் அட்சபாகை அட்சபாதன் கண் அக்கம்
அட்சம் உருத்திராக்கம் கண் பூகோள இடக்கணக்கு
அட்சய ஓர்வருடம்
அட்சய அறுபதாண்டுக் கணக்கில் இறுதி ஆண்டு
அட்சய பாத்திரம் எடுக்க எடுக்க உணவு குறையாமல் இருப்பதாகக் கூறப்படும் பாத்திரம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together